செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

வெள்ளி, ஜனவரி 10, 2014

நேசித்தவர்களை விட வெறுத்தவர்களே அதிகம்...!

 பா.ஜ.க.மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தீவிர ஆர்.எஸ்.எஸ்.தொண்டர் என்ற அடையாளத்தினா லேயே அவரை நேசித்தவர்களைவிட, விரும்பாதவர் களே அதிகம். அதை அறிந்திருந்தபோதும் அதற்காக வருந்தாமல், தன் அடையாளத்தை இழக்க விரும்பாத துணிவான அரசியல்வாதி. இன்றைக்கு பாகிஸ்தானின் ஒரு முக்கிய நகராகயிருக்கும் கராச்சி, பிரிவினைக்கு முன் இந்தியாவின் ஓர் அங்கமாயிருந்தபோது, அங்கு பிறந்து வளர்ந்தவர் அத்வானி. நல்ல வசதியான, தெய்வ பக்தி நிரம்பிய சிந்தி குடும்பத்தில் பிறந்தவர். தொடக்க நாட்களில் கிரிக்கெட், டென்னிஸ் விளையாட்டுகளில் மட்டுமே ஆர்வமாக இருந்த அத்வானிக்கு, அரசியலை அறிமுகப்படுத்தியது அவரது பள்ளி நண்பர்.

அவருடன் ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஷாகாக்களுக்குச் சென்றவர், அதனால் ஈர்க்கப்பட்டு அதில் ஒன்றிப்போனார். அதற்கு முக்கியக் காரணம், தீ பிரிவினை என்பதையே அடியோடு ஆர்.எஸ்.எஸ். நிராகரித்ததுதான். கல்லூரிப் படிப்பை முடித்தபின் சில காலம் ஆசிரியப் பணியிலிருந்தபோது, தொடர்ந்த சமூக சேவைப் பணிகள் இவரது வாழ்க்கையில் ஒரு விபத்துக்கு வித்திட்டது.


கராச்சியில் நிகழ்ந்த ஒரு குண்டுவெடிப்புக்குக் காரணமான ஆர்.எஸ்.எஸ். காரர்களின் பட்டியலில் இவர் பெயரும் இருந்ததால் காவல்துறையிடம் இருந்து தப்ப, இந்தியாவிற்கு இடம் பெயர்ந்து, மும்பையில் சட்டம் படித்து, பின் முழுநேர அரசியல்வாதியானவர்.

ஆர்.எஸ்.எஸ்.ஸிலிருந்து பாரதிய ஜன சங்கம், ஜனதா மோர்ச்சா, ஜனதா என மாறி மாறி இவர் கடந்து வந்த அரசியல் பாதைகள், வலிகள் நிறைந்தவை. மொரார்ஜி தேசாய், சரண் சிங், வி.பி.சிங், சந்திரசேகர் போன்ற அரசியல்வாதிகள், தங்களை பலப்படுத்திக் கொண்டனர். தனது கட்சி தனித்து நிற்க, அதற்கு அகில இந்திய முகம் தேவை என உணர்ந்த அத்வானி, அதற்காகப் பாடுபடத் தொடங்கினார். எமர்ஜென்சி காலத்தின் கொடுமைகளிலிருந்து மீண்டு, கட்சியைக் கட்டமைத்து வெறும் 2 எம்.பி.க்களுடன் தொடங்கிய பா.ஜ.க.வை ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு வளர்த்தவர். 2002ல் வாஜ்பாயின் அரசில் துணை பிரதமராக இருந்தவர்.
கட்சியை வளர்க்க இவர் தேர்தெடுத்த ஓர் ஆயுதம் ரதயாத்திரைகள்.சோமநாத்தில் தொடங்கி, அயோத்தி வரை செல்லத் திட்டமிட்டு, வன்முறையில் முடிந்த முதல் யாத்திரையின் வெற்றியாகக் கருதப்பட்ட விசயம் பாபர் மசூதியின் இடிப்பு. ஹிந்துத்வா கோசத்தை ஓங்கி ஒலித்து தேர்தலில் வெற்றி பெற்றாலும், 1990 டிசம்பர் 6ல் நிகழ்ந்தது ஒரு தேசிய அவமானம் என்ற கறையையும் பெற்றுத் தந்தது. ஆனாலும், அத்வானி யாத்திரைகளைக் கைவிடவில்லை.

ஊழலுக்கு எதிராகவும், வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டுவரவும் வலியுறுத்தி, 38 நாட்கள் மக்கள் விழிப்புணர்வு யாத்திரை மேற்கொண்டார். 

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக