செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

ஞாயிறு, அக்டோபர் 30, 2011

‘சுடாதீர்கள்... சுடாதீர்கள்...’


‘சுடுங்கள்... சுடுங்கள்... யார் எதிர்த்தாலும் தயங்காமல் சுடுங்கள்’ என்று தன்னுடைய சிறிய படைக்குக் கட்டளையிட்ட வண்ணம் லிபிய நாட்டு மன்னரின் அரண்மனைக்குள் நுழைந்து, அங்கிருந்த மன்னரின் மருமகனிடம் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியிருக்கிறது. ‘உங்களைக் கைது செய்கிறோம்’ என்று சொன்ன அந்த 27 வயது இளைஞனுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அது: இளவரசர் எந்த எதிர்ப்பும் இல்லாமல் சரணடைந்தது. அன்று யுத்தம், ரத்தம் எதுவுமில்லாமல் மிரட்டிப் பெற்ற ஆட்சியை லிபியாவில் 42 ஆண்டு காலம் தொடர்ந்தவர் மும்மர் கடாஃபி.

பாலைவன கூடாரங்களில் தங்கி, ஒட்டகங்கள் மேய்க்கும் நாடோடிக் குடும்பத்தைச் சேர்ந்த கடாஃபிக்குப் படிக்க ஆசை. ஆனால், அதற்கு நீண்ட தூரம் நடக்க வேண்டும். அதனால், அடிக்கடி தடைப்பட்ட படிப்பை தனி ஆசிரியர் மூலம் தொடர்ந்து பள்ளிப்படிப்பை முடித்த போது வயது 20. தொடர்ந்து படிக்க நல்ல வாய்ப்பு என்ற எண்ணத்துடன் சேர்ந்தது ராணுவத்தில். பட்டப் படிப்பும் வெளிநாட்டுப் பயிற்சியும் இலவசம் என்பதும் ஒரு காரணம். இந்தப் பயிற்சியின் போது எழுந்த எண்ணங்கள்தான் அவரைத் தலைவராக்கியது.

அன்றைய எகிப்தின் புரட்சித் தலைவர் நாசரினால் பெரிதும் கவரப்பட்டு, தன்னுடைய நாட்டிலும் மன்னராட்சியை ஒழிக்கத் துணிந்தவர். கம்பீரமான தோற்றத்தாலும், மிடுக்கான குரலினாலும் ராணுவத்தில் நண்பர்களிடம் செல்வாக்கு பெற்றிருந்ததால், லெப்டினட்டாக இருந்தபோது ஒரு புரட்சிப் படையை உருவாக்கி, மன்னரைக் கைது செய்ய அரண்மனைக்குச் சென்ற இந்தத் துணிச்சல்காரர், சில ஆண்டுகளில் தன்னை கர்னலாக உயர்த்திக் கொண்டார். இறுதிவரை அதே பதவிக்கான இலச்சினையைத்தான் அணிந்திருந்தார். 

1969ல் மன்னரை அப்புறப்படுத்தி, ஆட்சியில் அமர்ந்தவுடன் செய்த முதல் காரியம், 5 ஷரத்துகள் மட்டுமே கொண்ட புதிய இஸ்லாமியச் சட்டம். இதன்படி எல்லா அதிகாரமும் தலைவருக்கே. அடுத்தது, 50 விழுக்காடு லாபத்தை மன்னருடன் பகிர்ந்து கொண்டிருந்த ஐரோப்பிய - அமெரிக்க எண்ணெய் கம்பெனிகளை, ‘80 விழுக்காடு தாருங்கள் அல்லது வெளியேறுங்கள்’ என்று சொன்னதுதான்.

நாட்டில் தொண்ணூறு விழுக்காடு சகாரா பாலைவன மாகியிருந்தாலும் ஆப்பிரிக்கக் கண்டத்தின் நான்காவது பெரிய நாடான லிபியா, புதிய ஆட்சியில் பெட்ரோல் வளத்தினால் செல்வபுரியாகும் என எதிர்பார்த்த உலகிற்கு, அதன் செயல்கள் வியப்பளித்தன. கிடைத்த பெரும் பணத்தில் ஆயுதங்கள் வாங்கிக் குவித்து, அண்டை நாடுகளில் கலகம் ஏற்படத் தீவிரவாதிகளை வளர்க்கப் பயன் படுத்தினார் கடாஃபி.

ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவின் தலைவனாகத் தன்னை கற்பனை செய்துகொண்டு, அதை உண்மையாக்க கொடுங்கோலனாக உருவெடுத்தார். எதிர்ப்பவர் எவரானாலும் அழித்தார். தூதரங்கள், விமானங்கள், ஹோட்டல்கள் போன்றவை அச்சம் உண்டாக்குவதற்காகவே அழிக்கப் பட்டன.



ஆடம்பரமான உடை, பெண் அதிகாரிகள் மட்டுமே கொண்ட பாதுகாப்புப் படை, வெளிநாட்டுப் பயணங்களில் 400 பேர் கொண்ட குழு, போகும் நாடுகளில் கூடாரமிட்டு தங்குவது போன்ற ஆர்ப்பாட்ட ஆடம்பரங்களினால் உலகைக் கவர்ந்திருந்தாலும், உள்நாட்டில் எதிர்ப்பவர்களை அழிக்கும் சர்வாதிகாரப் போக்கினால் மக்களின் வெறுப்பு உச்சகட்டத்திலிருந்தது. இதனால், டூனிசியாவில் எழுந்த எதிர்ப்பு அலைக்கு லிபியாவும் பலியானது.

இப்படியொரு வாய்ப்புக்காக காத்திருந்த அமெரிக்காவின் ஆசியுடன் எழுந்த உள்நாட்டு ராணுவப் புரட்சி, கடாஃபியை ஓட ஓட விரட்டியது. ஒவ்வொரு நகராக புரட்சிப் படையிடம் இழந்தவர், கடைசியில் தன் கிராமத்தில் பதுங்கியிருந்தபோது அவர்களிடம் பிடிபட்டு, சுட்டுக் கொல்லப்பட்டார். கடைசியாக அவர் சொன்ன வார்த்தைகள்: ‘சுடாதீர்கள்... சுடாதீர்கள்...’

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

2 கருத்துகள்:

  1. கடாஃபி குறித்து தாங்கள் திரட்டிய தகவல்களில் எந்தளவு உண்மை என்பது தெரியவில்லை. மேலை நாட்டு ஊடகங்கள், ஆதிக்க சக்திகள் அளித்த தகவல்கள்தான் உங்களது கட்டுரையில் அதிகம் உள்ளது. லிபியாவில் மேலைநாட்டு கலாசாரத்தை ஒழித்தவர் கடாஃபி. இஸ்லாமிய ஆட்சியை நிறுவனார். அவரது ஆட்சியில் வன்முறை தலைவிரித்து ஆடவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இருந்தது.

    எதிரிகளை அழிக்க அவர் பல தவறான முடிவுகளை எடுத்து இருக்கலாம். அதற்காக அமெரிக்கா நாயும், இங்கிலாந்து சாத்தானும் லிபியாவில் நுழைய எந்த உரிமையும் இல்லை. அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் நடக்காத மனித உரிமைகளின் பட்டியல்களை உங்களால் கூற முடியுமா. உலகமே தனக்கு சொந்தம் என கூறிக் கொண்டு அமெரிக்க பிசாசு செய்து வரும் அட்டூழியங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல. மேலை நாட்டு ஊடகங்களின் தகவல்களை வைத்துக் கொண்டு, தவறான கண்ணொட்டத்தில் எழுதுவது சரியல்ல.

    எஸ்.ஏ.அப்துல் அஜீஸ். www.pudumalar.blogspot.com

    பதிலளிநீக்கு