செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

வெள்ளி, மார்ச் 02, 2012

வைகோவின் நடைப்பயணங்கள்.!


வைகோ இதுவரை பல்வேறு நிகழ்வுகளுக்காக 6 முறை நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவை.,

முதலாவது நடைப்பயணம்:

1986 ஆம் ஆண்டு, தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரையில், மகரநெடுங்குழைக்காதர் ஆலயத்தில் நகைகளைக் கொள்ளை அடித்த குற்றவாளிகளைக் கைது செய்து, நகைகளை மீட்கக்கோரி தமிழக அரசை வலியுறுத்தி, தென்திருப்பேரையில் இருந்து புறப்பட்டு, கிராமங்கள் வழியாகப் பிரசாரம் செய்துகொண்டே, திருநெல்வேலி வரையிலும், மூன்று நாட்கள் 60 கிலோ மீட்டர்கள் நடந்தார்.

இரண்டாவது நடைப்பயணம்:


1994 ஜூலை 27-ம் நாள், மூன்று கடல்கள் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு, ஓட்டு மொத்தமாக அந்தப் பயணத்தில் மட்டும், 1,600 கிலோ மீட்டர்கள் நடந்தார். ஒரு நாளைக்கு சராசரியாக 32 கிலோ மீட்டர்கள் நடந்து சென்றார் வைகோ. இதில் ஒன்பது நாட்கள், முழுக்க முழுக்க மழையில் நனைந்தார். அப்போதும், குடைகளைப் பிடித்தது இல்லை.

அப்போதைய அண்ணா தி.மு.க. அரசின் மக்கள் விரோதப் போக்கையும் கடுமையான ஊழலையும் எதிர்த்து, விழிப்புணர்வுப் பிரசாரப் பயணமாகவே இதை அவர் மேற்கொண்டார். செப்டம்பர் 15-ம் நாள், சென்னை அண்ணா நகரில், அந்த எழுச்சி நடைப்பயணத்தை நிறைவு செய்தார். மொத்தத்தில், கோடிக்கணக்கான மக்களைச் சந்தித்து வைகோ ஏற்படுத்திய தாக்கம், 1996-ல் ஆட்சி மாற்றத்துக்கு ஒரு காரணமாக அமைந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

மூன்றாவது நடைப்பயணம்:

காவிரி நதிநீரில் தமிழகத்தின் உரிமையை மறுக்கும் கர்நாடக அரசையும், மத்திய அரசையும் கண்டித்து, மக்கள் சக்தியைத் திரட்ட பூம்புகாரில் இருந்து புறப்பட்டு, கல்லணை வரையிலும், ஏழு நாட்கள், 180 கிலோ மீட்டர்கள் நடந்தார்.

நான்காவது நடைப்பயணம்:

1977 ஆம் ஆண்டு, ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எதிர்த்து, திருவை குண்டத்தில் இருந்து புறப்பட்டு, சுற்றுவழியாகக் கிராமங்கள் ஊடாகச் சென்று, நான்கு நாட்கள் நடந்து பிரசாரம் செய்து, தூத்துக்குடிக்கு வந்தார். நான்கு நாட்களில், சுமார் 120 கிலோ மீட்டர்கள் நடந்தார்.

ஐந்தாவது நடைப்பயணம்:


2004 ஆகஸ்ட் 5-ம் நாள் திருநெல்வேலியில், தாமிரபரணியில் நீராடிவிட்டு, மறுமலர்ச்சி நடைப்பயணத்தைத் தொடங்கினார். சென்னைக்கு 42 நாள்களில் 1,200 கிலோ மீட்டர்கள் நடந்தார். வைகோவுடன் சீருடை அணிந்த 3,000 தொண்டர் படை இளைஞர்களும் கொடி பிடித்து நடந்து வந்தனர். இரவுகளில், கைகளில் தீபச் சுடர்களை ஏந்தி வந்தனர்.

தென்னக நதிகள் இணைப்பின் தேவையை மக்கள் உணரச் செய்யவும், மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தவும், சாதி மத வேற்றுமைகளை அகற்றி, சகோதரத்துவ எண்ணத்தை அனைத்துத் தரப்பிலும் ஏற்படுத்தவும், மது, போதைப் பொருள் பழக்கத்துக்கு இரையாகி விடாமல், இளம் தலைமுறைக்கு விழிப்பு உணர்வை உருவாக்கவும், தாய்-தந்தையை மதிக்கும் மனநிலையை இளைஞர்களிடம் ஏற்படுத்தவுமே இந்த நடைப்பயணத்தை மேற் கொண்டார். எந்த இடத்திலும், கட்சி அரசியல் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறாவது நடைப்பயணம்:

முல்லைப்பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவும், தென் மாவட்டங் களில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், 2008 டிசம்பர் 18-ம் நாள், மதுரையில் இருந்து புறப்பட்டு 23 வரையிலும் - ஆறு நாட்கள் - உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி, உத்தமபாளையம், கம்பம் வழியாக கூடலூர் வரையிலும், 150 கிலோ மீட்டர்கள் நடந்தார்.

இதுதவிர, 1986 ஆம் ஆண்டு, தி.மு.க.இளைஞர் அணி சைக்கிள் பயணப் பிரசாரத்தை நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர்ந்து 33 நாட்கள் மேற்கொண்டார். ஆடி மாதப் பெருங்காற்றிலும் வெயிலிலும் ஒரு நாளைக்குச் சராசரியாக 60 கிலோ மீட்டர்கள் சைக்கிள் மிதித்தார். ஒவ்வொரு நாளும், அந்த ஒன்றியத்தைச் சேர்ந்த 500 இளைஞர்கள் அவருடன் வந்தார்கள். மறுநாள் வேறு ஒன்றியத்தில், வேறு 500 இளைஞர்களுடன் சைக்கிள் மிதித்தார்.

அனல் கொதிக்கும் வெயிலில் பயணித்ததால், மேனி முழுவதும் கறுத்து, கொப்புளங்கள் ஏற்பட்டன. இந்தப் பயணம் முடிந்து சென்னைக்கு வந்தபோது, அவருடைய மகள் கண்ணகி வைகோவைப் பார்த்து, ‘அப்பா கறுப்பர் ஆகிவிட்டார்!’ என்றாள்.

கடந்த 40 ஆண்டுகளில், ஓர் ஆண்டுக்குச் சராசரியாக 2 லட்சம் கிலோ மீட்டர்களுக்கும் மேல் பயணித்து, சுமார் 80 லட்சம் கிலோ மீட்டர்களுக்கும் மேல் சென்றிருக்கிறார். இன்றைக்கும் அப்படித்தான் அவர் பயணித்துக்கொண்டு இருக்கிறார். தேர்தல் பிரச்சாரச் சுற்றுப்பயணங்கள், கட்சிப் பிரசாரங்களுக்காகப் பயணித்து, தமிழகத்தில் 25,000 கிராமங் களுக்கு உள்ளே சென்று வந்திருக்கிறார். 1995 ஆம் ஆண்டு, வேலூர் மாவட்டத்தில், முதல் நாள் தொடங்கிய பயணத்தில், மறுநாள் விடிகாலை வரையிலும் இடைவிடாமல், 118 கிராமங்களில் கொடியேற்றியுள்ளார்.

‘உழைக்கும் மக்கள், விவசாயிகள், குடிசைவாழ் அடித்தட்டு மக்கள் உள்ளிட்ட கோடிக் கணக்கான மக்களை, நேரில் சந்தித்து எனக்குக் கிடைத்த அனுபவங்களை எழுதினால், பல தொகுப்புகள் வரும். ‘மக்களிடம் செல்’ என்றார் அண்ணா. இந்த ஒரு விசயத்ததில் யாரும் என்னுடன் போட்டி போட முடியாது’ என்று பேட்டி ஒன்றில் வைகோ கூறியிருக்கிறார்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

2 கருத்துகள்:

  1. இந்த நடைப்பயணங்களால் உண்மையில் பயன் பெற்றது பொதுமக்கள் அல்ல. ஏதோ சில அல்லக்கை அரசியல்கட்சிகள்தான். வைகோ மீது பரிதாபமே மிஞ்சுகிறது.

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.in/

    பதிலளிநீக்கு