செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

வியாழன், செப்டம்பர் 29, 2011

நாடாளுமன்றத்தில் சிலைகள்.!

நம்முடைய நாடாளுமன்ற வளாகத்தில், வரலாற்று மனிதர்களுடைய முழு சிலைகளும், மார்பளவு சிலைகளும் நிறுவப்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 32 சிலைகள் உள்ளன. அவையாவன., சந்திர குப்த மௌரியர், பண்டிட் மோதிலால் நேரு, கோபால கிருஷ்ண கோகலே, அம்பேத்கர், ஸ்ரீ அரோபிந்த கோஸ், மகாத்மா, பண்டிட் ஜவகர்லால்நேரு, பண்டிட் கோவிந்த் பல்லவடண்ட், பாபு ஜக ஜீவன்ராம், ஸ்ரீமதி இந்திராகாந்தி.


மௌலானா அபுல் கலாம் ஆசாத், நேதாஜி, காமராஜர், பேராசிரியர் என்.ஜி.ரங்கா, சர்தார் வல்லபாய் படேல், பிர்சமுண்டா, ஆந்திர கேசரிதன் சூத்ரி பிரகாசம், ஜெய்பிரகாஷ் நாராயணன், எஸ்.சத்தியமூர்த்தி, அண்ணாதுரை, பி.முத்து ராமலிங்க தேவர், சத்ரபதி சிவாஜி, மகாத்மா பஸ்வஸ்ரய்யா, மகராஜ் ரஞ்சித் சிங், ஹாஜித் ஹேமு காலனி, சி.தேவிலால், மகாத்மா ஜோதி ராவ் பூலி,  டாக்டர் எம்.ஜி.ஆர், பூபேஷ் குப்தா, முரசொலி மாறன், லோகப்பிரியா கோபிநாத் போர் டோலான்.

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

ஞாயிறு, செப்டம்பர் 25, 2011

பாதிக்கப்பட்ட அணு உலைகள்.!


செர்னோபில் அணு உலை:


1986, ஏப்ரல் 26ம்தேதி ஆண்டு உக்ரைன் நாட்டில் செர்னோபில் அணுஉலை வெடித்து சிதறியது. அப்போது நிகழ்ந்த இந்த விபத்தின் தாக்கம் இன்றும் நீடிக்கிறது. 1986 முதல் 2000 வரை மூன்று லட்சத்து 50 ஆயிரத்து 400 மக்கள் வெளியேற்றப்பட்டு, மறுகுடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். 30 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேர் வரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக சுகாதார நிறுவனம் நான்காயிரம் பேர் உயிரிழந்ததாக கூறுகிறது. ஆனால் உயிழிழப்பு இதைவிட அதிகமாக இருக்கலாம்.

புகுஷிமா அணு உலை:


2011, மார்ச் 11ம் தேதி ஜப்பான் நாட்டில் நிலநடுக்கம், சுனாமி ஏற்பட்டதில், அங்குள்ள புகுஷிமா, டைச்சி அணு உலைகளை நீரில் மூழ்கின. இதனால் தானியங்கி பேட்டரி, ஜெனரேட்டர் உட்பட பாதுகாப்பு இயந்திரங்கள் அனைத்தும் செயல் இழந்தன. அலை உலைகளை குளிர்விக்க தண்ணீர் இல்லாததால் அதில் இருந்த ஹைட்ரஜன் அதிக வெப்பமாகி யுரேனியம் உருகி விட்டது. இதனால் ஏற்பட்ட கதிர்வீச்சால் அங்கு 30 கிலோ மீட்டர் சுற்றளவில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். விபத்து நடந்து ஆறு மாதங்களுக்கு மேலாகியும், அப்பகுதியில் உள்ள மண், தண்ணீரில் கதிரியக்க தன்மை உள்ளது. தற்போது அங்கு மழை பெய்தால் கூட கதிர்வீச்சு அதிகமாக உள்ளது.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

சனி, செப்டம்பர் 24, 2011

இந்தியாவில் உள்ள அணு உலைகள்:


1. தாராப்பூர்-மகராஷ்டிரா, அணு உலைகளின் எண்ணிக்கை-4, உற்பத்தி நடுவம்-10 யூனிட்கள், உற்பத்தி திறன்-1400 மெகாவாட்.
2. ராஜஸ்தான்-ராஜஸ்தான், அணு உலைகளின் எண்ணிக்கை-6, உற்பத்தி நடுவம்-21 யூனிட்கள், உற்பத்தி திறன்-1180 மெகாவாட்.
3. கல்பாக்கம்-தமிழ்நாடு, அணு உலைகளின் எண்ணிக்கை-2, உற்பத்தி நடுவம்-3 யூனிட்கள், உற்பத்தி திறன்-440 மெகாவாட்.


4. கைகா-கர்நாடகா, அணு உலைகளின் எண்ணிக்கை-4, உற்பத்தி நடுவம்-10 யூனிட்கள், உற்பத்தி திறன்-880 மெகாவாட்.
5. நரோரா-உத்திரபிரதேசம், அணு உலைகளின் எண்ணிக்கை-2, உற்பத்தி நடுவம்-3 யூனிட்கள், உற்பத்தி திறன்-440 மெகாவாட்.
6. காக்ராபார்-குஜராத், அணு உலைகளின் எண்ணிக்கை-2, உற்பத்தி நடுவம்-3, உற்பத்தி திறன்-440 மெகாவாட்.
மொத்த அணு உலைகள்:20, மொத்த உற்பத்தி: 4780 மெகாவாட்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

வெள்ளி, செப்டம்பர் 23, 2011

இந்திய தபால்துறை பற்றி தெரியுமா?


1. உலக தபால்தினம் கொண்டாடப்படும் நாள் அக்டோபர் 10.

2. அரசு பணிகளுக்காக 1766ல் தொடங்கப்பட்ட தபால்துறை, 1847ல் பொது மக்களின் வசதிக்காக நீட்டிக்கப்பட்டது. இந்தியாவில் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 781 தபால் அலுவலங்கள் உள்ளன. இவற்றில் 89 விழுக்காடு கிராமங்களில் இயங்கி வருகின்றன.


3. ‘போஸ்ட் மேன்’ என்ற பதவியின் பெயர் 1880 ஆம் ஆண்டில் ஹென்றி பாக்கெட் என்பவரால் பயன்படுத்தப்பட்டது. இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர். இதற்குமுன், ‘லெட்டர் கேரியர்’ எனும் பெயரில்தான் தபால்காரர்கள் அழைக்கப்பட்டனர்.

4. முதல் தபால் தலை கண்காட்சி கொல்கத்தாவில் நடந்தது.

5. ஒட்டும் தபால் தலைகள் முதன்முதலில் 1840 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

6. தபால் அலுவங்கள் குறைவாக உள்ள மாநிலம் சிக்கிம்.

7. இந்தியாவில் தபால்தலை முதன் முதலில் வெளியான ஆண்டு 1852.

8. முதன்முதலில் அஞ்சல் அட்டையை அறிமுகப்படுத்திய நாடு ஆஸ்திரியா.

9. அஞ்சல் சேமிப்பும், மணி ஆர்டர் முறையும் 1885 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

10. தபால் அலுவலகங்கள் அதிகமாக உள்ள மாநிலம் உத்திரப்பிரதேசம்.

11. ஏர் மெயில் அஞ்சல் தலை முதன் முதலாக 1929 ல் வெளியிடப்பட்டது.

12. உலக தபால் யூனியன் தலைமையகம் பெர்ன், சுவிட்சர்லாந்து.

13. சுதந்திர இந்தியாவில் முதல் அஞ்சல் தலையின் பெயர் ஜெய்ஹிந்த். 1947 நவம்பர் 21ந் தேதி வெளியிடப்பட்டது. 


14. உலகிலேயே மிகப்பெரிய தபால் துறையைக் கொண்டநாடு இந்தியா.

15. பின்கோடு முறை 1972 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி அமலுக்கு வந்தது.

16. இந்திய தபால் தலைகளில் முதன் முதலில் அஞ்சல் தலையில் இடம் பெற்ற தேசிய தலைவர் மகாத்மா காந்தி.

17. தபால் தலையை வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு மலேசியா.

18. 1851ல் தந்தி நடைமுறைக்கு வந்து, 1867 முதல் நாடு முழுவதும் பரவலாக்கப்பட்டது.

19. தந்தி தொலைபேசி முறையை அறிமுகப்படுத்தியவர் வார்டு காரன் வாலிஸ்.

20. 1911 பிப்ரவரி 18 ஆம் தேதி முதன் முதலில் தபால்கள் விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டன.

21. துரித தபால் சேவை 1975 ஆகஸ்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

செவ்வாய், செப்டம்பர் 20, 2011

நாடாளுமன்றம் பற்றி தெரியுமா?இந்திய நாடாளுமன்றக் கட்டடம் ‘சன் சாத்பவன்’ என்று அழைக்கப்படுகிறது. இது 1921 ஆம் ஆண்டு தொடங்கி 1927 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இக்கட்டடம் ஏறத்தாழ ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இதன் நடைப்பாதைகயில் 144 அகன்ற தூண்கள் உள்ளன. இந்தக் கல்தூண்களின் உயரம் 82 மீட்டர். நாடாளுமன்றத்துக்கு 12 நுழைவு வாயில்கள் உள்ளன. நாடாளுமன்றத்தில் மேலவை, கீழவை என இரு அவைகள் உண்டு. ஆண்டுக்கு மூன்று முறை கூட்டத் தொடர் நடைபெறும்.

1. பட்ஜெட் கூட்டத்தொடர். இவை, பிப்ரவரி மாதம் தொடங்கி மே மாதம் வரை நடை பெறும். 2. மழைக்காலக் கூட்டத்தொடர். இவை, ஜூலை மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நடைபெறும். 3. குளிர்காலக் கூட்டத்தொடர். இவை நவம்பர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நடைபெறும்.

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

திங்கள், செப்டம்பர் 19, 2011

தமிழகத்தின் கடைசி தூக்கு.!திருவான்மியூரில் ஆட்டோ ஓட்டி வந்த சங்கர் பல விபசார பெண்களை கொன்று தனது வீட்டிலேயே புதைத்தான். 1982ஆம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் இந்த வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் குற்றவாளியான ஆட்டோ சங்கருக்கு 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ந் தேதி சேலம் ஜெயிலில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதுதான் தமிழகத்தில் கடைசியாக நிறைவேற்றப்பட்ட தூக்குத் தண்டனையாகும்.

ஒரு சிறுவனை ஈவு இரக்கமற்ற முறையில் கொடூரமாக கொலை செய்தான் சென்னையச் சேர்ந்த கொலை கைதி சேட்டு. இந்த கொலை வழக்கில், அவனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 171 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேலூர் ஜெயிலில் 1983 ஆம் ஆண்டு சேட்டு என்ற சந்துரு தூக்கில் போடப்பட்டான்.

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன

சனி, செப்டம்பர் 17, 2011

இதற்கா தூக்குத்தண்டனை கொடுப்பீர்கள்?


பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவருக்கும் ராஜிவ்காந்தி கொலைக்கும் நேரடியாக தொடர்பு கிடையாது. எனவே இவர்களுக்குத் தூக்குத்தண்டனை கொடுக்கக்கூடாது என்பதுதான் தமிழர்களின் கருத்து. இவர்கள் செய்த குற்றம் என்ன?  ஒன்றுமில்லை. 

சாந்தன், சிவராசன் சொல்லும் வேலைகளைச் செய்து வந்தான். சிவராசன், ராஜிவ்காந்தி கொலையுடன் தொடர்புடைய வேலைகள் எதனையும் இவருக்குக் கொடுக்கவில்லையாம். பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த சில உறுப்பினர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்வது ஆகிய வேலைகளை மட்டும்தான் இவருக்கு சிவராசன் கொடுத்தாராம்.


தமிழகத்தில் உள்ள தலைமைச்செயலகம், வேலூர் கோட்டை போன்ற முக்கியமான கட்டடங்கள் அமைப்பில் ஈழத்தில் கட்டடங்கள் கட்ட விடுதலைப்புலிகள் விரும்பினார்களாம். இதற்காக அந்தந்த இடங்களை புகைப்படம் எடுக்கும் வேலை முருகனுக்குத் கொடுக்கப்பட்டதாம். நளினி வீட்டில் தங்கியிருந்த போது இவருக்கும் நளினிக்கும் காதல் ஏற்பட்டதாம்.

தமிழ்நாட்டுப் பத்திரிகைகளில் வரும் விடுதலைப்புலிகள் தொடர்பான செய்திகளைச் சேகரித்து பேபி சுப்பிரமணியத்துக்கு அனுப்பும் வேலை பேரறிவாளனுக்கு கொடுக்கப்பட்டதாம். நளினி வீட்டில் தங்கியிருக்கும் போது இவருக்கும் சிவராசனுக்கும் தொடர்பு ஏற்பட்டதாம். அந்தத் தொடர்பில் அவர் கேட்டுக் கொண்டதற்காக, சிவராசனுக்கு மோட்டார் சைக்கிளும் பேட்டரியும் பேரறிவாளன் வாங்கிக் கொடுத்தாராம்.

இவ்வளவுதான் இவர்கள் செய்துள்ளது. மற்றபடி ராஜீவ்காந்தி கொலை சதிச் செயலில் இவர்கள் நேரடியாக ஈடுபடவில்லையாம். கொலை நடந்த இடத்தில் இவர்கள் இல்லை என்பதும் குறிப்பிடத் தக்கதாம். அதனால் இவர்கள் கொலையாளிகள் அல்ல.!அல்ல.!அல்ல.! புரிகிறாதா என்கிறார்கள் தமிழர்கள். இதற்கு யார் பதில் சொல்லனுமோ அவர்கள் சொன்னால் சரியாய் இருக்கும்.!

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும்  உங்கள் பாலமுருகன்.

வியாழன், செப்டம்பர் 15, 2011

தூக்குத்தண்டனை குறித்து சட்டம் கூறுவது என்ன?


தூக்கு தண்டனை தொடர்பான வழக்குகளில் தண்டனையை குறைக்க பாதிக்கப்பட்டவர்கள் அரசியல் சட்டப்பிரிவு 161, 72ஆவது பிரிவுகளின் கீழ் முறையீடு செய்ய சட்டத்தில் இடம் உள்ளது. ஜனாதிபதியின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின்னரும் அவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப் படுகிறது. 71ஆவது பிரிவின் கீழ் மத்திய அரசிடமும், 161ஆவது பிரிவின் கீழ் மாநில அரசிடமும் முறையிடலாம். இதனை பரிசீலித்து முடிவு எடுக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

புதன், செப்டம்பர் 14, 2011

சிலந்திகள் பற்றி தெரியுமா?


அமெரிக்க நாடுகளில் வாழும் ‘பிளாக் விடோ’ எனும் ஒருவகை சிலந்தி கடித்தால் மனிதனுக்கு மரணம்தான். பொதுவாக சிலந்திக்கு தாடை பக்கவாட்டில்தான் அசையும். ஆனால், டாரன்டுலாஸ் எனும் சிலந்திகளின் தாடைகள் நம்மைப்போல மேலும் கீழும் அசையும் தன்மை உடையது. இவ்வகை சிலந்திகள் 35 வருடங்கள் வரை வாழ்கின்றனவாம். நர்சரி வெப் சிலந்திகள் தங்கள் குட்டிகளின் பாதுகாப்பிற்காக வலைகளைப் பின்னு கின்றன. இது நீரின் மேல் ஓடும் அதிசய ஆற்றல் பெற்றது.


‘ஸ்பிட்டிங்’ எனும் ஒரு வகை சிலந்தி பிசின் போன்ற திரவத்தை சிறு பூச்சிகளின் மேல் துப்பி செயலிழக்கச் செய்தபின் உட்கொள்கின்றன. ‘க்ராப்சிலந்தி’ இது நண்டைப் போல் பக்கவாட்டில் நகரக் கூடியது. இது பூக்களின் மீது அமர்ந்து கொண்டு அந்த பூவின் நிறத்திற்கு, தன் உடலின் நிறத்தை மாற்றிக் கொண்டு பூக்களை நாடிவரும் பூச்சிகளை பிடித்து சாப்பிடுகின்றன.

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

ஞாயிறு, செப்டம்பர் 11, 2011

பறவைகள் நாடு விட்டு நாடு பறந்து போவது எப்படி?இந்த இயற்கையின் அற்புதத்திற்கு பெயர் ‘பேர்ட் மைக்ரேஷன்.’ பறவைகளில் இரண்டு வகை உண்டு. 1. பிறந்த மண்ணை விட்டுப் போகாத பாசக்காரப் பறவைகள். 2. பல்வேறு காரணங்க ளுக்காக அடிக்கடி டூர் அடிக்கும் சாகசப் பறவைகள். வானிலை மாற்றங்களைச் சமாளிக்கவும், இனப்பெருக்க மாற்றங்களைச் சமாளிக்கவும், இனப் பெருக்கம் செய்யவும், குட்டிகளைப் பெற்றுப் போடவும், உணவு, தண்ணீருக்காகவும்தான் இந்த இரண்டாவது ரகப் பறவைகள் ஊர் சுற்றுகின்றன. பொதுவாக இடம் பெயரும் பறவைகள் கூட்டமாகவும், ‘வி’ வடிவத்திலும் பறக்கும்.

அப்படிப் பறக்கும்போது அவை செலவழிக்க வேண்டிய சக்தி பலமடங்கு குறைகிறதாம். எவரெஸ்ட் சிகரத்தின் அருகில் கூட பல இடம் பெயர்ந்த பறவைகளின் எலும்புக் கூடுகள் கிடைத்திருக்கின் றன. பெங்குவின் பறவைகள் 1000 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடலில் நீந்தியே இடம் பெயர்கின்றன. காட்விட்ஸ் பறவைகள் நடுவில் ஓய்வே எடுக்காமல் 11 ஆயிரம் கிலோ மீட்டர் நான் ஸ்டாப்பாகப் பறக்கக்கூடிய அபார ஆற்றல் கொண்டவை. பறத்தலின் போது, உடலில் உள்ள கொழுப்பே எரிசக்தியாக அமைகிறதாம்.


ஆர்டிக் கண்டத்தி லிருந்து அண்டார்டிகா கண்டம் வரை பயணம் செய்யும் ஆர்டிக் டர்ன் எனப்படும் பறவைதான் இடம் பெயர்தலில் நீண்ட தூரப் பறப்பவை. 22 ஆயிரம் கிலோமீட்டர்கள் இவை பறக்கின்றன. இடம்பெறும் பறவைகளுக்கு, தான் போக வேண்டிய வழியின் தடங்கள் எப்படித் தெரிகின்றன? ‘இன்ஸ்டிங்கட்’ என்னும் உள்ளுணர்வு என்கிறார்கள் விஞ்ஞானிகள். தான் செல்ல வேண்டிய இடம், அவற்றை காந்தம் போல் இழுக்கிறதாம். இடம் பெயரும் பறவையைத் தொடர்ந்து கண்காணித்த விஞ்ஞானிகள் அவை பாலங்கள், பெரிய கட்டடங்கள் போன்றவற்றைக் கூட அடையாளங்களாக வைத்திருப்பதைக் கண்டுபிடித்திருக்கின்றனர்.

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

செவ்வாய், செப்டம்பர் 06, 2011

குற்றவாளிகளுக்கா இத்தனை ஆர்ப்பாட்டம்?

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் ராஜீவ் கொலைவழக்கில் தூக்குத்தண்டனை நாட்களை எண்ணிக்கொண்டிருந்த வேளையில், உயர் நீதிமன்றமும், தமிழக சட்டப்பேரவையும் இணைந்து மூவரையும் காப் பாற்றியுள்ளனர். இந்த நிலையில், அவர்களை காப்பாற்ற தமிழகத்தில் நடைபெற்ற போராட்டம் கொஞ்சம் நஞ்சம் அல்ல. ஏன் இவர்களை காப்பாற்ற இப்படித் துடியாய் துடித்தார்கள்? துடிக்கிறார்கள்? ராஜீவ் கொலைக்கு இவர்கள் மூவரும் காரணம் அல்ல என்று வாய் கிழிய பேசும் தமிழ் ஆர்வலர்களே, அதற்கான சரியான காரணத்தை கூறுவது யாரோ?

இருபது ஆண்டுகளாக குற்றத்தை நிரூபிக்காமல் இருப்பது ஏன்? என்ற கேள்விக்கு சப்பைக்கட்டு கட்டாமல் சரியான பதிலை யாராவது கூறுங்கள். இவர்களை தூக்கில் போடுவது சரியா? தவறா? என்பது குறித்த இந்த கட்டுரையை யாருக்கும் ஆதரவாகவே, யாருக்கும் எதிராகவோ எழுதவில்லை. அதேநேரத்தில், என் மனதில் எழுந்த, பலர் மனதில் எழுந்திருக்கும் கேள்விகளே இந்த கட்டுரை. இக்கட்டுரைக்கு உங்கள் விமர்சனங்களை கட்டாயம் தாருங்கள். முதலில் ராஜீவ் கொலை குறித்து பார்ப்போம்...!


47 வயதே ஆன முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வந்திருந்தார். அன்று இரவு 10 மணிக்கு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றார். அப்போது, ராஜீவை நோக்கி வந்த 20 வயது மர்ம பெண், அவருக்கு சந்தன மாலை அணிவித்த போது பயங்கர சத்தத்துன் குண்டு வெடித்தது. நிகழ்விடத்திலேயே ராஜீவ்காந்தி உடல் சிதறி பலியானார். அவரின் பாதுகாப்புக்கு வந்திருந்த 7 போலீஸ் அதிகாரிகளும் பலியானார்கள்.

Rajiv Gandhi Murder
(1. குப்தா, ராஜீவின் தனி பாதுகாப்பு அதிகாரி, புதுடெல்லி. 2. முகமது இக்பால், போலீஸ் சூப்பிரண்டு, செங்கல்பட்டு. 3. எட்வர்டு ஜோசப், தனிப்பிரிவு சி.ஐ.டி.இன்ஸ்பெக்டர், சென்னை. 4. ராஜகுரு, இன்ஸ்பெக்டர், பல்லாவரம். 5. எத்திராஜ், தனிப்பிரிவு சி.ஐ.டி. சப் இன்ஸ்பெக்டர், சென்னை. 6. சந்திரா, பெண் போலீஸ், சென்னை. 7. ராமு, தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை போலீஸ்காரர், சென்னை).

நாட்டை உலுக்கிய இந்த படுகொலை குறித்து தமிழகத்தை சேர்ந்த ஐ.ஜி.கார்த்திகேயன் தலைமை யிலான சி.பி.ஐ.சிறப்பு புலனாய்வு குழு துப்பு துலக்கியது. 25ந் தேதி வேதாரண்யத்தில் சங்கர் என்ற விடுதலைப்புலியை கைது செய்து விசாரித்ததில், ராஜீவை தீர்த்துக்கட்ட திட்டமிட்டு ‘தனு’ என்ற பெண் மனித வெடி குண்டை ஒற்றைக்கண் சிவராசன் அனுப்பியது தெரியவந்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் போது விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த முருகன் அவரது மனைவி நளினி, சாந்தன், பேரறிவாளன் உள்பட 26 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உள்பட 41 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அவர்களில் ஒற்றைக்கண் சிவராசன் உள்பட 12 பேர் மரணம் அடைந்து விட்டனர். பிரபாகரன், பொட்டு அம்மான், அகிலா ஆகிய 3 பேர் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். கைதானவர்களில் முருகன் யாழ்பானத்தை சேர்ந்தவர் என்றும், 14 வயதில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்தார் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல், சாந்தனும் இலங்கையை சேர்ந்தவர்தான். நளினி சென்னையை சேர்ந்தவர். பேரறிவாளன் தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம் ஜோலா¢பேட்டையை சேர்ந்தவர்.

Brabakaran
முருகன் சென்னையில் தங்கி இருந்தபோது நளினியை திருமணம் செய்து கொண்டார். ராஜீவ் கொலை தொடர்பாக முருகனும், கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக நளினியும், வெடிகுண்டு தயாரிக்க உதவியதாக சாந்தன், பேரறிவாளன் ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டு இருந்தனர். மேலும், பெல்ட் பாம் தயாரிக்க பேட்டரி வாங்கியதாகவும் பேரறிவாளன் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு கூறப்பட்டது.

பூந்தமல்லி தடா கோர்ட்டு இந்த வழக்கில் விசாரணை நடத்தி, 1998ஆம் ஆண்டு ஜனவரி 28ந் தேதி, குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டதில், 1999ஆம் ஆண்டு மே 11ந் தேதி தீர்ப்பு வழங் கியது. இந்த தீர்ப்பில், முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய நான்கு பேருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தும், ராபர்ட், ஜெயக் குமார், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனை யாக குறைத்தும் தீர்ப்பளிக்கப்பட்டது. பாக்கியநாதன், சுபாசுந்தரம் உள்பட 19 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.


Nalini
பின்னர், சென்னை ஐகோர்ட்டில் நளினிக்கு மட்டும் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. நளினி வேலூர் பெண்கள் சிறையிலும், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரும் வேலூர் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப் பட்டபின் நளினிக்கு பெண் குழந்தை பிறந்தது. நளினியின் மகள் தற்போது இலங்கையில் உள்ள தனது பாட்டி வீட்டில் இருக்கிறார். முருகனின் மகள் அரித்ரா பிரிட்டனில் படித்து வருகிறார். 16 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்துவிட்டதால் தன்னை விடுதலை செய்யும்படி நளினி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டடது.

நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நான்கு பேரும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார்கள். இதில், நளினி மட்டும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். தூக்கு தண்டனை கைதிகள் மூன்று பேரும், 12 ஆண்டுகளுக்கு முன் ஜனாதிபதிக்கு கருணை மனுக்கள் அனுப்பியிருந்தனர்.அந்த மனுக்களை கடந்த (ஆகஸ்ட்) 11ந் தேதி ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் நிராகரித்தார். இதற்குதான் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், தீக்குளிப்பும் ஏற்பட்டன.

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.