செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

திங்கள், மார்ச் 12, 2012

செல்போன் மோசடிகள் - தேவை எச்சரிக்கை.!கிரெடிட் கார்டு மற்றும் இ-மெயில் மோசடிகளுக்கு அடுத்ததாக, மோசடி ஆசாமிகள் புதிதாக கையாளும் தந்திரம்தான் செல்போன் மோசடி. பெரு நகரங்களில் வசித்து வரும் மக்களைத்தான் குறிவைத்து எஸ்.எம்.எஸ். அனுப்பியும், போனில் தொடர்பு கொண்டும் இத்தகைய மோசடி ஆசாமிகள் ஏமாற்றி வருகின்றனர்.


பெரும்பாலும், இதுபோன்று வரும் அழைப்புகள் மாநில அழைப்புகளாகவோ, அல்லது வெளிநாட்டு அழைப்புகளாகவோ இருக்கின்றன. ஆனால், உண்மையிலேயே, இவை அனைத்தும் வெளி நாடுகளில் இருந்து வருவது கிடையாது. சர்வதேச சிம் கார்டுகளை வாங்குவதும், எந்தவித தடங்கலும் இல்லாமல் அதனை உபயோகப்படுத்துவதும் தற்போது மிகவும் எளிதாக விட்டது. டெல்லியில் நேரு பகுதி மற்றும் கபார் மார்க்கெட் பகுதிகளில் உள்ள கள்ளச்சந்தைகளில் இந்த வகையான சிம் கார்டுகள் எளிதாக கிடைக்கின்றன. அந்த பகுதியில் கடை போட்டுள்ளவர்களிடம் நம்பிக்கையானவர் ஒருவரை அழைத்துச் சென்றால் அவற்றை வாங்கலாம்.

இந்தியாவின் தொலைபேசி குறியீட்டு எண் +91. பாகிஸ்தான் நாட்டின் டெலிபோன் குறியீட்டு எண் +92. இது இந்தியாவின் குறியீட்டு எண்ணுக்கு மிகவும் நெருங்கிய ஒன்றாக இருப்பதால், இங்குள்ள மோசடி ஆசாமிகள் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்களை தொடர் கொள்ளும்போது, பெரும்பாலும் பாகிஸ்தான் சிம் கார்டுகளையே உபயோகப்படுத்தி வருகின்றனர்.

2010-11-ம் ஆண்டில் சர்வதேச அளவில் செல்போன் குற்றங்கள் 10 சதவீதம் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக இந்த வகையான குற்றங்களில் அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் ஆண்களாகவே இருக்கின்றனர். ஏனென்றால், அதிகப்படியான நேரத்தை செல்போனிலேயே கழிப்பதிலும், புதியவர்களுடன் தொடர் கொண்டு நட்பை வளர்ப்பதிலும் ஆண்கள்தான் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர்.

எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பி மோசடி செய்வதிலும் தற்போது வித்தியாசமான வழிவகை உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு வரக்கூடிய மோசடி குறுஞ்செய்திகள், பெரும்பாலும் +92, +44, +33  என்று சர்வதேச தொலைபேசி குறியீட்டு எண்களுடனேயே இருக்கும். உண்மையில் இந்த குறுஞ் செய்திகள் அனைத்தும் வெளிநாட்டில் இருந்து வருவது இல்லை. உங்களுக்கு அருகாமையில் இருந்தோ, அல்லது அண்டை மாநிலங்களில் இருந்தோதான் அனுப்பப்படுகின்றன.

எப்படியெனில், இந்த மோசடி பேர்வழிகள் தங்களுடைய செல்போன் எண்களை, இன்டர்நெட்டில் அதற்கென்று உள்ள சில தளங்களில் பதிவு செய்து வைத்து விடுகின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இத்தகைய இணையதளங்களுக்கு சட்டப்படி முழு அனுமதி உண்டு. இதில், பதிவு செய்து வைத்துள்ள வாடிக்கையாளர்கள் இன்டர்நெட் மூலமாக வழக்கத்தை விட மிகவும் குறைவான கட்டணத்திலேயே பேசலாம், ஆன்லைன் மூலமாக மொத்தம் மொத்தமாக குறுஞ்செய்திகளும் அனுப்பலாம். பதிலுகு நீங்கள் அந்த நம்பரை தொடர்பு கொண்டால் கூட, அந்த அழைப்பானது, இன்டர்நெட் புரோடோகால் வழியாகத்தான் அவருக்கு செல்லும்.

எனவே, நீங்கள் அவருடன் பேசலாம். ஆனால், இந்த வகையான அழைப்புகள் எங்கிருந்து வந்துள்ளன என்பதை கண்டுபிடிக்க முடியாது. அதேபோன்று அந்த அழைப்பை மறுபடியும் ‘டிரேஸ்’ செய்யவும் முடியாது. நம்முடைய தகவல்கள் மற்றும் செல்போன் எண்கள், எவ்வாறு மோசடி ஆசாமிகள் கைகளில் சிக்குகிறது என்பது நமக்கு வியப்பாக தோன்றலாம். இதற்கான விடை வெகு தொலைவில் இல்லை. சில நேரங்களில் நம்முடைய செல்போன் நிறுவனங்களை சேர்ந்தவர்களே, கொடுத்து விடுகிறார்கள் என்பது அதிர்ச்சி அளிக்கக் கூடிய தகவல்.

சில காரணங்களுக்காக நீங்கள் அளிக்கும் சுயவிவரம் குறிப்பு உள்ளிட்ட தகவல்கள் மூலமாகவும் நம்முடைய விவரங்கள் மோசடி ஆசாமிகள் கைகளில் எளிதில் சிக்கிவிடுகின்றன. இதுதவிர, நம் நாட்டில் உள்ள தொலைத்தொடர்பு பாதுகாப்பு சட்டங்கள் அனைத்தும் பலவீனமானதாகவே இருக்கின்றன. இதனால், பிரபலமான செல்போன் நிறுவனங்களிடம் இருந்து மிகவும் சுலபமாக யார் வேண்டுமானாலும் செல்போன் இணைப்பை பெற்றுக்கொள்ள முடிகிறது.

இந்தியாவில் தகவல் பாதுகாப்புக்கென்று தனியாக சட்டங்கள் எதுவும் கிடையாது. தகவல் தொழில் நுட்ப சட்டமானது, தகவல் என்ற வார்த்தைக்கு விளக்கம் அளிக்கிறது. ஆனால் தகவல் பாதுகாப்பை பொறுத்தவரை அமைதியாகவே இருக்கிறது. அதேபோன்று, இந்தியாவில் தற்போதைக்கு தகவல் பாதுகாப்பு வெளியீடுகள் அனைத்தும் ரகசிய சட்டங்கள் வாயிலாகவே சோதனை செய்யப்படுகின்றன. இதுபோதுமானதாக இல்லை. இதுபோன்ற காரணங்களால் யார் வேண்டுமானாலும் எளிதாக தகவல் திருட்டுகளில் ஈடுபட முடிகிறது.

நுகர்வோர் மின்சாதன தயாரிப்பு நிறுவனங்கள், உள்ளூர் விடுதிகள், கால் சென்டர்கள் போன்றவை கூட பல்வேறு விவரங்களில் இருந்து நம்முடைய செல்போன் எண்களை எடுத்துக் கொள்கின்றன.  இதேபோன்றுதான், மோசடி பேர்வழிகளுடைய கைகளிலும் நம்மை பற்றிய தகவல்கள் எளிதாக சிக்கி விடுகின்றன. தேவை எச்சரிக்கை.!

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக