செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

ஞாயிறு, ஜனவரி 30, 2011

பார்லிமென்ட் கூட்டுக்குழு எப்படி அமைக்கப்படும்?2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடந்த ஊழலை கண்டுபிடிக்க, பார்லிமென்டின் கூட்டுக்குழு நடவடிக்கை தேவை என்று எதிர்க்கட்சிகளும், தேவை இல்லை என்று அரசும் கூறிவருகின்றன. ஒருவேளை கூட்டுக்குழு அமைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டால், எப்படி அமைக்கப்படும்?

ஊழல் நடந்துள்ள துறை அமைச்சர், இதற்கான தீர்மானத்தை லோக் சபாவில் முன்மொழிந்து பேசுவார். அப்படி இல்லையெனில், பொதுவாக பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சரே கூட, இதற்கான தீர்மானத்தை முன்மொழி வாய்ப்புள்ளது. அத்தீர்மானத்திலேயே கூட, கூட்டுக்குழு குறித்த அனைத்து தகவல்களும் இடம் பெறும். பொதுவாக அக்குழுவில் எத்தனை உறுப்பினர்கள், அவர்களில் எத்தனை பேர் ராஜ்யசபா, எத்தனை பேர் லோக்சபா என்பன உள்ளிட்ட விவரங்கள் இடம் பெறும். பெரும்பாலும் ஒவ்வொரு கட்சியின் மொத்த எம்.பி.க்களின் எண்ணிகைக்கு ஏற்ப உறுப்பினர் ஒதுக்கீடு இக்குழுவில் இருக்கும். இந்த உறுப்பினர்களில் ஒருவரை தலைவராக லோக்சபா சபாநாயகர் அறிவிக்கக்கூடும்.

கூட்டுக்குழு அமைக்கப்பட்ட தேதியில் இருந்தே பணிகள் தொடங்கிவிட்டதாக கருதப்படும். குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு, அதற்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும். கூட்டுக்குழுவை ஒரு முறை கூட்ட வேண்டுமென்றால், கோரம் முறை கடைபிடிக்கப்படும். அதாவது அக்குழுவில் உள்ள உறுப்பினர் களில் குறைந்தது மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கை உறுப்பினர்கள் கலந்து கொண்டால் மட்டுமே கூட்டம் நடத்த முடியும். ஏதாவது ஒரு சிக்கலான தருணங்கள் வரும்போது, அதில் முடிவெடுக்கும் முன் சபாநாயகரின் ஒப்புதலை பெற வேண்டும்.

quvathrochi
முதன்முறையாக போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் குறித்து கூட்டுக்குழு அமைப்பது என முடிவெடுக்கப்பட்டு, இதற்கான தீர்மானத்தை 1987 ஆகஸ்ட் 6 ஆம் தேதி அன்று லோக்சபாவில், அப்போதைய ராணுவ அமைச்சர் கே.சி. பந்த்தால் முன்மொழியப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே ஆண்டில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி அன்று கூட்டுக்குழு அமைக்கப்பட்டு, லோக்சபாவில் இருந்து 20 பேரும், ராஜ்யசபாவில் இருந்து 10 பேரும் இதில் அங்கம் வகித்தனர். இந்த குழுவின் தலைவராக சங்கரானந்த் இருந்தார். மொத்தம் 50 முறை கூட்டம் நடைபெற்றது. இறுதியாக 1998 ஏப்ரல் 26 ஆம் தேதி இந்த குழு தனது அறிக்கையை அளித்தது.

இரண்டாவது முறையாக பணபத்திரங்கள் மற்றும் வங்கி பரிவர்த்தனைகளில் ஏற்பட்ட முறைகேடுகளை விசாரிக்க கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இதற்கான தீர்மானம் 1992 ஆகஸ்ட் 6 ஆம் தேதி லோக்சபாவில், அப்போதைய பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத்தால் முன்மொழியப் பட்டு நிறைவேற்றப்பட்டது. அதே ஆண்டில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி அன்று கூட்டுக்குழு அமைக்கப்பட்டு, 20 லோக்சபா எம்.பி.க்களும், 10 ராஜ்யசபா எம்.பி.க்களும் அந்த குழுவில் அங்கம் வகித்தனர். இதன் தலைவராக ராம்நிவாஸ் மிர்தா இருந்தார். மொத்தம் 96 முறை இக்குழு கூடி, விசாரணை நடத்திவிட்டு இறுதியாக 1993 டிசம்பர் 21 ஆம் தேதி அன்று தனது அறிக்கையை அரசிடம் அளித்தது.

gulamnabi asath
மூன்றாவது முறையாக பங்குச்சந்தை ஊழலை விசாரிப்பதற்காக கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இதற்கான தீர்மானம் 2001 ஏப்ரல் 26 ஆம் தேதி அன்று லோக்சபாவில் அப்போதைய பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜனால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதே ஆண்டில் ஏப்ரல் 27 ஆம் தேதி அன்று அமைக்கப்பட்ட கூட்டுக்குழுவில் 20 லோக்சபா எம்.பி.க்களும், 10 ராஜ்யசபா எம்.பி.க்களும் அங்கம் வகித்தனர். இதன் தலைவராக எஸ்.பி.எம்.திரிபாதி இருந்தார். மொத்தம் 105 முறை இந்த குழு கூடி விசாரணை நடத்திவிட்டு, இறுதியாக 2002 டிசம்பர் 19 ஆம் தேதி தனது அறிக்கையை அரசிடம் அளித்தது.

குளிர்பானங்களில் பூச்சிக்கொல்லி கலக்கப்படுவதாக எழுந்த பிரச்னையை விசாரிக்க, நான்காவது முறையாக கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இதற்கான தீர்மானத்தை 2003 ஆகஸ்ட் 22 ஆம் தேதி அன்று லோக்சபாவில் அப்போதையை சுகாதாரத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜால் முன்மொழியப் பட்டு நிறைவேற்றப்பட்டது. அன்றே கூட்டுக்குழுவும் அமைக்கப்பட்டது. அதில், லோக்சபா எம்.பி.க்கள் 10 பேரும், ராஜ்யசபா எம்.பி.க்கள் 5 பேரும் அங்கம் வகித்தனர். இக்குழுவிற்கு சரத்பவார் தலைவராக இருந்தார். மொத்தம் 17 முறை இந்த குழு கூடி விவாதம் நடத்திவிட்டு, இறுதியாக 2004 பிப்ரவரி 4 ஆம் தேதி அன்று தனது அறிக்கையை அரசிடம் சமர்பித்தது.

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக