செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

வியாழன், ஜூலை 21, 2011

அமெரிக்கர்களின் சினிமா ரசனை


திரைப்படக் கலையில் அமெரிக்கா இன்று முதல் இடத்தில் இருக்கிறது. உலகப் புகழ்பெற்ற படங்கள் தயாரிப்பதில் அமெரிக்கர்கள்தான் முன்னனியில் இருக்கிறார்கள். உலகத்திலேயே திரைப்படங்களை அதிகமாக பார்ப்பவர் களும் அமெரிக்கர்கள்தான். படம் பார்க்கும் விசயத்தில் நமக்கும், அமெரிக்கர் களுக்கும் இடையே ஒரு விசயத்தில் மிகுந்த வேறுபாடு உண்டு. நமது மக்கள் ஒரே படத்தை பல தடவைகள் பார்க்கிறார்கள். அமெரிக்கர்களோ ஒரு படத்தை ஒரு தடவைக்கு மேல் பார்ப்பதில்லை.

அமெரிக்காவில் டிக்கெட் வாங்குவதற்கு தியேட்டர்களுக்குத்தான் போக வேண்டும் என்பதில்லை. ஓட்டல்கள், அலுவலகங்கள், பொருட்காட்சி சாலைகள், பத்திரிகை அலுவலங்கள், புத்தக விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முன்னதாகவே டிக்கெட்டுகளை வாங்கிக் கொள்ளலாம். செய்திப் படங்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் படமாகி திரைக்கு வந்து விடுகின்றன. கிட்டத்தட்ட செய்திப் பத்திரிகைகளை பார்ப்பது போன்று அவ்வளவு துரிதமாக செய்தி நிகழ்ச்சிகள், செய்தி படங்களில் இடம் பெற்றுவிடுகின்றன.


நமதுநாட்டில் படங்களைப் பார்ப்பதற்கு காட்சி நேரங்கள் உள்ளன. அந்த நேரம் கழிந்துவிட்டால், அடுத்த காட்சி நேரத்தில்தான் படம் பார்க்க முடியும். ஆனால் அமெரிக்காவில் எந்த நேரத்தில் விரும்பினாலும் படம் பார்க்கலாம். காலை 11 மணிக்கு சினிமா காட்சி தொடங்கி, மறுநாள் அதிகாலை 4 மணி வரை ஒரே படம் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும். யாருக்கு எந்த நேரம் வாய்ப்பாக இருக்கிறதோ, அந்த நேரத்தில் தியேட்டருக்குள் சென்று படத்தை பாதியில் இருந்து பார்க்கத் தொடங்குவார்கள்.

அமெரிக்க தியேட்டர்களில் முதல் வரிசைக்கும், திரைக்கும் இடையே குறைந்தது 40 அடி இடைவெளி இருக்கும்படி அமைக்கப்பட்டிருக்கும். அப்பொழுதுதான் கண்கள் பாதிக்கப்படாமல் இருக்கும். நமது நாட்டிலோ, பல திரையரங்கு உரிமையாளர்கள் வருவாயை மட்டும் கருத்தில் கொண்டு, திரைக்கு மிகவும் நெருக்கமாக இருக்கைகளை அமைத்திருப்பதைக் காணலாம். பலவகுப்பு, பல தரப்பட்ட கட்டணங்கள் இங்கு உள்ளது போல் அங்கு கிடையாது. ஒரே வகுப்பு.! ஒரே கட்டணம்.!

திரையில் காதல் காட்சிகள் இடம் பெறும் போது, படம் பார்த்துக் கொண்டிருக்கும் கணவன்-மனைவியும், காதலன்-காதலியும் அதே மாதிரி காதல் காட்சிகளில் ஈடுபடுவதும், முத்தமிட்டுக் கொள்வதும் வெகு சாதாரணம். தியேட்டர்களில் படம் ஓடிக் கொண்டிருக்கும் போது, மக்கள் அமர்ந்திருக்கும் வரிசையில் இருந்து சிறு ஓசை கூட எழாது. அனைவரும் மிகவும் அமைதியாகவும், மிகுந்த கவனத்துடனும் படத்தை ரசித்துக் கொண்டிருப்பார்கள்.

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

3 கருத்துகள்:

  1. நல்ல பதிவு...வாழ்த்துக்கள்...ஆனாலும் மலையாளம்...பெங்காலி மற்றும் சில தமிழ் படங்கள்...உலகத்தரம்..

    பதிலளிநீக்கு
  2. சில பிற நாட்டு கலாச்சார விசயங்கள் சுவாரசியமாகவே இருக்கின்றன...

    பகிர்வுக்கு நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் இங்கு சொன்னதை சென்னையில் ப்ளூ டையமண்ட் தியேட்டரில் (சஃபையர், எமெரால்ட், ப்ளூ டையமண்ட்) செய்து பார்த்தார்களே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    பதிலளிநீக்கு