செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

சனி, மார்ச் 03, 2012

காலம் கடந்து வாழ்பவர்கள்உலகில் பிறந்த அனைவருக்குமே புகழ்பெற வேண்டும், சாதனை புரிய வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கிறது. அதனால் ஒவ்வொருவரும் அவரவருக்கு விருப்பமான துறைகளில் சாதனைகள் படைக்க முயல்கின்றனர். சிலர் வெற்றியும் பெறுகின்றனர். எனினும், ஒரு சில துறைகளில் சாதனை படைப்பவர்கள் மட்டும் காலத்தைக் கடந்து புகழ் பெறுகிறார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் எழுத்தாளர்கள்.


சாதனை புரிய வேண்டும் என முடிவு செய்யும் பெரும்பான்மையானோர் அரசியல், சினிமா போன்ற துறைகளையே இக்காலத்தில் தேர்வு செய்கிறார்கள். அவற்றில்தான் புகழ்பெற முடியும் எனக் கருதுகிறார்கள். எனினும், அந்தத் துறைகளில் படைக்கப் படும் சாதனைகள் காலம் கடந்து நிற்பதில்லை என்பது கண்கூடு. திரைப்பட நடிகர்களின் சாதனைகள் பெரும்பாலும் அவர்கள் வாழும் காலம் வரைதான் பேசப் படுகின்றன.

அவர்களின் சகாப்தம் முடிந்ததும், அவர்களுடைய ரசிகர் மன்றங்களின் செயல் பாடுகள் தானாகவே காலாவதியாகி விடுகின்றன. அவர்களுடைய சிம்மாசனத்தை அடுத்துவரும் நடிகர்கள் பிடித்து விடுகின்றனர். அதுபோலத்தான் அரசியல்வாதிக ளின் சாதனைகளும். அவர்களின் சாதனைகள், அவர்கள் காலத்துக்குப் பின்னர் பிறந்தநாளிலும், நினைவுநாளிலும் மட்டுமே நினைவு கூறப்படுகின்றன. 

அவர்களுடைய சாதனைகளையும், புகழையும் அடுத்த தலைமுறை அரசியல் வாதிகள் மறைத்து விடுகிறார்கள். கட் - அவுட்களிலும், சுவரொட்டிகளிலும் கூட அவர்களுடைய புகைப்படங்கள்,அடுத்த தலைமுறை அரசியல்வாதிகளின் பிரமாண்ட படங்களின் கீழ் அஞ்சல்தலை அளவுக்கு இடம் பெறுகின்றன. இது காலத்தின் கட்டாயமாகக் கூட இருக்கலாம்.

சில நேரங்களில் அரசியல்வாதிகள், நடிகர்கள் அவர்கள் வாழும் காலத்திலேயே தங்களுடைய அதிகாரங்களை, பதவிகளை, புகழைக் குடும்பத்தினர் மற்றும் கட்சி யினரின் நெருக்குதல்களால் வாரிசுகளுக்கோ, மற்றவர்களுக்கோ தாரைவார்க்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர்.

மாறாக, எழுத்தாளர்களின் புகழ் காலம் கடந்தும் பேசப்படுகிறது. அவர்களுடைய சிம்மாசனம் யாராலும் அசைக்கப்படுவதில்லை. பல நூல்களையும், காவியங்களையும் தங்கள் அறிவுத்திறனால் படைக்கும் அவர்கள் யாருக்கும், எதையும் விட்டுத்தர வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை.

அறிவால் இந்த சாதனை படைக்கப்பட்டு வருவதால், யாரும் அவர்களிடமிருந்து வலுக்கட்டாயமாக எதையும் பறித்துவிட முடியாது. வாரிசுரிமை எழுத்துலகில் இல்லை. இதில் சாதனை படைக்க வேண்டுமானால், தங்கள் அறிவை மேம்படுத்திக் கொண்டு தாங்களாகவேதான் புகழ்பெற முடியும்.

இசைத்துறைக்கும் இதே சிறப்பு உண்டு. ஆனால், பண்டைய இசை மேதைகளின் பாடல்களை, இசையை நாம் இப்போது கேட்க முடிவதில்லை. 20-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியால் வராலற்றின் அண்மைக் காலங்களில்தான் இசையைப் பதிவு செய்து பாதுகாத்து வைக்க முடிந்திருக்கிறது. ரசிக்க, கேட்க முடிகிறது.

அதேவேளையில் பல ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் படைக்கப்பட்ட காவியங்கள், புராணங்கள், இலக்கியங்கள் நம் கைகளில் பத்திரமாக இருக்கின்றன. இதனால் எழுத்தாளர்களுக்கு பல ஆயிரம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புகள் உள்ளன. பண்டைய பேச்சாளர்களின் சொற்பொழிவுகளை, அவர்களுடைய மாணவர்கள் நூல்களாகப் படைத்து வைத்திருப்பதால் எழுத்தாளர்களுக்கு இருக்கும் அதே சிறப்புகளைப் பேச்சாளர்களும் பெற்றுள்ளனர்.

எழுத்து, இலக்கியம், கவிதை என்பதெல்லாம் பண்டிதர்களுக்குத்தான் என்ற சித்தாந்தம் 19-ம் நூற்றாண்டு வரை இருந்தது. 20-ம் நூற்றாண்டில் மரபுக் கவிதையை மாற்றி புதுக்கவிதையைப் படைத்ததன் மூலம் மகாகவி பாரதி, பாரதி தாசன் போன்றவர்கள் அந்த சித்தாந்தத்தை உடைத்தெறிந்தனர்.


சிறுகதை, நாவல் போன்றவற்றிலும் அந்த நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்தாளர்கள் புதுமையைப் புகுத்தினர். இதுபோன்ற காரணங்களால் நம்மாலும் எழுத முடியும் என்ற நம்பிக்கை பலருக்கு ஏற்பட்டு, தங்களது படைப்புகளை உருவாக்கத் தொடங்கினர்; உருவாக்கி வருகின்றனர். தற்காலத்தில் புத்தக் கண்காட்சியில் காணப்படும் லட்சக் கணக்கான புத்தகங்களே இதற்கு சாட்சி.

அதேவேளையில் வெளிநாட்டு எழுத்தாளர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரமும், கௌரவமும் தமிழ் எழுத்தாளர்களுக்கு தற்போது கிடைப்பதில்லை. அவர்களுடையப் படைப்புகள் விருதுகளை பெற்றாலும், பாராட்டுதல்களுக்குப் பதில் விமர்சனங்களே அதிகம் செய்யப்படுகின்றன. இந்நிலை மாறவேண்டும். ஏற்கனவே எழுத்துப் பணியில் சாதித்தவர்கள், புதிய எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும். அப்போது தான் சமுதாயத்துக்கு நல்ல படைப்புகள் கிடைக்கும். 

கம்பர், திருவள்ளுவர், தொல்காப்பியர், பாரதி, பாரதிதாசனைப் போல காலம் கடந்து தன்னுடைய படைப்புகள் உலகத்துக்குப் பயன்பட வேண்டும்; பேசப்பட வேண்டும் என்னும் எழுத்தாளர்கள் அவர்களுடைய வாழ்வையும், எழுத்தையும் ஒன்றாக்கிக் கொள்ள வேண்டும். இதை அடியொற்றி சிறந்த படைப்புகளைப் படைத்தால், இக்கால எழுத்தாளர்களும் காலம் கடந்து வாழலாம் என்பது நிச்சயம்.

கட்டுரையாளர்: மு.சுப்பையா. கருத்துகள் வரவேற்கப்படுகின்ற. அன்புடன் பாலமுருகன்.

1 கருத்து:

  1. சிறப்பான கட்டுரை.. அரசியல், சினிமாத்துறைகளில் ஏன் பெரும்பாலானோர் வர நினைக்கிறார்கள் என்றால், எளிதில் கிடைப்பதாகக் கருதும் புகழும் பணமுமே. ஆனால் இவை மிகவும் போட்டிகள் நிறைந்த துறைகள் என்பதோ, இவற்றில் ஜெயிக்க ஒருவர் எந்த அளவுக்கு கீழிறங்கி கேடுகெட்டுப் போகவேண்டும் என்பதையோ அறிந்தால் சுயமரியாதை உள்ள எவரும் இதில் நுழைய பிரியப்படமாட்டார்கள்..

    எழுத்து, இலக்கியம், கதை, கவிதை இவைகளைப்படைப்பதற்கு தேவையான அறிவாற்றலை நம் கல்வி வளர்ப்பதில்லை. இதுதான் நிதர்சனம்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    htt://anubhudhi.blogspot.in/

    பதிலளிநீக்கு