செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

ஞாயிறு, மார்ச் 04, 2012

புயல்களுக்கு பெயர் வைக்கும் முறை.!



கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கம் கடந்த நூற்றாண்டில்தான் தொடங்கியது. ஆஸ்திரேலியா நாட்டவர்கள்தான் முதன்முதலில் புயலுக்கு பெயர் சூட்டினார்கள். குறிப்பாக தங்களுக்கு பிடிக்காத அரசியல் தலைவர்களின் பெயர்களை பேரழிவு ஏற்படுத்தும் புயல்களுக்கு வைத்தனர். 1950-ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்காவும் புயல்களுக்கு பெயர் சூட்டும் வழக்கத்தை தொடங்கியது.

இதையடுத்து சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனம் கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டுவதை ஒழுங்குபடுத்தியது. அதன்படி ஒவ்வொரு பிராந்தியத்திலும் நாடுகள் ஒன்றிணைந்து புயல்களுக்கு பெயர் வைக்கும் முறை ஏற்படுத்தப்பட்டது. அந்த வகையில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்கு இந்திய பிராந்தியத்தில் உள்ள நாடுகள் ஒன்று சேர்ந்து பெயர் வைக்க தீர்மானிக்கப்பட்டது.


இந்த பிராந்தியத்தில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஏமன், தாய்லாந்து ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. வங்கக்கடல், அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பதை இந்த எட்டு நாடுகளும் பட்டியலாக தயாரித்து கொடுத்துள்ளன. அந்த பட்டியலில் உள்ள பெயர்கள்தான் ஒவ்வொன்றாக புயல்களுக்கு சூட்டப் படுகின்றன. கடந்த 2004-ம் ஆண்டு முதல் வங்கக்கடல் புயல்களுக்கு இப்படி பெயர் சூட்டப்பட்டு வருகின்றன.

கடந்த 2010-ம் ஆண்டு ஐந்து தடவை புயல் ஏற்பட்டது. அந்த புயல்களுக்கு பட்டியலில் உள்ள வரிசைப்படி லைலா, பந்து, பெட், கிரி, ஜல் என்று பெயரிடப்பட்டன. இதில் லைலா பெயரை பாகிஸ்தான், பந்து பெயரை இலங்கை, பெட் பெயரை தாய்லாந்து, கிரி பெயரை வங்கதேசம், ஜல் பெயரை இந்தியா தேர்வு செய்து கொடுத்திருந்தன. இதில், லைலா, ஜல் இரு புயல்களும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தின.

2011-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முதல்முறையாக புயல் தோன்றியது. அந்த புயலுக்கு மாலத்தீவு நாடு தேர்வு செய்து கொடுத்திருந்த கெய்லா என்ற பெயர் சூட்டப்பட்டது. அதே ஆண்டு இரண்டாவதாக தோன்றிய புயலுக்கு தானே என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த பெயரை வழங்கிய நாடு மியான்மர் நாடாகும். மியான்மர் நாட்டின் ஜோதிடவியல் நிபுணர் மின் தானே கா பெயரை குறிப்பிடும் வகையில் இந்த பெயர் சூட்டப்பட்டதாக தெரிகிறது.

இந்த வரிசையில் அடுத்தடுத்து வரும் புயல்களுக்கு முர்ஜன் (ஓமன்), நீலம் (பாகிஸ்தான்), மகசென் (இலங்கை), பைலின் (தாய்லாந்து), ஹெலன் (வங்கதேசம்), லெகர் (இந்தியா)  என்று பெயர்கள் சூட்டப்படவுள்ளன.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

1 கருத்து:

  1. ரொம்ப நாளா இந்த புயல்களுக்கெல்லாம் வேலை மெனக்கெட்டு யார் பெயர் வைக்கிறதுன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன்.. அந்த சந்தேகம் உங்க பதிவால தெளிவாயிருச்சு.

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.in/

    பதிலளிநீக்கு