செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

சனி, மார்ச் 31, 2012

“...முதல் பெண் முதலமைச்சர் யார்?”



இந்தியப் பொதுத்தேர்தலில் போட்டியிட்ட முதல் இந்தியப் பெண் வேட்பாளர் கமலாபதி சட்டோபாத்யாயா.
இந்திய திரைப்பட ஒலிப்பதிவுத்துறையில் பணியாற்றிய முதல் பெண் கமலா நாராயணன்.
இந்தியாவின் முதல் பெண் தலைமைச் செயலாளர் அஞ்சலி தயானந்த்.
இந்தியாவின் முதல் பெண் மேயர் தாரா செரியன்.


உலகிலேயே அதிக நேரம் விமானம் ஓட்டிய முதல் பெண்மணி துர்கா பானர்ஜி (இந்தியா).
இந்தியாவில் மின்சார ரயில் என்ஜினை இயக்கிய முதல் பெண் சுரேகா யாதவ் (மும்பை).
அதிக நாவல்களை எழுதிய முதல் இந்தியப் பெண் வை.மு.கோதைநாயகி.
பாரிஸ்டர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண் கமனேலியா சொரப்ஜி.
சாகித்ய அகாடெமி விருது பெற்ற முதல் பெண்மணி கவிஞர் அமிர்ந்தா பிரீதம் (பஞ்சாபி).
இந்தியாவின் முதல் இசைப் பெண்மணி எம்.எஸ்.சுப்புலெட்சுமி.
உலகைத் தனியாக சுற்றி வந்த முதல் இந்திய பெண் உஜ்வாலா பட்டீல்.


ரங்கோலி கோலம் போடுவதில் சாதனை புரிந்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற முதல் இந்திய பெண் விஜயலட்சுமி மோகன் (திருச்சி).
இந்தியாவின் முதல் பெண் பாராசூட் வீராங்கணை கீதா கோஷ்.
இந்தியாவினல் குத்துச்சண்டை வீராங்கனை ரசிய ஷப்னம்.
இந்தியாவின் முதல் கார் பந்தய வீராங்கனை நவாஸ் சாந்து.
இந்தியாவின் முதல் சதுரங்க விளையாட்டு வீராங்கனை ரோகினி காடில்கர்.

முதன் முதலில் விண்வெளிப் பயணம் செய்த முதல் இந்தியப் பெண் கல்பனா சாவ்லா.
இந்தியாவில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் முதலமைச்சர் ஜெயலலிதா.
புக்கர் பரிசு பெற்ற முதல் இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய்.
நாடக அரசி என்ற பட்டம் பெற்ற முதல் இந்திய பெண்மணி பாலாமணி.
கேரம் விளையாட்டின் முதல் உலக மகளிர் சாம்பியன் பட்டம் பெற்ற முதல் இந்திய பெண் அனுராஜ் (தமிழ்நாடு 1991).


தீயணைப்புத் துறையில் முதன்முதலாக நியமிக்கப்பட்ட பெண் அதிகாரி மீனாட்சி விஜயகுமார்.
வடதுருவத்தில் தனியாகவே சென்று கால்பதித்த முதல் இந்திய பெண் பிரீத்தி சென் குப்தா.
இந்தியாவில் பத்திரிகை நடத்திய முதல் பெண் சுவர்ண குமாரி தேவி (இரவீந்திரநாத் தாகூரின் சகோதரி).
பத்து பல்கலைக்கழகங்களிலிருந்து டாக்டர் பட்டம் பெற்ற முதல் இந்திய பெண்மணி இலாபட் (குஜராத்).
இந்தியாவின் முதல் பெண் போலீஸ் டி.ஜ.பி.காஞ்சன் சௌத்ரி (உத்தராஞ்சல்).
இந்திய விமானப்படையில் சேர்ந்த முதல் பெண் விமானி ஹரிதா கௌர் திரீ யோல்.

இந்திய ராணுவத்தில் உயர் பதவி பெற்ற முதல் பெண் ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் பி.எஸ்.சரஸ்வதி.
முதன்முதலில் சுதந்திர எழுச்சிப் பாடல்களை பாடிய தமிழ்ப் பெண் டி.கே.பட்டம்மாள்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

வெள்ளி, மார்ச் 30, 2012

யார் இந்த உதயகுமார்?



சுப.உதயகுமார், கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பில் தீவிரமாக இருக்கிறார். இவரது எதிர்ப்புத் தீவிரம் அடைய, போராட்டமும் 220 நாட்களை தாண்டி சென்றுக் கொண்டி ருக்கிறது. ‘அணுஉலை இயங்க வழியில்லை என்றால் எங்களது விஞ்ஞானிகள் இங்கு எதற்கு இருக்க வேண்டும்?...’ என்று ரஷ்யா கேள்வி எழுப்பியது. உதயகுமார் குறித்து பிரதமர் முதல், அமைச்சர் நாராயணசாமி வரை அவருக்கு எங்கிருந்து பணம் வருகிறது?


போராட்டச் செலவுகளுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் பெறுகிறார் என்றெல்லாம் புகார் தெரிவிக்கிறார்கள். ஆனால், தமது சொத்துக் கணக்கை வெளியிட்டு அப்படியெல்லாம் என்று மறுக்கிறார். மக்களிடம் பணம் பெற்று முறையாக கணக்கு வைத்திருந்துதான் போராட்டத்தில் ஈடுபடுகிறோம் என்று உதயகுமார் கூறுகிறார்.

உதயகுமார் ஒருபடி மேலே சென்று, பொய்ப்புகார்கள் கூறுகின்றவர்கள் மீது வழக்கு தொடர்வேன் என்கிறார். எங்களுக்கும் வழக்குப்போடத் தெரியும் என்று அரசுத் தரப்பில் சவால் விடப்படுகிறது? இதையெல்லாம் காதில் வாங்கிக் கொண்டிருந்த தமிழக அரசு கடந்த 19-ம் தேதி அமைச்சரவையைக் கூட்டி கூடங்குளம் அணுஉலை உடனடியாக செயல்படத் தொடங்க அனுமதி அளித்தது. 

இதனால், கூடங்குளத்தில் மிகவும் பதற்றமான சூழல் நிலவுகிறது. எப்போது என்ன நிகழும் என்று கூற முடியாத நிலை. ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 6 மாதங்களாக செயல்படாமிருந்த அணுஉலைகள் தற்போது முழுவீச்சில் உற்பத்தியைத் தொடங்கும் வகையில் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. அரசின் முடிவை எதிர்த்து உதயகுமாரும், போராட்டக்குழுவினர் சிலரும் உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்படி பரபரப்புக்கான சுப.உதயகுமார் யார்?


குமரி மாவட்ட தலைநகர் நாகர்கோவிலில் பறக்கை சாலை சந்திப்பை யொட்டிய இசங்கைமணி வீதியை சேர்ந்தவர் உதயகுமார். நாகர்கோவில் பயோனியர் குமார சாமி கல்லூரியில் இளங்கலை கணிதம், கேரளப் பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆங்கிலமும் கற்றவர்.

1989 ஆகஸ்டு முதல் 2001 ஜனவரி வரையில் அமெரிக்காவில் ‘சமாதான கல்வி’ யில் முதுகலை பட்டம், ஹவாய் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் பி.எச்.டி. பட்டங்களையும் பெற்றவர். தொடர்ந்து ஐ.சி.எப். அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாயார் எஸ்.பொன்மணி, தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவலராக இருந்து ஓய்வு பெற்றவர்.

உதயகுமாரின் மனைவி மீரா. இவர்களுக்கு சூர்யா, சத்யா என்ற இரு மகன்கள். நாகர்கோவில் அருகே பழவிளையில் சாக்கர் மெட்ரிக் பள்ளியை உதயகுமார் அதன் தாளாளராக இருந்து நடத்தி வருகிறார். (இந்த பள்ளியைத்தான் தற்போது சிலரால் இடிக்கப்பட்டதாக செய்தி வெளியாகிறது.) இந்த பள்ளியின் முதல்வராக, மனைவி மீரா இருக்கிறார். 

பலமான குடும்ப பின்னணியும், ஆழமான கல்விப் புலமும் கொண்ட உதயகுமார் பொதுப் பிரச்சனைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல பல்வேறு நிகழ்வு கள் அவருக்கு தூண்டுகோலாக அமைந்தது.! குறிப்பாக கூடங்குளம் அணுஉலைப் போராட்டத்தை அவர் கையில் எடுத்துதான் பிரபலமானார். (அது கிறிஸ்தவர்களின் போராட்டம் என்று பலர் கூறுகிறார்கள். இதுகுறித்து நாம் மற்றொரு கட்டுரையில் காணலாம்.)


அணுஉலை எதிர்ப்பு என்ற சித்தாந்தம் எப்படி உதயகுமாருக்கு எழுந்தது? இதை அவரே கூறுகிறார்..., “கடந்த நூற்றாண்டின் இறுதியில் இந்தியப் பெருங் கடலில் அமெரிக்காவும், ரஷ்யாவும் படைத்தளம் அமைத்தது, அந்நாடு களுக்குள் பனிப்போர் நிலவியது குறித்தெல்லாம் எனக்குத் தெரியவந்தது. ஒருவேளை இந்நாடுகளிடையே போர் ஏற்பட்டு அணு ஆயுதம் பயன்படுத்தப் பட்டால், இந்தியப் பெருங்கடலை யொட்டிய நாடுகள் இல்லாமல் போகும் என்ற அச்சம் எனக்குள் இருந்தது. அணு ஆயுதங்களால் ஏற்படும் பேரழிவுகளை அப்போதுதான் தெரிந்துகொண்டேன். 

இந்திய நிலமும், கடலும், இயற்கையும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே ஜி.பி.ஐ.ஓ. (குரூப் ஃபார் பீஸ்புல் இன்டியன் ஓசன்) என்ற அமைப்பை என்னைப் போன்ற சமூக ஆவலுள்ள இளைஞர்களுடன் இணைந்து அப்போதே ஏற்படுத்தி னேன். மேலும் ஹவாய் தீவுப்பகுதியில் நான் ஆசிரியராக பணியாற்றியபோது நடந்த சம்பவங்களும் மிகப்பெரும் தூண்டுதலாக இருந்தது.


ஹவாய் தீவுப்பகுதியில்தான் பிரான்ஸ் நாடு தனது அணு ஆயுத பரிசோதனைகளை மேற்கொண்டது. இதனால் அங்குள்ள பூர்வீக குடிமக்கள் பாதிக்கப்பட்டனர். இயற்கையும் அழிந்தது. இதற்கு எதிராக அங்கு போராட்டங்கள் நடந்தன. அதில் நானும் பங்கேற்றிருந்தேன். அணு ஆயுத பரிசோதனைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த துண்டு பிரசுரங்களையும் வீதி வீதியாக சென்று விநியோகம் செய்துள்ளேன். கையெழுத்து இயக்கத்தையும் நடத்தியிருந்தேன்

1988-ல் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தை ஒய்.டேவிட் என்பவர் தலைமையில் இயற்கை ஆர்வலர்கள் மேற்கொண்டிருந்தனர். அப்போதே அதற்கு ஆதரவாகச் செயல்பட்டேன். 1998-ல் இந்தியாவுக்கு விடுமுறையில் வந்திருந்த போது அணுஉலைக்கு எதிரான அமைப்பை குமரி மாவட்டத்தில் பீட்டர்தாஸ், மறைந்த அசுரன் உள்ளிட்டோருடன் சேர்ந்து தொடங்கி நடத்தினேன். 

அப்போதெல்லாம் கூடங்குளம் பகுதிக்குச் சென்றாலே மக்கள் எங்களை விரட்டுவார்கள். இந்த அனுபவம் பலமுறை ஏற்பட்டதுண்டு. காரணம், பேச்சிப்பாறை அணை நீரால் வளம் பெறும், வேலைவாய்ப்பு கிடைக்கும் என அதிகாரிகள் நிறைய வாக்குறுதிகள் கொடுத்திருந்தனர். ஆனால் அப்போது எங்களது பேச்சு எடுபட வில்லை.

கடலோரப் பகுதியில் வசிப்பவர்கள் மட்டும் கொஞ்சம் ஒத்துழைப்பர். 2001-ல் நவம்பர் 1-ம் தேதி அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் வலுவாக தொடங்கப் பட்டது. இந்த அமைப்புதான் தற்போது கூடங்குளம் அணுஉலையை மூட வேண்டும் என்று போராடி வருகிறது.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

வெள்ளி, மார்ச் 23, 2012

எப்போது புரிந்து கொள்வீர்.?



எரிசக்தித் தேவை அதிகரித்துக் கொண்டே போவதால், மிகப்பெரிய அளவில் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருப்பது உண்மையே. இந்த நேரத்தில் கூடங்குளம் அணுஉலையைத் திறக்கக்கூடாது என்கிற போராட்டம் வலுப்பெற்றிருப்பது ஆபத்தானது. இந்தப் போராட்டத்தை அணுஉலைக்கு எதிரான போராட்டமாகத் தனித்துப் பார்க்கக்கூடாது. போராட்டத்துக்காக வெளிநாடுகளில் இருந்து நிதி குவிந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதைப் பற்றி பிரதமரே கூறியிருக்கும்போது, அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியுமா?

கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பானது என்று முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் உள்ளிட்ட பல விஞ்ஞானிகளும் நிபுணர்களும் சான்றளித்திருக்கிறார்கள். அப்படியிருந்தும் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியாமல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி திணறிக் கொண்டிருக்கிறது. கிளர்ச்சியில் ஈடுபட்டிருக்கும் சிறிய குழுவுக்காக மிகப் பெரிய பணி பாதிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்தத் திட்டத்தில் செய்யப்பட்டிருக்கும் முதலீட்டின் மதிப்பு ரூ.14 ஆயிரம் கோடி.! அணு உலை செயல்பட அனுமதித்தால் தயாரிப்பைத் தொடங்கிவிட முடியும். நாட்டின் தேவையை உணர்ந்து, போராட்டக் குழுவினரிடையே மனமாற்றம் ஏற்பட்டு கூடங்குளம் அணுஉலைகள் விரைவில் செயல்பட வேண்டும் என்பதே நமது விருப்பம். இதற்கு அவர்கள் ஒத்துழைக்க  வேண்டும்.


நல்லது, கெட்டது, மிக மோசமானது என எல்லாவற்றையும் கொண்டதுதான் வாழ்க்கை. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். நாட்டில் இருக்கும் 42 ஆயிரம் தன்னார்வ அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வருகிறது. இவற்றில் பெரும் பாலான அமைப்புகள் செயற்கரிய பணிகளைச் செய்து வருவதை யாரும் மறுக்க முடியாது.

தன்னலம் கருதாமல் ஏழை எளியவர்களுக்காகவும், பெண்களுக்காகவும், சுற்றுப்புறத்தைப் பாதுகாப்பதற்காகவும் பல அமைப்புகள் செயல்பட்டு வருவதை மறுக்க முடியாது. ஆனால், எல்லா அமைப்புகளும் அப்படிப்பட்டவையல்ல. தேசியப் பாதுகாப்பு தொடர்பான விசயங்களில் கிளர்ச்சி செய்து வரும் அமைப்புகளை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். அதுதான் தற்போது கூடங்குளம் அணுஉலை போராட்ட விசயத்திலும் நடைபெற்று வருகிறது.


எரிசக்தி மற்றும் உணவுப்பாதுகாப்பு ஆகியவை நமது வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவை. ஆனால், ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி, மின்சக்தி திட்டங்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாகத் தாமதப்படுத்தப்பட்டு வருகின்றன. மின்தேவை அதிகரிப்பது தவிர்க்கவே முடியாது என்று தெரிந்திருந்தும், நமது நாட்டின் மின்சாரம், நிலக்கரி, அணுசக்தித்துறை அமைச்சர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சரி போனது போகட்டும். 

தற்போது கூடங்குளம் அணுஉலைக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தி, அணுஉலைகளை திறந்து தமிழகத்தின் நிலவும் கடும் மின்தட்டுப்பாட்டை கொஞ்சம் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பம்.

கட்டுரையாளர். அருண் நேரு. கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

ஒன்றரை சதம் அடித்த அ.தி.மு.க.!


சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்த கருப்பசாமி உயிரிழந்ததையடுத்து, அத்தொகுதிக்கு மார்ச் 18-ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இதில், அ.தி.மு.க., தி.மு.க., ஏழு அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் உள்ளிட்ட 13 பேர் போட்டியிட்டனர். இதில், 78 விழுக்காடு வாக்குகள் பதிவானது. இதன் வாக்கு எண்ணிக்கை 21-ம் தேதி நடைபெற்று முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட்டன. இதில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முத்துச்செல்வி, 94,977 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

Muthuselvi mla
68,757 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க.வின் ஜவகர் சூரிய குமாரை தோற்கடித்த முத்துச்செல்வி மார்ச் 22 அன்று சட்டப்பேரவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். இதன் மூலம், சட்டப்பேரவையில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது. இந்த வெற்றி மூலம் அ.தி.மு.க.வை எதிர்த்துப் போட்டியிட்ட 12 பேரும் டெபாசிட் தொகையை இழந்தனர். 

இடைத்தேர்தல் வெற்றியின் மூலமாக பேரவையில் 150 இடங்களை அ.தி.மு.க. பெற்றுள்ளது. கட்சி வாரியாக பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை: அ.தி.மு.க. = 150, தே.மு.தி.க. = 29, தி.மு.க. = 23, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் = 10, இந்திய கம்யூனிஸ்ட் = 9, காங்கிரஸ் = 5, பா.ம.க. = 3, மனித நேய மக்கள் கட்சி = 2, புதிய தமிழகம் = 2, அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் = 1, நியமன உறுப்பினர் = 1.

குறிப்பு: 2 இடங்களில் வெற்றி பெற்ற சமத்துவ மக்கள் கட்சியும், ஒரு எம்.எல்.ஏ.வை வென்றுள்ள இந்திய குடியரசுக் கட்சியும் அ.தி.மு.க.சின்னத்திலேயே போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அம்மூவரும் அவையில் அ.தி.மு.க.உறுப்பினர்களாக கருதப் படுகின்றனர்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

வியாழன், மார்ச் 22, 2012

“வெங்காயத் தீர்மானம்.!”



போர் வெற்றியின் உற்சாகத்தில் இருந்த ராஜபக்சே இந்திய பத்திரிகையாளர் ஒருவருக்குப் பேட்டி அளித்தபோது சொன்னார்..., “நாங்கள் இந்தியா வுக்காகவும் போரிட்டு இருக்கிறோம்!”


ஆமாம், ராஜபக்சே பொய் சொல்லவில்லை. இந்தப்போரை இந்தியா பின்னின்று நடத்தியது. ‘எம்.ஐ. 17 ரக ஹெலிகாப்டர்களில் தொடங்கி, ‘விக்ரஹா’ ரோந்துக் கப்பல் வரை சகல படைக்கலன்களையும் இலங்கைக்கு வழங்கியது. ஆட்களை அனுப்பியது. சிங்களப் படைக்கு இங்கு பயிற்சி அளித்தது. கோடியக்கரையில் இருந்தும் உச்சிப்புளியில் இருந்தும் கடல் பகுதியைக் கண்காணித்து உளவு சொன்னது.

ராஜதந்திர ரீதியாக போருக்கு எந்தத் தடையும் வராமல் பார்த்துக்கொண்டது. யோசித்துப் பாருங்கள்... இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு எதிராக இந்தியா குரல் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு அபத்தம்? ஆனாலும், நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், “அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும். ஆனால், தீர்மானத்தின் இறுதி வரைவை ஆய்வு செய்யும்” என்று இரண்டு பக்கமுமாக பதில் சொல்லி இருக்கிறார். இது எப்படித்தெரியுமா இருகிறது... ‘பாம்பும் சாகக்கூடாது, கம்பும் உடையக்கூடாது.’


உங்களுக்கு நினைவிருக்கிறதா?

2009-ம் ஆண்டு மே 15-ம் தேதி அமெரிக்க பசிபிக் பிராந்தியக் கட்டளைத் தளபதி திமேத்தி ஜே கீட்டிங், அன்றைய இந்திய தேசியப் பாதுகாப்புச் செயலர் எம்.கே.நாரா யணனையும் வெளியுறவுத்துறைச் செயலர் சிவசங்கர் மேனனையும் சந்தித்தார். பின்னர், “இலங்கையில் போர்ப்பகுதியில் ‘பாதிக்கப் பட்ட மக்களுக்கு’ உதவ அமெரிக்கக் கப்பற்படைக் கப்பல்கள் தயார் நிலையில் இருக்கின்றன” என்று அறிவித்தார்.

விடுதலைப்புலிகள் தலைமை அமெரிக்காவிடம் இருந்தும், இங்கிலாந்திடம் இருந்தும் பொது மன்னிப்பு உறுதிமொழியை எதிர்பார்த்துச் சரணடையக் காத்திருந்த நாள் அது. ‘ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரண் அடைந்தால் பொது மன்னிப்பு’ என்ற பொய்யான வாக்குறுதி, சர்வதேசத்தால் வழங்கப் பட்டதற்கான மறைமுக சாட்சி அது. ஆமாம், அமெரிக்காவுக்கும் இதில் பங்கு உண்டு.


‘உலகிலேயே மிக ஆபத்தான பயங்கரவாத அமைப்பு’ என்று விடுதலைப் புலிகளுக்கு முதன் முதலில் கட்டம் கட்டியது அமெரிக்காதானே? கொத்துக் கொத்தாகக் குண்டுகள் விழுந்தபோதும், தமிழ் உயிர்கள் வீழ்ந்தபோதும் எல்லோரும்தானே வேடிக்கை பார்த்தார்கள்? எல்லாருடைய விருப்பத்தின் பேரில்தான் அது நடந்தது?

போர்க் குற்றங்களுக்காக சர்வதேசம் மூன்று வழிகளில் நடவடிக்கை எடுக்கலாம். முதலாவது, ஐ.நா.சபையின் பாதுகாப்பு அவையின் மூலம் தீர்மானம் நிறைவேற்று வதன் மூலம். இங்கு இலங்கையின் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இல்லை. இலங்கையைக் காப்பாற்ற சீனாவிடம் உள்ள ‘வீட்டோ’ அதிகாரம் போதுமானது.

இரண்டாவது, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்ற விசாரணை மூலம், தன்னுடைய வரலாற்றிலேயே இப்போதுதான் முதன்முதலாக ஒருவரை - காங்கோவின் தாமஸ் லுபாங்காவை - போர்க்குற்றவாளி என்று அறிவித் திருக்கிறது சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம். அதன் சக்தி அவ்வளவுதான். இங்கும்கூட இலங்கை தண்டிக்கப்பட வாய்ப்பு இல்லை.


ஏனெனில், போர் அற விதிகளைக் கடைப்பிடிக்கும் உறுதி மொழியை ஏற்று, இந்த நீதிமன்றத்தின் கீழ்வரும் நாடுகள் மீதுதான் சர்வதேச நீதிமன்றத்தால் நடவடிக்கை எடுக்க முடியும். இலங்கை இதில் கையெழுத்து இடவில்லை.

மூன்றாவது... மனித உரிமை ஆணைய விசாரணை மூலம். வெறும் கண்டனங் களையும் கோரிக்கைகளையும் வலியுறுத்தல்களையும் மட்டுமே முன்வைக்க அதிகாரம் பெற்ற அமைப்பு இது. இதன் முன்புதான் இப்போது இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்திருக்கிறது. சுருக்கமாக இந்தத் தீர்மானம் என்ன சொல்கிறது? போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க இலங்கை அரசு அமைத்த ‘விசாரணை ஆணையம்’ அளித்த அறிக்கையில் உள்ள விசயங்களை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்கிறது?

அதிர்ச்சி அடையாதீர்கள். இரண்டு பகுதிகளைக் கொண்ட அந்த அறிக்கையின் முதல்பகுதி போர்க்குற்றங்கள் தொடர்பானது. இலங்கை ராணுவம் எந்தப் போர்க் குற்றத்திலும் ஈடுபடவில்லை என்று சொல்கிறது. இரண்டாவது பகுதி, போருக்குப் பிந்தைய தமிழர்கள் நிலை தொடர்பானது. தமிழர்கள் பகுதி முழுவதும் ராணுவ மயமாக்கப்பட்டுள்ள சூழல் மாற்றப்பட வேண்டும்.

தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று சொல்கிறது. இதைத் தான் இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று அமெரிக்கத் தீர்மானம் முன் மொழிகிறது. போரில் நடந்த மனித உரிமை மீறல்களையோ, போர்க்குற்றங்களையோ, அவை தொடர்பான சர்வதேச விசாரணையைப் பற்றியோ அல்ல.!


சரி, அப்படியே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் என்ன நடக்கும்? இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் கோரும். அப்போதும் இலங்கை அரசு கேட்காவிட்டால்? ஒன்றும் நடக்காது. அதிகபட்சம் சில பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம். இலங்கையைப் பொறுத்த அளவில் அதுவும் நடக்காது. ஏனெனில், விதிப்பவர்களுக்குத்தான் அதிக நட்டம். இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச சொன்னதுபோல், ‘கோக் இல்லாவிட்டால், சிங்களர்கள் செத்துப்போய் விடுவார்களா என்ன?’

சரி, இப்படி ஒரு விசயத்துக்கு ஏன் இத்தனை களேபரம்?

சீனாவுடனான பனிப்போரில், ஆசியப் பிராந்தியத்தில் சீன ஆதிக்கத்தை மட்டுப் படுத்தி வைக்க அதன் நெருக்கமான கூட்டாளி இலங்கையைத் தட்டிவைக்க வேண்டிய அரசியல் அமெரிக்காவுக்கு, தமிழகத்தின் மின்வெட்டு பிரச் சனையைத் திசை திருப்ப வேண்டிய அரசியல் ஆளும் அ.தி.மு.க.வுக்கு.


அதற்குப் பதில் லாவணி பாட வேண்டிய நிர்பந்த அரசியல் தி.மு.க.வுக்கு. மற்ற தமிழர் அமைப்புகள் வேறு ஏதோதோ காரணங்களோடுதான் கூச்சலிடுகின்றன. இது அவர்களின் மன சாட்சிக்கே விட்டுவிடுகிறேன். ஒரு சில இயக்கங்களைத் தவிர.! அதேபோல் இந்த விசயத்தைப் பெரிய விவகாரமாக எடுத்துக்கொள்ள இலங்கை க்கும் அரசியல் உண்டு.

ராஜபக்சே மீதான அதிருப்தி மறைந்து தேசிய வெறி மீண்டும் தலைதூக்க இது உதவும். ஆக, எல்லோருடைய அரசியலுக்கும் செத்தும் உயிர் கொடுக்கிறான் இலங்கைத் தமிழன். ஆக மொத்தத்தில் அமெரிக்கா கொண்டுவந்து ஐக்கிய நாடுகள் அவையில் இந்தியா உள்ளிட்ட 24 நாடுகளின் ஆதரவுடன் இன்று (22-03-2012) நிறைவேற்றப்பட்டுள்ள இந்த அமெரிக்கா தீர்மானத்தால் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. காமராஜர் பாணியில் சொல்ல வேண்டுமானால், ‘வெங்காயத்தை உரிக்க உரிக்க கண்ணீர்தான் மிஞ்சுகிறது.!’

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

உலகம் அழியுமா?


தென் அமெரிக்காவின் ஆதி நாகரிங்களுள் ஒன்றான மாயா நாகரிக மக்களின் நாள் காட்டி 2012 டிசம்பர் 21 ஆம் தேதி உலகம் அழியும் என ஆருடம் கூறி பீதியை கிளப்பியிருக்கிறது. மாயர்களது கணிப்புகளையும், அந்த கணிப்பிற்கு எதிரான வாதங்களையும் சற்றே அலசலாம்.


நட்சத்திர மண்டலம்:

நட்சத்திர மண்டலத்தில் ஒரு நாள் என்பது பூமியைப் பொறுத்தவரை 25 ஆயிரத்து 625 வருடங்கள். மாயர்கள் காலக்கணிதம் இந்த ஆண்டுகளை 5கால கட்டங்களாப் பிரிக்கிறது. நாம் இப்போது இருப்பது ஐந்தாவது காலக்கட்டத்தின் இறுதிப்பகுதி. இந்த காலக் கட்டம் முடிந்த பிறகு அதாவது டிசம்பர் 21, 2012-க்குப் பிறகு புதிய யுகம் பிறக்கப் போகிறது என்கிறது அவர்களது காலக்கணிதம். சூரியன் நட்சத்திர மண்டலத்தின் மையப்பகுதியால் புதுப்பிக்கப்படுகிறது என்றும், இந்த நிகழ்வு 5,125 வருடங்களுக்கொரு முறை நடைபெறும் எனவும் அவர்கள் கணிதுள்ளனர்.

இதன்படி, 2012-ல் இத்தகையதொரு செயற்பாடு நடைபெற இருக்கிறது என்றும், இதனால் பூமியின் காந்தப்புலன்களிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுமெனவும் சொல்லப்படுகிறது. அப்போது உயர் சக்தியுடைய கரும் ஈர்ப்பு மையம், சூரியன், பூமி மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்குமாம். இந்த கரும் ஈர்ப்பு மையத்தினால் மூன்றும் நேர்கோட்டில் வரும்போது பூமியும், சூரியனும் வெகுவாக பாதிக்கப்படும் என்பது தான் மாயர்களின் கணிப்பு. அப்போது பூமியினுடைய காந்தப் புலன்கள் திசை மாறும் எனப்படுகின்றது.


இதனால் துருவங்கள் இடம் மாறுவதுடன் அதுவே பூமியின் அழிவுக்கு வழிகோலும் என்கிறார்கள். எரிமலை வெடிப்புக்கள், சுனாமிகள் மற்றும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு பூமி அழிந்துவிடும் என்கிறது மாய நாள்¢காட்டி கணிப்பு. துருவங்களின் இடமாற்றத்தி னால் பூமி ஒளியின்றி 40 வருடங்கள் இருண்டு பூமியை புகை மண்டலங்கள் மறைக்கும் எனப்படுகிறது. துருவங்களின் இடப்பெயர்ச்சி என்பது விஞ்ஞானிகளால் ஏற்றுக்கொள்ளப் பட்ட கருத்துதான் என்றாலும் அது 2010-ல் நிகழுமா என்பது குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

கலியுகம்:

மத்திய காலத்தில் வாழ்ந்த எதிர்காலம் பற்றி கணிப்பதில் வல்லுநரான நொஸ்ராடமஸ் முதல் நவீன விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் வரை இனி வரும் காலங்களில் பூமியில் எதிர்பாராத மாற்றங்கள் உருவாகலாமென எதிர்வு கூறுகின்றனர். நொஸ்ராடமஸ், ஹிட்லர், நெப்போலியன் போன்றோரின் ஆதிக்கம் வீழ்ச்சி பற்றி கூறிய கணிப்புகள் அப்படியே நிகழ்ந்தன. அவர் அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் பற்றியும் தன் கணிப்பில் கூறியிருந்தார். இவரும் 2012-ல் உலகில் பெரிய மாற்றங்கள் நிகழும் என்று கணித்திருக்கிறார்.


இ-சிங் எனப்படும் பண்டைய சீன ஜோதிட முறை எதிர்காலத்தைக் கூறும் வழிகாட்டி யாகக் காணப்படுகிறது. இந்த ஜோதிடமும் 2012 உடன் காலக்கெடு முடிவதாகவும் உலகம் அழிய நேரிடும் என்று கூறுகிறது. கலியுகம் ஆரம்பித்து 5,000 வருடங்களின் பின்னர் சுவர்ண யுகமொன்று தோன்றுமெனவும் அது பத்தாயிரம் வருடங்களுக்கு நிலைக்குமெனவும் கிருஷ்ண பகவான் கங்கா தேவிக்குக் கூறியதாக பிரம்மவை வர்த்த புராணத்தில் குறிப்பிடப்படுகிறது. மாயர்களைப் பொறுத்தவரையில் 5 ஆவது காலக்கட்டம் கி.மு.3114-ல் ஆரம்பித்து இந்துக்களைப் பொறுத்தவரையில் கலியுகம் கி.மு.3102-ல் ஆரம்பித்தது.

புதுயுகம்:

மாயர்களும் இந்துக்களும் தமக்குள் எந்தவித நேரடித் தொடர்புகளு மில்லா மலே 2012-ம் ஆண்டு ஒரு புதிய உலகம் உருவாகுமென்பதை கணித்துள்ளனர். கலியுகம் இப்படித்தான் இருக்குமென இந்து மதம் கூறுகிறது. கலியுகத்திலே கோபமும், போட்டிகளும் பொறாமையும் நிலவும்.


மனித நேயம் இருக்காது. தீய பழக்கங்களுக்கு மக்கள் அடிமையாவர், நீதி நியாயங்கள் தழைக்காது. தர்மம், உதாசீனப்படுத்தப் படும். இவையாவுமே கலியுகத்தின் வெளிப்பாடுகளாகக் குறிப்பிடப்படுகின்றன. இதன்படி உலகம் அழியப்போவதில்லை. தன்னைப் புதுப்பித்துக் கொள்ளப்போகிறது எனக்கூறலாம். கலியுகத்தின் எதிர்மறைச் செயல்கள் மறைந்து மனித நேயமிக்க நீதி, நியாயம் கூடிய புதுயுகம் ஆரம்பிக்கப் போகிறது எனச் சொல்லப்படுகிறது.

திருவிவிலிய நூலில் உலகம் (2012-ல் அழிந்துவிடும் என்று குறிப்பிடப்படவில்லை.) அழிந்துவிடும் என்று சொல்லப்பட்டுள்ளதால், கடவுளுக்கும், சாத்தானுக்கும் கடைசி யுத்தம் நடக்கும்போது இந்த அழிவு நடக்கும் என்கிறது பைபிள். யுத்த முடிவில் கடவுள் தன் இறுதித் தீர்ப்பை பெருவெள்ளம், ஆழிப்பேரலை, பூகம்பம், கடல் கொள்ளுதல் என எந்த இயற்கை நிகழ்வு மூலமாகவும் வெளிப்படுத்தலாம் என்கிறது விவிலியம். அந்த இறுதி தீர்ப்பு 2012-ல் வரக்கூடும் என்பது சிலரது கருத்து.

எரிமலை வெடிக்கும்:


இந்த பூமியின் ஆயுள் எப்போதோ முடிந்து விட்டதாம். இப்போது அது கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதாகவும், 2012-ல் அழிவின் உச்சகட்டம் தொடங்கும் என்றும் கூறுகிறார்கள். இந்த உலகமே பெரிய எரிமலை ஒன்றின் வாயில் இருப்பதா கவும், அது வெடித்துச் சிதறினால் உலகம் தூள்தூளாகிவிடும் என்றும் அமெரிக்க மண்ணியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆறு லட்சத்து 50 ஆயிரம் ஆண்டு களுக்கு ஒருமுறை இந்த எரிமலை வெடிக்குமாம். அப்படிப்பார்த்தால், இந்த 2012-ல் அந்த எரிமலை வெடிக்கப் போகும் வருடமாம்.!

புவியின் காந்தப் புலம் வடக்கு, தெற்கு என பூமியில் காந்தப்புலம் இருப்பது தெரிந்தி ருக்கும். இந்த காந்தப்புலம்தான் உலகை நிலைப்படுத்தி இயங்க வைக்கிறது. ஆனால், ஒவ்வொரு 75 ஆயிரம் வருடங்களுக்கும் ஒரு முறை பூமியின் காந்தப்புலம் தலைகீழாக மாறுமாம். அப்படி மாறும்போது அடுத்த 100 ஆண்டுகளுக்கு காந்தப் புலம் என்பதே இல்லாமல் போகுமாம். அப்படி இல்லாமல் போகும் தருணத்தில் புற ஊதாக்கதிர்கள் வெளிப்பட்டு மனிதன், விலங்கினம், தாவரங்கள் என அனைத்தையும் நொடியில் பொசுக்கிவிடுமாம். இவையெல்லாம் 2012 அழிவுக்கு ஆதாரமாக சொல்லப்படும் காரணங்கள்.

உலகம் அழியும்:

நாசா விஞ்ஞானிகளுக்குட்பட்ட பல விஞ்ஞானிகள் 2012-ல் உலகம் அழிந்து போவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவுமில்லையெனத் தெரிவிக்கின்றனர். அடுத்த 450 ஆண்டுகளுக்கு உலகம் அழியாது என்று இந்திய விஞ்ஞானி அய்யம் பெருமாள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


சூரியனில் இருந்துதான் கிரகங்கள் தோன்றி பிரபஞ்சத்தில் இயங்கி வருகின்றன. சூரியன் தோன்றி 450 கோடி ஆண்டுகள் ஆகின்றன. சூரியனில் இருந்து வினாடிக்கு 750 டன் ஹைட்ரஜன் ஆவி வெளியாகி 746 டன் ஹீலியமாக வெளிப்படுகிறது. மீதமுள்ள நான்கு டன் ஒளியாகவும், வெப்ப மாகவும் வெளிப்படுகிறது. விஞ்ஞானிகளின் அதிநுட்ப ஆராய்ச்சியில் இன்னும், 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம் அழிவதற்கு வாய்ப்பே இல்லை.

பூமிக்கு ஆபத்து: 

பலர் கூறுவது போல் 2012-ல் கண்டிபாக உலகம் அழியாது. 2020-ம் ஆண்டு ஒரு குறுங்கோள் பூமியை தாக்கும் என்று கூறுகிறார்கள். அவ்வாறு தாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. குறுங்கோள் இடம் பெயர்ந்து பூமியை தாக்கும் நிலை ஏற்பட்டால் அக்னி ஏவுகணை மூலமாக குறுங் கோளை பொடிப்பொடியாக தகர்க்கும் சக்தி உலக ஆய்வுக்கூடத்தில் உள்ளது. ஆகவே எந்த சூழ்நிலையிலும் பூமிக்கு ஆபத்து ஏற்படாது என்கிறார் அய்யம் பெருமாள்.


எந்த ஆபத்தும் இல்லை:

அமெரிக்காவின் வான ஆராய்ச்சி நிலையமான ‘நாசா’, 2012-ல் பூமிக்கு எதுவும் ஆபத்து இல்லை. நமது கிரகம் நாலு பில்லியன் ஆண்டுகளாக சரியாகவே இயங்கி வருகிறது. அனைத்து விஞ்ஞானிகளுகும் நன்றாகத் தெரியும். இப்படித்தான் 2012-ல் நிப்ரூ என்ற கிரகம் பூமியை நோக்கி வருகிறது என்றார்கள். 

அது இல்லை என்றதும் டிசம்பர் 21 என்று சொல்கிறார்கள். மாயன் நாள்காட்டியை ஆதாரமாக காட்டுகிறார்கள். எப்படி போன வருஷ நாள்காட்டி டிசம்பர் 31 உடன் முடிந்து புது நாள் காட்டி வருகிறதோ அது போலத்தான் மாயன் நாள்காட்டியும் 2012-ல் அதன் நீண்டகாலக் கணித சுழற்சி முடிந்து அடுத்த தொடர்ச்சி ஆரம்பமாகும். அதனால் பூமிக்கு எந்த ஆபத்துமில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

கட்டுரையாளர்: டி.எஸ்.பத்மநாபன், மாலை முரசு. கருத்துகள் வரவேற்கப் படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.


புதன், மார்ச் 21, 2012

“...விடாமல் நன்மை செய்.!”



நீ மற்றவரிடம் காட்டும் அன்பு உன் பலவீனமாகப் பார்க்கப்படலாம். ஆனாலும் அன்பாக இரு. நீ அடுத்தவருக்காகச் செய்யும் உதவி அறியப்படாமல் போய்விடலாம். ஆனாலும் உதவி செய். நீ வெற்றி பெற்றால் பொய்யான நண்பர்களையும் உண்மை யான எதிரிகளையும் அடைய நேரிடலாம். ஆனாலும் வெற்றி பெறுவதில் உறுதியாக இரு. நாணயமும், யதார்த்த நடை முறையும் உன்னை மென்மையானவனாக மாற்றி விடலாம். ஆனாலும் நாணயமாகவும் யதார்த்தமாகவும் நட.


நீ இன்று செய்யும் நன்மை நாளை மறக்கப்படலாம். ஆனாலும் விடாமல் நன்மை செய். நீ கடவுளிடம் நம்பிக்கையும், மாந்தரிடம் அன்பும் பூண்டிருப்பது காலத்துக்கு ஒவ்வாததாகக் கருதப்படலாம். ஆனாலும் அவற்றைக் கைவிட்டு விடாதே. வாழ்வின் பூரணமான அர்த்தம் நல்லொழுக்கமும் நன்மதிப்பும்தான். இவற்றை நீ பின்பற்றுவதால் மதிக்கப்படாமல் போகலாம். ஆனாலும் இறுதி நாள் வரை நல்லவனாகவே இரு - தேசத்தந்தை மகாத்மாக காந்தியடிகள்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

திங்கள், மார்ச் 19, 2012

“...மக்கள் பக்குவப்படவில்லை.!”



தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் ஒருமுறை வன்முறை வெடித்தது. 5-2-1922 அன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் கோரக்பூர் மாவட்டத்தில் சௌரி சௌரா என்ற ஊரில் தடையை மீறி ஊர்வலமாகச் சென்ற மக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அவர்களை விரட்டிச் சென்றார்கள்.

தப்பியோடியவர்கள் காவல்நிலையத்துக்குள் புகுந்து கதவை மூடிக் கொண்டார்கள். ஆனால், கோபம் அடங்காத மக்கள் அந்தக்காவல் நிலைய துக்கே தீ வைத்துவிட்டார்கள். இதன் விளைவு? 22 காவலர்கள் தீயில் சிக்கி மாண்டனர்.


இச்செய்தியறிந்த மகாத்மா காந்தி சொல்லொண்ணா துயரம் அடைந்தார். போராட்டம் தடம்மாறிச் செல்வதால் ஒத்துழையாமை இயகத்தை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். மக்கள் இழைத்த தவறுக்குப் பிராயச்சித்தமாக தான் ஐந்து நாள்கள் உண்ணாநோன்பில் ஈடுபட்டார்.

நேரு, சுபாஷ் சந்திரபோஸ் போன்ற இளைய தலைவர்கள் போராட்டத்தை நிறுத்த வேண்டாம் என மகாத்மா காந்தியிடம் மன்றாடினார்கள். ஆனால், “மக்கள் இன்னமும் அகிம்சை வழிப் போராட்டத்துக்குப் பக்குவப்படவில்லை. அவர்களைப் பக்குவப்படுத்த நாம் தவறிவிட்டோம். எனவே, போராட்டத்தைத் தொடர்வது நாட்டுக்குக் கேடு விளைவிக்கும்” என்றார் காந்தியடிகள். இப்போதும், நாம் அகிம்சை வழிப்போராட்டத்தை புரிந்து கொண்டோமா என்பது உங்கள் பதிலுக்கே விட்டுவிடுகிறேன்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

ஞாயிறு, மார்ச் 18, 2012

முதன் முதலாய்... பெண்கள்...!



முதல் காங்கிரஸ் பெண் தலைவர் அன்னிபெசன்ட் அம்மையார்.
ஞானபீட பரிசினை பெற்ற முதல் பெண் ஆஷா பூர்ணா தேவி.
யு.பி.எஸ்.சி. அமைப்பின் முதல் பெண் தலைவர் ரோஸ் மில்.
உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி பாத்திமா பீவி (1989).
தமிழ்நாட்டின் முதல் பெண் ஆளுநர் பாத்திமா பீவி.
முதல் ஐ.பி.எஸ். பெண் அதிகாரி கிரண் பேடி.


டெல்லியை ஆட்சி செய்த முதல் பெண் ரஷியா சுல்தானா.
இந்திய முதல் பெண் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல்.
உலக அழகியான முதல் இந்திய பெண் ரீடா பெரைரா.
முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி அண்ணா ராஜன் ஜார்ஜ்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் இந்திய பெண் மிதாலி ராஜ்.
முதல் பெண் முதல்வர் சுதேசா கிருபாளானி.
முதல் பெண் கவர்னர் சரோஜினி நாயுடு.
முதல் பெண் தூதர் விஜயலட்சுமி பண்டிட்.
ஐ.நா. சபையின் முதல் பெண் தலைவர் விஜயலட்சுமி பண்டிட்.
முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி.
சட்டமன்ற உறுப்பினரான முதல் பெண் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி.
முதல் பெண் மத்திய அமைச்சர் ராஜகுமாரி அம்ரித் கவுர்.
விண்வெளி சென்ற முதல் இந்திய பெண் கல்பனா சாவ்லா.

லதா Mankeswar
உலகத்தை கப்பலில் சுற்றி வந்த முதல் பெண் உஜ்ஜாலா ராய்.
முதல் பெண் கணிதமேதை சகுந்தலா தேவி.
முதல் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற இந்திய அழகி சுஷ்மிதா சென்.
முதல் பெண் வக்கீல் கர்னிலியா சொராப்ஜி.
ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கிய முதல் இந்திய பெண் கர்ணம் மல்லேஸ்வரி (2000-வது ஆண்டில் பளுதூக்குதல் பிரிவில் வெண்கலப் பதக்கம்).
ஆங்கில கால்வாயை கடந்த முதல் பெண் ஆர்த்தி சகா.
நோபல் பரிசு பெற்ற முதல் இந்திய பெண் அன்னை தெரசா.
எவரெஸ்ட் சிகரத்தில் இரண்டு முறை கால்பதித்த முதல் இந்திய பெண் சந்தோஷ் யாதவ்.
தாதாசாகேப் பால்கே விருது பெற்ற முதல் பெண் தேவிகா ராணி.
பாரத ரத்னா விருது பெற்ற ஒரே சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர்.
இந்தியாவின் முதல் உயர்நீதிமன்ற பெண் நீதிபதி அன்னா சாண்டி.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்த மந்திர் ராஜபுட், முதல் பெண் ரெயில் எஞ்சின் ஓட்டுனராக ஆஸ்திரேலியா வேல்ஸ் ரெயில் கார்ப்பரேஷனில் பணிபுரிந்து சாதனை படைத்தார்.
பத்து பல்கலைக்கழங்களில் இருந்து டாக்டர் பட்டம் பெற்ற பெண்மணி குஜராத்தை சேர்ந்த இலாபட். இவர் பெற்ற மற்ற உயரிய விருதுகள் மகசாசே, பத்மஸ்ரீ, பத்ம பூஷண் விருதுகள்.
இந்தியாவின் முதல் பெண் போலீஸ் டி.ஜ.பி. உத்தராஞ்சல் மாநிலத்தைச் சேர்ந்த காஞ்சன் சௌத்ரி.
முதல் பெண் பேருந்து ஓட்டுநர் வசந்தகுமாரி.
மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்ற முதல் பெண்மணி சுஷ்மிதா சென்.
நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி அன்னை தெரசா.
முதல் பெண் சபாநாயகர் ஷானாதேவி (கர்நாடகா).


முதல் பெண் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி லீலா சேத்.
முதல் பெண் பைலட் கேப்டன் துர்கா பானர்ஜி.
முதல் பெண் விமானப்படை பைலட் அனிதா கௌர்.
முதல் பெண் ரெயில் இன்ஜின் ஓட்டுநர் சுரேகா யாதவ்.
விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்திய பெண்மணி சுனிதா வில்லியம்ஸ்.
முதல் பெண் வழக்கறிஞர் ரெஜினா குகா (1922).
ஞானபீட பரிசு பெற்ற முதல் பெண்மணி மஹா ஸ்வேதாதேவி.
முதல் பெண் மருத்துவர் ஆனந்தபாய்ஜோஷி.
முதல் பெண் பொறியாளர் லலிதா (1937).
முதல் பெண் துணைவேந்தர் ஹன்சா மேத்தா.
பாரத ரத்னா விருது பெற்ற முதல் பெண்மணி இந்திரா காந்தி (1971).
1988-ல் நடைபெற்ற மாரத்தான் நீச்சல் போட்டியில் தனது 13-வது வயதில் 29 கிலோ மீட்டர் தூரத்தை 9 மணி 5 நிமிடத்தில் நீந்தி சாதனை படைத்தார் அர்ச்சனா பாரத்குமார் என்ற இந்திய நீச்சல் வீராங்கணை.
கேரம் விளையாட்டின் உலக மகளிர் சாம்பியன் பட்டம் பெற்றவர் அனுராஜ். (தமிழகம்).

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

சனி, மார்ச் 17, 2012

இனப்படுகொலையும் இந்திய அரசியலும் - 02



நேற்றைய முன்தின தொடர்ச்சி...

இதுபோன்ற நம்பிக்கைத் துரோகங்களின் வரிசையான அடுக்கின் முடிவில் தான் ``இந்தியாவை நம்பிச் செயற்பட்டால் முதலையின் முதுகில் பயணம் செய்த குரங்கின் கதியாகி விடும்’’ என்று பிரபாகரன் கூறியதாகத் தெரிகிறது. இது இந்தியா பற்றிய அவருடைய, போராளிகளினுடைய கசப்பான அனுபவங்களின் வெளிப்பாடாக நாம் புரிந்துகொள்ள வேண்டும். ராஜிவைக் கொல்ல வந்த சிங்களவரின் நம்பிக்கையைப் பெறுவதில் காட்டிய அக்கறையில் கால்வாசியை நண்பர்களாய் கருதப்பட்ட தமிழர்கள் மீது இந்தியா காட்டத் தயாராயில்லை.

இறுதியாய் தமிழர்களை முள்ளிவாய்க்காலில் அழிப்பதன் மூலம், சிங்களரின் நேசத்துக்குரியோராய் மாறிவிடலாம் என்று நினைத்தார்கள் போல. இப்போதும் தன்னுடைய புவியிட முக்கியத்துவத்துக்கும் பாதுகாப்புக்கும் ஈழத்தமிழரின் ஆதரவு முக்கியயெமன்பதும், ஈழத்தமிழர் வாழும் புவிப் பரப்பும் கடற்பரப்பும் இந்தியாவுக்குப் பாதுகாப்பு என்பதை உணர்ந்து இந்தியத் தலைமைகள் நடப்பதாக இல்லை.


ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவில்லையென்று காட்டி புலிகளை அழித்தாயிற்று. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இலங்கைஅரசு அதை நடைமுறைப்படுத்தாதபோது இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா 2012, சனவரி மாதம் இலங்கை போய் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் காணப்பட்டுள்ள 13-வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த ராஜபக்ஷே ஒத்துக்கொண்டுள்ளார் என்று செய்தியாளர்களிடம் கூறிவிட்டு அந்தப்பக்கம் நகரவில்லை. ``அப்படி யெல்லாம் நான்செய்துவிட முடியாது. நாடாளுமன்ற ஒப்புத லோடுதான் நடைமுறைப்படுத்த முடியும்’’  என்று ராஜபக்ஷே சொல்லிவிட்டார்.

இலங்கைக்குச் சென்ற எஸ்.எம்.கிருஷ்ணா, காவிரி நதிநீர் ஆணையத்தின் ஒப்புதலை ஏற்காது, தமிழகத்துக்குத் தண்ணீர் தர மாட்டேன் என்று மறுத்த ஒரு கன்னடர். அப்போதைய கன்னட முதலவர். அதனால் இராசபக்ஷே அமைத்த இலங்கை அரசுக்குச் சாதகமான `கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் மீள் இணக்க விசாரணைக் குழுவின்`அறிக்கையை எஸ்.எம்.கிருஷ்ணா வரவேற்கிறார்.


புலிகள் அழிக்கப்பட்ட பின், இலங்கை அளித்த 13-வது சட்டத் திருத்தம் மற்றும் அதற்கு அப்பாலும் செல்வது என்ற பிரதான வாக்குறுதியை செயல்படுத்தாதது ஏன் என எஸ்.எம்.கிருஷ்ணா கேள்வி எழுப்பவில்லை. அப்பால் செல்வது என்பதை விட பலகாத தொலைவு பின்னர் செல்வது என்பதையே, இராசபக்ஷே மறுப்பு அறிக்கையால் காட்டி விட்டார்.

யதீந்திரா குறிப்பிடுவது போல் இந்திய சரணாகதி அரசியல் அல்ல தீர்வு.இந்திய எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்காமல் வேறு வழியில்லை. ஆனால் இந்தியாவை எதிர்கொள்ள ஈழப்பிரதேசத்துக்குள்ளேயே ஒரு ஐக்கிய முன்னனி அமைத்துக் கொள்வது இன்றியமையாதது என்பதை புலிகள் உணரவில்லை.

இலங்கை இனவெறி அரசை எதிர்கொள்ள முதலில் இந்த முக்கிய முன்னனி தந்திரத்தை புலிகள் கையிலெடுத்திருக்க வேண்டும். புலிகள் இதில் அக்கறை செலுத்தவில்லை. தாமே ஏகப் பிரதிநிதி என்ற கோட்பாட்டை முன்வைத்துச் செயற்பட்டதால் எதிரிக்கு பிரித்தாளும் வாய்ப்பைக் கொடுத்தார்கள். 


``விடுதலைப்புலிகள் 1991-ல் மேற்கொண்டதொரு வரலாற்றுத் தவறு (ராஜிவ் கொலை) இந்தியாவிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான நிரந்தரமான பிரிகோடாக அமைந்தது’’ என யதீந்திரா குறிப்பிடுகிறார். அது ஒரு வரலாற்றுத் தவறு . அந்தத் தவறு விடுதலைப் போருக்குப் பின்புலமாக இருந்த தமிழக மக்களைத் தனிமைப்படுத்திவிட்டது.

தேசப்பற்று என்று ஏற்றப்பட்டிருக்கிற மக்களின் உளவியலை இந்தியா தனக்கு நிரந்தரப் பிரிகோடாய் மாற்றிவிட்டது. ஆனால் ராஜிவ் கொலை தொடர்பான விசயத்தை வேறொரு கோணத்தில் பார்க்கிறார் மு.புஷ்பராஜன்

``உண்மையில் ராஜிவ்காந்தி கொலைக்கு இந்தியா தனது வல்லாதிக்கக் கனவுகளின் பின்னணியிலேயே அழுத்தம் கொடுத்தது. ராஜிவ் காந்தி கொலை,விடுதலைப் புலிகளை அழிப்பதற்குத் தானாக மடியில் விழுந்த கனி. அக்கொலை நடைபெற்றிருக்காவிடினும் இந்தியா அவர்களை அழித்தே இருக்கும்; வேறு காரணங்களைத்தேடியிருக்கும் (மு.புஷ்பராசன் வாழ்புலம் இழந்த துயர்) இந்த பின்புலத்தை ஏற்றுக்கொள்வதில் யதீந்திரா இடறுகிறார். மாறாக வேறொரு எதிர் இடத்துக்கு. 


``தமிழீழ விடுதலைப் புலிகளின்அரசியல் போக்கில் இடம்பெற்றுவந்த அனைத்துத் தவறுகளும் இந்தியாவின் தவிர்க்க முடியாத இடத்தை விளங்கிக் கொள்ளாமையின் விளைவுகள்தாம்’’ என்று நியாயப்படுத்தும் புள்ளியில் போய் நிற்கிறார்.

இந்தியாவின் தவிர்க்க முடியாத இடத்தை விடுதலைப் புலிகள் புரிந்து வைத்திருந்தார்கள். போராளிகளுக்கு பயிற்சியும் ஆயுதங்களும் கொடுத்தது, பின்னர் திம்பு பேச்சுவார்த்தைக்கு அழைத்துப் போனது, அரட்டி,மிரட்டி விடுதலைப் புலிகளையும் ஒப்புக் கொள்ள வைத்து, 1987-ல் ஈழத்தின் மீது இந்தியப் படையெடுப்பு வரை இந்தியா எந்த இடத்தை தகவமைப்பதற்கான முயற்சியிலிருக்கிறது போன்ற தெளிவுகளை அரசியல் ஆய்வாளர்களும் எடுத்துத் தந்திருந்தார்கள்.

யுத்தநிறுத்த உடன்பாடானது அடிப்படையில் விடுதலைப் புலிகளுக்கே நன்மையளித்தது என நார்வே அறிக்கை விவரிப்பது உண்மைக்குப் புறம்பானது. ஆனால் `அறிக்கை விபரித்திருக்கும் மேற்படி விசயங்கள் அனைத்தும் பொதுவாக ஈழத்தில் புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் அனைவரும் அறிந்த உண்மைகள் நார்வே  இயலாமை, கையாலாகத்தனம் என்பவைகளை மறைத்துச் சொல்லப்பட்டதாக இருக்கிறது என்பது தான் உண்மை. ``


இன்னும் ஆழமாகப் பார்ப்போமாயின் யுத்த நிறுத்த காலத்தில தனது இராணுவக் கட்டமைப்புகளின் வலிமையைப் பெருக்கிக் கொண்டு மீண்டும் பொருத்தமான தொரு சந்தர்ப்பத்தில் யுத்த நிறுத்தத்திலிருந்து வெளியேறுவது பிரபாகரனின் திட்டமாக இருந்தது’’ என்கிற  நார்வே அறிக்கையின் பகுதி   யதார்த்த நிலைமை களிலிருந்து, நடைமுறைகளிலிருந்து பெறப்பட்டதாக இல்லை. புரிந்துணர்வு காலத்தில் செயல்கள் எதிர்மாறாகவே இருந்தன.

இலங்கை தனது இராணுவக் கட்டமைப்பை வலிமைப்படுத்திக் கொண்டே இருக்க விடுதலைப் புலிகள் இயல்பான வாழ் நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் மிகக் குறைந்த போராளிகளே இருந்தனர். அங்கங்கே நிர்வாகக் கட்டமைப்பைப் பேணிக்கொண்டிருந்த போராளிகள் தவிர களத்தில் நிற்பவர்கள் குறைவானவர்களே. விடுதலைப்புலிகள் மக்களுடனான தொடர்பாடல்களில் ஈடுபட்டிருந்தாலும் அது போதுமானவையாக இல்லை.

வெகுமக்கள் திரள் நடவடிக்கைகளாக உருக்கொள்ளவில்லை. தமது கட்டுப்பாட்டில் உள்ள மக்களுக்கும் தமது எல்லைகளுக்கு அப்பாலுமுள்ள மக்களுக்குமான ஜனநாயக வெளியாக மாற்றித் தரப்படவில்லை.

2011 செப்டம்பர் 11, உலக வரலாற்று அரங்கில் ஒரு மோசமான நாள்.அது எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. அமெரிக்க புஷ் தனது அரசியல் இருப்புக்காக நடத்திய நிகழ்வுதான் செப்டம்பர் 11 என்றாலும் அது வெற்றிகரமான அரசியல் நாடகமாகவே நடந்தது. பயங்கரவாதம் என்ற அளவுகோலைக் கையிலெடுத்து ஊடகங்களையும் இராணுவ வல்லமையையும் தன் கையில் கொண்டுள்ள அமெரிக்கா வழியில் உலக நாடுகள் நடந்தன.


தத்தமது நாட்டில் பயங்கரவாத அரசை இயக்கிக் கொண்டிருந்த நாடுகளுக்கு இது பெருவாய்ப்பாக மாறியது. விடுதலைப் போராட்டங்கள், ஒடுக்குமுறைக்கு எதிரான எழுச்சிகள் போன்றவைகளை பயங்கரவாதமாக சித்தரித்தனர். கூட்டமாக கூட்டமாய்க் கொல்லும் கொலைக்களத்தை உருவாக்கி நடத்த ஏதுவாயிற்று..

பயங்கரவாத ஒழிப்பு என்ற முழக்கத்தினடியாக உலகை வேறொரு திசையில் வல்லரசுகள் நகர்த்திக் கொண்டிருந்த , மாறிய சூழலை விடுதலைப் புலிகள் கணக்கில் கொள்ளவில்லை. கணக்கில் கொண்டிருப்பார்களோயனால் இராணுவ வல்லமையைக் பெருக்குவதற்காக கடைசிவரை காத்திருந்து மோசம் நடந்திருக்க வாய்ப்பில்லை.

நார்வேயின் சமாதான முன்னெடுப்பு பற்றி (1997-2009 வரை) அதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகள் பற்றிய மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் ஆய்வு செய்தால் சமாதான முன்னெடுப்பு என்பது முதலில் நார்வேயின் முயற்சி அல்ல. அதை முன்தள்ளுவதில் அமெரிக்கா போன்ற மேற்குலகம், இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான் போன்ற ஆசிய உலகம் அவரவர் விருப்ப அடிப்படையில் பங்காற்றியுள்ளனர். ஈழத்தில் சர்வதேச சுற்றிவளைப்பு என இதைக்குறிப்பிடலாம்.


நார்வே என்பது சர்வதேச உலகத்தால் பின்னிருந்து உள்நுழைக்கப்பட்ட கருவி. இதை தெளிவாகத் தெரிந்து வைத்திருந்த விடுதலைப் புலிகள் நார்வேயினால் முன்னெடுக்கப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை நம்பவில்லை. அமைதி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் நார்வே நடுநிலையாகக்கூட இல்லை.

அமைதி ஒப்பந்தத்தின் ஷரத்துக்களில் முக்கியமான ஒன்று தமிழர் பகுதிகளிலிருந்து ஆக்கிரமிப்பு இலங்கையின் ராணுவ அகற்றல்களும், தமிழர் மீள்குடியேற்றங்களையும் பற்றியது. இவைபற்றி பலமுறை ஆதாரங்களுடன் அளித்தும் நார்வேயின் நடவடிக்கை எதுவும் இல்லை. நார்வே அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதற்கு எதிர்மாறாகவே நிகழ்வுகள் இருந்தன.

2002 சனவரியில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தது. 2002 அக்டோர் மூன்றாம் வாரத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்த மானுடத்தின் தமிழ்க்கூடல் மாநாட்டுக்கு நாங்கள் சென்றிருந்தோம். முடிந்து திரும்புகையில் கிளிநொச்சியில் பிரபாகரனுடனான சந்திப்புக்கு ஏற்பாடகியிருந்தது. அச்சந்திப்பின்போது அவரிடம் கேட்டோம். 

``அமைதிப் பேச்சு வார்த்தைக்கான நார்வேயின் முயற்சிகளை நம்புகிறீர்களா’’? என்ற எங்களின் கேள்விக்குஉலக அரசியலை அவதானித்துக்கொண்டு வருகிறோம் என்பதிலிருந்து பெற்ற நிதானமாக அவருடைய பதில் இருந்தது. உலக ஆதிக்கப் போட்டிகள் அனைத்தையும் உள்நுழைந்து பார்க்கிற தீர்க்கத்துடன் பேசிவிட்டு கடைசியாய் சொன்னார்

``நாங்கள் நார்வேயை நம்பவில்லை.  அமெரிக்காவின் குரூர முகம் இஸ்ரேல் , அமெரிக்காவின் மென்மையான முகம் நார்வே .இதை நாங்கள் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளோம்.’’

அமெரிக்கா போன்ற மேற்கு நாடுகள் மட்டுமேயல்ல, நார்வேயின் சமாதான முன்னெடுப்பு முயற்சிகளின் பின்னணியில் இந்தியாவே பிரதான சக்தியாக இருந்தது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ள செய்தி யதீந்திராவுக்கு மட்டுமல்ல நமக்கும் புதிய செய்திதான். ஆனால் நார்வே அறிக்கையை நடுநிலையான எந்தச் சார்புமற்ற ஒன்று என யதீந்திரா கருதினார், நாம் செய்ய ஒன்றுமில்லை. ஒவ்வொரு அறிக்கையின் நோக்கமும், சாராம்சத்தில் வெளிப்படும் உள்ளீடுகளின் அடிப்படையிலேயே அமைகிறது

ஐ.நா.விசாரணைக் குழுவின் அறிக்கை போன்றது அல்ல நார்வே அறிக்கை. ஐ.நா அறிக்கை இரு தரப்பிலும் நிகழ்த்தப்பட்ட குற்றங்களைப் பட்டியலிட்டிருந்தாலும் இன்னும் அழிந்தொழிந்து போகாமல் உயிருடன் இயங்கிக் கொண்டிருக்கிற இலங்கை அரசுக்கு பொறுப்புக் கூறும் கடமை உண்டென அந்த அறிக்கை சுட்டுகிறது.

நார்வே அறிக்கையால் வழி நடத்தப்படுகிற யதீந்திரா போன்றவர்கள்  இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தொழிக்க வேண்டுமென்ற எண்ணம் இந்தியாவுக்கு இருந்திருக்கவில்லை என்பதை நார்வே அறிக்கையை அவதானி க்கும்போது நம்மால் புரிந்துகொள்ள முடியும் என்ற முடிவுக்கு வருகிறார்கள். இந்தியா புலிகளை அழித்ததா என்பதல்ல உண்மை. அது ஈழத்தின் மக்களை அழித்தது என்பது உண்மை.

``போரின் இறுதி நாட்களில் முள்ளி வாய்க்கால் பகுதியில் குறுகிய நிலப்பரப்பில் பல்லாயிரக்கணக்கான மக்கள் செறிந்திருந்த போதும் ,மக்களின் மத்தியில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் பதுங்கியிருந்த இடங்களை ரோ  அமைப்பு சரியாக இனங்காட்டியருந்தபோதும், முள்ளிவாய்க்காலுக்குள் போராற்ற பகுதியாக அறிவிக்கப்பட்ட மக்கள் செறிந்திருந்த பகுதிக்குள் இறுதி வலிந்த தாக்குதலை மேற்கொள்ளும் திட்டத்தை முன்னெடுக்குமாறு எம்.கே.நாராயணனும் சிவசங்கர மேணனும் அறிவுறுத்தினர். பொன்சேகா தரும் தகவலின்படி பொதுமக்கள் இழப்புக்களை குறைக்கும் வகையில் ஆகஸ்ட் மாத அளவிலேயே இறுதி வலிந்த தாக்குதலை நடத்துவதெனத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் விடுதலைப் புலிகளின் தலைமையினை இல்லாமற் செய்ய வேண்டும் என்று உறுதிப்பாட்டின் பேரில் செயற்பட்ட சோனியா காந்தியின் அதிகாரம் பெற்ற முகவர்களான எம்.கே.நாராயணனும் சிவசங்கர மேனனும் காலம் கடத்துமிடத்து அமெரிக்கா விடுதலைப் புலிகளின் தலைமையினையும் பொது மக்களையும் வெளியேற்றுவதற்கு வழி செய்து விடும் என அஞ்சினர். இதன் விளைவுதான் முள்ளி வாய்க்காலில் நடந்தேறிய தமிழினப் படுகொலை’’ 
(Ground report: V.S.Subramaniam 3.1.2010)

ரோ-உளவு அமைப்பில் பணியாற்றிய முக்கிய அதிகாரியான இந்த சுப்பிரமணியம் தொடர்ந்து சொல்வார்`` சோனியாவின் அதிகாரம் பெற்ற முகவர்களின் மறை முகமான கையாளாகவே கோத்தபய அப்போது செயற்பட்டிருக்கிறார். இந்த கொலைகளுக்கான தனிப் பொறுப்பினை கோத்தபய மீது மட்டும் சுமத்தமுடியாது. 

அவ்வாற சுமத்த முயன்ற டில்லியின் குற்றச்சாட்டினால் கோபமடைந்த கோத்தபய கொழும்பு போர்க்குற்றங்களில் ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டினை எதிர் கொள்ள நேர்ந்தால், அதற்கு புதுடில்லியும் உடந்தையாக இருந்தது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாத்த சோனியாவின் அதிகாரம் பெற்ற ஆட்களுடனான உரையாடல் பதிவினைக் கையிலெடுக்கப் போவதாக அச்சுறுத்தினார். இது டில்லியின் வாயை அடைத்தது (3.1. 2010 - Ground report: V.S.Subramaniam)

இந்தியா இந்தியாவே எல்லாம் என்ற கூவல் ஆபத்தானது.  இது அமெரிக்கா அமெரிக்காவே எல்லாம் என்பதற்குச் சமமானது. இந்தியாவை நம்பியும் அமெரிக்காவை நம்பியுமே இறுதிக்காலப் பேரழிவுகள் நிகழ்ந்துள்ளன என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
ஈழத்தமிழர் தமது தேசிய விடுதலைப் போரை தொடர்நது முன்னெடுப்பது தவிர வேறு வழியில்லை. இந்தியாவையும் இந்தியா போன்ற வல்லரசுகளையும் உலக அரசியல் போக்குகளையும் கூர்மையாய் அவதானித்து, எப்படிக் கையாளுவது என்ற ராசதந்திரத்துடன் நகர வேண்டும். ஈழத்தமிழர், புலம்பெயர் தமிழர், தாயகத் தமிழர் ஆகிய மூன்று தளங்களில் ஒருங்கிணந்த செயல்பாடுகள்தாம் விடிவுக்கு வழி.

ஒவ்வொரு தளத்திற்கும் தனித் தனிக் கடமைகள் உண்டு.  ஒன்றே போல்வனஅல்ல என்பதை மட்டும் குறித்துக் கொள்ளுதல் நல்லது. அதேபோல் மற்றொன்றையும் குறித்துக் கொள்வோம். மூன்று தமிழரின் கடமையும் இந்திய சரணாகதி அரசியல் அல்ல.  

கட்டுரை முடிவுற்றுது.
கட்டுரையாளர் பா.செயப்பிரகாசம்.
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

வெள்ளி, மார்ச் 16, 2012

‘செக்ஸ்’ (Sex) என்றால் என்ன?



காதல் என்பதற்கு எப்படி ஒரு தனித்துவமான ஒரு கருத்து கூற முடியவில் லையோ, அப்படிதான் செக்ஸ் என்பதற்கும் ஒரு வரையறை என்பது இதுவரை வகுக்கப்படவில்லை. இருப்பினும், செக்ஸாலிஜிஸ்ட்களால் இதுதான் செக்ஸ் என்று வரையறுத்து இருக்கிறார்கள். அதுகுறித்து., “Sex is the most intimate from of inter personal, non-verbal commounication.” அதாவது, ‘உன் மீது அன்பாக இருக்கிறேன்’ என்று சொல்லாமல் உணர்த்துவதுதான்... செக்ஸ்.!

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

வியாழன், மார்ச் 15, 2012

இனப்படுகொலையும் இந்திய அரசியலும் - 01



உலக அரங்கில் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள் முற்றுப் புள்ளியாகி விட்டதா என்ற பொதுக் கேள்வியிலிருந்து தொடங்குவோம். உலக அரசியல் பொருளாதார வல்லரசுகள் அவ்வப்போது புதிய அரசியல் ஒழுங்கைத் தோற்று வித்து வருகின்றன. உலகின் இயங்கு திசை வல்லரசுக் குழுக்களின் இயங்கு திசையாகவே உள்ளது. அதை மக்களின் இயங்கு திசையாக மாற்ற வேண்டிய  கடப்பாடு நமக்குள்ளது.

தெற்கு சூடான் விடுதலை பெற்ற (2011) அண்மைக் காலம் வரை, உலக அரங்கில் தேசிய இன விடுதலைப் போராட்டம் முற்றுப் பெறாத நிகழ்வு என்பதையே காட்டுகிறது. 1990-களில் ஸ்லேவேனியா, கொசாவோ, மாசிடோனியா, உக்ரைன், ஜார்ஜியா, டிராண்டஸடிரியா, போஸ்னியா, எரித்ரியா, மால்டோவா, கிழக்கு திமோர் போன்ற நாடுகள், 2000-ங்களில் மாண்டிநிக்ரோ, தெற்கு ரேசடியா, தெற்கு சூடான் என்ற நாடுகள் தேசிய இன விடுதலைக்குச் சான்றாய் நின்றன.இன்றும் நடைபெறுகிற காஷ்மீர், நாகலாந்து, மணிப்பூர், மேற்கு இரியான், திபேத்து, ஈழம் போன்ற இவற்றுக்குள் கூர்மை பெற்று முன்னணியில் இருக்கும் போராட்டம் ஈழப் போராட்டம்.

தமிழீழம் சரியா, பிழையா என்ற விவாதத்தை வரலாறு கடந்து விட்டது. தமிழினத்தைப் படுகொலை செய்த சிங்கள அரசுடன் இனியொருபோதும் இணக்கப் போக்கு சாத்தியமில்லை. இனப் படுகொலைகளை நடத்திய இடத்திலிருந்து இன விடுதலையின் அடுத்த நகர்வைத் தொடங்க வேண்டும். இதுதொடர்பில்,``வரலாற்று ரீதியாகப் பார்க்கும்போது,இலங்கைத் தமிழர்களைப் போல் இனப்படுகொலைக்கு ஆளான எந்த மக்கள் குழுவும், தங்களுக்கென்று சுதந்திரமான ஒரு நாட்டை உருவாக்கிக் கொண்ட பிறகுதான், அதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர்.

கடந்த சில மாதங்களில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் வன்னியில் படுகொலை செய்யப்பட்டபோது எந்த ஒரு நாடும் அந்த வெறித்தனமான படுகொலை நிகழ்வைத் தடுக்க முயலவில்லை. 1948-இனஅழிப்பு எதிர்ப்பு ஒப்பந்தத்தின்படி, எல்லா நாடுகளும் தாங்கள் செய்ய வேண்டிய கடமையைச் செய்யத் தவறிவிட்டன. எனவே இலங்கை அரசிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, தனிநாடு ஒன்றை உருவாக்கிக் கொள்வதே இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்புடையது., 


பன்னாட்டுச் சட்ட திட்டங்களின்படி, இன அழிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் தனி நாடு ஒன்றை உருவாக்கிக் கொள்வதே பயனுள்ள தீர்வும், உரிய இழப்பீடும் ஆகும்’’ என்று பிராசிஸ் பாய்ல்ஸ் கூறியதை மனங்கொள்ளவேண்டும். (பேராசிரியர் பிரான்சிஸ் பாய்ல், உலக மனித உரிமைகள் அமைப்பின் (Amnesty International)) முன்னாள் உயர்மட்டக்குழு இயக்குநர், இல்லினாய்ஸ் பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர்)

நாம் ஏற்கிறோமோ இல்லையோ ஒரு உண்மையைப் பதிவு செய்தாக வேண்டும். எந்த ஒரு போராட்டமும் அறவழிப் பாதையில் இருக்கிறபோது உலகில் யாரும் கவனம் கொள்வதில்லை ஆயுதப் போராட்ட வடிவெடுக் கையில் மாத்திரமே சர்வதேச கவனமும் தலையீடும் பெறுகிறது.

பிரான்சிஸ் பாய்ல்
ஈழத்தமிழர் விடுதலைப் போர், 30 ஆண்டுகள் அறவழியில் அதுவும் இந்தியாவின் காந்தி காட்டிய சத்தியாக்கிரக வழியிலேயே நடந்தது. மிகப் பெரிய சனநாயக பூமி என்று சொல்லப்பட்ட இந்தியாவும் அது காலம் வரை கண்டு கொள்ளவில்லை. காந்தீய வழிப் போராட்டத்தை அங்கீகரித்து, அப்போதே பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்தி தீர்வு காணும் முன்னெடுப்பை இந்தியா செய்திருக்க முடியும்.

1972-லும் அதன் பிறகும் ஆயுதம் ஏந்தி சிறு சிறு அளவில் போராட்டத்தைத் தொடங்கிய பின்னர்தான், 1983ல் இலங்கையில் நடந்த இனப்படுகொலையின் பின்தான் இந்தியா தலையிடத் தொடங்கியது. இந்தத் தலையீடும் சுயநலன் அடிப்படையிலேயே அமைந்தது.

``இலங்கைத் தீவு இரு அரசுகளாக இருப்பதைவிட, ஓர் அரசாக இருக்கவிட்டு, அதனைக் கையாளுவதே இந்தியாவின் எதிர்கால நலனுக்குச் சாதகமானது. எனவே இந்தியா தமிழீழக் கோரிக்கையை தமிழ் மக்களின் பிரச்சனைகளை தனது நலனுக்கு உகந்த அளவில் ஓரளவு தீர்த்து வைப்பதும், தனது தலைமையை இலங்கை அரசை ஏற்க வைப்பதுமே இந்தியாவின் பிரதான நோக்கமாய் இருக்கிறது.

தான் விடுதலைபெற்ற கையோடு, மக்களுக்கான விடுதலைஅரசியலிலிருந்து இந்தியா விடுதலை பெற்றுக்கொண்டது. ஒடுக்கப்பட்ட மக்கள், நாடுகள், எங்கெங்கு எழுச்சி பெறுகிறார்களோ அதற்குத் துணைசெய்வது என்ற நோக்கம் நேரு காலத்தில் குரல் அளவில் இருந்த ஆதரவும் பிற்காலத்தில் ஏறக்குறைய இல்லாமல் போய்விட்டது.

ஆனால் விடுதலை பெற்றதும்,பிடல் காஸ்ட்ரோ வின் தொடக்க கால கியூபா, போர்ச்சுகீசியக் காலனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த ஆப்பிரிக்க நாடுகளான கினிபிஸ்ஸா, அங்கோலா ஆகிய நாடுகளின் விடுதலைக்கு பொருளாதார ஆயுத,மருத்துவ உதவிகள் செய்து துணை நின்றது.

அன்றைய கியூபாவுக்கும் மே 28, 2009-ல் ஐ.நா மனித உரிமை அவையில் இலங்கைக்கு ஆதவராய் தீர்மானத்தை முன்மொழிந்த கியூபாவுக்கும் இடையிலான வெளி 50 ஆண்டுகள் மட்டுமல்ல, இனக் கொலைக்குத் துணை போன தலைகீழ் மாற்றமும்தான்.

ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்தியா தொடர்ந்து கேடு தருகிற நிலைப் பாடுகளையே எடுத்துவந்துள்ளது.1983 இலங்கை இனப் படுகொலையைக் கண்டித்து, ஐ.நா.துணைக்குழுக் கூட்டத்தில் இதயமுள்ள நாடுகளின் தலை வர்கள் பலர் பேசினர். ஐ.நா.வின் இந்தியப் பிரதிநிதி சையத் மசூத்,

’’இலங்கையில் உள்ள நிலைமைகள் குறித்து ஐ.நா.அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்கக்கூடாது’’ என்று பேசினார். அப்போதைய உலக முக்கியத்துவமுள்ள பிரச்சினைகள் பற்றி ஐ.நா.அவையில் பேசிய பிரதமர் இந்திராகாந்தி 1983 படுகொலை பற்றிப் பேசவில்லை. பேசும் அளவுக்கு முக்கியத்துவமுடையவை அல்ல அப்படுகொலைகள் என்று கருதினார் போல.

தனக்கு வந்தால் தெரியும் தலைவலியும் காய்ச்சலும் என்பது போல இலங்கை அமெரிக்கச் சார்பு நிலை எடுத்ததும், அதிலிருந்து இலங்கையை நீக்கம் செய்வதற்காக ஜெ.ஆர்.ஜெயவர்த்தனா ஆட்சியில் உள்நாட்டு  நெருக்கடி களைத் தோற்றுவிப்பதற்காக போராளிக் குழுக்களுக்கு பயிற்சியும் ஆயுதங் களும் அளித்தது இந்தியா.

இலங்கை அரசு இனவாதத்தை சாக்காகக் கொண்டு 1970-களில் மேலைத் தேசங்களுடன் கை கோர்த்து இந்திய எதிர்ப்பில் தீவிரமாக நின்றது. இலங்கையின் எதிர்க்கட்சிகளும் இனவாதத்தை மூலதனமாக்கியே அரசியலில் ஜீவிக்க முடிந்தன. இப்பிராந்தியத்தில் வல்லரசு ஆக உருவாகிக் கொண்டிருந்த இந்தியா தனது நோக்குநிலையிலிருந்து தீர்வுக்கு வர வேண்டியிருந்தது.

முரண்பாடுகள் இராணுவப் பரிமாணத்தினாலேயே தீர்க்கப்படக்கூடியவனவாக  முறுகல்நிலை கொண்டன.  பலாத்காரத்தைத் தவிர வேறு வழியில் தீர்க்க முடியாதெனக் கருதி, முன்னர் போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சியும்  ஆயுதங்களும் அளித்த இந்தியா 1987-ல் இலங்கை மீது இராணுவ நடவடிக்கை மேற்கொண்டது. அமெரிக்கா முழு இலங்கையையும் இழந்துவிடத் தயாரில்லை.

இதுவரை காலமும் இருந்ததில் இருந்து சிறிய விட்டுக் கொடுப்பைச் செய்து பிரச்சினையை சமரசப்படுத்த அமெரிக்க தயாரானபோது, ஜெ.ஆர்.ஜெய வர்த்தனாவும் அதனைப் புரிந்துகொண்டார். சமரசத் தீர்வை சாகசமான வார்த்தைகளில் அமெரிக்கா வரவேற்றது என்பது இங்கு கூர்மையாகக் கவனிக்கப்படவேண்டியது.

’’இந்தியாவுக்கு வயது வந்துவிட்டது. இலங்கைப் பிரச்சினையில் இந்திய அரசு எடுத்த நிலைப்பாட்டால் அது தன்னை ஒரு பிராந்திய வல்லரசாக மாற்றிக் கொண்டுவிட்டது. இந்தியாவின் இந்த இராணுவ நடவடிக்கையை அமெரிக்கா வரவேற்கிறது’’ என்ற வார்த்தைதளில் வெளிப்படுத்தியது. அந்த நேரத்தில் வளைகுடா நாடுகளில் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட நெருக்கடியால் இலங்கைப் பிரச்சினையில் குறைந்தபட்ச உடன்பாட்டுக்குப் போக வேண்டிய தேவை ஏற்பட்டது. 

ஆனால் இந்தியாவின் இராணுவ நடவடி.கைக்குப் பின் இலங்கை இந்திய அரசுகளுக்கிடையே இடம் பெற்ற ஒப்பந்தமானது, கைவிலங்கு உடைக்கப் புறப்பட்டவர்களுக்குக் கால் விலங்கும் மாட்டிய கதையாக ஆனதாக தமிழர்களால் சொல்லப்பட்டது.

பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களை நிரந்தமாக இணைக்கும் காலம் வரை தற்காலிகமாக அவை இணைக்கப்பட்டு ஓர் அலகாகச் செயற்படும் என இந்தியா இலங்கை ஒப்பந்தத்தில் காணப்பட்டது.  தற்காலிகமாக அல்ல, நிரந்தரமான இணைப்பே என இதனை பிரபாகரன் வலியுறுத்தினார்.

அப்போது பிரபாகரகன் பக்கமாக நெருங்கி வந்து ராஜிவ் காந்தி காதோடு காது வைத்ததுபோல்`` இலங்கையின் சிங்கள தீவிர வாதிகளையும் சிங்கள மக்களையும் திருப்திப்படுத்துவதற்குத்தான் அப்படிச் சொல்ல வேண்டியிருக் கிறது. ஆனால் நிரந்தர இணைப்புத்தான்’’ என்று கூறினார்.

ராஜிவ் சொன்னதை அப்போதைக்கு ஏற்றுக்கொண்ட பிரபாகரன் தன் தளபதி களுக்கும், போராளிகளுக்கும் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார். விடுதலைப் புலிகள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து இரு போராளிகள் குப்பி கடித்து இறந்தார்கள். நிரந்தர இணைப்பு என்று உறுதியளித்த ராஜிவ் பின்னாளில் இதுபற்றி அக்கறை கொள்ளவில்லை.



இப்போது கூட இந்தியத் தலைமைகள் இந்த ஒப்பந்தம் பற்றிப் பேசுவதில்லை. வடக்கு கிழக்கு மாகாணங்களை தற்காலிகமாக இணைத்து ஒரு முதல்வரை நியமிக்கவேண்டியுள்ளது எனவும், 3 பெயர்களைப் பரிந்துரை செய்யுமாறும் இந்தியத் துhதராக அப்போதிருந்த தீட்சித் பிரபாகரனிடம் கேட்டுக் கொண்டார். 

``மூன்று பெயர்கள் அல்ல, ஒரு பெயர்தான் கொடுக்க முடியும் என்று பிரபாககரன் மறுப்புத் தெரிவித்தார்.`` மூன்று பெயர்கள் கொடுங்கள். அதில் முதலாவது பெயரையே தெரிவு செய்வோம்’’ என தீட்சித் உறுதியளிக்க புலிகள் அவ்வாறே செய்தார்கள்

முதலாவது பெயராக கிழக்கு மாகாண மட்டக்களப்பைச் சேர்ந்த, அரசின் உயர்நிலை அதிகாரியாக இருந்த பத்மநாதன், மூன்றாவதாக யாழ்ப் பாணத்தைச் சேர்ந்த சிவஞானம் பெயர்கள் குறித்துத் தரப்பட்டன.  மூன்றாவதாக இருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவஞானத்தையே ஜே.ஆர். ஜெயவர்த்தனா முதல்வராக இராஜதந்திரமாகத் தேர்வு செய்தார். கிழக்கு மாகாணம் தொடர்ந்து புலிகளால் புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்பதை உறுதிப்படுத்த ஜே.ஆர்.செய்த திருவினையை இந்திய அரசும் ஏற்றுக் கொண்டது.

இப்படியான நிகழ்வுகள் இந்தியா மீதான நம்பிக்கையின்மையை பிரபாகரனுக்கும் புலிகளுக்கும் ஏற்படுத்தியது. புலிப் போராளிகள் மட்டுமல்ல, பிற போராளிக் குழுக்களும் இந்தியா ஏமாற்றிவிடும் என்று உணர்ந்தே இருந்தனர்.


இந்தியாவின் பிராந்திய முக்கியத்துவத்தை, அனைத்துப் போராளிக் குழுக்களும் விளங்கிக் கொண்டிருந்தனர். மறுத்தார்களில்லை. பிரச்னை என்னவென்றால் இந்தியாவின் ராஜதந்திரிகளும் கொள்கை வகுப்பாளர்களும் ஜே.ஆ.ரின் தந்திரமான சொற்களால் இழுபட்டுப் போய்விட்டனர்.

பிரச்னை இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது பற்றியது. ஒப்பந்த ஷரத்துக்களில் கூறப்பட்டதற்கு மாறாக ஜே.ஆர்.செய்துகொண்டு வந்த எல்லாவற்றையும் இந்தியா ஏற்றுக்கொண்டது. சண்டே லீடர் வார இதழுக்கு அளித்த பேட்டியில் இந்தியத் தூதர் தீட்சித்., ``நான் உண்மையைச் சொன்னால் நீங்கள் (சிங்களவர்கள்) எல்லோரும் என்னை எதிர்ப்பீர்கள். ஒப்பந்தத்தை முதலில் மீறியது இலங்கைதான். தமிழர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்று தெரிவித்தார்’’

Sunday Leader:Sep 4 1994 
Tamil hopes not met.
Dixit blames the singalese for breaking of India Lanka accord.

இந்தியா தனது பிராந்திய நலன்களுக்காக ஜே.ஆர்.ஜெயவர்த்தானவும், இராஜ பக்ஷேக்களும் இழுத்த இழுப்புக்கெல்லாம் போய்க் கொண்டிருந்தார்கள் என்பதற்கு இதைவிடவேறு என்ன ஆதாரம் வேண்டும்?

தொடர்ச்சி நாளை மறுநாள்...,
கட்டுரையாளர் பா.செயப்பிரகாசம்.
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.