செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

திங்கள், ஆகஸ்ட் 27, 2012

சாதனைக்கு ஒரு புத்தகம்



நாள்தோறும் உலகில் பலர் சாதனை புரிகிறார்கள். அந்த சாதனைகள் வெறும் வார்த்தைகளுடன் மட்டும் நின்று போகாமல் உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும் படி உருவாக்க நினைத்தார்கள். அந்த புத்தகம்தான் கின்னஸ்.
அயர்லாந்தை நாட்டை சேர்ந்த சர்க்யூபீவர் என்பவர்தான் கின்னஸ் புத்தகத்தை உருவாக்கினார். சாதனைகள் அத்தனையையும் கொண்ட இந்த புத்தகத்தை தன் ஒருவனால் எழுத முடியாது என்று உணர்ந்தார். அதற்காக லண்டன் சென்றார். 



பிரிட்டன் அரசாங்கத்திற்கு புள்ளி விவரங்களை சேகரிக்கும் நோரிஸ் மைக் வைகட்டர் மற்றும் ரோஸ்மைக் வைகட்டர் என்ற இரட்டையர்களை சந்தித்து தனது யோசனையை சர்க்யூபீவர் தெரிவித்தார். அவர்களும் முழு மனதுடன் ஒத்துழைப்பு தர முன்வந்தார்கள். 1955 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி முதல் கின்னஸ் புத்தகம் வெளிவந்தது. 198 பக்கங்களைக் கொண்டதாக அது இருந்தது. அன்றிலிருந்து ஆண்டுதோறும் வெளிவருகிறது. 

இடையில் 1957 மற்றும் 1959 ஆம் ஆண்டுகளில் மட்டும் இந்த புத்தகம் வெளிவரவில்லை. அதற்கு என்ன காரணம் என்றும் தெரியவில்லை.  முன்பெல்லாம் ஆங்கிலத்தில் மட்டுமே கின்னஸ் புத்தகம் வெளிவந்தது. இப்போது 40க்கும் மேற்பட்ட மொழிகளில் ‘கின்னஸ் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்’ வந்து கொண்டிருக்கிறது. இதில் இடம்பிடிக்கத்தான் எத்தனை எத்தனை விதமான போட்டிகள்.! புத்தகத்தை ஒரு முறை வாங்கிப் படித்து பாருங்கள் மலைத்துப் போய்விடுவீர்கள்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக