செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

திங்கள், மார்ச் 28, 2011

DTCP அப்ரூவல் என்றால் என்ன?


நிலத்தில் லே-அவுட் (Layout) போட்டு அதற்கு அங்கீகாரம் பெறுதல், விவசாய நிலத்தை குடியிருப்பு நிலமாக மாற்றுதல் (Conversion), அடுக்கு மாடிக் குடியிருப்பு கட்டுதல் போன்றவற்றை மேற்கொள்வதற்கு நகர ஊரமைப்பு இயக்கம் (Directorate of Town and Country Planning - DTCP) அனுமதி தேவைப்படும். இது சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA) அங்கீகாரத்திலிருந்து வேறுபடுகிறது. சி.எம்.டி.ஏ. (CDMA) உடைய அதிகார வரம்பு என்பது சென்னை மற்றும் அதன் அருகாமையில் உள்ள பகுதிகள் வரை வரும்.

டீ.டி.சி.பி. உடைய அதிகார வரம்பு, மீதமுள்ள தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகள் வரை நீடிக்கிறது. எனவே டீ.டி.சி.பி. அப்ரூவலுக்கு இங்கு முக்கியத்துவம் அதிகரிக்கிறது. அதிலும், லே-அவுட் நிலங்களுக்கு டீ.டி.சி.பி. அனுமதியே மிக மிக முக்கியமானது. அப்ரூவல் வாங்க வேண்டிய பகுதி பத்து ஏக்கருக்கு குறைவாக இருந்தால், அந்த நிலம் எந்த மாவட்டத்தில் உள்ளதோ அந்த மாவட்டத்தின் டீ.டி.சி.பி. அலுவலகத்தின் அனுமதி தேவை. இது தவிர, லே-அவுட் பகுதி பத்து ஏக்கருக்கு மேல் இருந்தால் சென்னையில் உள்ள டீ.டி.சி.பி. தலைமை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

இதில் லே-அவுட் ஒரு கிராமப் பகுதியில் இருந்தால், அந்தக் கிராமப் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு சென்று அவர்களிடம் நமது லே-அவுட் பிளானை சமர்பிக்க வேண்டும். அவர்கள் அதை சரிபார்த்து விட்டு, மாவட்ட டீ.டி.சி.பி. அலுவலகத்துக்கு அந்த பிளானை அனுப்பி வைப்பார்கள். டீ.டி.சி.பி. அதிகாரிகள், லே-அவுட் பிளானை பல்வேறு கட்டங்களில் ஆராய்ந்த பிறகு அதற்கு அனுமதி கொடுப்பார்கள். சில சமயங்களில் அவர்களே ஒரு பிளானையும் தயாரித்துக் கொடுக்கலாம்.

அதில் அவர்கள் சாலை, பூங்கா, பொது இடம் என்று பிரித்து இருப்பார்கள். அதைத்தான் லே-அவுட் புரமோட்டர் அல்லது உரிமையாளர் பின்பற்ற வேண்டும். பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல், அதில் வேறு எந்த மாற்றமும் செய்யக் கூடாது. அந்த பிளானில் உள்ள படியே பிளாட் (Plot) களை விற்கவோ விளம்பரம் செய்யவோ வேண்டும்.


24 செண்டுக்கு குறைவான நிலப்பகுதிக்கு கிராமப் பஞ்சாயத்தின் அனுமதியே போதுமானது (1 செண்ட்=435.6 சதுர அடிகள்). அந்த 24 செண்ட் நிலத்தின் ஒரு பகுதியை தனியாக வாங்கவோ அதில் கட்டடம் கட்டவோ பஞ்சாயத்து அனுமதி தேவைப்படும். அந்த 24 செண்ட் அளவுக்கு மேற்பட்ட நிலப்பகுதிக்கு லே-அவுட் அப்ரூவல் மட்டுமல்லாது, வேறு எந்த விதமான திட்டங்களுக்கும் அனுமதி வழங்க கிராமப் பஞ்சாயத்துக்கு அதிகாரமே கிடையாது. அவை அனைத்துமே டீ.டி.சி.பி. உடைய கட்டுப் பாட்டின் கீழ் வரும். எனவே, பஞ்சாயத்து அனுமதியை மட்டுமே நம்பி ஒரு நிலப்பகுதியை வாங்குவது நல்ல விசயம் அல்ல.

விவசாய நிலத்தை மட்டுமல்லாது, உற்பத்தி/தொழிற்சாலை வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை குடியிருப்பு பகுதிகளாக மாற்றவும் டீ.டி.சி.பி. அனுமதி தேவை. சான்றாக, தொழிற்சாலை வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை குடியிருப்பு பகுதியாக மாற்ற திட்டமிட்டால் அதற்கு, நிலத்தின் வரைப்படம் (TOPO Plan), நிலப்பத்திரங்கள் அனைத்தையும் சேர்த்து டீ.டி.சி.பி. அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதுதவிர, குடியிருப்பு பகுதியாக மாற்றிய பிறகு, அந்த நிலத்தை எந்த விசயத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் தெரிவித்து விட வேண்டும்.

டீ.டி.சி.பி. அலுவலகம், சம்பந்தப்பட்ட நிலத்தை ஆராய்வார்கள். பிறகு, இந்த நிலத்தைப் பற்றிய தகவல்களையும், அதற்கு ஆட்சேபணைகளையும் கேட்டறிய 2 நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடுவார்கள். எந்த ஆட்சேபணையும் வரவில்லை என்றால், உடனடியாக Zone Conversion னுக்கு அனுமதி கொடுப்பார்கள்.

நான்கு மாடிக்கு மேல் கட்டப்படுகின்ற கட்டிடங்கள் அனைத்துமே அடுக்குமாடிக் கட்டிடங்களாகக் கருதப்படுகின்றன. இதில் கட்டப்படுகின்ற கட்டிடத்தின் அருகே உள்ள சாலையின் அகலம், நிலத்தின் அகலம், ஃபுளோர் சைஸ் இண்டெக்ஸ் (Floor size index), கட்டிடத்தின் அகலம் போன்ற எண்ணற்ற நடைமுறைகள் உள்ளன.

இவற்றில் ஒன்று ஒத்துவரவில்லை என்றாலும் அடுக்குமாடிக் கட்டிடம் கட்ட அனுமதி கொடுக்கப்படாது. சான்றாக, 10 மாடிக் கட்டிடம் என்றால், அருகே உள்ள சாலையின் அகலம் குறைந்தபட்சம் 80 அடியும், கட்டிடம் கட்டப்படும் நிலத்தின் அகலம் 24.4 மீட்டரும் இருக்க வேண்டும். இதில் சிறிது குறைந்தாலும் பிளானுக்கு அனுமதி மறுக்கப்படும்.

நன்றி: புதிய தலைமுறை வார இதழ்
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்..

2 கருத்துகள்:

 1. Dear Balamurugan

  You have not given your email id anywhere in your blog; so I am sending this to the ‘Comments’ column of your blog site.
  The blog post on DTCP approval is informative and useful. Thank you very much for that.
  Your profile appearing in your blog needs corrections at many places. Since you are learning English only now, it is not surprising to see grammatical and other errors in the profile. I have rewritten the same in correct English, which you can cut and paste there, if you like.

  -----------------------------------------------

  Your profile:

  I am Balamurugan, born on 1.11.1986 at Mayalduthurai, Tamilnadu. My parents’ names are Mr Gnanasekearan and Mrs Santhanalakshi. I have completed Diploma in Civil Engineering (DCE). I am now in the Second Year B.A (English) through Directorate of Distance Education at Annamalai Uniersity, Chidambaram, Tamilnadu. I have no role model in life. I am my own role model. However, some people take me as their role model. I am truthful in all I do and say and people admire my decisions. The secret of my success is ‘My mother and my Family’. They are my strength and they always encourage me in all my endeavors. Next comes my best friends like VABB Group Team members Miss Kalaiyarasi, Miss Santhipriya, Mr Muthukrishnan and others who are encouraging me constantly. In my school days, Mr Thasarathamani and Mr S.Singaravelu, my school HM encouraged me a lot. In my college days, I received generous help and encouragement from my Principal Mr S.Balasubramaniyan and Mr Rajendran. For their kind interest in my growth, I am always thankful to them. In my life, I have met with sorrows and failures on many occasions. But I have overcome them and today I am the role model for many. I attribute this all to my belief in truth and practice of truth in my life. My ambition is to become a renowned journalist in future. Above all, I am searching the way to be the best Social Worker to render help to the needy.

  பதிலளிநீக்கு
 2. உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு