செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

வியாழன், மார்ச் 08, 2012

சாதனைப் பெண்மணிகள்.!


    பத்து பல்கலைக்கழகங்களிலிருந்து டாக்டர் பட்டம் பெற்ற பெண்மணி குஜராத்தைச் சேர்ந்த இலா பட் என்பவராவார். இவர் பெற்ற உயரிய விருதுகள் மகசேச விருது, பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன்.
    அதிக வயதில் அண்டார்டிகா சென்று சாதனை புரிந்த பெண்மணி கமல் வில்க் என்பவராவார். இவர் தனது 53-வது வயதில் அண்டார்டிகா சென்றார்.
    இங்கிலாந்திலுள்ள ஏறுவதற்கு கடினமான மலையாள ஹாரிஸான் மலையில் ஏறி சாதனைப் புரிந்த முதல் பார்வையற்ற பெண்மணி காஞ்சன் காபா என்ற இந்தியப் பெண் ஆவார்.
 

    தனது வாழ்நாளில் 1,140 கோப்பைகள், 125 கேடயங்கள் வென்ற அமெரிக்க கூடைப்பந்து வீராங்கனை செரில் மில்லர்.
    1988-ல் நடைபெற்ற மாராத்தான் நீச்சல் போட்டியில் தனது 13-வது வயதில் 29 கி.மீ. தூரத்தை 9 மணி 5 நிமிடத்தில் நீந்திக் கடந்த சாதனை படைத்தார் அர்ச்சனா பாரத் குமார் என்ற இந்திய நீச்சல் வீராங்கணை.
    19 வயதில் உலக அளவில் பளுதூக்கும் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கம் பெற்ற முதல் இந்திய வீராங்கணை கர்ணம் மல்லேஸ்வரி.
    ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் 1976 ஒலிம்பிக் முதல் தொடர்ந்து நான்கு ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்ற முதல் பெண்மணி இரெனகா சிவின்ஸ்கா என்பவராவார்.
    கேரம் விளையாட்டின் முதல் உலக மகளிர் சாம்பியன் பட்டம் பெற்றவர் அனுராஜ். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்.
 

    ரங்கோலி கோலம் போடுவதில் உலக சாதனை புரிந்து கின்னஸில் இடம் பெற்ற முதல் பெண் என்ற பெருமை பெற்றவர் தமிழகத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி மோகன்.
    உலகிலேயே இளம் வயதில் செஸ் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் பெண்மணி ஜூடிட் போல். இவர் தனது 16-வது வயதில் இந்தச் சாதனையைப் புரிந்தார்.
    ஐ.நா.சபையின் முதல் பெண் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் விஜயலட்சுமி பண்டிட் ஆவார். இவர் 1953-ல் இப்பதவி வகித்தார்.
    கோல்ப் கிளப் சாம்பியன்ஷிப் பட்டத்தை அதிக முறை வென்ற முதல் பெண் மாரஜோரி எடி என்ற கனடா நாட்டு பெண்மணியாவார்.
    எட்டுமுறை ஆஸ்கார் விருது பெற்ற முதல் பெண்மணி எடித் ஹெட் ஆவார்.
    ஒலிம்பிக்கின் முதல் வீராங்கணை என்ற சிறப்பு பெற்றவர் பேனி டுரக் என்ற ஆஸ்திரேலிய நாட்டுப் பெண்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக