செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

ஞாயிறு, ஜூலை 31, 2011

செக்ஸை தவிர்த்தால் ஆபத்து!


இந்த பிரபஞ்சம் தோன்றியபோதே காமமும் தோன்றிவிட்டதாக ரிக்வேதம் கூறுகிறது. முக்கியத்துவம் வாய்ந்த காமத்தை தேவையில்லையே என்று யாரும் வற்புறுத்தாமல், ஒரு மனிதன் தானாகவே புறக்கணித்தால் அது தவறில்லை. அதைப்பற்றி கவலைப்படவும் தேவையில்லை. ஆனால் செக்ஸில் ஈடுபட்டால் ஆரோக்கியம் கெட்டுவிடும். உடல் பலவீனமாகி விடும் என்று கூறி வலுக்கட்டாயமாக செக்ஸை தவிர்ப்பது சரியில்லாதது. ஒரு காலக்கட்டத்தில் இந்த தவிப்பு பூதாகரமான விளைவுகளை ஏற்படுத்திவிடும். செக்ஸ் ஆர்வத்தை தவிர்த்தல் அல்லது தள்ளிப் போடுதல் முறையற்ற செயல் பாட்டுக்கு வழிவகுக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர். 

இதே கருத்தை இந்த நூற்றாண்டின் நவீன உளவியலின் தந்தை சிக்மண்ட் பிராய்டும் செக்ஸ் ஆர்வத்தை தடுத்தால் மனசும் உடம்பும் தனித்தனியாகவோ அல்லது இரண்டும் சேர்ந்தோ கூட பாதிக்கப்படலாம் என்கிறார். ஆண்கள் அனைவருக்குமே ‘பிராஸ்டேட்’ என்ற சுரப்பி அடிவயிற்றின் உள்ளே இருக்கிறது. சிலருக்கு இது வீங்கிப் போய் சிறுநீர் வெளியேற்றுவதில் சிரமத்தை ஏற்படுத்தும். இவர்களை பரிசோதித்தால் செக்ஸை வலுக் கட்டாயமாக கட்டுப்படுத்தியவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு செயற்கையாக விந்தை வெளியேற்றுவதன் மூலம் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும். 


பெண்கள் இப்படி உணர்வை கட்டுப்படுத்தினால் அவர்களுக்கு மனரீதியாக பிரச்சனை ஏற்பட்டு விநோதமாக நடந்து கொள்வார்கள். இதற்கு ‘ஹிஸ்டீரியா’ என்று பெயர் வைத்தார்கள், மருத்துவர்கள். இந்த பெண்கள் அடிவயிறு, இடுப்பு வலிக்கிறது என்பார்கள். இவர்களுக்காக டாக்டர் ஜார்ஜ் டெய்லர் என்பவர் ஒரு வைப்ரேட்டரை கண்டுபிடித்தார். அதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு செக்ஸ் இன்பம் கொடுத்து குணப்படுத்தினார். கணவனிடம் பெறும் இன்பத்தின் மூலம் தீர வேண்டிய பிரச்சனையை டாக்டரிடம் சென்று பணத்தை செலவு செய்து எந்திரத்தின் மூலம் தீர்த்துக் கொள்கிறார்கள்.

சரி, ஆண்களுக்கு மனரீதியாக என்ன என்ன மாற்றங்கள் ஏற்படும் என்று பார்த்தால், சில ஆண்களுக்கு ‘செக்சுவல் அப்யூல்’ என்ற மன மாற்றம் ஏற்படும். இவர்கள்தான் பெண்களிடம் தவறாக நடப்பது, சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக தொல்லை தருவது போன்ற விரும்பதகாத செயல்களில் ஈடுபடுவது எல்லாமே வலுக்கட்டாயமாக செக்ஸை தவிர்ப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்.

மேலும், இப்படி கட்டுப்படுத்துவதால் பிரஷர் அதிகரிக்கும். டென்ஷன், தலைவலி ஏற்படும். அல்சர் போன்றவையும் வரலாம். அடக்கப்படும் செக்ஸ் உணர்ச்சி, உடலின் மன அழுத்தத்தை அதிகப்படுத்துவதால் இந்த பாதிப்புகள் ஏற்படுகின்றன. மனச்சங்கடம் இன்றி முறையாக கிடைக்கும் செக்ஸ் இன்பம் அனுபவிக்கிற போதுதான் படைப்புக்கான பலன் இயற்கையாக சென்று சேரும். வலுக் கட்டாயமாக செக்ஸை கட்டுப்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை விட முறையற்ற கள்ளத் தனமான செக்ஸ்தான் அதிகம் பிரச்சனையை ஏற்படுத்தும்.

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

ஞாயிறு, ஜூலை 24, 2011

கட்டுக்குள் வந்த செக்ஸ்


சரித்திர காலங்களில் ஆண், பெண் உறவுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. காட்டு மிராண்டிகளாகத் திரிந்த மனிதர்கள், நாகரீகம் அடைந்த பிறகுதான் கூட்டமாக சேர்ந்து குடியேற்றங்களை நிர்மாணித்து வாழத் தொடங்கி னார்கள். அப்போதுதான் அரசாங்கம் தோன்றியது. காலப் போக்கில் அரசு மக்களை அடிமைகளாக வைத்திருக்க ஆசைப்பட்டது. சுதந்திரம் தந்தால், மக்கள் அரசுக்கு கட்டுப்படமாட்டார்கள் என்று நினைத்தது. கடுமையான உணர்வுகள் எப்போதும் இருப்பது போல் பார்த்துக் கொண்டார்கள்.

அதே வேளையில் மேல்தட்டு ஆண்கள் எல்லை இல்லாத சுதந்திரத்தில் திளைத்தார்கள். அவர்களுக்கு ஏராளமான மனைவிகள், வேலைக்காரிகள், அடிமைகளின் மனைவிகள், போரில் பிணைக் கைதிகளாக பிடித்து வரப் பட்ட அந்நிய பெண்கள் என்று தங்கள் ஆசைக்கு எல்லாப் பெண்களையும் பயன் படுத்திக் கொண்டார்கள். அந்த ஆண்கள் எந்த அழகான பெண்ணை விரும்பினாலும் தங்கள் படுக்கையறைக்கு கூட்டி வந்து விடலாம். ஆணும், பெண்ணும் சந்தித்து, காதல் புரிந்து, பரவசத்தால் இணையும் அனுபவங்கள் எல்லாம் அப்போது கிடையாது. திருமணம் என்பது கூட சொத்து பரிவர்த்த னைக்காகதான் நடந்தது.


வேண்டா வெறுப்பாக பலர் திருமண பந்தத்தில் சிக்கினர். இதனால் திருமண உறவுக்கு வெளியே ஆண்கள் சுகம் தேட தொடங்கினர். பிரபுக்களின் குடியில் பிறந்த பலர் தங்களுக்கு சுகம் தர ஊர் முழுக்க நூற்றுக் கணக்கில் பெண்களை வைத்திருப்பது சகஜமாக இருந்தது. இந்த செக்ஸ் விசயத்தை முதன் முதலில் மேற்கத்திய நாடுகளில் ஒழுங்குப்படுத்தியது யூத மதம்தான். செக்ஸ் என்பது திருமண வாழ்க்கை யின் ஒரு பகுதியாக மட்டுமே இருக்க வேண்டும். திருமணம் என்பது குழந்தை பெற்றுக் கொள்வதற்கும், அதை வளர்ப்பதற்கும் மட்டுமே உருவான உறவுமுறை என்று போதித்தது.

திருமணம் வேண்டாம் என்று பிரம்மச்சாரிகளாக வாழ்பவர்களையும், திருமணம் செய்தும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களையும் ஏதோ குறையுள்ள நபர்களைப் போல அன்றைய யூத சமுதாயம் பார்த்தது. கி.பி. முதல் நூற்றாண்டில் கிறிஸ்துவ மதம் தழைக்க தொடங்கிய பிறகு, செக்ஸ் பற்றிய கட்டுப்பாடுகளும் வந்து சேர்ந்தன. அப்பட்டமாக பொது இடங்களில் செக்ஸில் ஈடுபட்ட ரோமானியர்களை கண்டித்தார், புனித பால். அவர்தான் செக்சுக்கான விதிகளை வகுத்தார். இல்லற சுகத்தை நிராகரித்து துறவற வாழ்க்கையில் பிரம்மச்சாரியத்தை கடைப்பிடிப்பதே மேலான வாழ்க்கை என்றார்.


ஆனால், எல்லோருக்கும் அது சாத்தியமில்லை. கண்ட பெண்களுடன் உறவு வைத்து நரகத்துக்கு போவதை விட திருமணம் செய்து கொண்டு மனைவியிடம் மட்டும் உறவு கொள்வது பாவம் குறையும் செயல் என்று போதித்தார். நான்காம் நூற்றாண்டில் புனித அகஸ்டின் இதை இன்னும் கடுமையாக்கினார். செக்ஸ் பற்றிய மோசமான நினைப்பை மனதில் கொண்டிருப்பது கூட பாவம் என்றார். கணவன்-மனைவி எப்படி உறவு கொள்ள வேண்டும்? என்ற முறையை தீர்மானித்தார். இந்தமுறைக்கு ‘மிஷனரி பொசிசன்’ என்று பெயர் கூட உண்டு. உலகம் முழுவதும் உள்ள மக்களில் 75 விழுக்காட்டினர் இந்த முறையில்தான் உறவை வைத்துக் கொள்கின்றனர்.

இதற்குபின் வந்த புனித தாமஸ் ஆக்யூனாஸ் திருமண உறவுக்கு வெளியே வேற்று நபர்களுடன் செக்ஸில் ஈடுபடுவது குற்றம். செக்ஸ் உறவை குழந்தை பெற்றுக் கொள்ள மட்டுமே செய்ய வேண்டும். கருவுறுதலில் முடியாத செக்ஸ் உறவு பாவம் என்றார் அவர். இதற்குபின் நிறைய மாற்றங்கள், எதிர்ப்புகள் ஏற்பட்டன. இருந்தாலும் கட்டுப்பாடற்று இருந்த செக்ஸை கட்டுக்குள் கொண்டு வந்தவை மதங்கள்தான். மேற்கத்திய நாடுகளில் இந்த மாற்றங்கள் எல்லாம் ஏற்படுவதற்கு முன்பே இந்தியாவில் குடும்ப ரீதியான அமைப்பு முறையும், செக்ஸ் பற்றிய தௌ¤வான கருத்தும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

வெள்ளி, ஜூலை 22, 2011

திருடுபவர்கள் மட்டும்தான் கள்வர்களா?


பணம் உருவான நாள் முதலே லஞ்சமும் உருவாகிவிட்டன. ரோமானிய பேரரசு, பிரெஞ்சுப் புரட்சி, ரஷியாவின் அக்டோபர் புரட்சி மற்றும் சீனாவின் சியாங்-கை-செக் ராஜியம் போன்ற சரித்திர முக்கியத்துவம் பெற்று உருவான இப்பேரரசுகள் இழிவான முறையில் சரித்திரத்தில் இடம் பெற்றதற்கு முக்கியமான காரணம் ஊழல். இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியே ஊழலுடன் தான் தொடங்கப்பட்டது. லண்டனில் உள்ள தன் சகாக்களுக்கு இந்தியாவில் ஊழல் செய்து லட்சக் கணக்கில் பணம் அனுப்பியதாக இந்தியாவின் முதல் ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் வாரன் ஹோஸ்டிங்ஸ் மீது 1797 ஆம் ஆண்டு பிரிட்ஷ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.


வேத, புராண காலத்திலேயே ஊழலுக்கு எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. ஒன்பது தீய தலைகளைக் கொண்டு 99 வகை பேராசை மூலம் மனிதனுக்கு ஊழல் எண்ணம் உருவாவதாக சாம வேதப்பிரிவு 179 மற்றும் 913 தெரிவிக்கிறது. ராமாயணத்தில், ராவணுக்குள்ள பத்து கலைகளுள் ஒன்பது தலைகள் ‘கரப்ட்’ வகையைச் சார்ந்தது என்பதால்தான், ‘தசரா’ அன்று அந்த ஒன்பது தலைகளையும் எரிக்கும் வழக்கம் இன்று வரை உள்ளது.

அதேபோல் கவுரவ அரசன் திருதராஷ்ட்ரதனுக்கு 99 ஊழல் எண்ணம் கொண்ட மகன்கள் பிறந்ததாக மகாபாரதத்தில் தெரிவிக்கப்படுள்ளது. அரசாங்கப் பணத்தை தவறாகப் பயன்படுத்துபவர்கள் கள்வர் களுக்குச் சமம் என ரிக் வேதத்தின் 1-104-3 பிரிவு கூறுகிறது. முகஸ்துதி பாடுபவர்களும் ஒரு வகையில் ஊழல் எண்ணம் கொண்டவர்கள்தான் என்கிறது யசூர் வேதம்.


உலகில் ஏழை நாடுகளில்தான் ஊழல் பிரச்சனை அதிகமாகவும், பணக்கார நாடுகளில் குறை வாகவும் உள்ளது. அதேபோல் ஜனநாயக நாடுகளில் அதிகமாகவும், சர்வாதிகார நாடுகளில் குறை வாகவும் உள்ளது. பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் ‘அதுவின்றி ஒரு அணுவும் அசையாது’ என்கிற அளவில் லஞ்சம் கொடிகட்டிப் பறக்கிறது. ‘அமெரிக்காவில் ஊழல் செய்தால் ஜெயிலில் செட்டில் ஆக வேண்டியிருக்கும்; ஆனால் பிலிப்பைன்சில் ஊழல் செய்தால் அமெரிக்காவில் செட்டிலாகி விடலாம்’ என்பது பிரபல ஜோக்.

‘‘கட்சியை குழி தோண்டி புதைத்தாலும் புதைத்து விடலாமே தவிர, ஊழலை மட்டும் அனுமதிக்கவே கூடாது’’ என்று தன் காலத்தில் நிலவிய லஞ்சப் புகார்கள் குறித்து மகாத்மா காந்தி உறுதிபடக் கூறினார். ஆனால் இன்று ‘‘நம் நாட்டில் ஒரு ஆண்டில் லாரி டிரைவர்கள் தரும் சம்திங் மட்டும் 3500 கோடி ரூபாய் என்கிறது, உலகத்தில் லஞ்சத்தை ஒழிக்க தொடங்கப்பட்டிருக்கும் ஜெர்மனி நிறுவன மான ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அதைம்ப்பு.’’ இப்படியே போனால்...?!
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

வியாழன், ஜூலை 21, 2011

அமெரிக்கர்களின் சினிமா ரசனை


திரைப்படக் கலையில் அமெரிக்கா இன்று முதல் இடத்தில் இருக்கிறது. உலகப் புகழ்பெற்ற படங்கள் தயாரிப்பதில் அமெரிக்கர்கள்தான் முன்னனியில் இருக்கிறார்கள். உலகத்திலேயே திரைப்படங்களை அதிகமாக பார்ப்பவர் களும் அமெரிக்கர்கள்தான். படம் பார்க்கும் விசயத்தில் நமக்கும், அமெரிக்கர் களுக்கும் இடையே ஒரு விசயத்தில் மிகுந்த வேறுபாடு உண்டு. நமது மக்கள் ஒரே படத்தை பல தடவைகள் பார்க்கிறார்கள். அமெரிக்கர்களோ ஒரு படத்தை ஒரு தடவைக்கு மேல் பார்ப்பதில்லை.

அமெரிக்காவில் டிக்கெட் வாங்குவதற்கு தியேட்டர்களுக்குத்தான் போக வேண்டும் என்பதில்லை. ஓட்டல்கள், அலுவலகங்கள், பொருட்காட்சி சாலைகள், பத்திரிகை அலுவலங்கள், புத்தக விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முன்னதாகவே டிக்கெட்டுகளை வாங்கிக் கொள்ளலாம். செய்திப் படங்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் படமாகி திரைக்கு வந்து விடுகின்றன. கிட்டத்தட்ட செய்திப் பத்திரிகைகளை பார்ப்பது போன்று அவ்வளவு துரிதமாக செய்தி நிகழ்ச்சிகள், செய்தி படங்களில் இடம் பெற்றுவிடுகின்றன.


நமதுநாட்டில் படங்களைப் பார்ப்பதற்கு காட்சி நேரங்கள் உள்ளன. அந்த நேரம் கழிந்துவிட்டால், அடுத்த காட்சி நேரத்தில்தான் படம் பார்க்க முடியும். ஆனால் அமெரிக்காவில் எந்த நேரத்தில் விரும்பினாலும் படம் பார்க்கலாம். காலை 11 மணிக்கு சினிமா காட்சி தொடங்கி, மறுநாள் அதிகாலை 4 மணி வரை ஒரே படம் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும். யாருக்கு எந்த நேரம் வாய்ப்பாக இருக்கிறதோ, அந்த நேரத்தில் தியேட்டருக்குள் சென்று படத்தை பாதியில் இருந்து பார்க்கத் தொடங்குவார்கள்.

அமெரிக்க தியேட்டர்களில் முதல் வரிசைக்கும், திரைக்கும் இடையே குறைந்தது 40 அடி இடைவெளி இருக்கும்படி அமைக்கப்பட்டிருக்கும். அப்பொழுதுதான் கண்கள் பாதிக்கப்படாமல் இருக்கும். நமது நாட்டிலோ, பல திரையரங்கு உரிமையாளர்கள் வருவாயை மட்டும் கருத்தில் கொண்டு, திரைக்கு மிகவும் நெருக்கமாக இருக்கைகளை அமைத்திருப்பதைக் காணலாம். பலவகுப்பு, பல தரப்பட்ட கட்டணங்கள் இங்கு உள்ளது போல் அங்கு கிடையாது. ஒரே வகுப்பு.! ஒரே கட்டணம்.!

திரையில் காதல் காட்சிகள் இடம் பெறும் போது, படம் பார்த்துக் கொண்டிருக்கும் கணவன்-மனைவியும், காதலன்-காதலியும் அதே மாதிரி காதல் காட்சிகளில் ஈடுபடுவதும், முத்தமிட்டுக் கொள்வதும் வெகு சாதாரணம். தியேட்டர்களில் படம் ஓடிக் கொண்டிருக்கும் போது, மக்கள் அமர்ந்திருக்கும் வரிசையில் இருந்து சிறு ஓசை கூட எழாது. அனைவரும் மிகவும் அமைதியாகவும், மிகுந்த கவனத்துடனும் படத்தை ரசித்துக் கொண்டிருப்பார்கள்.

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

புதன், ஜூலை 20, 2011

உலகின் ஒப்பற்ற அதிசயம்!


ஹோவெர்டு பாஸ்ட் என்ற அமெரிக்க எழுத்தாளர் பூமியின் பொக்கிஷம் என்று ஒரு சிறுகதை எழுதி இருக்கிறார். வேற்றுக் கிரகத்திலிருந்து இருவர் பூமிக்கு வருகிறார்கள். பூமியில் மனிதர்கள் உருவாக்கியதில் மிக விசித்திரமானதும் விலை மதிப்பு இல்லாததும் எது என்று தேடி அலைகிறார்கள். வைரம், தங்கம், வியப்பூட்டும் விஞ்ஞானப் பொருள்கள் என்று எதைக் கண்ட போதும் அதைவிடச் சிறப்பாகத் ஏதோ ஒன்று இருக்கிறது என்கிறார்கள்.


WILLIAM SHAKESPEARE
முடிவில் அவர்கள் மியூஸியம் ஒன்றுக்குப் போகிறார்கள். அங்கே ஷேக்ஸ் பியர் நாடகங்களில் முதல் பிரதிகள் பாதுகாத்து வைக்கப்பட்டு இருக்கின்றன. அதை இரவு பகலாக வாசிக்கின்றனர். முடிவில் வேற்றுக் கிரக வாசிகள் எங்கள் கிரகத்தில் இல்லாதது, பூமியில் இருப்பதில் சிறந்தது ஷேக்ஸ்பியர் நாடகங்களே. இந்தப் பூமியில் உள்ள எல்லா செல்வங்களை விடவும் அற்புதமானது புத்தகம் மட்டுமே என்று ஒரு குறிப்பை வைத்து சென்று விடுகின்றனர் என்று முடிகிறது அந்த சிறு கதை.

மனிதர்களோடு நினைவுகள் அழிந்து போவது இல்லை. அவை எழுத்தில், சொல்லில், வரிகளில் ஒளிந்து கொண்டு தன்னை உயிர்பித்துக் கொள் கின்றன. புத்தகம் என்பது மூன்று கரை உள்ள ஆறு என்கிறார் கவிஞர் தேவதச்சன். உலகின் நினைவுகளும், கனவுகளும், நம்பிக்கைகளும் ஒன்று கலந்து உருவானதே புத்தகம். அதுவே உலகின் ஒப்பற்ற அதிசயம்.!

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

செவ்வாய், ஜூலை 19, 2011

ஆண்களின் செக்ஸ்


''விடலைப்பருவத்தை எட்டும் பையன்களுக்கு கடவுள் அற்புதமான ஒரு திரவத்தை பரிசாகக் கொடுப்பார். அது அவர்கள் உடலில் தொடர்ந்து சுரந்து கொண்டே இருக்கும். அவர்கள் வேகமாகவும், உயரமாகவும் வளர, திடகாத்திரமான கட்டுடல் பெற்ற வாலிபனாக மாறுவதற்கு இந்த திரவம்தான் உதவுகிறது. எனவே அதை எந்த வழியிலும் வீணாக்கி விடக்கூடாது. பத்திரமாக சேமித்து வைத்தால் மட்டுமே அவர்கள் வளர முடியும்.” சார்லஸ் கின்ஸி என்ற செக்ஸ் ஆராய்ச்சியாளர் பள்ளியில் படிக்கும் போது அவருக்கு கொடுக்கப்பட்ட ஒழுக்க கையேட்டில் மேலே கண்ட விசயம் இருந்தது. 


இது கின்ஸியை பெரிதும் குழப்பியது. செக்ஸ் தொடர்பான புத்தகங்களைத் தேடிப் பார்த்தார். கிடைக்கவில்லை. எனவே பெரியவரானதும் செக்ஸ் பற்றிய ஆராய்ச்சியில் அவரே இறங்கினார். 521 கேள்விகள் அடங்கிய படிவத்தை வடிவமைத்தார். அதில் 300 கேள்விகள் செக்ஸ் தொடர்புடையவை. மற்றவை தகவல் கொடுப்பவர் பற்றிய விவரங்கள். கின்ஸி ஒவ்வொரு நபரிடமும் தனித்தனியாக நேரடியாக பேட்டி எடுத்தார். ஒருவரிடம் முடிக்கவே ஒரு மணி நேரம் ஆனது. கின்ஸி ஒரு நாளில் 17 மணி நேரம் சலிக்காமல் உழைத்தார். அமெரிக்கா முழுவதும் சுற்றி பல ஆண்களை பேட்டி எடுத்தார்.

இதை 'ஆண்களின் செக்ஸ் பழக்கம்' என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டார். அமெரிக்காவே ஆடிப்போனது. இப்போது போல, எதையும் சுலபமாக எடுத்துக் கொள்ளும் மனநிலை கொண்டவர்களாக அன்றைய அமெரிக்கர்கள் இல்லை. இரண்டாம் உலகப் போர் முடிந்திருந்த நேரம். அதோடு, காலம் காலமாக செக்ஸ் விசயத்தில் மதம் புகுத்திய கட்டுப்பாடுகள் வேறு தளராமல் இருந்தன. இந்த நிலையில் கின்ஸி வெளியிட்டிருந்த அத்தனை சமாச்சாரங்களும் அதிர்ச்சி தரக் கூடியவையாகவே இருந்தன. கணவன்-மனைவி இருவருக் குள்ளும் நடக்கும் உடலுறவைத் தவிர வேறு எந்த தவறும் சமுதாயத்தில் நடக்கவில்லை என்று நம்பிக்கொண்டிருந்த காலம் அது.

கின்ஸி தன் புத்தகத்தில் ''நான் பேசிய அத்தனை ஆண்களில் 90 விழுக்காடு பேர் வாழ்க்கையில் ஒரு தடவையாவது சுய இன்பம் அனுபவித்ததாக ஒப்புக் கொண்டார்கள். மீதி 5 விழுக்காடு பேர் அப்படி ஒரு பழக்கம் எனக்கு இல்லை என்று மறுத்தார்கள். அநேகமாக அவர்கள் சொல்வது பொய்தான். அதேபோல் ஆண்களில் பெரும்பாலோனோர் ஓரினச் சேர்க்கை எப்படிப்பட்ட உணர்வைத் தரும் என்று ஒரு தடவையாவது முயன்று பார்த்ததாகச் சொன்னார்கள். அமெரிக்க ஆண்களில் 10 விழுக்காடு பேர் பெரியவர்கள் ஆனதும் ஓரினச் சேர்க்கைப் பிரியர்களாக மாறுகிறார்கள்.

ஆண்களில் 85 விழுக்காடு பேர் திருமணத்திற்கு முன்பே செக்ஸ் உறவை அனுபவித்து இருக்கிறார்கள். 30 முதல் 45 விழுக்காடு பேர் திருமணத்துக்கு பின்பு மனைவியைத் தவிர வேறு பெண்களோடு உறவு வைத்திருக்கிறார்கள்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

புத்தகம் வெளியான 5 மாதங்களில் இரண்டு லட்சம் பிரதிகள் விற்று தீர்ந்தன. இதன் விற்பனை வேகத்தைப் போலவே இதற்கு எதிரான விவாதங்களும், எதிர்ப்புகளும் அதிகரித்தன. ஆனால் எதற்கும் கலங்காத முரட்டுப் பிடிவாதக்காரரான கின்ஸி செக்ஸ் விசயத்தில் ஆண்களை அம்பலப்படுத்தியது போல் பெண்களின் செக்ஸ் குறித்த ஆய்வைத் தொடங்கினார். அது ஏற்படுத்திய பிரச்சனை எல்லாவற்றிலும் உச்ச கட்டம் என்பது தனிக்கதை.

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

ஞாயிறு, ஜூலை 17, 2011

தரம் உள்ள படைப்பு...!எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் சிறந்த படைப்பாகக் கொண்டாடப்படும் சிறுகதை ‘கிழவனும் கடலும்’ என்ற கதை. 1954-ல் நோபல் பரிசை வென்ற சிறுகதை இது. சந்தியாகு என்கிற கிழவர் 84 நாட்களாக மீன் பிடிக்கச் சென்று வெறுங்கையுடன் திரும்புகிறார். கடைசியாக ஒருநாள் பெரிய மீன் ஒன்று வலையில் மாட்டிக் கொள்கிறது. அவர் வலையை இழுக்க முயற் சிக்க, வலையோ வயது முதிர்ந்த அவரைக் கடலுக்குள் இழுக்கிறது. இரவு முழுவதும் தூக்கம் தழுவும் கண்கள், வலி மிகுந்த கைகள் என் உடலின் ஒவ்வொரு உறுப்பிலும் அசதியும் வலியும் பரவ, சந்தியாகு விடாமல் போராடுகிறார்.
ஹெமிங்வே
 ஒரு வழியாக இரவின் போராட்டத்தின் முடிவில் காலையில் வலை லேசாகிறது. கிழவருக்கோ அப்படி ஒரு மகிழ்ச்சி, புன்னகை ததும்ப வலையை இழுக்கிறார். ஆனால் என்னே ஒரு பரிதாபம்! வலையில் அகப்பட்டு விட்ட பெரிய மீனை இரவு முழுவதும் மற்ற மீன்கள் அரித்துத் தின்றுவிட, சதைப்பிடிப்பு அற்ற வெறும் எலும்புக்கூடு மட்டுமே வலையில் அகப்பட்டது. என்னவொரு அருமையான மீன்பிடிப்பு என்று சுற்றியுள்ள இளைஞர்கள் சிரிக்க, வெட்கத்திலும் அவமானத்திலும் தலை குனிகிறார் சந்தியாகு என்னும் அந்த முதியவர்.

உரிய நேரத்தில் கிடைக்காத வாய்ப்பு வீண்தான் என்பதை விளக்கும் இந்தக் கதை, ‘மிகப்பெரிய சிறுகதையை விடப் பெரியது, மிகச்சிறிய நாவலை விடச் சிறியது’ என்று இலக்கிய விமர்சகர்களால் குறிப்பிடப் பட்டது. ஒரு படைப்பு வெல்வதற்கு அளவு முக்கியமல்ல; ஆக்கம்தான் முக்கியம்.!’’

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

சனி, ஜூலை 16, 2011

வாக்கு கற்பு போன்றது!


எதிரிகளை அழிக்க வேண்டிய போர் களத்திலும் கூட, தன் தாய்க்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றியவன் கர்ணன். அவனுடைய தாக்குதலில் நிராயுதபாணியான பீமனை அவன் கொல்ல விரும்பவில்லை. ஏன் தெரியுமா? ‘‘அருச்சுணனைத் தவிர உன் மக்களில் மற்ற நால்வரை நான் கொல்ல மாட்டேன்’’ என்று தாயார் குந்திக்குத் தான் கொடுத்திருந்த வாக்கு கர்ணன் நினைவுக்கு வந்தது. எனவே தன் வாக்குறுதியைக் காப்பாற்று வதற்காக, பீமனைக் கொல்லாமல் அவன் விட்டுவிட்டான்.

Kaikeyi and Dasaratha
தசரதன் மனைவியருள் ஒருத்தி கைகேயி. போர்க் களத்தில் அவனுக்குத் தேவையான உதவிகளைச் செய்துவந்தான். அவளது பணிவிடையில் தசரதன் மனம் நெகிழ்ந்தான். இரண்டு வரங்கள் அவளுக்குக் கொடுப்பதாக வாக்களித்தான். அவள் எப்போதும் கேட்டாலும் அந்த வரங்களைக் கொடுப்பதற்குத் தான் சித்தமாயிருப்பதாகவும் சொன்னான்.

இராமனுக்கு ‘நாளை முடிசூட்டு விழா’ என்று கேள்விப்பட்டாள் கைகேயி. கைகேயி தசரதனிடம், தனக்கு கொடுப்பதாகச் சொன்ன இரண்டு வரங்களைத் தருமாறு வேண்டினாள். பரதன் முடிசூட்டிக் கொண்டு நாடாள வேண்டும். இராமன் பதினான்கு ஆண்டுகள் காடாள வேண்டும். இவையே அவள் கேட்ட இரண்டு வரங்கள்.

தசரதன் மனம் பதறினான். கேட்ட வரங்களைக் கைவிடும்படி கைகேயிடம் மன்றாடினாள். அவளோ வாதாடினாள். இறுதியில், தசரதன் மனம் நொந்து அவளைப் பார்த்து, ‘ஈந்தேன்! ஈந்தேன்! இவ்வரம்; என் சேய் வனம் ஆள மாய்ந்தே நான் போய்வான் உலகு ஆள்வான்; வசை வெள்ளம் நீந்தாய், நீந்தாய் என மகனொடும் நெடிது’ என்றானாம்.
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

வியாழன், ஜூலை 14, 2011

துக்கத்திலிருந்து மீள வழி...!


குருஷேத்திரப் போரில் நூறு பிள்ளைகளையும் பறிகொடுத்த திருதராஷ்டிரன், ‘‘இந்த உலகில்  என்னை விட அதிகமாக துயரத்தை அனுபவிப்பவன் வேறு எவரும் இருக்க முடியாது” என்று அமைச்சர் சஞ்ச யனிடம் புலம்பினான். அமைச்சரோ, ‘‘தவறுகளின் மூலம் துன்பங்கள் விளையாமல் இருக்க, தொடக்கத்திலேயே நெறி தவறாமல் ஒழுக்கத்தோடு வாழ வேண்டும் என்றார். 

மேலும், துக்கத்தில் மூழ்கிய வனிடம் செல்வம் சேர்வதில்லை. வெற்றியும் வாய்ப்பதில்லை. துக்கப்படுவதால் அமைதியின்மை கூடுமே தவிர குறையாது. ஆடையில் நெருப்பைச் சுமந்தவன், ‘சுட்டு விட்டதே’ என்று தனது செயலுக்காக நொந்து பயன் இல்லை. துயரம் அனுபவித்தால் வளரும்; மறந்தால் மறையும். உடலைப் பற்றிய நோயை மருந்தினால் ஒழிப்பது போல், துக்கத்தை அறிவினால் அழிக்க வேண்டும்” என்று அறிவுரை வழங்கினான்.

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

புதன், ஜூலை 13, 2011

ஒளிந்திருக்கும் திறமையை ஒளிரவிடுங்கள்

உலகப் புகழ்பெற்ற சிற்பி மைக்கேல் ஏஞ்சலோ முழுமையாகப் படைத்ததே 14 சிற்பங்கள்தான். ஆனால், அவர் கை வைத்து அரை குறையாக நிற்கும் கற்களோ 30. ஒரு கால், இரண்டு கை, கண்கள், முகம் என அங்கொன்றும் இங்கொன்றுமாக வடிவமெடுத்து நின்ற கற்கள் இன்னமும் இத்தாலியிலுள்ள மியூஸியத்தில் கிடக்கின்றன. ஆனால், மைக்கேல் ஏஞ்சலோவை ஜீனியஸ் என்று உலகம் கொண்டாடுகிறது. தங்களது திறமையில் 25 விழுக்காட்டை வெளிப்படுத்துபவர்களை ஜீனியஸ் என்கிறார்கள்.

வெறுமனே 10 விழுக்காட்டை மட்டும் பயன்படுத்துவர்கள் சராசரி. அந்த ஒளிந்து கிடக்கும் 15 விழுக்காட்டைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வாழ்நாள் பயணமாக இருக்க வேண்டும். மியூஸியத்தில் கிடக்கும் அரைகுறை கற்களாக நிலைத்திருக்க வேண்டுமா என்பதை நீங்களோ அல்லது உங்கள் மனமோ முடிவெடுத்துக் கொள்ள விடுங்கள்.

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

திறமை மிக்க எழுத்தாளர் யார்?


கெட்டவனைக் காட்டிடுவது எளிதான காரியம், ஓரளவு திறமை பெற்ற எழுத்தாளனுக்கு. நல்லவனைக் காட்டிடும் எழுத்தோவியம் தந்திடுவதும் எளிதுதான் தரமான எழுத்தாளனுக்கு. ஆனால், ‘கெட்டவன்’ நல்லதும் எண்ணுகிறான்; செய்கிறான் என்று காட்டிடவும், நல்லவனிடம் புற்றுக்குள் அரவு போல கேடு நினைப்பு செயலோ இருந்திடுவதைக் காட்டிடவும்; எழுத்தாளனாக மட்டும் இருந்தால போதாது; எண்ணங்களை ஆள்பவனா கவும் இருந்திட வேண்டும்.

இது எளிதான காரியம் அல்ல என்பதுடன், ஒரு துளி தவறினால், அத்தகைய முயற்சி, ஆபத்தையே கூட மூட்டிவிடக்கூடும். படிப்போரின் உள்ளத்தில், இந்தச் சூழ்நிலையில், இவன் இப்படித்தான் எண்ணியிருப்பான் இவ்விதம் தான் செய்திருப்பான் என்று யூகித்து எழுதுவதிலேயே தவறுகள் நேரிட்டு விடுகின்றன.

எண்ணத்திலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு, முற்றிலும் வேறான, ஆனால் தூய்மையான எண்ணத்தை ஒருவன் கொண்டிருந்தான் என்பதை எடுத்துக்காட்டும் எழுத்தோவியத்த எந்த எழுத்தாளர்களும் தருவதில்லை. காரணம், அது ஆபத்தான முயற்சி என்பதால். ஆனால், தனித் திறமை பெற்ற சிற்சிலர், இத்தகைய எழுத்தோவியத்தை தருகின்றனர். அவர்கள் இறவாப் புகழுக்கு உரியவராகின்றனர்.

- ‘இரும்பு முள்வேலி’ என்ற படைப்பில் அறிஞர் அண்ணா கூறியது.
உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

செவ்வாய், ஜூலை 12, 2011

யார் சிந்திப்பது?


அண்மையில் ஒரு புத்தகத்தில் நான் படித்த செய்தி இது. ‘‘அன்பான அப்பா, தன் மகளை பள்ளியில் சேர்க்க போகிறார். அப்பா எந்த மதத்தையும் விரும்பாதவர். பள்ளியில் சேர்க்கும் போது மதத்தை கேட்கிறார்கள். வாக்கு வாதம் நடக்கிறது.’’ பின்பு சேர்த்தாரா? இல்லையா? என்பது இருக்கட்டும். மதமே பிடிக்காத ஒருவரிடம் ஏதாவது ஒரு மதத்தை சொல்லுங்கள் என்று அவர் கேட்பது வெட்கக்கேடான ஒரு செயல். நமக்கு பிடிக்காத ஒரு விசயத்தை நம்மிடம் கேட்பது நாகரீகமா? ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் மட்டும் ஜாதி வாரியாக பிரிக்கப்படுகின்றனரே! என்ன (அ) நியாயம்? மதத்தின் பெயரையோ, சாதியின் பெயரையோ சொன்னால்தான் பள்ளியில் சேர்ப்பீர் என்று அடம் பிடித்தால் அக்குழந்தையின் எதிர்காலம் என்னாவது?

உங்களுக்கு ஓட்டு வேனும் என்பதற்காக சாதியை பிரித்து வைத்து இன்னும் அடிமைப்படுத்துகின்ற அரசியல் மூடர்களே. உங்களுக்கு கோடிகளில் லாபம் கிடைக்கிறதென்றால் புதியதொரு சட்டத்தை இயற்றுவீர்கள். ஆனால், நாமெல்லாம் ஒரே ஜாதி அது தமிழன் என்றோ இல்லை எந்த மதத்தையும் எந்த ஜாதியையும் விரும்பாதவர் மதச்சார்பற்றவர் என்று சொல்லிக் கொள்ள ஒரு சட்டம் இயற்றுங்களேன்...! இப்படி ஒரு சட்டத்தை இயற்றி அதற்கு ஒரு ஜாதிய தலைவரை போடாதீர். எல்லோரும் ஒரே குலம், ஒரு இனம், ஒரே மக்கள் என்றால் யாரையும் யாரும் ஆள வேண்டிவராது. இதை உணர்வது யார் என்பதுதான் என்னுடைய கேள்வி?

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.