செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

செவ்வாய், செப்டம்பர் 06, 2011

குற்றவாளிகளுக்கா இத்தனை ஆர்ப்பாட்டம்?

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் ராஜீவ் கொலைவழக்கில் தூக்குத்தண்டனை நாட்களை எண்ணிக்கொண்டிருந்த வேளையில், உயர் நீதிமன்றமும், தமிழக சட்டப்பேரவையும் இணைந்து மூவரையும் காப் பாற்றியுள்ளனர். இந்த நிலையில், அவர்களை காப்பாற்ற தமிழகத்தில் நடைபெற்ற போராட்டம் கொஞ்சம் நஞ்சம் அல்ல. ஏன் இவர்களை காப்பாற்ற இப்படித் துடியாய் துடித்தார்கள்? துடிக்கிறார்கள்? ராஜீவ் கொலைக்கு இவர்கள் மூவரும் காரணம் அல்ல என்று வாய் கிழிய பேசும் தமிழ் ஆர்வலர்களே, அதற்கான சரியான காரணத்தை கூறுவது யாரோ?

இருபது ஆண்டுகளாக குற்றத்தை நிரூபிக்காமல் இருப்பது ஏன்? என்ற கேள்விக்கு சப்பைக்கட்டு கட்டாமல் சரியான பதிலை யாராவது கூறுங்கள். இவர்களை தூக்கில் போடுவது சரியா? தவறா? என்பது குறித்த இந்த கட்டுரையை யாருக்கும் ஆதரவாகவே, யாருக்கும் எதிராகவோ எழுதவில்லை. அதேநேரத்தில், என் மனதில் எழுந்த, பலர் மனதில் எழுந்திருக்கும் கேள்விகளே இந்த கட்டுரை. இக்கட்டுரைக்கு உங்கள் விமர்சனங்களை கட்டாயம் தாருங்கள். முதலில் ராஜீவ் கொலை குறித்து பார்ப்போம்...!


47 வயதே ஆன முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வந்திருந்தார். அன்று இரவு 10 மணிக்கு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றார். அப்போது, ராஜீவை நோக்கி வந்த 20 வயது மர்ம பெண், அவருக்கு சந்தன மாலை அணிவித்த போது பயங்கர சத்தத்துன் குண்டு வெடித்தது. நிகழ்விடத்திலேயே ராஜீவ்காந்தி உடல் சிதறி பலியானார். அவரின் பாதுகாப்புக்கு வந்திருந்த 7 போலீஸ் அதிகாரிகளும் பலியானார்கள்.

Rajiv Gandhi Murder
(1. குப்தா, ராஜீவின் தனி பாதுகாப்பு அதிகாரி, புதுடெல்லி. 2. முகமது இக்பால், போலீஸ் சூப்பிரண்டு, செங்கல்பட்டு. 3. எட்வர்டு ஜோசப், தனிப்பிரிவு சி.ஐ.டி.இன்ஸ்பெக்டர், சென்னை. 4. ராஜகுரு, இன்ஸ்பெக்டர், பல்லாவரம். 5. எத்திராஜ், தனிப்பிரிவு சி.ஐ.டி. சப் இன்ஸ்பெக்டர், சென்னை. 6. சந்திரா, பெண் போலீஸ், சென்னை. 7. ராமு, தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை போலீஸ்காரர், சென்னை).

நாட்டை உலுக்கிய இந்த படுகொலை குறித்து தமிழகத்தை சேர்ந்த ஐ.ஜி.கார்த்திகேயன் தலைமை யிலான சி.பி.ஐ.சிறப்பு புலனாய்வு குழு துப்பு துலக்கியது. 25ந் தேதி வேதாரண்யத்தில் சங்கர் என்ற விடுதலைப்புலியை கைது செய்து விசாரித்ததில், ராஜீவை தீர்த்துக்கட்ட திட்டமிட்டு ‘தனு’ என்ற பெண் மனித வெடி குண்டை ஒற்றைக்கண் சிவராசன் அனுப்பியது தெரியவந்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் போது விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த முருகன் அவரது மனைவி நளினி, சாந்தன், பேரறிவாளன் உள்பட 26 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உள்பட 41 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அவர்களில் ஒற்றைக்கண் சிவராசன் உள்பட 12 பேர் மரணம் அடைந்து விட்டனர். பிரபாகரன், பொட்டு அம்மான், அகிலா ஆகிய 3 பேர் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். கைதானவர்களில் முருகன் யாழ்பானத்தை சேர்ந்தவர் என்றும், 14 வயதில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்தார் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல், சாந்தனும் இலங்கையை சேர்ந்தவர்தான். நளினி சென்னையை சேர்ந்தவர். பேரறிவாளன் தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம் ஜோலா¢பேட்டையை சேர்ந்தவர்.

Brabakaran
முருகன் சென்னையில் தங்கி இருந்தபோது நளினியை திருமணம் செய்து கொண்டார். ராஜீவ் கொலை தொடர்பாக முருகனும், கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக நளினியும், வெடிகுண்டு தயாரிக்க உதவியதாக சாந்தன், பேரறிவாளன் ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டு இருந்தனர். மேலும், பெல்ட் பாம் தயாரிக்க பேட்டரி வாங்கியதாகவும் பேரறிவாளன் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு கூறப்பட்டது.

பூந்தமல்லி தடா கோர்ட்டு இந்த வழக்கில் விசாரணை நடத்தி, 1998ஆம் ஆண்டு ஜனவரி 28ந் தேதி, குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டதில், 1999ஆம் ஆண்டு மே 11ந் தேதி தீர்ப்பு வழங் கியது. இந்த தீர்ப்பில், முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய நான்கு பேருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தும், ராபர்ட், ஜெயக் குமார், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனை யாக குறைத்தும் தீர்ப்பளிக்கப்பட்டது. பாக்கியநாதன், சுபாசுந்தரம் உள்பட 19 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.


Nalini
பின்னர், சென்னை ஐகோர்ட்டில் நளினிக்கு மட்டும் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. நளினி வேலூர் பெண்கள் சிறையிலும், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரும் வேலூர் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப் பட்டபின் நளினிக்கு பெண் குழந்தை பிறந்தது. நளினியின் மகள் தற்போது இலங்கையில் உள்ள தனது பாட்டி வீட்டில் இருக்கிறார். முருகனின் மகள் அரித்ரா பிரிட்டனில் படித்து வருகிறார். 16 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்துவிட்டதால் தன்னை விடுதலை செய்யும்படி நளினி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டடது.

நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நான்கு பேரும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார்கள். இதில், நளினி மட்டும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். தூக்கு தண்டனை கைதிகள் மூன்று பேரும், 12 ஆண்டுகளுக்கு முன் ஜனாதிபதிக்கு கருணை மனுக்கள் அனுப்பியிருந்தனர்.அந்த மனுக்களை கடந்த (ஆகஸ்ட்) 11ந் தேதி ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் நிராகரித்தார். இதற்குதான் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், தீக்குளிப்பும் ஏற்பட்டன.

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

4 கருத்துகள்:

 1. ஏண்டா காங்கிரேசுக்கார நாய்களே, உன்னோட தலைவன் செத்தானே அவன் கூட பலப் பேரு செத்தாங்களே நீங்க ஒரு காங்கிரேசுக்கார நாய்கள் கூட சாவலைன்னு ஏன் நீ கேட்கவில்லை - அப்படினா நீ காங்கிரேசுவை சார்ந்தவனா, இல்ல காங்கிரேசுக்காரன் தான் சாவடிச்சனா?

  - சத்தியநாராயணன்

  பதிலளிநீக்கு
 2. intha naalvarukkum kattaayam thookku thandanai kodungal.

  பதிலளிநீக்கு
 3. நியாமற்ற கட்டுரை
  இக்கட்டுரை நீதியின் அடிப்படையிலும் இல்லை. சட்டத்தின் அடிப்படையிலும் இல்லை. இரண்டு மிக முகாமையான அம்சங்களை கட்டுரையாளர் புரிந்துக் கொள்ள வேண்டும்.
  தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளை தொடர்ந்து ஒடுக்கி வரும் நடுவண்அரசு, அதன் நீட்சியாகவே பேரறிவாளன் உள்ளிட்ட மூவரையும் தூக்கிலிடத் துடிக்கிறது என்ற மிக முகாமையான அரசியல் தௌ¤வு இக்கட்டுரையில் அறவே இல்லை,
  இரண்டாவது தண்டனை குறைப்பைக் கோருவதில் சட்டப்படியாகவே கூட எந்த தவறும் இல்லை. அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமையைக் கோருவது எப்படி தவறாகும் என்று புரியவில்லை.
  இந்த வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி ஒருவரே. மூன்று அப்பாவிகளுக்கு தூக்கு தண்டனை வாங்கி கொடுத்திருப்பது மனவேதனை அளிப்பதாக உள்ளது என்று கூறியிருப்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
  கொடிய ஆள்தூக்கி தடா சட்டத்தின் கீழ் கடுமையான சித்ரவதைகளை செய்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் மூன்று உயிர்களை பறிக்க முயல்வது எந்த வகையில் அறத்தின்பாற்பட்ட செயலாகும்?
  தவிரவும் இவ்வழக்கின் தீர்ப்பில் உள்ள தன்முரண்பாடுகள் குறித்து சட்ட வல்லுநர்கள் கூறியிருப்பதை கட்டுரையாளர் படித்ததாகத் தெரியவில்லை. விரிவஞ்சி ஒன்றை மட்டும் கூறுகிறேன். தடா சட்டத்தின் கீழ் இவ்வழக்கு வராது என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால் அதேசட்டத்தின் கீழ் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் தீர்ப்பு கூறியிருப்பது முரண்பாடா, இல்லையா?
  எனவே இவ்வழக்கின் அடிப்படையான செய்திகளை விளங்கிக் கொள்ளாமல் சட்டத்துக்கும் அறத்துக்கும் மாந்தநேயத்துக்கும் மாறான இது போன்ற நச்சுக் கருத்துக்களை பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
  அன்புரிமையுடன் அறம்விரும்பி

  பதிலளிநீக்கு
 4. 1.திட்டமிட்ட கொலைக்கு தனடனை தூக்கு மட்டுமே அல்ல.அப்படி இருந்தால் எத்தனை கொலைக் குற்றங்க்ளுக்கு தூக்கு தண்டனை கொடுக்க பட்டுள்ளது?
  2.மும்பய் குன்டு வெடிப்பு, ராஜிவ் கந்தி கொலை குன்டு வெடிப்பு வித்தியாசம் உள்ளது.மும்பை குன்டு வெடிப்பிற்கு தடா பொருந்தும், ராஜிவ் கொலை குன்டு வெடிப்பிர்கு எப்படி தடா பொருந்தும்?
  4.இந்தியா போராளி குழுக்கழுக்கு பயிற்ச்சி கொடுத்தது எதற்காக?இலங்கையில் , மும்பை குண்டு வெடிப்பு போன்று நடத்தத்தானே?
  5.பேரறிவாளன் 19 வயது சிறுவன் , குண்டு செய்தான் என்று நிருபிக்க பட வில்லய்.
  6.வர்மா கமிஷன், ஜெயின் கமிஷன், அறிக்கை, விசாரணை முடியவில்லை என்று கூறுகிறது.
  7.26 பேர் தூக்கு தண்டனை ‍ஒரு தீர்ப்பு, அதில் 19 பேர் விடுதலை மற்றொரு தீர்ப்பு‍‍ இது எதனால்?
  8. முக்கிய சாட்சி வீடியோ இன்று வரையில் நாராயணன் கொடுக்க வில்லையெ அது ஏன்?

  பதிலளிநீக்கு