செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

செவ்வாய், ஏப்ரல் 10, 2012

நினைவு என்பது என்ன?சில விவரங்கள் நினைவில் இருக்கின்றன. சில மறந்த போகின்றன. நினைவு என்பது என்ன? எல்லாம் நியூரான்களின் சாகசம். நியூரான் (Neuron) என்பது மூளையில் உள்ள ஆதாரமான நரம்பு செல். கோடிக்கணக்கில் இருக்கும் இந்த செல்களின் இணைப்பில்தான் நம் நினைவு இருப்பதாக பொதுவாக நம்பப்படுகிறது. ஆரம்ப காலத்தில் அறிவியலறிஞர்கள் ஒரு பாட்டி நியூரானைத் தேடினார்கள். அதாவது உங்கள் பாட்டியை உங்களுக்கு நினைவு இருந்தால் அவள் முகத்திற்கு ஒரு நியூரான் இருக்கிறது. 


குரலுக்கு ஒரு நியூரான் இருக்கிறது. அவள் வாசனைக்கு ஒரு நியூரான் இருக்கிறது. இப்படித்தான் நம்பினார்கள். இப்போது தனிப்பட்ட நியூரான்களில் நம் நினைவு இல்லை என்கிறார்கள். பாட்டி நினைவுகள் நியூரான்களின் இணைப்பில் ஏற்படுத்திய மாறுதல்களில்தான் வகிக்கிறது என்கிறார்கள். நினைவு என்பது வீடியோ காமிரா போலவோ, டேப்ரிக்கார்டர் போலவோ இல்லை. இன்ன இடத்தில் இது பதிந்திருக் கிறது என்று சொல்ல இயலாது.

மேலும் ஒரு சம்பவத்தை முழுவதும் நினைவுபடுத்துவது என்பது சாத்தியமில்லை. ஒரு சம்பவத்தை வெவ்வேறு செய்தித்தாள்கள் விவரிப் பதைப் படித்தால் உங்களுக்கு இது புரியும். மிகத்தளிவான நினைவிலும், நினைவு கூர்வதிலும் சில குறைபாடுகள் இருக்கும். அரிதான சம்பவங்கள், விபத்துக்கள், அனுபவங்கள் தௌ¤வாக நினைவி ருக்கும். தினம் அலுவலகம் செல்வது நினைவிருக்காது. பேருந்து சன்னல் வழியாக ஒரு கல் வந்து விழுந்தால் அந்த தினம் நினைவிருக்கும்.

காரணம் அந்தச் சம்பவம் தனிப்பட்டது. நினைவு ரீதியில் குழப்பமில்லாதது. எந்தச் சம்பவத்தையும் நாம் நினைவு படுத்தும்போது நாளாக நாளாக அது மாறுகிறது. நடந்ததிலிருந்து நடந்ததாக நாம் நினைக்க விரும்புவதற்கு மாறிவிடும். மனமும், சுவையும் நம் நினைவுகளுடன் ஒன்றியிருப்பவை. ஒரு மகிழம்பூ வாசனை, உங்களைப் பள்ளிப் பருவத்தில் பக்கத்து இருக்கையில் உட்கார்ந்திருந்த பெண்ணின் நினைவுக்கும் கொண்டு போகலாம்.

“மற்றதெல்லாம் அழிந்தபின், உடல் அழிந்தபின் மணமும், ருசியும்தான் தனிப்பட்ட விசுவாசமான உணர்ச்சிகளாக மிச்சமிருக்கும்” என்றார் மார்செல் பிரௌஸ்ட். நம் எல்லோருக்கும் நினைவு ஆற்றலை இழப்பதில் இருக்கிறது. இது வயதாகிக் கொண்டிருப்பதால் நிகழ்கிறது என்று நம்புகிறோம். உண்மையல்ல. பிறந்த கணத்திலி ருந்து நாம் நியூரான்களை இழந்து கொண்டிருக்கிறோம். நியூரான்கள் புதுப்பிக்கப்படுவதில்லை.

நன்றி: சுஜாதா, விகடன் பேப்பர் 18-1-1998.
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக