செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

திங்கள், பிப்ரவரி 28, 2011

திகார் ஜெயில் பற்றி தெரியுமா?

டெல்லி மேற்குப் பகுதியில் திகார் என்ற கிராமத்தில் 53 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்த ஜெயில் ஆசிய அளவில் பெரியது. இங்கே, சுமார் 12,000 கைதிகள் உள்ளனர். இந்தச் சிறை வளாகத்தில் ஒன்பது மத்திய சிறைச் சாலைகள் உள்ளன. சிறைச்சாலை எண் 1-ல் உள்ள வார்டுகள் மிகவும் பிரமாதமாக பராமரிக்கப்படுவதைப் பாராட்டி, மாடல் வார்டுக்கான ஐ.எஸ்.ஓ., தரச்சான்றிதழ் பெற்றுள்ளது. இங்கு ஜெயில் காம்பளெக்ஸ் நான்கில்தான் வி.ஐ.பி.,க்களை அடைத்து வைப்பார்கள். தனி அறையில் அடைக்கப் பட்டாலும், கைதிகளுக்கு பணிவிடை செய்ய ஒரு நபர் உண்டு.


ஜீன்ஸ் பேன்ட் தவிர வேறு எந்த டிரஸ்ஸையும் கைதி அணியலாம். கைதிகளே அவரது உடையை துவைத்துக் கொள்ள வேண்டும். அயர்ன் பண்ண சிறைச்சாலையில் வசதி உண்டு. இங்கு ஒரு ஸ்பெஷல் கேன்டீன் உண்டு. இங்கே ஸ்நாக்ஸ் முதற்கொண்டு அனைத்து அயிட்டங்களும் கிடைக்கும். மாதம் நாலாயிரம் ரூபாய் வரை செலவு செய்யலாம். இந்த தொகையைக் கொடுத்து டோக்கன் வாங்கி செல்லில் வைத்துக் கொள்ளலாம். ஹை ரிஸ்க் வார்டில் இருப்பவர்கள் இந்த கேன்டீனுக்கு போக அனுமதியில்லை. அதனால், ‘சேவாதார்’ என்று அழைக்கப்படும் ஹெல்பர்களை பொருள் வாங்கி வர பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதே சிறைச்சாலையில் வேலை எதுவும் செய்ய முடியாத நிலையில் இருப்பவர்களும் உதவுவார்கள். அந்த வகையில் அவர்களுக்கும் காசு கிடைக்கும். ஏர்கூலர், ஃபேன், டி.வி. இருக்கும். ஆனால் தமிழ் சேனல் தெரியாது. ஆனால், சிறைச் சாலையின் பொது இடத்தில் வாரத்துக்கு இருமுறை டி.வி.டி., பிளேயர் வைத்து திரைப்படங்களை ஒளிபரப்புவார்கள். விரும்பும் பத்திரிகையை வார்டுக்கு வரவழைத்துப் படிக்காலம். செல்லின் ஒரு மூலையில் இண்டியன் டைப் டாய்லெட் இருக்கும். அதைத்தான் தினப்படி கைதி பயன்படுத்த வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது.

பெண் பத்திரிகையாளர் ஷிவானி கொலைவழக்கில் கைதான அரியானா மாநில ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.கே.சர்மா இந்தச் சிறையில்தான் அடைக்கப் பட்டுள்ளார். அதோடு ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதான ஆ.ராசா, சித்தார்த் பால்வா, ஆர்.கே.சந்தோலியா உள்ளிட்டோரும் இந்தச் சிறையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு சிபுசோரன், மருத்துவக் கல்லூரி ஒதுக்கீட்டில் சிக்கிய கேதன் தேசாய், டெல்லி சாமியார், காமன்வெல்த் ஊழலில் சிக்கியவர்கள் இந்த ஜெயிலில்தான் அடைக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இங்கு கைதிகளுக்கு டால் ரொட்டி, ராஜ்மா சாவல், கடி சாவல்சப்ஜி போன்ற உணவுகள்தான் தருவார்கள். தினமும் இரண்டு வேலைதான் சாப்பாடு. நான்வெஜ் கிடையாது. உடையைப் பொறுத்த வரையில், எந்த டிரஸ்ஸ§ம் அணியலாம். கட்டுப்பாடு இல்லை. கைதியின் இன்ஷியல் வைத்து வாரத்தில் இரண்டு நாட்கள் பார்வை யாளர்களை சந்திக்க அனுமதிக்கிறார்கள். சந்திப்பு நேரம் அரை மணி நேரம் மட்டுமே. பார்வையாளர்கள் அறையில் ஐம்பது மைக்குகள் இருக்கும். சந்திக்க வருபவருக்கும் கைதிக்கும் இடையில் இடைவெளி இருக்கும். ஒரே நேரத்தில் இங்கிருந்து ஐம்பது பேர்கள் மைக்கில் எதிர்புறம் உள்ள கைதிகளிடம் பேசுவார்கள் கூச்சல், குழப்பமாகத்தான் இருக்கும்.

எப்போதும் மூன்று அடுக்கு பாதுகாப்பு வளையங்களில்தான் இந்த திகார் சிறைச்சாலை இருக்கும். உள்வட்டப் பாதுகாப்புகளை டெல்லி யூனியன் பிரதேச சிறைத்துறை போலீசாரும், இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினர் வெளிவட்ட பாதுகாப்புப் பணியிலும் இருக்கிறார்கள். மேலும், கணகாணிப்பு போன்ற பணியில் தமிழக ஆயுதப்படை போலீசார் ஆயிரம் பேர் பல ஆண்டுகளாக காவல் பணியில் இருக்கின்றனர். ஜெயிலின் டி.ஜ.¤பி.,-யாக தற்போது உள்ள நீரஜ் குமார் ஐ.பி.எஸ்., கறார் பேர்வழி. வெளியில் இருந்து வரும் பழங்கள் போன்ற எதையும் உள்ளே அனுமதிக் கூடாது என்று உத்தரவு போட்டுள்ளார்.

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

திங்கள், பிப்ரவரி 21, 2011

இன்றைய தமிழகம்???????


ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம்

ஒருவர் கேட்டார், “எதற்க்காக இத்தனை கஷ்ட்டப்படுகிறாய்?”

நான் கேட்டேன், “கஷ்டப் படாமல் எப்படி வாழ்கையை ஓட்ட முடியும்?”

அவர் சிரித்தபடி சொன்னார் , “என்னைப் பார்,

ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டுவிட்டு உறங்கி விடுவேன்.

போரடித்தால் வண்ணத்தொலைக்காட்சியில் திரைப்படம் பார்திடுவேன்.

உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடிடுவேன்,

உயர் சிகிச்சை பெற்றிடுவேன் இராஜமரியாதையுடன் !!”

“உழைக்காமல் எப்படியடா இத்தனையும் முடியும்?”

முதலாமவர் சிரித்தபடி கேட்டார்,

“நான் யார் தெரியுமா??

தமிழ் நாட்டுக் குடிமகன்.”

“என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய்

சமைப்பதற்க்கு எரிவாயுவும் அடுப்பும் இலவசம்.

பொழுதுபோக்கிற்கு வண்ணத்தொலைக்காட்சி மின்சாரத்துடன் இலவசம்

குடும்பத்துடன் உயிர் காக்கும் உயர் சிகிச்சையும் இலவசம்

எதற்க்காக உழைக்கவேண்டும் ?”

நான் கேட்டேன், “உன் எதிர் கால சந்ததியின் நிலை என்ன?”

பலமாக சிரித்தபடி உரைத்தார் -

“மனைவி பிள்ளை பெற்றால் ரூபாய் 5,000 இலவசம் சிகிச்சையுடன் ..

குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில் ..

படிப்பு சீருடையுடன் உணவும் இலவசம் முட்டையுடன்

பாடப்புத்தகம் இலவசம், படிப்பும் இலவசம், பள்ளி செல்ல பஸ் பாஸும் இலவசம்..

தேவையென்றால் மிதி வண்டியும் இலவசம்.

பெண் பருவமடைந்தால் திருமண உதவித் தொகை ரூபாய் 25,000 இலவசம்

ஒரு பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம் !!”

“தேவையென்றால் மாப்பிள்ளையுடன் செய்தித்தாளில் விளம்பரமும் இலவசம்
மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்கையிலும்

நான் எதற்கு உழைக்க வேண்டும்??”

வியந்து போனேன் நான் !!

என் உயிர் தமிழகமே ! எவ்வளவு காலம் இந்த நிலை தொடரும்?
இலவசம் என்பதற்க்கு இரண்டு பொருள் உண்டு

ஒன்று கையூட்டு , மற்றொன்று யாசகம்
இதில் நீ எந்த வகை? எதை எடுத்துக்கொள்வது?

உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய்

இலவசம் நின்று போனால் உன் நிலை என்ன ஆகும்??
உழைப்பவர் சேமிப்பை களவாடத் தலைப்படுவாய் !!

இதே நிலை தொடர்ந்தால், இலவசம் வளர்ந்தால்,

அமைதிப் பூங்காவாம் தமிழகம், கள்வர் பூமியாய் மாறும் நிலை

இன்னும் வெகு தொலைவில் இல்லை
தமிழா விழித்திடு - உழைத்திடு

இலவசத்தை வெறுத்திடு! அழித்திடு

தமிழகத்தை தரணியில் உயர்த்திடு

நாளைய தமிழகம் நம் கையில்... உடன்பிறப்பே சிந்திப்பாயா?

மனது வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி !!

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

திங்கள், பிப்ரவரி 14, 2011

வாவ்...வவ்வால்...!


இந்தியாவில் வவ்வால்கள் குறித்து ஆராய்ச்சி செய்யும் ஒரே (only lady Researcher) ஆய்வாளர் டாக்டர் ஜுலியட் வனிதாராணி என்பவர்தான். இவர் திருநெல்வேலி சாராள் தக்கர் கல்லூரியில் ஆராய்ச்சி மற்றும் விலங்கியல் துறை தலைவராக உள்ளார். இவர் தன்னிடம் பயிலும் ஆராய்ச்சி மாணவிகளுடன் மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவுகள், மண்டபத்தில் உள்ள 7 தீவுகளில் (and in the Tamil nadu part of மேற்குத் தொடர்ச்சி மலை) வவ்வால்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வவ்வால்கள் குறித்து இவர் தரும் தகவல்கள்:

Dr.juliet vanitharani
கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக வவ்வால்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு வருகிறேன் என்கிறார். மேற்குத் தொடர்ச்சி மலை முழுவதும் செய்த ஆராய்ச்சியில் 37 வகை வவ்வால் களை கண்டுபிடித்துள்ளதாகவும், லேடிடென்ஸ் சலிமாலி (Latidens Salimalii) எனப்படும் (fruit eating bat) ரொம்பவே அபூர்பவ மான வகை வவ்வால் இனம் (Endangered) இங்கு மட்டுமே (Endemic) வாழ்வதாகவும் தெரிவிக்கிறார். இவற்றில் (Eonycteris spelaea) வவ்வால் தேனையும், பூக்களில் உள்ள மகரந்தத்தையும் மட்டும் சாப்பிட்டு வாழ்கிறது என்கிறார் டாக்டர் வனிதாராணி.

Fruits bat-cross pollinators
அழிந்து போன இனம் என்று கொல்கத்தா மியூசியத்தில் (Kerivoula lenis) கோனிவேலோ வெனிஸ் என்ற வவ்வால் இனம் இருக்கிறது. இது அழிந்து போகவில்லை, பொதிகை மலையின் குற்றாலத்தில் இந்த இனம் இன்றும் இருப்பதைக் கண்டு பிடித்திருப்பதாக தெரிவிக் கிறார். அரை (2gms) கிராமில் இருந்து இரண்டரை கிலோ எடை வரை உள்ள வவ்வால்கள் உண்டு. இவை தன் உடல் எடையை விட (1/3rd) (Moontril oru pangu) மூன்று மடங்கு எடையை தூக்கிச் செல்லும் திறன் படைத்தது.

உலகம் முழுவதும் 1100 வகை வவ்வால்கள் இருந் தாலும் இந்தியாவில் 116 வகைகள்தான் இருப்பதாக தெரிவிக்கிறார். விலங்குகளின் ரத்தம் குடிக்கும் வவ் வால்கள் நம் நாட்டில் இல்லை என்றாலும் தென் அமெரிக்காவில் உள்ளது என்கிறார் ஆராய்ச்சியாளர். இந்தியாவில் 13 பழம் மட்டுமே சாப்பிடும் வவ்வால்கள் உள்ளது of which 6 bats are available in Tamil Nadu) மற்றவை, பூச்சிகளை சாப்பிடுபவை. (சிலசமயம்) பழம் மட்டுமே சாப்பிடும் வவ்வால்கள் வகை வகையான பழங்களை தேடித் தேடி சாப்பிடும் (To get balance diet and high energy to fly, they eat variety of fruits and nectar and pollen from flowers) உடைய (While feeding) வவ்வால்கள், பழத்தை எடுத்தவுடன் சாப்பிடாமல், தனிமையான இடத்தைத் தேர்ந்தெடுத்து சாப்பிடும். சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்த வேளை உணவிற்காக வேறு ஒரு பழத்தை தேடி புதிய இடத்திற்கு பறக்கும். இப்படி தினமும் 160 (10-60) கிலோ மீட்டர் தூரம் பறக்கும் என்று வவ்வால்களின் சாப்பாட்டு ரகசியத்தை தெரிவிக்கிறார்.

Fruits bat-seed dispersers
நாம்தான் வவ்வால் வந்தால் கெட்ட சகுனம், விளைச்சல் இருக்காது என்பது போன்ற மூட நம்பிக்கையால் அவற்றை கொல்கிறோம். அதைப்பார்த்து, பயந்து ஒதுங்குகிறோம். ஆனால், சைனாவில் வவ்வால் படத்தை வீட்டிற்கு வெளியே மாட்டி வைத்திருப்பார்கள். அது அவர் களுக்கு செல்வம், ஆரோக்கியம் (Five Fortunes: Good Luck, Prosperity, Wealth, Happiness, Longevity) என்று பல நல்ல விசயங்களைத் தருவதாக நம்புகிறார்கள். அதுதான் அறிவியல் ரீதியான உண்மை என்று கூறி முடிக்கிறார் டாக்டர் ஜுலியட் வனிதா ராணி.

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்...

வியாழன், பிப்ரவரி 10, 2011

வாக்காளர் அடையாள அட்டை பெறுவது எப்படி?


இந்த ஆண்டு (2011) முதல் ஜனவரி 25-ம் நாளை தேசிய வாக்காளர் தினமாகக் தேர்தல் ஆணையம் கொண்டாடுகிறது. ஆம், அன்றைய தினம் தான் இந்தியத் தேர்தல் ஆணையம் தொடங்கப்பட்டது. புதிய வாக்காளர் களைப் பட்டியலில் சேர்ப்பது, அடையாள அட்டை வழங்குவது எப்படி என்று அன்றைய தினத்தை தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்காக செலவிடும். சரி, யார் வாக்காளர்? பட்டியலில் பெயர் சேர்ப்பது எப்படி? அடையாள அட்டை பெறுவது எப்படி? இதோ... உங்களுக்காக...

18 வயது பூர்த்தியானவர்கள் அனைவரும் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். தேர்தலில் வாக்களிக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை. வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்த்துக் கொள்ள, தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பூத் வாரியாக, பூத் லெவல் ஆபீஸர்கள் இருக்கிறார்கள். அவர்களது முகவரி, தொலைபேசி எண் உட்பட அனைத்து விவரங்களும் பூத் வாரியாக தமிழகத் தேர்தல் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டங்களில் பெரும்பாலும் இவர்கள் தாலுகா அலுவலகங்களில் இருப்பார்கள். சென்னை போன்ற மாநகராட்சிகளில், மண்டல அலுவலங்களில் நேரடியா கவோ, தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளலாம். அவர்களே உங்களின் வீடு தேடி வந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப் பத்தையும் கொடுப்பார்கள்.

அவர்கள் தரும் ஃபார்ம்-6 என்ற விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து உங்களின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒட்ட வேண்டும். மேலும், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப் படங்கள், வசிப்பிடச் சான்றிதழ், 18 வயது பூர்த்தி ஆனதற்கான சான்றிதழ் ஆகியவற்றை இணைத்துத் தர வேண்டும். பிறகு, நீங்கள் கொடுத்த தகவல்கள் சரியாக இருக்கின்றனவா என விசாரித்த பின், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டு, அடையாள அட்டை வழங்கப்படும்.

அடையாள அட்டையில் பெயர், முகவரியில் எழுத்துப் பிழைகள், முகவரி மாற்றம் போன்றவை இருந்தால், அதற்கென்று தனியாக வேறு ஒரு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். முகவரி மாற்றித் தர 15 ரூபாய் கட்டணம். ஒருவரே இரு இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, இரண்டு அடையாள அட்டைகள் வாங்குவது, போலி முகவரி தருவது போன்ற தவறுகள் செய்தால், அது குற்றமாகக் கருதப்பட்டு, சிறை தண்டனைகூட விதிக்கப்படலாம்.

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்...

திங்கள், பிப்ரவரி 07, 2011

போரின் பின்னணி என்ன?


இன்று பகைமை பாராட்டும் தென்கொரியாவும் வடகொரியாவும் முன்பு கொரியா என்ற பெயரில் ஒரே நாடாக இருந்தன. தீபகற்ப நாடான கொரியா 1910-ஆம் ஆண்டு முதல் ஜப்பானின் ஆட்சி அதிகாரத்துக்கு உட்பட்டு இருந்தது. 2-ஆம் உலகப்போரில் தோல்வி அடைந்ததால் ஜப்பான் சரண் அடைந்தது. அந்த போரின் போது, ஜப்பான் வசம் இருந்த கொரியாவை அமெரிக்காவும், ரஷியாவும் ஆக்கிரமித்துக் கொண்டன. அமெரிக்க ராணுவம் ஆக்கிரமித்து இருந்த தென்பகுதி தென் கொரியா ஆகவும், ரஷிய ராணுவம் ஆக்கிரமித்து இருந்த வடபகுதி வடகொரியா ஆகவும் 1948-ஆம் ஆண்டு தனித்தனியாக பிரிந்தன. பெயருக்குதான் இவை தனித்தனி நாடுகளாக இருந்தன.


இவற்றை உண்மையில் இயக்கி வந்தது அமெரிக்காவும், ரஷியாவும்தான். ரஷியாவில் கம்யூனிஸ்டு ஆட்சி கவிழ்ந்த பிறகு சீனா வடகொரியாவை தத்து எடுத்துக் கொண்டது போல அதன் ஆதரவு நாடாக இருந்து வருகிறது. கொரியா தனித்தனி நாடுகளாக பிரிந்த சில ஆண்டுகளிலேயே அவற்றை இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு பேச்சுவார்த்தை தொடங்கியது. பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் இருதரப்பினருக்கும் இடையே பகை வளர்ந்து கொண்டே இருந்தது. அது கொரிய யுத்தமாக வெடித்தது.

1950 ஜுன் 25-ந் தேதி தென்கொரியா மீது வடகொரியா படை யெடுத்தது. இந்த படையெடுப்பை முறியடிக்க அமெரிக்கா, தொன்கொரியா வின் உதவிக்கு வந்தது. அப்போது சீனா வடகொரியாவின் உதவிக்கு வந்தது. வடகொரியாவுக்கு ஆதரவாக ரஷியா ஆயுதங்களை கொடுத்து உதவியது. மூன்று ஆண்டுகள் நடந்த இந்த போரில் இரு தரப்புக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டது. 1953 ஜுலை 27-ந் தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. போர் நின்று போனாலும் இரு கொரியாக்களுக்கு இடையிலும் அவ்வப்போது மோதல்கள் வெடிப்பது வழக்கமான ஒன்றாக இருந்தது. 1966-ஆம் ஆண்டு மீண்டும் எல்லைப் பிரச்சனையை வடகொரியா கிளப்பியது. அடுத்தடுத்து வடகொரியா ராணுவ வீரர்கள் எல்லை மீறுவதை வாடிக்கையாக கொண்டனர்.

1968-ஆம் ஆண்டு 31 வடகொரிய கமாண்டோக்கள் தென்கொரிய ஜனாதிபதி மாளிகையான ‘ப்ளூ ஹவுசை’ நெருங்க, தென்கொரியா அவர்களை சுட்டுக் கொன்று ஜனாதிபதியை காப்பாற்றியது. அடுத்த நான்கு ஆண்டுகளில் அவ்வப்போது வடகொரியா மேற்கொண்ட ஊடுருவல்களால் இருதரப்பிலும் 700 பேர் உயிர் இழந்தனர். 1974-ஆம் ஆண்டு வடகொரியா, எல்லைக் கோட்டுக்கு கீழே பூமிக்கு அடியில் ரகசியமாக சுரங்கங்களை தோண்டி மிக எளிதாக தென் கொரியா வுக்குள் நுழையும் ஏற்பாட்டை செய்தது. அந்த சுரங்கங்களை தென்கொரியா கண்டுபிடித்து அழித்தது. என்றாலும், சுரங்கம் தோண்டும் வேலையை வட கொரியா கைவிட்டதாக தெரியவில்லை.
இப்படி முட்டலும், மோதலுமான நிலையை தவிர்ப்பதற்காக 1991-ஆம் ஆண்டு இரு நாடுகளும் இணைந்து ஒரே கொடியுடன் உலக டேபிள் டென்னிஸ் போட்டியை ஆடின. அதே ஆண்டு இளைஞர் உலகக்கோப்பை கால்பந்து போட்டியிலும் ஒருங்கிணைந்த கொரியா கலந்து கொண்டன. இரு நாடுகளுக்கும் இடையேயான போர் முடிந்ததாக இரு நாடுகளும் அறிவித்தன.


ஆனால் 1999-ஆம் ஆண்டு வடகொரிய கடற்படையினர் மீண்டும் மோதலை தொடங்கி வைத்தனர். அப்போது இயோங்பியோங் தீவு மீது வடகொரியா தாக்குதல் நடத்தியது. இரு நாடுகளுக்கும் இடையேயான கடல் எல்லையை மாற்றி அமைக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்த வடகொரியா, இதற்கான பிரசார யுத்தத்தில் ஈடுபட்டது. இதைத் தொடர்ந்து 1999 ஜுன் மாதம் 6-ந் தேதி வடகொரியாவின் கடல் எல்லைக்குள் தென் கொரிய போர்க் கப்பல்கள் நுழைந்ததாக வடகொரியா குற்றம் சாட்டியது.

இதைத் தொடர்ந்து இரு தரப்பும் கடல் எல்லையை மீறி படகுகளை அனுப்பியதால் யுத்தம் வெடித்தது. இதில் வடகொரியாவின் பல படகுகள் சேதம் அடைந்தன. கிட்டத்தட்ட 100 வடகொரியர்கள் பலியானார்கள். இந்த போரில் வடகொரியாவுக்கு பலத்த சேதம் ஏற்பட்ட போதிலும், போரில் வெற்றி பெற்றதாக அது அறிவித்தது. 2000-ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டு சமாதான முயற்சி பெரிய அளவில் நடந்தது. ஆனால் 2002-ஆம் ஆண்டில் கடல் எல்லையில் வாலாட்டி வடகொரியா மீண்டும் கசப்பை உருவாக்கியது.

இப்படி இருதரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடப்பது நீடித்து வருகிறது. 2011 ஜனவரியில் கூட தென்கொரியாவுக்கு சொந்தமான நீர் மூழ்கிக்கப்பல் தகர்க்கப்பட்டது. அதில் இருந்த 46 கடற்படை வீரர்கள் பலியானார்கள். இந்த சம்பவத்துக்கு வடகொரியாதான் காரணம் என்று தொன்கொரியா குற்றம் சாட்டியது. ஆனால் அந்த சம்பவத்தில் தங்களுக்கு எந்த தொடர்பும் கிடையாது என்று வடகொரியா மறுத்துவிட்டது. அப்போதும் அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் வடகொரியாவை வன்மையாக கண்டித்தன. என்றாலும், வடகொரியா அசைந்து கொடுக்கவில்லை.!

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்...

ஜி.எஸ்.எல்.வி. என்றால் என்ன?செயற்கைக்கோளை ஏவும் ராக்கெட்டில் இரண்டு ரகம். ஒன்று ஜி.எஸ்.எல்.வி. (Geosynchronous satellite launch Vehicle) மற்றொன்று பி.எஸ்.எல்.வி. (Polar Satellite Launch Vehicle). புவி மைய சுழற்சிப் பாதையில் செயற்கைக்கோளை செலுத்தவல்லது ஜி.எஸ்.எல்.வி. சூரியனைச் சுற்றும் பாதையில் தொலை உணர்வுச் செயற்கைக்கோளை நிறுவுவது பி.எஸ்.எல்.வி. ஆய்வுகளுக்குப் பயன்படும் சிறிய செயற்கைக் கோள்களை ஏவ இந்த வகை ராக்கெட்டுகள் பயன்படுத்தப்பட்டன. இந்த வகை ராக்கெட்டுகளைப் பயன்படுத்தி நாம் இதுவரை 41 முறை செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி யிருக்கிறோம். (19 முறை நமக்காகவும், 22 முறை வேறு நாடுகளுக்காகவும்)

ஆனால், தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்படும் செயற்கைக்கோள்கள் அளவிலும், எடையிலும் பெரியவை. அவற்றை எடுத்துச் செல்ல ஜி.எஸ்.எல்.வி. தேவை. ஏனெனில், ஜி.எஸ்.எல்.வி. எடை கனமான செயற்கைக்கோள்களை பூமியிலிருந்து 36 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு எடுத்து செல்லக் கூடியது. கனமான செயற்கைக்கோளை உயரமான இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டுமானால் ராக்கெட்டை அதிக அழுத்தம் கொடுத்துச் செலுத்தும் இன்ஜின் வேண்டும். அதற்காகத்தான் கிரையோஜெனிக் இன்ஜின் உருவாக்கப்பட்டது.

கிரையோஜெனிக் இன்ஜினின் சிறப்பு:

பி.எஸ்.எல்.வி. ராக்கெட் இன்ஜின்கள் முதல் கட்டத்தில் திரவ எரி பொருளுக்குப் பதிலாக HTPB என்ற திட எரி பொருளைப் பயன்படுத்தின. ஜி.எஸ்.எல்.வி.யில் பயன்படுத்தப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின்கள் திரவ நிலையிலிருக்கும் ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் வாயுக்கள். அவற்றை திரவ நிலைக்கு மாற்ற வேண்டும். அதற்கு, ஆக்சிஜனை மைனஸ் 183 டிகிரி செல்சியசுக்கு குளிரூட்டி திரவ நிலைக்கு மாற்றுவர். அதேபோல ஹைட்ரஜன் -253 டிகிரி குளிரூட்டுவர். ராக்கெட் கிளம்பும் சில மணி நேரத்திற்கு முன் இந்த எரிபொருளை நிரப்பத் தொடங்கி, கிளம்ப 30 நொடி இருக்கும் வரை நிரப்பிக் கொண்டிருப்பார்கள்.

World First Cryogenic Engine
இந்த கிரையோஜெனிக் தொழில் நுட்பத்தை தங்கள் வசம் வைத்திருந்த நாடுகள் நமக்குத் தர மறுத்துவிட்டன. 1998-ல் பொக்ரானில் நாம் அணு குண்டு வெடித்ததை யடுத்து இது தொடர்பான தொழில் நுட்ப ஆலோச னைகள் பாதியில் நிறுத்தப்பட்டன. கிரையோஜெனிக் தொழில் நுட்பத்தைக் கொண்டு இந்திய விஞ்ஞானிகள் அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் ஏவுகணைகளை உருவாக்குகிறார்கள் என்று அபாண்டமாக குற்றம் சாட்டப் பட்டு, நமக்கு தொழில்நுட்பம் மறுக்கப்பட்டது.

இதற்குப் பின்னிருந்த உண்மையான காரணம், வணிகம். அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரான்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகள் மட்டுமே இந்தத் தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக இருந்தார்கள். தகவல் தொடர்புக்கு ஏதுவான பெரிய செயற்கைக் கோள்களை ஒருநாடு விண்ணில் நிலைநிறுத்த வேண்டுமானால் இவர்களைத்தான் சார்ந்து இருக்க வேண்டும். இந்தியா, இந்தத் தொழில்நுட்பத்தில் தேர்ந்துவிட்டால் மிகக் குறைந்த காசுக்கு மற்றவர்களுக்கு செயற்கைக் கோளை ஏவித்தரும் என்று இந்நாடுகள் அஞ்சின.
இந்நிலையில் இந்தியா தனக்கான தொழில்நுட்பத்தை,தாமே வடிவமைப்பது என்று அதிரடியாக முடிவெடுத்தது. தமிழகத்தில் நெல்லைக்கு அருகில் உள்ள மகேந்திர புரியில் Liquid Propulsion System Centre என்கிற அமைப்பை அதற்காக உருவாக்கியது. 2002 பிப்ரவரியிலேயே சில நொடிகளுக்கு விண்ணில் செயற்கைக்கோளை உந்திச் செல்லும் கிரையோஜெனிக் இன்ஜினை நாம் உருவாக்கிவிட்டோம். ஆனால், கிரையோஜெனிக் எந்திரங்களைப் பொருத்தவரை எவ்வளவு நொடிகளுக்கு இது விண்ணைக் கிழித்துக் கொண்டுச் செல்லும் என்பது மிக முக்கியம்.

அதிக நொடிகளுக்கு இயங்கினால்தான் நல்ல உயரத்தில், திட்டமிட்ட பாதையில் செயற்கைக்கோளை நிறுவமுடியும். 2002 செப்டம்பரில் 1000 நொடிகளுக்கு உந்திச் செல்லுகிற இன்ஜின் தயார். அடுத்தடுத்த சோதனைகளில் வெற்றிகண்ட பின்னரே மார்ச் 12, 2003 அன்று கிரையோ ஜெனிக் இயந்திரங்களை தயாரிக்கும் வல்லமையை இந்தியா பெற்றுவிட்டதாக உலகுக்கு அறிவிக்கப்பட்டது.

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்...

வெள்ளி, பிப்ரவரி 04, 2011

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை!


சென்ற ஆண்டு (2010) இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த வருடம். நான்கு அயல்நாட்டுத் தலைவர்கள் இந்த வருடத்தில் இந்தியப் பயணம் மேற்கொண்டனர். அவர்களில், பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி. மற்ற இருவர், ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வடேவ் மற்றும் சீனப் பிரதமர் வென் ஜியாபோ. இந்த மூவரும் டிசம்பரில் வந்தனர். நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்தியாவுக்கு வந்தார். ஐ.நா., பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பினராக இருக்கும் ஐந்து நாடுகளில், நான்கு நாட்டுத் தலைவர்கள் இரண்டு மாதங்களில் அடுத்தடுத்து இந்தியப் பயணம் மேற்கொண்ட சம்பவம் சுதந்திர இந்திய வரலாற்றில் இதுவரை நிகழ்ந்தது கிடையாது. இந்த நான்கு நாட்டுத் தலைவர்கள் முன்பும் இதுவரை இல்லாத அளவிற்கு உள்ள கோரிக்கைகளில் முக்கியமானது, ஐ.நா., பாதுகாப்புச் சபையில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வேண்டும் என்பதுதான்.

இது வரையிலான காலகட்டங்களில் இந்தியா பற்றிய கண்ணோட்டம் உலகளாவிய நிலையில் எவ்விதம் மாறியிருக்கிறது என்பதையும், இனி வருங்காலத்தில் உலகம் எவ்விதம் இந்தியாவைப் பார்க்கப் போகிறது என்பதையும் இந்தக் கோரிக்கை நமக்குக் காட்டுகிறது. சந்தேகம் இல்லாமல், இந்திய வெளியுறவுக் கொள்கையில் இதை ஒரு மாபெரும் வெற்றி என்று அடித்துக் கூறலாம். அதேநேரம், இந்த வெற்றி, இன்றியமையாத சவால்களும், கடினமான சுமைகளும் நம் முன் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. இந்த சவால்களையும் சுமைகளையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா?

பழைய வல்லரசுகளும், பொருளாதார சிக்கலும்: ஐ.நா., பாதுகாப்புச் சபையில் இடம் பெற்றுள்ள ஐந்து நிரந்தர உறுப்பினர்களில், பிரிட்டனும், பிரான்சும் கடந்த காலத்தில் வல்லரசுகளாகத் திகழ்ந்தவை என்பது தௌ¤வு. அவற்றின் பொருளாதாரம் சுருங்கத் துவங்கி விட்டது. அங்கு வேலையில்லாத் திண்டாட்டம் 10 சதவீதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஏறக்குறைய ஐரோப்பிய நாடுகள் முழுவதும் இதே நிலைமைதான். ஜெர்மனியின் பொருளாதாரம் மட்டும் இப்போதும் ஓரளவிற்கு நல்ல நிலைமையில் இருக்கிறது.

டிமிட்ரி மேடதேவ்
இந்திய - ரஷ்ய உறவு: சோவியத் யூனியன் சிதறுண்ட பின், உலக விவகாரங்களில் ரஷ்யாவின் முக்கியத்துவம் குறிப்பிடத்தக்க அளவில் சரிந்தது. நீண்ட காலமாக வல்லரசாக இல்லாத ரஷ்யா, தன் உள்நாட்டுப் பிரச்னைகளுக்கிடையில் மாறி வரும் உலகில் தனக்கு ஒரு புதிய இடத்தை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. எண்ணெய் மற்றும் இயற்கை வாயு ஏற்றுமதியை மட்டுமே பெருமளவில் நம்பியுள்ள ரஷ்யப் பொருளாதாரத்தில், உற்பத்தித்துறை இன்னும் மந்தமாகவே உள்ளது. எனவே ரஷ்யப் பொருளாதாரத்தை நவீனப்படுத்துவதுதான் அந்நாட்டிற்கு மிகப்பெரிய சவால்.

நமது நம்பிக்கைக்குரிய, அரசியல் ரீதியிலான நட்பு நாடாக ரஷ்யா இருந்த போதும், உலகளவிலான நமது பொருளாதார உறவுகளில் ரஷ்ய உறவின் முக்கியத்துவம் குறைந்து விட்டது. மாறாக சீனாவுடனான நமது பொருளாதார உறவு குறுகிய காலத்தில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித் துள்ளது. கடந்த 2000ல், சீனா மற்றும் ரஷ்யாவுடனான இந்திய வர்த்தகம், தலா 3 பில்லியன் டாலர். இந்தாண்டில் மட்டும் இந்திய-சீன வர்த்தகம் 60 பில்லியன் டாலர். 2015ம் ஆண்டுக்குள் இந்த வர்த்தகம் 120 பில்லியன் டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதோடு ஒப்பிடுகையில், இந்தாண்டு, இந்திய-ரஷ்ய வர்த்தகம் 10 பில்லியன் டாலர் தான். இதுவே 2015ல் வெறும் 20 பில்லியன் டாலராக மட்டுமே அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இந்தியாவுடனான வர்த்தகத்தில் சீனா பெரிய பங்கு வகித்து வருகிறது. இன்றைய உலகில் ஒரு நாட்டின் வெளியுறவுக் கொள்கையில், அது பிற உலக நாடுகளுடன் கொள்ளும் வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகள், சந்தேகத்துக்கிடமில்லாத வகையில் முக்கிய இடத்தை வகிக்கின்றன. எனினும் நாம் ரஷ்யாவைப் புறக்கணிக்க முடியாது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். உலகின் மிகப் பெரிய நாடான ரஷ்யா, அமெரிக்காவைப் போல் இரண்டு மடங்கு பெரியது. ரஷ்யாவுக்குள் ஐந்து இந்தியாக்களை வைத்து விடலாம். இயற்கை வளங்களுக்கு குறைவில்லாத நாடு. எல்லாவற்றையும் விட முக்கியமானது, இந்தியாவின் மின்சார உற்பத்தி பாதுகாப்புக்கு ரஷ்யாவின் உதவி இன்றியமையாதது.

தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 9,000 மெகாவாட் மின் உற்பத்தித்திறன் உடைய அணு உலை, மேம்பட்டு வருவது, இந்திய-ரஷ்ய உறவுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. மாறாக, இந்தியாவில் ஒரு அணு உலை கட்டக் கூட அமெரிக்கா ஆர்வத்துடன் முன்வரவில்லை. இந்திய- அமெரிக்க அணுசக்தி உடன்பாடு, இந்தியப் பார்லிமென்ட்டில் பெருத்த சர்ச்சைகளைக் கிளப்பியது. அதேநேரம், ரஷ்யாவின் சைபீரியப் பகுதியில் உள்ள "சகாலின்' தீவில், இந்திய அரசின் "எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கார்ப்பரேஷன்' (ஓ.என்.ஜி.சி.,) ரஷ்ய அரசுடன் இணைந்து எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கண்டறியும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

BARACK OBAMA
இந்திய - அமெரிக்க உறவு: அமெரிக்கா உடனான இந்திய உறவில் குறிப்பிடத் தக்க மாற்றம் நிகழ்ந்தது இந்தாண்டில்தான். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகை பற்றிய இந்தியர்களின் கண்ணோட்டம் தௌ¤வாக இருந்தது. "வீழ்ந்து கொண்டிருக்கும் வல்லரசு அமெரிக்கா; இந்தியா உலகரங்கில் எழுச்சி பெறும் ஒரு வல்லரசாக இருப்பதால்தான் அமெரிக்க அதிபர் இந்தியாவுக்கு வந்தார்” என்பதுதான். அமெரிக்கா உற்பத்தி செய்யும் ராணுவத் தளவாடங்களை இந்தியா வாங்க வேண்டும் என்ற கோரிக்கையின் மூலம் அமெரிக்காவில் கொஞ்சம் வேலை வாய்ப்பை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையில்தான், ஒபாமா இந்தியா வந்தார் என்பதை சாதாரண மக்கள் கூடப் புரிந்து கொண்டனர்

.ஒரு காலத்தில் வலிமையான நாடாக இருந்த அமெரிக்கா தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. 10 அமெரிக்கர்களில் ஒருவர் வேலையில்லாமல் இருக்கிறார். சராசரி அமெரிக்கனின் சேமிப்பு ஒன்றும் இல்லாமல் போய்விட்டது. மலை போல கடன் சுமை அந்நாட்டை அழுத்திக் கொண்டிருக்கிறது. அந்நாட்டின் தற்போதைய கடன் 13.8 டிரில்லியன் டாலர் (ஒரு டிரில்லியன் - ஒரு லட்சம் கோடி). கடன் வாங்கும் தொகையில் பெரும்பகுதியை ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் அமெரிக்கா வீணாக செலவழித்துள்ளது. அமெரிக்க உதவி, இந்தியாவுக்குத் தேவை என்பதை விட, மிக அதிகளவில் இந்தியாவின் உதவி அமெரிக்காவுக்குத் தேவை என்பதை முதன் முறையாக, அமெரிக்க கொள்கை நிபுணர்கள் மற்றும் மக்கள் உணர ஆரம்பித்திருக்கின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை மூன்றாம் உலக நாடாகக் கருதப்பட்டு வந்த இந்தியாவை உலகின் மூன்றாவது சக்தி வாய்ந்த நாடு என, இப்போது அமெரிக்கா ஒப்புக் கொண்டிருக்கிறது. இந்த ஒப்புதல்தான், கடந்த 10,15 ஆண்டுகளில் உலகில் சக்தி வாய்ந்த நாடுகளின் வரிசை முறை மாறி வருகிறது என்பதையும், இந்தியாவும் தன்னளவில் பெரும் மாறுதலுக்கு உட்பட்டிருக்கிறது என்பதையும் நமக்குக் காட்டுகிறது.

CARKOZY
 இந்திய - சீன உறவு: வரவிருக்கும் அடுத்த பத்தாண்டுகளில், உலகின் பிற எந்த நாடுகளையும் விட, இந்தியாவும், சீனாவும்தான் புதிய ஆதிக்க சக்திகளாக பரிணமிக்கப் போகின்றன. இதுதான் இந்திய வெளியுறவுக் கொள்கை முன்பு உள்ள மிகப்பெரிய சவால். இந்திய-சீன உறவுகள், அடுத்து வரும் பல ஆண்டுகளை எப்படி வழிநடத்தப் போகின்றன? "இரு நாடுகளும் ஆசியாவின் முதலிடத்துக்குப் போட்டியிடுகின்றன. அதனால் விரைவில் அல்லது சிறிது தாமதித்து இரு நாடுகளுக்கிடையில் மோதல் ஏற்படும்' என்று காட்ட மேற்கத்திய நிபுணர்கள் சிரமப்பட்டு முயல்கின்றனர். இரு தரப்பிலும் அவநம்பிக்கை நிலவுவதாக மற்றொரு கருத்து நிலவுகிறது.

இருநாடுகளும், சமூகம் மற்றும் பொருளாதாரத் துறையில் பெரும் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்களாக இருப்பவை: நமது மொத்த மக்கள் தொகையில், கால் பகுதியினரின் வாழ்வை இருட்டில் வைத்திருக்கும் மோசமான வறுமையை நாம் பூண்டோடு அழித்தாக வேண்டும். சமூக மற்றும் பிராந்திய ஏற்றத் தாழ்வுகளைப் போக்க வேண்டும். பெருகி வரும் இளம் தலைமுறை யினரின் எண்ணிக்கைக்கு ஏற்ப, கல்வி மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். ஏழை-பணக்காரர்களுக்கு இடையிலான ஏற்றுக் கொள்ளவே முடியாத பிளவை குறைக்க வேண்டும்.

பொருளாதார வளர்ச்சியால்தான், சுற்றுச்சூழல் மோசமான அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. பொருளாதார வளர்ச்சியில், மிக முனைப்போடு ஈடுபட்டுள்ள சீனாவும் இதே சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இருநாட்டுத் தலைவர்களும், பிரச்னைக்குரிய எல்லைப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக தேவையான முயற்சிகளை மேற்கொள்ளும் அதே வேளையில், இந்தச் சவால்களை எதிர்கொள்வது பற்றியும் தங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும்.

குறிப்பாக, நட்பு மற்றும் நல்லுறவால் அடையாளப்படுத்தப்பட்ட இந்திய-சீன பண்பாட்டு உறவில், முள்ளாக உறுத்திக் கொண்டிருக்கும், 1962 காலத்திய துரதிர்ஷ்டவசமான சம்பவங்களை இருநாட்டு மக்களும் மறந்து விட வேண்டும். கடந்த 2003ல் அப்போதைய இந்திய ராணுவ அமைச்சரான ஜார்ஜ் பெர்னாண்டஸ் சீனாவுக்குச் சென்ற போது, உலகளவில் பிரபலமானவரும் சீனப் பிரதமருமான வென் ஜியாபோ அவரிடம்,"கடந்த 2,200 ஆண்டுக்கால சீன-இந்திய உறவில் 99.99 சதவீதம் நட்பு பதிவாகியிருக்கிறது. 0.01 சதவீதம் மட்டுமே தவறான புரிதல் பதிவாகியுள்ளது. அந்தத் தவறான புரிதலைப் புதைத்து விட்டு, நட்பை விதைக்க வேண்டிய காலகட்டம் இது' என்பதை நாம் நினைவு கூர்ந்து பார்க்க வேண்டும்.

இருதரப்பு மக்களுக்கிடையே, கலாசாரம், கல்வி, விளையாட்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் ஆன்மிகம் போன்ற துறைகளில் உள்ள தொடர்பு விரிவடைய வேண்டும். ஐ.நா.,வைக் கடந்து... ஐ.நா., பாதுகாப்புச் சபையில் உள்ள ஐந்து நிரந்தர உறுப்பினர்களைத் தாண்டியும் இந்திய வெளியுறவுக் கொள்கை செயல்பட வேண்டும். உலகரங்கில் வலிமை பொருந்திய புதிய நாடுகள் வளர்ந்து வருகின்றன. அவற்றுடனான உறவுகளில் இந்தியா குறைந்தளவு மட்டுமே ஆர்வம் காட்டி அவற்றை புறக்கணிக்க முடியாது. உதாரணமாக, பிரேசில் உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளுடனும் இந்தியா தனது உறவை மேம்படுத்த வேண்டும்.

"கிழக்கு பார்வைக் கொள்கை': நமது வெளியுறவுக் கொள்கையின் மிக முக்கிய பகுதியான "கிழக்கு பார்வைக் கொள்கை' தான், தெற்காசிய மற்றும் கிழக்காசிய நாடுகளுடன் நம்மை நெருங்க வைக்கும். இக்கொள்கையை இந்தியா மேலும் விரிவுபடுத்தி துரிதப்படுத்த வேண்டும். வியட்நாம், கம்போடியா, லாவோஸ், மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளுடன் முற்காலத்தில் தமிழர்கள் கலாசார மற்றும் வர்த்தக ரீதியில் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதை இங்கு நினைவு கூர்தல் அவசியம். இந்திய நாகரிகமும், ஆன்மிகத் தாக்கமும், புத்த மதத்தின் வழியாக, ஜப்பான் மற்றும் கொரியாவைச் சென்றடைந்தன. இந்தத் தொன்மையான உறவுகளை மீண்டும் புதுப்பிப்பதன் மூலம் நமது வெளியுறவுக் கொள்கையின் முக்கியக் குறிக்கோளை நாம் அடைய முடியும்.

WEN JEOBO
அண்டை நாடுகளுடன்...: நமது நெருங்கிய அண்டை நாடுகளுடனான உறவையும் நாம் பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. இந்திய எதிர்ப்பு மனநிலை கொண்ட பயங்கரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் உறுதியான நடவடிக்கை எடுக்காத வரை, இருதரப்பு உறவுகளும் சீரடையாது. வங்கதேச- இந்திய உறவுகள் மேம்படுவதற்கான வாய்ப்புகளை வங்கதேசம் முன்வைத்துள்ளது. ஆப்கானிஸ்தானுடனான நமது உறவை தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும். நமது நெருங்கிய அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் போர் விரைவில் முடிவுக்கு வருவதில், நமது ஒத்துழைப்பை பிற நாடுகளுக்கு அளிக்க வேண்டும். இந்திய செல்வாக்கில் இருந்து விடுபட விரும்பும் பல்வேறு சக்திகளின் கைகளில் அகப்பட்டுக் கொண்டிருக்கும் நேபாளத்தை நோக்கியும் நம் பார்வை திரும்ப வேண்டும்.

புவியியல், ஆன்மிகம் மற்றும் மொழியியல் ரீதியில் இலங்கை உடனான நமது உறவு, பொருளாதார தொடர்பையும் கடந்து ஆக்கப்பூர்வமாக வலுப்பட வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், அண்டை நாடுகளுடன் இந்தியா தனது உறவை இன்னும் நெருக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இந்தியாவின் வளர்ச்சியில் அவர்களும் பயன்பெறுவர் என்ற எண்ணம் அவர்களிடம் உருவாக வேண்டும். இந்தியத் துணைக்கண்டத்தில் வளத்தையும் இணக்கத்தையும் கொண்டு வர வேண்டியது இந்தியாவின் கடமை. அதுதான், நமது நாட்டில் பிறந்த அறிவார்ந்த சான்றோர்கள் மற்றும் சமூக சீர்திருத்த வாதிகளின் கனவை நிறைவேற்றுவதும் ஆகும்.

கட்டுரையாளர், சுதீந்திர குல்கர்னி. வாஜ்பாய் பிரதமராக இருந்த கால கட்டத்தில் அவரது உதவியாளராகப் பணியாற்றியவர். மும்பையில் இயங்கி வரும் "அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன்' அமைப்பின் தலைவராக தற்போது பணியாற்றி வருகிறார். விமர்சனங்களை sudheenkulkarni@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு ஆங்கிலத்தில் அனுப்பலாம்.

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

அமெரிக்காவைத் தொடர்ந்து...!?அமெரிக்காவைச் சார்ந்து தான் உலக நாடுகளின் பொருளாதாரம் பிணைக்கப்பட்டிருக்கிறது. பரிவர்த்தனைகள் அனைத்தும் அமெரிக்க கரன்சியான, "டாலரில்' தான் நடக்கிறது. இதனால், அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உலகளவிலும் எதிரொலித்தது. கடந்த 2008ல் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், 2001 க்கு செல்ல வேண்டும். அங்கிருந்து தான் இந்த கதை தொடங்குகிறது.

"டாட் காம் பபுள்' நெருக்கடி: கடந்த 1990 களில், இணையதள நிறுவனங்கள் அதிகரிக்க தொடங்கின. இணையதளங்கள் மிக விரைவில் அமோகமாக வளர்ச்சி பெறும் என்று எண்ணிய பலர், அவற்றின் பெயரில் பங்குச் சந்தையில் முதலீ¦டு செய்தனர். இணையதளத்துக்கு கொஞ்சம் கூட தொடர்பில்லாத நிறுவனங்கள் கூட தங்கள் பெயருக்கு பின்னால், "டாட் காம்' என சேர்த்தால் அவர்களுக்கு அமோக வசூல் தான் என்ற நிலைமை. கடந்த 2000, மார்ச் மாதம் இந்த பங்குகளில் பெருத்த அடி விழுந்தது. இதன் காரணமாக, இணையதள தொழில் மாயை என்பது வெளியுலகுக்குத் தெரிய வந்தது. இது தான் பொருளாதார நெருக்கடியின் தொடக்ம்.

அமெரிக்காவில் 60ல் இருந்து 70 விழுக்காடு பேர், பங்குச் சந்தையில் முதலீ¦டு செய்திருந்தனர். அவர்கள் இந்தப் பங்குகளை வாங்கியிருந்தனர். இவை சரிய தொடங்கிய பின் பெரிய நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து, 9/11 என்று குறிப்பிடப்படும் இரட்டை கோபுர தகர்ப்பு நடந்தது. 1987ல் இருந்து 2006 வரை அமெரிக்காவின் மத்திய ரிசர்வ் வங்கியான, "பெடரல் ரிசர்வ்' வங்கியின் தலைவராக இருந்த ஆலன் கிரீன்ஸ்பான், பங்குச் சந்தை சரிவையடுத்து, பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் நடவடிக்கையாக, வங்கிகளின் வட்டி விகிதத்தை 1.25 விழுக்காடாகக் குறைத்தார். அதற்கு முன் 4 அல்லது 5 விழுக்காடாக இருந்தது.

வாரி வழங்கப்பட்ட வீட்டுக் கடன்: "டாட் காம் பபுள்' நெருக்கடி கால கட்டத்திலேயே மிகக் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் கொடுத்தனர். இப்போது மேலும் வட்டி விகிதம் குறைந்தவுடன், அமெரிக்காவில் நடுத்தர வர்க்கத்தினர் எல்லாரும் வீட்டுக் கடன் வாங்கினர். கடனை திருப்பிக் கொடுக்கும் தகுதி வாங்குபவருக்கு இருக்கிறதா என்பதை ஆராயாமல், கேட்டவர்களுக்கு எல்லாம் கடன் கொடுத்ததால், இந்தக் கடன், "சப் ப்ரைம்' கடன் என்றழைக்கப்படுகிறது. இந்தக் கடனை வாங்கி வீடு வாங்குபவர்கள், ஆறு மாதத்துக்கு வட்டி கட்டிய பின் வீட்டை விற்றனர். அதில் வரும் லாபத்தில் மீண்டும் கொஞ்சம் வட்டி கட்டினர். அதன் பின், அவர்கள் வங்கி பக்கம் எட்டிப் பார்க்க மாட்டார்கள். இப்படி கடன் வாங்கியவர்களில் பெரும் பாலானோர் வட்டி கட்டாமல் தப்பித்து வந்தனர்.

இன்னொரு திட்டமும் இதற்கு முன்வைக்கப்பட்டது. முதல் ஒரு சில ஆண்டு களுக்கு வட்டி கட்டாமல், வீடு வாங்கும் திட்டம் அது. இந்த வட்டி கட்டாத ஆண்டுகளுக்கான வட்டியை பின்பு கட்டப்படும் மாதத் தவணையில் சேர்த்து கழித்து விடுவர். இந்தக் கடனுக்கு குறைந்த அளவில் வட்டி வசூலித்தனர். கடன் தொகைக்கும், வாங்கியவர்கள் திருப்பியளிக்கும் தொகைக்கும் 1 அல்லது 1.5 சதவீதம் மட்டுமே வித்தியாசம் இருந்தது. இதன் மூலம் பொருளாதாரம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஓரளவு அதில் உண்மையும் இருந்தது. ஆனால், பெரும்பான்மையான வீட்டுக் கடன்கள் வராக் கடன்களாகிவிட்டன.

"சப் ப்ரைம்' நெருக்கடி: கடன் அளிக்கும் போதே, அவற்றை அமெரிக்க வங்கிகள் "கடன் பத்திரங்களாக' மாற்றி உலக சந்தையில் விற்று விட்டன. வங்கிகளின் தாராள போக்கினால் பொருளாதாரத்தில் ஒரு தேக்கநிலை ஏற்பட்டது. 30 கோடி மக்களில் 25 கோடி பேருக்கு வீடு, கார்கள் இருக்கின்றன. எவ்வளவு தான் வாங்குவர்? கடனுக்கான வட்டி விகிதம் ஏறத் தொடங்கியது. மாதத் தவணை கட்ட இயலவில்லை. "வீடு வேண்டாம்' என்ற மனநிலைக்கு மக்கள் திரும்பினர். அதேநேரம், வீட்டு விலையும் சரியத் துவங்கியது. அன்றைய நிலையில், தேவையை விட கூடுதலாக ஆளில்லாமல் ஒரு கோடி வீடுகள் இருந்தன என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.

ஐம்பது லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டை, இரண்டு கோடிக்கு விற்று, 50 லட்சத்தை கட்டிவிட்டு, மீதியை பங்குச் சந்தையில் முதலீ¦டு செய்து பணம் பெருக்கலாம் என்பது அவர்களின் திட்டம். அப்படியும் கொஞ்ச காலம் நடந்தது. ஆனால், வங்கிகள், பங்குச்சந்தைகளோடு பிணைக்கப்பட்டிருந்தன. பங்குச் சந்தையில் ஏற்பட்ட நெருக்கடி, வங்கிகளில் எதிரொலித்தது. வங்கியில் "கரன்சி' இல்லை; மாறாக, பத்திரம்தான் இருந்தது. கடன் கொடுக்கும் திறனை இழந்து வங்கி திவாலானது. நாட்டில் பணப்புழக்கம் குறைந்தது. இதைத் தான், "சப் ப்ரைம்' நெருக்கடி என்றனர்.

சமச்சீரற்ற நிலை: அமெரிக்காவின் "செக்யூரிட்டைசேஷன்' என்ற விதிப்படி தான் வங்கிகள் தாம் வைத்திருந்த கடன் பத்திரங்களை, "ரேட்டிங் ஏஜன்சி' மூலம் மதிப்பிட்டு அவற்றை உலகச் சந்தையில் விற்றன. இந்தக் கடன் பத்திரங்களை சீனா, ஜப்பான் போன்ற நாடுகளும் வாங்கின. அமெரிக்க வங்கிகள் தமது கடன் பத்திரங்களை கைமாற்றி விட்டன. மிச்சமிருந்த பத்திரங்களை அரசு பணம் கொடுத்து சரிக்கட்டியது. இந்தியப் பொருளாதார நிபுணரும், மத்திய ரிசர்வ் வங்கியின் அப்போதைய தலைவருமான ஒய்.வி.ரெட்டியின் ஆலோசனையின் பேரில் இந்தியா மட்டும் அந்தக் கடன் பத்திரங்களை வாங்கவில்லை. இதற்கிடையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க, அமெரிக்கா கரன்சியை அச்சடிக்க ஆரம்பித்தது. இதனால், டாலர் புழக்கம் அதிகரித்தது. அதன் விளைவாக யூரோ, யென், யுவான் போன்ற பிற நாடுகளின் கரன்சி புழக்கமும் அதிகரித்தது. இந்த அதிகரிப்பால் பணவீக்கம் ஏற்பட்டது.

பணவீக்கம் உயர்ந்ததால் விலைவாசி அதிகரித்தது. அமெரிக்கா அடிப்படை உற்பத்தியில் ஈடுபடாமல், உயர் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள், தயாரிப்புகளில் மட்டும் ஈடுபட்டது. தற்போதும் அதுதான் நிலைமை. அடிப்படை உற்பத்திப் பொருட்களை சீனா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து விடுகிறது. ஒரு பக்கம், அமெரிக்கா நுகர்கிறது. இன்னொரு பக்கம், மற்ற நாடுகள் உற்பத்தி செய்து அமெரிக்காவுக்கு அனுப்புகின்றன. இதை "உலக சமச்சீரற்ற நிலை' என்கின்றனர் நிபுணர்கள். இதில், ஒரு பக்கம் அடி விழுந்தாலும் மற்றொரு பக்கமும் அதன் தாக்கம் இருக்கும்.

அமெரிக்க நுகர்வு கலாசாரம்: இந்தப் பிரச்னைக்கெல்லாம் அடிப்படை காரணம், அமெரிக்காவின் நுகர்வுதான். ஏன் அமெரிக்கா நுகர்வுக் கலாசாரத்துக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறது? "வீட்டில் சும்மா இருக்க வேண்டாம், ஷாப்பிங் செல்லுங்கள். அதன் மூலம் உங்கள் கையில் இருக்கும் காசு சந்தைக்கு வந்து அப்படியே ஒரு சுழற்சியில் ஈடுபடும். இதுதான் பொருளாதாரத்தை வளர்க்கும்' என்பது தான் அமெரிக்கப் பொருளாதாரக் கொள்கை. இந்த கொள்கை உருப்பெறுவதற்கு எது காரணமாக இருந்தது? கலாசாரம். ஒரு நாட்டின் கலாசாரம் தான் அதன் சகல விஷயங்களுக்கும் அடிப்படை. ஆசிய நாடுகளுக்கும், மேற்கத்திய அமெரிக்க நாடுகளுக்கும் இடையில் ஒரு பெரிய வித்தியாசம் இந்தக் கலாசாரம் தான்.

அமெரிக்காவில், பெண்கள் பொருளாதார ரீதியில் சுயசார்பு பெற்ற பின், "குடும்பம்' என்ற அமைப்பு சிதைந்தது. குடும்பம் இல்லாததால் அதைக் காக்க வேண்டும் என்ற கடமையும் இல்லாமல் போனது. அதனால் ஏற்பட்ட பெரிய பாதிப்பு, தனிநபர் சேமிப்பு குறைந்ததுதான். சம்பாதிப்பது எல்லாம், செலவழிப்பதற்காகத் தான் என்ற கொள்கை உருவானது. இதை அந்நாட்டுப் பொருளாதார நிபுணர்களும் அரசும் வரவேற்றனர். பெற்றோர், குழந்தைளைக் காக்க வேண்டிய குடும்பத் தலைவனின் கடமை, அரசு தலை மேல் விழுந்தது.

சேமிப்பின் அவசியம்: தனிநபர்கள் சம்பாதித்ததை எல்லாம் ஷாப்பிங்கில் ஆரம்பித்து எல்லாவற்றிலும் செலவழிக்க தொடங்கினர். தொடக்த்தில் இது பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு வந்தது என்றாலும், அதையடுத்து ஒரு பெரிய நெருக்கடியையும் கொண்டு வந்து விட்டது. சீனா, இந்தியா, கொரியா, ஜப்பான், இந்தோனேசியா போன்ற ஆசிய நாடுகள் இதற்கு நேர்மாறானவை. குடும்பம் என்ற அமைப்பு இவற்றில் இன்றும் இருப்பதால், சேமிப்பு சரியான நிலையில் உள்ளது. அமெரிக்காவில் சேமிப்பு பூஜ்யம் என்றால், சீனாவில் சேமிப்பு 35 சதவீதமாகவும், இந்தியாவில் 25ல் இருந்து 30 சதவீதமாகவும் உள்ளது. குடும்பத்தை மையமாக வைத்துதான் பொருளாதாரம் உள்ளது. இதுதான் பொருளாதார அடிப்படை கட்டமைப்பு.

சீனா, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இதுதான் பொருளாதாரத்தின் அடிப்படை. அமெரிக்காவில் இது நேர்விரோதம். இது பற்றி, பிரான்சிஸ் புக்கியாமா என்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர், தான் எழுதிய, "ட்ரஸ்ட்' என்ற நூலில், "எல்லா நாட்டுக்கும் அமெரிக்கப் பொருளாதார மாதிரி ஒத்து வராது. அந்தந்த நாட்டுக் கலாசாரத்தின் அடிப்படையில் தான் அவற்றின் பொருளாதாரம் அமைய வேண்டும்' என்பதை வலியுறுத்தியுள்ளார். பொருளாதாரம் என்பது கலாசாரத்தை மையமாகக் கொண்டது என்பதை இப்போது இந்த நெருக்கடிக்குப் பின், பல பொருளாதார நிபுணர்களும் ஒத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்திய மனநிலை: அமெரிக்காவை ஒப்பிடும் போது இந்தியா சேமிப்பு நாடு; சீனாவோடு ஒப்பிடும் போது இந்தியா நுகர்வு நாடு. ஆண்டு முழுவதும் உள்ள நமது பண்டிகைகள், விழாக்கள் அனைத்தும் நுகர்வு கலாசாரத்தோடு தொடர்புடை யவைதான். இதன் மூலம் பணப்புழக்கம் அதிகரிக்கும்; பொருளாதாரம் செழிப்பாகும். அதேநேரம், நம்மூரில், கடன் வாங்குவது என்பது இன்றும் ஒரு அவமானமாகவே கருதப்படுகிறது. தேவைக்கு கடன் வாங்குவதை நம்மவர்கள் தவறு என்று சொல்ல வில்லை. சக்திக்கு மீறி கடன் வாங்குவதைத்தான் நமது கலாசாரம் தவறு என்கிறது. ஆனால், அமெரிக்காவில் ஒருவன் துணிந்து, "நான் திவாலாகி விட்டேன்' என்று சொல்லி விட்டு, அவனே மறுபடியும் தொழில் தொடங்க முடியும்.

இந்தியாவில் இது நடக்காது. ஒருவன் திவாலாகி விட்டான் என்றால் அவனால் மறுபடியும் தொழில் தொடங்க முடியாது. அமெரிக்காவில் அதிகளவில் பங்குச் சந்தையில் முதலீ¦டு செய்திருப்பதால் அதன் வீழ்ச்சி பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், இந்தியாவில் 3 சதவீதம் பேர் தான் பங்குச் சந்தையோடு தொடர்பில் உள்ளனர். பங்குச் சந்தை விழுந்தால் 2 சதவீதம் பேருக்கு பாதிப்பு இருக்கும். ஒரு விழுக்காடு பேருக்குத்தான் பெரியளவில் பாதிப்பு இருக்கும். மற்றபடி 97 விழுக்காடு பேருக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது. இந்தியாவின் மொத்த முதலீ¦டு 38 சதவீதம்; சேமிப்பு 37 சதவீதம். 1 சதவீதம் வெளிநாட்டு முதலீ¦டு. அந்த 1 சதவீதம் வராமல் போய்விட்டாலும் நமக்கு ஒரு பாதிப்பும் இல்லை. நமது சேமிப்பு நம்மைக் காப்பாற்றும். நம் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்கள் பெரும்பான்மையும் இங்கேயே நுகரப்படுகின்றன. அதன் மூலம் செலாவணி கிடைக்கிறது. அது சேமிப்பாகிறது. பின்பு அதுவே முதலீ¦டாகிறது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், நமது சேமிப்பு 23 சதவீதமாக இருந்தது. அப்போது சில பொருளாதார நிபுணர்கள், "இந்தியாவில் சேமிப்பு இவ்வளவு இருப்பது ஆபத்தானது; நுகர்வு அதிகரிக்க வேண்டும்; அதனால் உற்பத்தி அதிகரிக்கும்; பொருளாதாரம் செழிக்கும்' என்றனர். ஆனால், அது நடக்கவில்லை. கடந்த 2008ல் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடி இந்தியாவை பெருமளவில் பாதிக்காததற்கு இதுதான் காரணம். அதேநேரம், உலகளாவிய அளவில் இந்தியர்கள் பரவியிருப்பதால், சிறிது பாதிப்பு ஏற்படத்தான் செய்யும். இந்தப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமானால், அமெரிக்கா சேமிக்கத் துவங்க வேண்டும். சீனா நுகரத் துவங்க வேண்டும். சேமிப்பைக் குறைக்க வேண்டும். இதன் மூலம் நெருக்கடி ஓரளவுக்கு மாறத் துவங்கும்.

ஐரோப்பிய நெருக்கடி: ஐரோப்பாவில், கிரீஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் அயர்லாந்து நாடுகளில் இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல், அந்நாடுகளின் தவறான உள்நாட்டுப் பொருளாதாரக் கொள்கை களால் ஏற்பட்டுள்ளது. இதனால், ஜெர்மனி உள்ளிட்ட வளர்ந்த நாடுகளும் பாதிக்கப்படத்தான் செய்யும். ஏனெனில், ஐரோப்பிய யூனியனில் இப்போது "யூரோ' கரன்சி புழங்குவதால், கிரீஸ், அயர்லாந்து நெருக்கடியால், கரன்சி மதிப்பில் பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பு, ஜெர்மனி போன்ற நாடுகளையும் பாதிக்கும். இதன் விளைவாக, யூரோ கரன்சி கூட்டணியில் இருந்து ஜெர்மனி, பிரிட்டன் போன்றவை விலகலாம்.

ஜெர்மனி தனது பழைய கரன்சியான "மார்க்'குக்குத் திரும்பலாம். அல்லது கிரீஸ் போன்ற நாடுகள் யூரோவை விட்டு விட்டு தங்களது பழைய கரன்சிக்குத் திரும்பலாம். மொத்தத்தில் "யூரோ' கரன்சியில் பிளவு ஏற்படவே வாய்ப்புகள் அதிகம். ஒரு முன்னெச்சரிக்கையாக கடந்த 2008ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஒரு முன்னறிவிப்புதான். முழு நெருக்கடி இனிமேல் தான் ஏற்படப்போகிறது. அது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்.

ஒரே நேரத்தில் டாலரும், யூரோவும் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக் கின்றன. ஒரு கட்டத்தில் ஏதாவது ஒன்று முழுமையாக விழும் போது, அந்த பயங்கர நெருக்கடி தோன்றும். இது பற்றி நாம் மிகச் சரியாக ஆரூடம் கூற முடியாது என்றாலும், இன்னொரு பயங்கர நெருக்கடி காத்திருக்கிறது என்று மட்டும் கூற முடியும். இந்த நெருக்கடி அமெரிக்கா, பிரிட்டனை கடுமையாகத் தாக்கும். அதில் இருந்து அந்நாடுகள் மீள்வது மிகக் கடினம். ஆனால், அதனாலும் இந்தியா பெருமளவில் பாதிக்கப்படாது.

இப்படி உலகளவில் ஏற்பட்டு வரும் பொருளாதார நெருக்கடிக்கு நிபுணர்கள் கூறும் காரணங்கள் என்ன?

உலகம் முழுவதும் கணக்கு வழக்கின்றி பெருகிக் கொண்டிருக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப, இவர்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு. அடுத்து, வளர்ந்த நாடுகள் தங்களது எரிபொருள் தேவைக்காக, உணவுப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் "உயிரி எரிபொருள்' (பயோ ப்யூவல்) உற்பத்தியில் தீவிரமாக ஈடுபடுவது. இதனால், வளர்ந்து வரும் நாடுகள், மூன்றாம் உலக நாடுகளில் உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு விலைவாசி உயர்கிறது.

முக்கியமான ஒன்றாக நிபுணர்கள் கூறுவது, கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட காலநிலை மாற்றம். வறட்சி, வெள்ளம், சூறாவளி, மாறி வரும் மழை போன்றவற்றால் எதிர்பார்த்த உற்பத்தி இல்லாதது. மேலும், உற்பத்தி நாடுகளின் ஸ்திரமற்ற அரசியல் மற்றும் பொருளாதார நிலை போன்ற காரணங்களை கூறுகின்றனர்.

நன்றி: தினமலர் சென்னை பதிப்பு- டிசம்பர் 2010.

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.