செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

சனி, டிசம்பர் 24, 2011

‘தமிழ்நாடு தமிழருக்கே.!’


‘சலிப்பு, ஓய்வு இரண்டும் தற்கொலைக்குச் சமம்’-இந்த வார்த்தைகளைச் சொன்னவரும், இந்த வார்த்தைகளை வாழ்க்கையாகக் கொண்டவருமான பெரியார், செப்டம்பர் 17, 1879 ஆம் ஆண்டு பிறந்தார். இறப்பதற்குச் சில நாட்கள் முன்புவரை தனது கொள்கைகளுக்காகப் பிரசாரம் செய்தவர். தமிழக அரசியல், சமூகம் ஆகியவற்றில் இவர் ஏற்படுத்திய தாக்கத்திற்கு, இணையான தாக்கம் இதுவரை யாராலும் ஏற்படுத்தப்படவில்லை. ஈரோடு வேங்கட ராமசாமி என்கிற இயற்பெயரைக் கொண்ட பெரியார், சாதி மற்றும் மூட நம்பிக்கைகள் அழியவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர்.

காங்கிரஸில் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கியவர். மது ஒழிப்பு, தீண்டாமைக்கு எதிரான போராட்டங்கள் என காந்தியின் பல போராட்டங்களை தமிழகத்திலும், கேரளத்தில் உள்ள வைக்கத்திலும் முன்னெடுத்துச் சென்றவர். பின்னர் திராவிட கழகத்தைத் தோற்றுவித்ததோடு, சுயமரியாதை மற்றும் பகுத்தறிவை தன் வாழ்நாள் முழுக்க கொள்கைகளாகக் கடைபிடித்தவர். மூட நம்பிக்கைக்கு காரணமாக இருப்பது கடவுள் நம்பிக்கையும், கடவுள் பெயரால் உருவான சமயங்க ளும்தான் என்பது அவரது கருத்து. அதனால் இறுதிவரை அவர் ஒரு தீவிர நாத்திகராகவே செயல் பட்டார்.


வசதியான வணிகக் குடும்பப் பின்னணியைக் கொண்ட பெரியார், மிக எளிமையாகவே வாழ்ந்தார். 1929ல் சுயமரியாதையை வலியுறுத்த செங்கல்பட்டில் நடத்திய மாநாட்டில் தன் பெயரின் பின்வரும் சாதிப்பெயரை நீக்கி, முன்னுதாரணமாக விளங்கினார். அவரது கருத்துகளைப் பரப்புவதற்காகவே, ‘குடியசு’ நாளிதழை நடத்தினார். ஆங்கிலத்தில், ‘ரிவோல்ட்’ என்ற நாளிதழ் மூலம் ஆங்கிலம் மட்டுமே தெரிந்த மக்களுக்காகப் பிரசாரம் செய்தார். ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று முழங்கிய தோடு இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார்.

ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி கற்றிருந்தாலும் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளைப் பேசும் ஆற்றல் கொண்டிருந்த பெரியார், இந்தியாவில் மட்டுமல்லாமல் மலேசியா, சிங்கப்பூர், ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், இலங்கை போன்ற நாடுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தன் கருத்துகளைப் பதித்தார். தமிழ் எழுத்துக்களின் சீரமைப்பில் பெரியாரின் பங்கு குறிப்பிடத்தக்கது. இவரின் சமுதாயப் பங்களிப்பிற்காக யுனெஸ்கோ நிறுவனம் விருது வழங்கி கௌரவித்துள்ளது. இறுதிக் காலத்தில் குடலிறக்க நோயினால் பாதிக்கப்பட்ட பெரியார், டிசம்பர் 24, 1973ல் தனது 94ம் வயதில் இயற்கை எய்தினார்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக