செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

புதன், ஏப்ரல் 25, 2012

எல்லாமே மனசுதான்.!


மின்சாரத்தை எப்படிக் கண்களால் பார்க்க முடியாதோ அதைப்போல மனசையும் பார்க்க முடியாது. உண்மையில் மனசு என்ற ஒன்றே இல்லை என்பதும் தௌ¤வு. ஆனால், மனிதனின் எல்லாச் செயல்களுக்குமே மனசுதானே ஆணிவேராக இருக்கிறது.

‘ஆயிரம் வாசல் இதயம் - அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம், யாரோ வருவார், யாரோ போவார் - வருவதும், போவதும் தெரியாது.’ கவியரசு கண்ணதாசன் எழுதிய இந்தப் பாடல் வரிகளைப் போலவே மனிதனின் மனதில் எத்தனையோ எண்ணங்கள் உள்ளே நுழைந்து வெளியே போகின்றன. சிலர் நல்லதையும், சிலர் தீயதையும் எடுத்துக் கொள்கிறார்கள். அதுபோலவே அவரது வாழ்வும் அமைகிறது.


எந்நேரமும் குடித்துவிட்டு விழுந்து கிடக்கும் தந்தைக்கு இரு மகன்கள் இருந்தனர். இருவரில் மூத்தவரிடம் குடிப்பழக்கம் இருந்தது. இளையவரிடம் எந்தத் தீய பழக்கமும் இல்லாத நல்லவராக இருந்தார். மூத்த மகனைப் பார்த்து, ‘ஏன் எப்போதும் நீ குடித்துக் கொண்டே இருக்கிறாய்’ என்ற போது, அவரோ, ‘என் தந்தையைப் பார்த்துப் பார்த்து எனக்கும் அந்தப் பழக்கம் வந்துவிட்டது’ என்றார். இளையவரிடம் ‘நீ ஏன் குடிப்பழக்கம் இல்லாதவராக இருக்கிறாய்?’ என்று போது, அவரோ ‘என் தந்தையைப் பார்த்துப் பார்த்து நானும் அவரைப் போல் ஆகிவிடக் கூடாது’ என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன் என்றார்.


வாழும் சூழ்நிலையும் ஒன்றாகத்தான் இருந்தது. ஆனால், இருவரின் மனசு மட்டும் வேறுபட்டிருக்கிறது. ஒருவர் தீயவராகவோ அல்லது நல்லவராகவோ இருக்க அவர் அவர் மனசுதான் காரணமாக இருக்கிறது. மனதைப் பக்குவப்படுத்தப் பழகிக் கொண்டால் எந்த தீய எண்ணங்களும் மனதுக்குள் நுழைந்து விடாதபடி, மனசே மனசைப் பாதுகாத்துக் கொள்ளும் என்பதுதான் சத்தியமான உண்மை. எனவே, எவரும் எண்ணங்களை வலிமையானதாகவும், நல்லதாகவும் ஆக்கிக் கொண்டால் அதுவே நம்மைத் தானாகவே உயர்த்தும் சக்தி உடையதாக மாறிவிடும்.


‘நீ என்ன ஆக வேண்டும் என்று நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிறாய்’ என்கிறார் சுவாமி விவேகானந்தர். ‘உன்னையறிந்தால், நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம், உயர்ந்தாலும், தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்’ என்கிறார் கவிஞர் கண்ணதாசன். எனவே எண்ணங்கள், விதைகளாக இருந்தால், செயல்கள் அழகிய மலர்களாக மலர்ந்து மணம் பரப்புகின்றன.

கல்யாணமான ஏழாவது நாளே விவாகரத்து பெற்ற தம்பதியரும் இருக்கிறார்கள். கல்யாணமாகி வயது எழுபதை எட்டிய பிறகும் விவாகரத்து பெற்ற தம்பதியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இரண்டுக்குமே மனசுதான் ஆதிவேர், ஆணிவேர். சுருங்கச் சொன்னால் எல்லாமே மனசுதான்.!

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

1 கருத்து:

 1. 'உண்மையில் மனசு என்ற ஒன்றே இல்லை என்பதும் தௌ¤வு. ஆனால், மனிதனின் எல்லாச் செயல்களுக்குமே மனசுதானே ஆணிவேராக இருக்கிறது'.இங்கு உங்கள் கருத்து முரண்படுகிறது
  மூளையில் அத்தனையும் ஆரம்பம் . கல்வியால்,அனுபவத்தால், வாழும் இடத்தால் மற்றும் வந்த வழிகளால்(ஜீன்ஸ்) அறிவு செயல்பட்டு மனிதனை இயக்கச் செய்கின்றது.
  நல்ல கட்டுரை.
  ஒரு கதை
  முல்லா நஸ்ருதீன் 100 வயதினை தாண்டி வாழ்ந்து கொண்டிருகிறார் அவரை பாராட்டி பேட்டி கண்டு வரலாம் என்று ஒரு நிருபர் சென்றார். அதற்கு முல்லா நஸ்ருதீன் சொன்னார், "எனக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. மது மங்கை மாமிசம் பக்கம் நெறுங்க .மாட்டேன் மற்றும் நேரத்தில் படுத்து நேரத்தில் எழுந்து விடுவேன்" என்றார் ,இவர்கள் உரையாடிக்கொண்டிருக்கும் பொழுது மாடியிலிருந்து ஒர் ஓசை வந்து கொடிருக்க நிருபர் "அது என்ன சப்தமாக உள்ளது" என வினவ அதற்கு முல்லா சொன்னார் "ஒன்றுமில்லை எனது தந்தை ஒரு குடிகாரர் மற்றும் எல்லா கெட்ட பழக்கமும் அவருக்கு உண்டு அதுதான் இப்போழுது குடித்து விட்டு கத்திக்கொண்டிருகிறார் "என்று சொன்னார்.
  http://nidurseasons.blogspot.in/2010/09/blog-post_28.html

  பதிலளிநீக்கு