செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

ஞாயிறு, டிசம்பர் 18, 2011

சென்னையில் இசைமழை...!



சென்னை இசைவிழா உலகளவில் பிரபலமானது. குறுகிய காலத்தில் அதிக அளவிலான சபாக்கள் அல்லது இசை அமைப்புகள் அதிகமான நிகழ்ச்சி களைக் கொடுப்பது இங்குதான். அதனால்தான் சென்னை இசைவிழாவில் கச்சேரி செய்வது என்பது மிகவும் கௌரவம் நிறைந்ததாகக் கருதப்படுகிறது. இசைவிழாவில் கர்நாடக இசைக் கச்சேரிகள் மட்டுமில்லாமல், பரதநாட்டியம் சார்ந்த விசயங்கள், விவாதங்கள் அடங்கிய நிகழ்ச்சிகளும், லெக்சர் டெமான் ஸ்ட்ரேஷன் என்கிற பெயரில் இசை நிகழ்ச்சிகளும், ஹரிசுதா, சங்கீத உபன் யாசம், நடனங்கள், நாடகங்கள் மெல்லிசை கச்சேரிகளும் நடக்கின்றன.

ஹரிசுதாவும், பரதநாட்டியமும் இசைவிழா தொடங்கப்பட்டதிலிருந்தே இசை விழாவுடன் இணைந்தே நடத்தப்பட்டு வருகின்றன. ஹரிசுதாவிற்கென்றே சென்னை ஜார்ஜ் டவுனில் கோகலே ஹால் தொடங்கப்பட்டது என்கிற அளவுக்கு ஹரிசுதா முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. டிசம்பர் தொடங்கி ஜனவரி மாதம் வரை, ஒரு மாத காலம் நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சிகள் இசைப் பிரியர்களுக்கு உற்சாத்தைத் தரும் என்பதில் ஐயமில்லை. இது குறித்த ஒரு கட்டுரைத் தொகுப்பு...

சென்னையில் இசைவிழா தொடங்கி 83 ஆண்டுகள் முடிந்து விட்டன. 1927 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில்தான் அன்றைய மெட்ராசில் அனைந்திந்திய இசை மாநாடு நடத்த வேண்டும் என்று இசைப் பிரியரான காங்கிரஸ் தலைவர் எஸ்.சத்தியமூர்த்தி தலைமையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இசையுலக ஜாம்பவான்களுடன் நட்புறவுடன் இருந்த சத்தியமூர்த்தி இதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். பாரம்பரிய கர்நாடக இசையை வளர்ப்பதற்காகவும், இசை விழாவை நடத்துவதற்கெனவும் மெட்ராஸ் மியூசிக் அகடாமி தொடங்கப்பட்டது. 1929 லிருந்து கிறிஸ்துமஸ் விடுமுறை சமயத்தில் ஒரு வார காலத்திற்கு இசைவிழா நடக்க தொடங்கியது.


padmasri kathri gopalnath
 மியூசிக் அகாடமி தொடங்கப்படுவதற்கு முன்பே 1900ல் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஸ்வாமி சபா தொடங்கப்பட்டது. ஆனால் டிசம்பர் மாதத்தில் இசைவிழாவை முதலில் நடத்த தொடங்கியது மியூசிக் அகாடமிதான். அப்போது மியூசிக் அகாடமிக்கென தனியாக கட்டிடம் ஏதும் இல்லை. 1965ல் தான் ஜவர்ஹல்லால் நேரு தற்போது அகாடமி இருக்கும் டிடிகே சாலையில் அதற்கான அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் இசை ஆர்வலர்கள் தங்கள் சமூகத்தினருக்காவும் தங்கள் பகுதி இசை ரசிகர்களுக்காவும் சபாக்களை தொடங்கினார்கள். 1932ல் மெட்ராஸில் இருந்த தெலுங்கு பேசும் பிரிவினர் இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டியை மைலாப்பூரில் தொடங்கினார்கள். மாம்பலம் பகுதி மக்களின் இசை ஆர்வத்தை 1947ல் பிறந்த பிரம்ம கான சபாவும், 1950ல் உருவான கிருஷ்ணகான சபாவும் நிறைவேற்றின. 1958ல் நாரத காண சபா தொடங்கப்பட்டது.
1960களில் நான்கு ஐந்து என்று இருந்த சபாக்களின் எண்ணிக்கை வருடாவருடம் அதிகரித்து 90 களில் 40 ஆனது. கர்நாடக இசைப் பத்திரிகையான ஸ்ருதி இதழின் கணக்குப்படி 2002-2003 ல் 73 சபாக்கள் இருந்தன. ஆண்டுதோறும் சென்னை இசைவிழாவின் போது சபாக்களின் நிகழ்ச்சிகளை தொகுத்து சிறிய கையேடாக வெளியிடும் எஸ்.கண்ணனின் கணக்குப்படி இந்த ஆண்டு (2010) டிசம்பர் மாதத்தில் 117 சபாக்கள் உள்ளதாக தெரிவிக்கிறது.

karnatic Manasri prasth
 வெளிநாடு வாழ் இந்தியர்க்கென தனி சபாவும், சென்னையில் இருப்பது கூடுதல் சுவராசியம். 1990ல் அடையாறு, இந்திரா நகர், சாஸ்திரி நகர் பகுதி இசை ரசிகர்களுக்காக தொடங்கப்பட்ட ஹம்சத்வனி, 1994ல் வெளிநாட்டு இந்தியர்க்கான பிரத்யேக சபாவாக்கப்பட்டது. சென்னையின் கர்நாடக இசைவிழாவில் தமிழ்ப் பாடல்களும் பாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கும் விசயம். டிசம்பர் அல்லாத சீசன் கச்சேரிகளில் தமிழ்ப் பாடல்கள் தீமாட்டிக் கச்சேரியாக நடக்கிறது. ‘டிசம்பர் சீசனில் அனைத்து பாடகர்களுமே பாபநாசம் சிவன், பெரியசாமி தூரன் பாடல்கள் என்று தமிழ்ப் பாடல்களைப் பாடுகிறார்கள். இதனால் தமிழிசையை சாமானிய மக்களால் ரசிக்க முடியாத நிலை உள்ளது.

அதுமட்டுமில்லை! சென்னை இசைவிழாவில் கச்சேரி செய்வது கௌரவமான தாக கருதப்படுகிறது. ஒருவர் மேடை ஏறுவதற்கு முன் நிறைய கச்சேரிகளைக் கேட்கவேண்டும். அப்போதுதான் அவரால் சிறந்த கலைஞராக முடியும் என்கிறார்கள் சங்கீத விமர்சகர்கள். ஆனால் திறமையான வளரும் கலைஞர்கள் அனைவருக்குமே வாய்ப்பு கிடைக்கிறதா? என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பணம், செல்வாக்கு உள்ளவர்களுக்கே வாய்ப்பு அதிகம் என்பது இந்த இசைவிழாவின் ஒரு மைனஸ் பாயிண்ட்.
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

1 கருத்து: