செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

திங்கள், டிசம்பர் 19, 2011

பாஸ்போர்ட் பெறுவது எப்படி?



ஆர்டினரி (Ordinary), அப்பிசியல் (Official), டிப்ளோமேட்டிக் (Diplomatic), ஜம்போ (Jumbo) என நான்கு விதமான பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன. Ordinary பாஸ்போர்ட் சாதாரண குடிமக்களுக்கும், Official பாஸ்போர்ட் அரசாங்க ஊழியர்களுக்கும், Diplomatic பாஸ்போர்ட் முதல்வர், பிரதமர் போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கும், Jumbo பாஸ்போர்ட் வியாபார நிமித்தமாக அடிக்கடி வெளிநாடு செல்பவர்களுக்கும் வழங்கப்படுகின்றன.

பாஸ்போர்ட் பெறுவதில் இரண்டு முறைகள் உள்ளன. ஒன்று ஆர்டினரி. மற்றொன்று தட்கல். இதில் எந்த வகையில் விண்ணப்பிப்பதாக இருந்தாலும், சென்னையைச் சேர்ந்தவர்கள் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை கைப்பட பூர்த்தி செய்து கொண்டுவந்தால் அது ஏற்கப்படமாட்டாது. ஆன்லைன் மூலமாக வரும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்வார்கள். ஆன்லைனில் விண்ணப்பித்து, அந்தப் படிவத்தை ‘பிரின்ட்-அவுட்‘ எடுத்து, அதை பாஸ்போர்ட் அலுவலகத்தில் அளிக்க வேண்டும். அவர்கள் குறிப்பிடும் ஒரு தேதியில் வந்து டோக்கன் எடுக்க வேண்டும். பின்னர், நிர்ணயிக்கப்பட்ட கவுன்ட்டர்களில் செக் இன் செய்ய வேண்டும்.

அதே சென்னைக்கு வெளியே பிற ஊர்களில் இருப்பவர்கள் தங்கள் கைப்பட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பாஸ்போர்ட் பிரிவுகளிலோ அல்லது ஸ்பீடு போஸ்ட் சென்டர்களிலோ சமர்பிக்க வேண்டும். சில மெட்ரோ நகரங்களில் காவல் துறை நிலையங்களில் பாஸ்போர்ட் நடுவங்கள் இருந்தால், அங்கு விண்ணப்பத்தைச் சமர்பிக்கலாம்.

தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெற கட்டாயம் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு நேரடியாக வந்து விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன், அரசாங்கம் அங்கீகரித்த ஏதேனும் மூன்று அடையாளச் சான்றிதழ்களைச் சமர்பிக்க வேண்டும். அந்த மூன்றில், ஒன்று புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையாக இருக்க வேண்டும். பொதுவாக, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் ஆகியவற்றின் நகல்களை இணைக்கலாம்.


ஆர்டினரிக்கு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, பிறந்த தேதி குறிப்பிடப்பட்டு இருக்கும் சான்றிதழ், குடியுரிமை ஆவணம் ஆகியவற்றின் நகல்கள் தலா இரண்டு இணைக்க வேண்டும். புதிய ஆர்டினரி பாஸ்போர்ட்டுக்கு 1000 ரூபாய், தட்கல் மூலம் என்றால் 2500 ரூபாய்.

ஆர்டினரி, தட்கல் என இரு முறைகளிலும் பெறப்படும் பாஸ்போர்ட்டுகள் பத்து ஆண்டுகளுக்குச் செல்லுபடி ஆகும். பத்து ஆண்டுகள் முடிவதற்கு ஓர் ஆண்டுக்கு முன்னாலோ அல்லது பத்தாவது ஆண்டிலோ நீங்கள் அதைப் புதுப்பிக்கலாம். புதுப்பிக்க ஆர்டினரிக்கு 1000 ரூபாய் மற்றும் தட்கலுக்கு 500 ரூபாய் கட்டணம்.

பெயர், முகவரி மாற்றம், திருமணம் ஆனவுடன் உங்கள் மனைவியின் பெயரை உங்கள் பாஸ்போர்டில் குறிப்பிடுதல் போன்ற சின்னச் சின்ன திருத்தங்கள் மேற்கொள்ளவும், பாஸ்போர்ட்டைப் புதுப்பித்துக்கொள்ளவும் ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தேவை இல்லை. இவற்றில் ஆர்டினரி, தட்கல் இரண்டுக்கும் 1000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இவற்றுக்கு ஃபார்ம் 2 ஐப் பயன்படுத்த வேண்டும்.

பாஸ்போர்ட் தொலைந்து போனால் காவல் துறையினரிடம் புகார் செய்து, எஃப்.ஐ.ஆர். பெற வேண்டும். அவர்கள் “Non Traceable” சான்றிதழ் தருவார்கள். அதை ஒப்படைத்தால் டூப்ளிகேட் பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்கு ஆர்டினரிக்கு 2500 ரூபாய் மற்றும் தட்கலுக்கு 5000 ரூபாய் கட்டணம்.
நன்றி: ஆனந்த விகடன்-24.11.10

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக