செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

ஞாயிறு, ஜூலை 17, 2011

தரம் உள்ள படைப்பு...!



எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் சிறந்த படைப்பாகக் கொண்டாடப்படும் சிறுகதை ‘கிழவனும் கடலும்’ என்ற கதை. 1954-ல் நோபல் பரிசை வென்ற சிறுகதை இது. சந்தியாகு என்கிற கிழவர் 84 நாட்களாக மீன் பிடிக்கச் சென்று வெறுங்கையுடன் திரும்புகிறார். கடைசியாக ஒருநாள் பெரிய மீன் ஒன்று வலையில் மாட்டிக் கொள்கிறது. அவர் வலையை இழுக்க முயற் சிக்க, வலையோ வயது முதிர்ந்த அவரைக் கடலுக்குள் இழுக்கிறது. இரவு முழுவதும் தூக்கம் தழுவும் கண்கள், வலி மிகுந்த கைகள் என் உடலின் ஒவ்வொரு உறுப்பிலும் அசதியும் வலியும் பரவ, சந்தியாகு விடாமல் போராடுகிறார்.
ஹெமிங்வே
 ஒரு வழியாக இரவின் போராட்டத்தின் முடிவில் காலையில் வலை லேசாகிறது. கிழவருக்கோ அப்படி ஒரு மகிழ்ச்சி, புன்னகை ததும்ப வலையை இழுக்கிறார். ஆனால் என்னே ஒரு பரிதாபம்! வலையில் அகப்பட்டு விட்ட பெரிய மீனை இரவு முழுவதும் மற்ற மீன்கள் அரித்துத் தின்றுவிட, சதைப்பிடிப்பு அற்ற வெறும் எலும்புக்கூடு மட்டுமே வலையில் அகப்பட்டது. என்னவொரு அருமையான மீன்பிடிப்பு என்று சுற்றியுள்ள இளைஞர்கள் சிரிக்க, வெட்கத்திலும் அவமானத்திலும் தலை குனிகிறார் சந்தியாகு என்னும் அந்த முதியவர்.

உரிய நேரத்தில் கிடைக்காத வாய்ப்பு வீண்தான் என்பதை விளக்கும் இந்தக் கதை, ‘மிகப்பெரிய சிறுகதையை விடப் பெரியது, மிகச்சிறிய நாவலை விடச் சிறியது’ என்று இலக்கிய விமர்சகர்களால் குறிப்பிடப் பட்டது. ஒரு படைப்பு வெல்வதற்கு அளவு முக்கியமல்ல; ஆக்கம்தான் முக்கியம்.!’’

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

1 கருத்து:

  1. Thanks for the write-up. The entire novel is about the indefatigable spirit of the old man Santiago who never gives up. And Santiago is not mocked at by the young fisherman for catching the fish. They in fact appreciate the endeavor of Santiago who has caught such a magnificent fish. So Santiago is contented.He is not at all ashamed. Please read the novel carefully because Santiago is a symbol of courage and perseverance for all human beings and do correct the final part of your write-up. Thank you.
    - David,Educationist.

    பதிலளிநீக்கு