செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

ஞாயிறு, ஜனவரி 01, 2012

ஆங்கிலப் புத்தாண்டு பிறந்த கதை!


ஜனவரி 1-ந் தேதி, ஆங்கிலப் புத்தாண்டாக உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இப்போது நிலவும் இந்த நிலை, காலம் காலமாக இப்படியே இருந்ததா என்றால், இல்லை என்பதுதான் உண்மை. ஜனவரி முதல் தேதியை புத்தாண்டின் முதல் நாளாக பின்பற்றி வருவது சுமார் 500 வருடங் களாகத்தான். அதற்கு முன், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப ஆண்டின் முதல் நாள் மாறியது.


2000 ஆண்டுகளுக்கு முன் மெசபடோனியர்கள், மார்ச் 25-ந் தேதியைத்தான் ஆண்டின் முதல் நாளாகக் கருதினர். அவர்கள் காலத்தில், ஆண்டுக்கு 10 மாதங்கள்தான் இருந்தன. மார்ச் மாதம்தான் ஆண்டின் முதல் மாதமாகவும், மார்ச் 25-ந் தேதிதான் ஆண்டின் முதல் தேதியாகவும் இருந்தன. இதற்கு காரணம், இயேசுவின் தாய் மேரிக்கு, தான் கர்ப்பமுற்றிருந்தது தெரிய வந்தது என்ற காரணத்தால், மார்ச் 25-ந் தேதியை ஆண்டின் முதல் தேதியாக கருதினர் என்ற ஓரு கருத்தும் கூறப்படுகிறது.

புத்தாண்டு மார்ச் மாதம் 1-ந் தேதிதான் பிறந்தது என்று கருதிய ரோமானியர்கள் அதையே ஆண்டின் முதல் நாளாகவும் கருதினர். ரோமானிய மன்னர்களில் கொஞ்சம் விவரமாக யோசித்த நுமா போம்பிலியஸ் என்பவர், 10 மாதமாக இருந்த ஆண்டில், கூடுதலாக இரண்டு மாதங்களைச் சேர்த்து, ஒரு ஆண்டுக்கு 12 மாதங்கள் என்றாக்கினார். அந்த முறைதான் இப்போதும் பின் பற்றப்படுகிறது. எனினும், ரோமானிய மன்னர்களிலேயே சிலர், பழையபடி ஆண்டுக்கு 10 மாதம்தான். அதுவும் மார்ச் மாதம்தான் முதல் மாதம் என்று கூறிவந்தனர். பின்னர் அதே ரோமர்கள், முதல் இரண்டு மாதங்களுக்கு ஜனவரி, பிப்ரவரி என்று பெயர்களை இட்டனர். ரோமர்களின் கடவுளான ஜனஸ் நினைவாகத் தான் ஜனவரி என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

ரோமானிய மன்னர் ஜுலியஸ் சீசர்தான், ஜனவரி 1-ந் தேதியை ஆண்டின் முதல் நாளாக அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். அதை, இயேசு பிறப்பதற்கு 46 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது கி.மு. 46 ஆம் ஆண்டில் அறிவித்தார். அவர் பின்பற்றிய காலண்டர் முறை, ஜுலியன் காலண்டர் முறை என அழைக்கப்பட்டது. அதற்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர்கள், பழைய மார்ச் 25 ஆம் தேதியை ஆண்டின் முதல் நாள் என்றனர்.

இங்கிலாந்தை ஆண்ட மன்னர்கள், இயேசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25 ஆம் தேதியை புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்று கூறினர். இயேசு பிறப்பில் இருந்துதான் காலண்டர் முறை தொடங்கியது என்றால், அவர் பிறந்த டிசம்பர் 25 ஆம் தேதியில்தானே புத்தாண்டு தொடங்க வேண்டும் என்று சிலர் வாதம் செய்தனர். அதன் பின்னர் டிசம்பர் 25 ஆம் தேதியையே புத்தாண்டாக பின்பற்றினர். இப்படியாக , 1500 ஆம் ஆண்டு வரை, ஆண்டின் முதல் தேதியில் பல குழப்பங்கள் நிலவின.

கி.பி. 1582 ஆம் ஆண்டு, போப் 13 ஆம் கிரிகோரி, ஜுலியன் காலண்டரை ரத்து செய்தார். நான்காண்டுகளுக்கு ஒரு ஆண்டு லீப் ஆண்டு என்று கூறி, அந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்துக்கு 29 நாட்கள் என்று 365 நாட்களையும், 12 மாதங்களுக்குள் மிகச் சரியாக அடக்கினார். அதில் அறிவியல் பூர்வமான உண்மைகள் இருப்பதாக அறிய வந்ததை அடுத்து, உலகம் முழுவதும் கிரிகோரி யன் காலண்டர் முறை பின்பற்றப்பட்டது.

இந்த முறைப்படி, ஆண்டின் முதல் நாள் ஜனவரி 1 என்று நிர்ணயிக்கப்பட்டது. கடந்த 500 ஆண்டுகளாகத்தான் எந்த மாற்றமும் இல்லாமல் ஆண்டின் முதல் நாள் ஜனவரி 1-ந் தேதியாக விளங்குவதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் ஜி.எஸ்.பாலமுருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக