செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

திங்கள், ஜூன் 11, 2012

அறிவுத் தாகம்.!



1740 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஒரேயொரு புத்தகக் கடைதான் இருந்ததாம். இங்கிலாந்தில் இருந்துதான் அங்கு புத்தகங்கள் வந்து கொண்டிருந்தன. நூலகம் என்றால் என்ன என்றே அறியாத காலம்.! பலரும் சென்று படிப்பதற்கான ஒரு நூலகம் இருந்தால் எவ்வளவு பயன்படும் என்ற எண்ணம் ஒரு சிறுவன் மனத்தில் தோன்றியது.

அவனும் அவனது நண்பர்கள் சிலரும் சேர்ந்து ஒரு சிறிய அறையில் ஒரு பொது நூலகத்தைத் துவக்கி னார்கள். வாசகர்களிடம் சந்தா வசூலித்து,2 ஆண்டு களில் பெரிய நூலகமாக மாற்றினார்கள். அமெரிக்கா வில் அமைக்கப்பட்ட முதல் பொது நூலகம் இதுதான் என்கிறார்கள்.அதன்பின் இத்தகைய நூலகங்கள் நாடெங்கும் ஏற்படுத்தப்பட்டன. நூலகம் தோன்றக் காரணமாக இருந்த அந்தச் சிறுவன்தான் பின்னாளில் உலகப் புகழ் பெற்ற அறிஞராகத் திகழ்ந்த பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்.

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

சனி, ஜூன் 09, 2012

நலமாய் வாழலாம்.!



உணவைக் குறை, நாவினைக் கட்டு.
சவாரியைக் குறை, அதிகம் நட.
கவலையைக் குறை, சிரித்துப் பழகு.
சோம்பலைக் குறை, அதிகம் சிந்தி.
செலவைக் குறை, அதிகம் சேமிப்பு செய்.
திட்டுவதைக் குறை, அதிக அன்பு செய்.
உபதேசம் குறை, செயலை அதிகரி.
கெட்ட பழக்கம் விடு, நல்லன கைப்பிடி.
மூடப் பழக்கம் விடு, மூத்தோர் சொல் கேள்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

புதன், ஜூன் 06, 2012

விலை எப்படி குறையும்?



உலகில் தங்கத்தை அதிகமாக பயன்படுத்துபவர்கள் இந்தியர்கள். ஆனால், தங்க உற்பத்தியில் முதல் இடத்தில் இருப்பது சீனா. வருடத்துக்கு 285ல் இருந்து 300 டன் வரை தங்கத்தை உற்பத்தி செய்கிறது. தங்கத்தை பயன் படுத்துவதிலும் சீன மக்கள் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவுக்கு அடுத்தபடியாக தங்கத்தை அதிகம் பயன்படுத்துவது சீனாதான். ஆஸ்தி ரேலியா ஆண்டுக்கு 215 டன் தங்கத்தை உற்பத்தி செய்து 2-வது இடத்தில் உள்ளது. வெகு காலங்களாக தங்க உற்பத்தியில் முதல் நாடாக இருந்த தென் ஆப்பிரிக்கா 2007 ஆம் ஆண்டோடு அந்த பெயரை இழந்தது.

இப்போது அது 213 டன் தங்கம் உற்பத்தி செய்து 3-வது இடத்திலும், ஆண்டுக்கு 210 டன் தங்க உற்பத்தியுடன் அமெரிக்கா 4-வது இடத்திலும், ரஷியா 185 டன் உற்பத்தி செய்து 5-வது இடத்திலும் உள்ளன. லத்தீன் அமெரிக்க நாடான பெரு, ஆண்டுக்கு 180 டன் உற்பத்தி செய்து 6-வது இடத்தை பிடித்துள்ளது.



ஆண்டுக்கு 100 டன் உற்பத்தி செய்து உலகின் மிகப்பெரிய முஸ்லீம் நாடான இந்தோ னேஷியா 7-வது இடத்தையும், தங்கத்தாது அதிகமுள்ள கனடா, ஆண்டுக்கு 95 டன் தங்கத்தை உற்பத்தி செய்து 8-வது இடத்தை வகிக்கின்றன. இதற்கும் கீழே மொத்தம் 90 நாடுகள் குறைவான தங்கத்தை உற்பத்தி செய்கின்றன. அவற்றில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் ஆண்டுக்கு 3 டன் தங்கத்தை கூட உற்பத்தி செய்ய முடிய வில்லை. ஆனால் உலகில் தங்கத்தை அதிகமாக பயன்படுத்துபவர்கள் இந்தியர்கள்தான் என்ற பெருமை மட்டும் உயர்ந்து நிற்கிறது.


இந்தியாவின் தங்க தேவை வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. இந்தியா இந்த ஆண்டு ஆயிரம் டன்னுக்கு மேல் இறக்கு மதி செய்யும் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதன்படி பார்த்தால் உலக தங்க உற்பத்தி யான 2,500 டன்னில் இந்தியாவே 1,000 டன் தங்கத்தை வாங்கிக் கொள்கிறது. இப்படி இந்தியர்கள் தங்கத்தை வாங்கிக் குவிக்கும் போது விலை எப்படி குறையும் என்கிறார்கள், சந்தை ஆய்வாளர்கள்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

செவ்வாய், ஜூன் 05, 2012

மன்மோகன்சிங் ‘சிகண்டி’யா?


மன்மோகன்சிங்கை ‘சிகண்டி’ என்று பிரபல உச்சநீதிமன்ற வழக்குரைஞரும், சமூக ஆர்வலர் ஹசாரே குழு உறுப்பினருமான பிரசாந்த் பூஷன் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. சரி சிகண்டி யார்? ஏன் இந்த விமர்சனம்?


மகாபாரதத்தில் வரும் பாத்திரம்தான் சிகண்டி. ஆண் உருவம் தாங்கிய பெண். பீஷ்மரை வீழ்த்த நினைத்த அர்ச்சுணன், சிகண்டியை முன்னிறுத்தி ஏமாற்றிக் கொல்வார் என்கிறது அந்தக் காப்பியம். ஆண் உருவம் தாங்கிய பெண் என்பதையும்,ஏமாற்றம் காட்டுவதற்காக உருவாக்கப்பட்ட கேரக்டர் என்பதையும் காங்கிரஸ்காரர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? இல்லை, ஏற்றுக் கொள்ளத்தான் முடியுமா?

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

சனி, ஜூன் 02, 2012

எத்தனை விதமடா சாமி...!


உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான வகையில் மது தயாரிக்கப்படுகிறது. ரஷ்யாவின் ஓட்கா உருளைக் கிழங்கிலும், சீனாவின் மவுத்தாய், ஜப்பானின் சாக்கே ஆகியவை அரிசியிலும், ஸ்காட்லாந்தின் ஸ்காட்ச் கோதுமை மற்றும் மக்காச்சோளத்திலும், ஃபிரான்சின் ஷாம்பெயின் திராட்சையில் இருந்தும் தயாராகிறது.


கோவாவின் பென்னி முந்திரியில் இருந்து தாயாரிக்கப்படுகிறது. இதுதவிர அரபு நாடுகளில் பேரீச்சம் பழத்திலும், இலங்கை, ஃபிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளில் தென்னை, பனையின் பொருட்களில் இருந்தும் மது தயாரிக்கப் படுகிறது. கரும்பு ஆலையில் இருந்து வெளியேறும் கழிவான மொலாசஸில் இருந்து மதுவைத் தயாரிப்பது தமிழ்நாடு மட்டுமே.!

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.