செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

சனி, மார்ச் 10, 2012

‘பெண்’ மொழிகள்.!


    எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்றனரோ, அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர் - மகாபாரதம்.
    ஆண்களும், பெண்களும் சரிசமமானவர்கள். இதில் வித்தியாசம் பார்ப்பவர்கள் மனிதர்களே இல்லை - இங்கர்சால்.
    ஓர் இளம் பெண்ணின் அழகு, தூய நடத்தைகளில் இருக்கிறதேயின்றி, உயர்ந்த ஆடை அணிகலன்கள் அணிவதில் இல்லை - காந்திஜி.
  
    பெண்களிடமிருக்கும் நல்ல பண்பு, அவர்களுக்கு பாராட்டை உண்டு பண்ணுகிறது - ஷேக்ஸ்பியர்.
    ஆண்களின், ஆராய்ச்சி அறிவுகள் எல்லாம், பெண்களின் உணர்ச்சிமயமான அன்புக்கு ஈடாகாது - வால்டேர்.
    பெண்களை போற்றி துதி பாட வேண்டாம்; அவர்களும் சமூகத்தின் ஓர் அங்கம், மனித பிறவி என்று நினைத்தாலே போதும் - கிளாரெண்ட்.
    ஒரு பெண்ணின் வாழ்க்கை, முரண்பாடு மிகுந்த ஒரு வரலாறு - வாஷிங்டன் இர்விங்.
    பெண்ணின் இதயம் அவளுடைய உதடுகளில் இருக்கிறது. ஆனால், அவளுடைய ஆன்மாவோ அவளுடைய கண்களில் இருக்கிறது - லார்ட் பைரன்.
    பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை, ஒரு நாடு சுபீட்சமடையாது - நேரு.
    பெண்களுக்கு கல்வியைக் கொடுங்கள்; நாடு கல்விச் செல்வத்தில் உயர்ந்து நிற்கும். அவர்களுக்கு அரசியலைக் கற்றுக் கொடுங்கள்; நாடு உயர்ந்து நிற்கும் - எட்மண்ட்.
    பெண்ணுக்குக் கல்வியும், பொருளாதார பலமும் குடும்பத்தை காக்கும் - இங்ஸ்.
ஷேக்ஸ்பியர்
    தியாகம், அமைதி, சகிப்புத் தன்மை, பணிவு, நம்பிக்கை, அறிவு ஆகியவற்றின் உருவமாகவே பெண்குலம் இருந்து வருகிறது - காந்திஜி.
    பெண், சொர்க்கத்தில் மலரும் மிகச் சிறந்த மலர் - வில்லியம் தாக்கரே.
    ஒரு பெண்ணின் உள்ளடக்கமாகிய கடலில், இரக்கம், தியாகம், கற்பு, காதல் ஆகிய நன்முத்துக்களைக் காணலாம் - பெஸ்லிங்.
இங்கர்சால்
    பெண்களின் கண்ணீர் உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி - வில்சன் மிஸ்னர்.
    தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்வதே பெண்களுக்கு அழகு -அவ்வையார்.
    குழந்தை உள்ளம் கொண்டவள் பெண். அவளைக் குமுறும் கடலாக மாற்றுபவன் ஆண்தான் - கார்டன்.
    பெண்ணாய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திருக்க வேண்டும் - தேசிக விநாயகம் பிள்ளை.
    ஆண்களின் பலம் புஜத்தில் இருக்கிறது; பெண்களின் பலம் நாக்கில் இருக்கிறது - கார்லைப்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக