செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

ஞாயிறு, ஏப்ரல் 17, 2011

பதவி நாற்காலிக்கு மேல் ஒரு கத்தி...!


சிசிலித் தீவு, இத்தாலியின் தென் முனையில் இருக்கிறது. அதை டயனாசியஸ் என்ற அரசன் ஆண்டு வந்தான். அந்த சமயத்தில் டெமாக் கிள்ஸ் என்ற அறிஞன் ஒருவனும் அந்த நாட்டில் இருந்தான். அரசனின் ராஜபோக வாழ்க்கையைப் பற்றிக் குத்தலாகப் பேசுவது அந்த அறிஞனின் வழக்கம். இது காதில் விழுந்து எரிச்சலான மன்னன், டெமாக்கிள்ஸ§க்கு பாடம் கற்பிக்க நினைத்தான். ‘நீங்கள் அரண்மனைக்கு வரவேண்டும். மன்னர் உங்களுக்கு விருந்து வைப்பார். அன்று ஒருநாள் மட்டும் நீங்கள் இந்த நாட்டின் மன்னராக இருக்கலாம்!’ என்று அழைப்பு வந்தது.


குறிப்பிட்ட நாளில் டெமாக்கிள்ஸ் வந்தான். சொன்னபடியே ராஜ மரியாதைத்தான். மன்னருக்கான உடைகள் அணிவிக்கப்பட்டன. அரச மண்டபத்தில் டயனாசியஸ§க்கு சமமாக டெமாக்கிள்ஸ் உட்கார வைக்கப் பட்டார். தனக்குத் தரப்பட்ட மரியாதையில் நெகிழ்ந்து பொங்கிப்போனார். தான் உட்கார்ந்திருந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தார். திடீரென மேலே பார்த்தார். தலைக்கு மேலே பெரிய கத்தி ஒன்று தொங்கி கொண்டு இருந்தது. எப்போது வேண்டுமானா லும் விழலாம் என்ற நிலையில்! குதிரையின் வாலில் இருந்து எடுக்கப்பட்ட ஒற்றை முடியில் அது ஊசலாடிக் கொண்டு இருந்தது.

அதற்குப் பிறகு சாப்பாடு, சந்தோஷம் எதுவும் உள்ளே போகவில்லை டெமாக் கிள்ஸ§க்கு. மன்னன் எப்போதும் போல உற்சாகமாகவே இருந்தார். டெமாக் கிள்ஸின் நினைப்பெல்லாம் தலைக்கு மேல் தொங்கும் வாள் மீதே! மன்னரிடம் கவனம் செலுத்திப் பேசக்கூட முடியவில்லை. கடைசியாக மன்னன் சொன்னான்... ‘அதிகாரம் என்பது நீங்கள் எட்டி நின்று பார்க்கிற மாதிரி சுகமானது அல்ல. எந்த நேரமும் எதுவும் நடக்கும்... கண்ணுக்குத் தெரியாத ஒரு கக்தி தொங்கிக் கொண்டே இருக்கும். நிம்மதிக்கே வழியில்லை!’ ‘டெமாக்கிள்ஸ் ஸ்வார்டு’ என்ற வார்த்தையே இந்தக் கதையில் இருந்துதான் பிரபலம் ஆனது!

நன்றி ஜுனியர் விகடன்

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

1 கருத்து:

  1. இது முற்றிலும் உண்மை. வெளியிலிருந்து பார்க்கும்போது அரசியல் ராஜபோகமாகத் தெரிந்தாலும் உள்ளே சென்று பணியாற்றுவது ஒரு பெரிய ரிஸ்க் தான்.

    தன் உழைப்பையும், வாழ்க்கையும் பணயம் வைத்து அரசியல் செய்து கிடைக்கும் பலன் நேர்மையானவர்களுக்கு நிச்சயமாக போதுமானதாக இருக்காது...

    பகிர்வுக்கு நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு