செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

திங்கள், பிப்ரவரி 07, 2011

போரின் பின்னணி என்ன?


இன்று பகைமை பாராட்டும் தென்கொரியாவும் வடகொரியாவும் முன்பு கொரியா என்ற பெயரில் ஒரே நாடாக இருந்தன. தீபகற்ப நாடான கொரியா 1910-ஆம் ஆண்டு முதல் ஜப்பானின் ஆட்சி அதிகாரத்துக்கு உட்பட்டு இருந்தது. 2-ஆம் உலகப்போரில் தோல்வி அடைந்ததால் ஜப்பான் சரண் அடைந்தது. அந்த போரின் போது, ஜப்பான் வசம் இருந்த கொரியாவை அமெரிக்காவும், ரஷியாவும் ஆக்கிரமித்துக் கொண்டன. அமெரிக்க ராணுவம் ஆக்கிரமித்து இருந்த தென்பகுதி தென் கொரியா ஆகவும், ரஷிய ராணுவம் ஆக்கிரமித்து இருந்த வடபகுதி வடகொரியா ஆகவும் 1948-ஆம் ஆண்டு தனித்தனியாக பிரிந்தன. பெயருக்குதான் இவை தனித்தனி நாடுகளாக இருந்தன.


இவற்றை உண்மையில் இயக்கி வந்தது அமெரிக்காவும், ரஷியாவும்தான். ரஷியாவில் கம்யூனிஸ்டு ஆட்சி கவிழ்ந்த பிறகு சீனா வடகொரியாவை தத்து எடுத்துக் கொண்டது போல அதன் ஆதரவு நாடாக இருந்து வருகிறது. கொரியா தனித்தனி நாடுகளாக பிரிந்த சில ஆண்டுகளிலேயே அவற்றை இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு பேச்சுவார்த்தை தொடங்கியது. பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் இருதரப்பினருக்கும் இடையே பகை வளர்ந்து கொண்டே இருந்தது. அது கொரிய யுத்தமாக வெடித்தது.

1950 ஜுன் 25-ந் தேதி தென்கொரியா மீது வடகொரியா படை யெடுத்தது. இந்த படையெடுப்பை முறியடிக்க அமெரிக்கா, தொன்கொரியா வின் உதவிக்கு வந்தது. அப்போது சீனா வடகொரியாவின் உதவிக்கு வந்தது. வடகொரியாவுக்கு ஆதரவாக ரஷியா ஆயுதங்களை கொடுத்து உதவியது. மூன்று ஆண்டுகள் நடந்த இந்த போரில் இரு தரப்புக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டது. 1953 ஜுலை 27-ந் தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. போர் நின்று போனாலும் இரு கொரியாக்களுக்கு இடையிலும் அவ்வப்போது மோதல்கள் வெடிப்பது வழக்கமான ஒன்றாக இருந்தது. 1966-ஆம் ஆண்டு மீண்டும் எல்லைப் பிரச்சனையை வடகொரியா கிளப்பியது. அடுத்தடுத்து வடகொரியா ராணுவ வீரர்கள் எல்லை மீறுவதை வாடிக்கையாக கொண்டனர்.

1968-ஆம் ஆண்டு 31 வடகொரிய கமாண்டோக்கள் தென்கொரிய ஜனாதிபதி மாளிகையான ‘ப்ளூ ஹவுசை’ நெருங்க, தென்கொரியா அவர்களை சுட்டுக் கொன்று ஜனாதிபதியை காப்பாற்றியது. அடுத்த நான்கு ஆண்டுகளில் அவ்வப்போது வடகொரியா மேற்கொண்ட ஊடுருவல்களால் இருதரப்பிலும் 700 பேர் உயிர் இழந்தனர். 1974-ஆம் ஆண்டு வடகொரியா, எல்லைக் கோட்டுக்கு கீழே பூமிக்கு அடியில் ரகசியமாக சுரங்கங்களை தோண்டி மிக எளிதாக தென் கொரியா வுக்குள் நுழையும் ஏற்பாட்டை செய்தது. அந்த சுரங்கங்களை தென்கொரியா கண்டுபிடித்து அழித்தது. என்றாலும், சுரங்கம் தோண்டும் வேலையை வட கொரியா கைவிட்டதாக தெரியவில்லை.
இப்படி முட்டலும், மோதலுமான நிலையை தவிர்ப்பதற்காக 1991-ஆம் ஆண்டு இரு நாடுகளும் இணைந்து ஒரே கொடியுடன் உலக டேபிள் டென்னிஸ் போட்டியை ஆடின. அதே ஆண்டு இளைஞர் உலகக்கோப்பை கால்பந்து போட்டியிலும் ஒருங்கிணைந்த கொரியா கலந்து கொண்டன. இரு நாடுகளுக்கும் இடையேயான போர் முடிந்ததாக இரு நாடுகளும் அறிவித்தன.


ஆனால் 1999-ஆம் ஆண்டு வடகொரிய கடற்படையினர் மீண்டும் மோதலை தொடங்கி வைத்தனர். அப்போது இயோங்பியோங் தீவு மீது வடகொரியா தாக்குதல் நடத்தியது. இரு நாடுகளுக்கும் இடையேயான கடல் எல்லையை மாற்றி அமைக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்த வடகொரியா, இதற்கான பிரசார யுத்தத்தில் ஈடுபட்டது. இதைத் தொடர்ந்து 1999 ஜுன் மாதம் 6-ந் தேதி வடகொரியாவின் கடல் எல்லைக்குள் தென் கொரிய போர்க் கப்பல்கள் நுழைந்ததாக வடகொரியா குற்றம் சாட்டியது.

இதைத் தொடர்ந்து இரு தரப்பும் கடல் எல்லையை மீறி படகுகளை அனுப்பியதால் யுத்தம் வெடித்தது. இதில் வடகொரியாவின் பல படகுகள் சேதம் அடைந்தன. கிட்டத்தட்ட 100 வடகொரியர்கள் பலியானார்கள். இந்த போரில் வடகொரியாவுக்கு பலத்த சேதம் ஏற்பட்ட போதிலும், போரில் வெற்றி பெற்றதாக அது அறிவித்தது. 2000-ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டு சமாதான முயற்சி பெரிய அளவில் நடந்தது. ஆனால் 2002-ஆம் ஆண்டில் கடல் எல்லையில் வாலாட்டி வடகொரியா மீண்டும் கசப்பை உருவாக்கியது.

இப்படி இருதரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடப்பது நீடித்து வருகிறது. 2011 ஜனவரியில் கூட தென்கொரியாவுக்கு சொந்தமான நீர் மூழ்கிக்கப்பல் தகர்க்கப்பட்டது. அதில் இருந்த 46 கடற்படை வீரர்கள் பலியானார்கள். இந்த சம்பவத்துக்கு வடகொரியாதான் காரணம் என்று தொன்கொரியா குற்றம் சாட்டியது. ஆனால் அந்த சம்பவத்தில் தங்களுக்கு எந்த தொடர்பும் கிடையாது என்று வடகொரியா மறுத்துவிட்டது. அப்போதும் அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் வடகொரியாவை வன்மையாக கண்டித்தன. என்றாலும், வடகொரியா அசைந்து கொடுக்கவில்லை.!

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்...

1 கருத்து: