செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

திங்கள், ஆகஸ்ட் 27, 2012

புனிதர் அன்னை தெரசா.!



யூகோஸ்லாவியா நாட்டில் ஸ்கோப்ஜி என்ற சிறு கிராமத்தில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்தவர் தெரசா. பிறந்தது 1910 ஆகஸ்ட் 27-ம் நாள். இளம் வயதிலேயே தந்தையை இழந்தவர். தாயால் வளர்க்கப்பட்டவர். 1929-ல் இந்தியாவிற்கு வந்தார். லோரட்டோ மடத்தின் கொல்கத்தா கிளையில் இருந்து கொண்டு பள்ளிக்கூடமொன்றில் ஆசிரியையாகப் பணியாற்றினார். 


அன்னை வசதியற்ற வீட்டுப் பிள்ளைகளுக்குத்தாமே கல்வி கற்பித்திருக்கி றார்.ஆதரவற்ற முதியோர்களுக்கு அடைக்கலம் தந்திருக்கிறார். நோய் வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் இருந்தவர்களைத் தத்தெடுத்து அவர்கள் நிம்மதியாய் மரணத்தை ஏற்கச் செய்வதற்காக ‘நிர்மல் இதயம்’ என்ற ஆசிரமத்தை ஏற்படுத்தினார்.

மனிதனின் முதல் தேவை அன்புதான் என்பதை உணர்ந்த தெரசா, தொழு நோயாளிகளுக் கும், எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் சேவையை விரிவுபடுத்தினார். தொழு நோயாளிகளுக்கு என்று ‘ப்ரேம் நிவாஸ்’ இல்லம் தொடங்கினார். அன்னையின் தொண்டு இந்தியாவோடு நின்றுவிடவில்லை. ஆஸ்திரேலியா, வெனிசுலா, கொலம்பியா, ஜோர்டான், ஏமன், ரோம், பொலிவியா ஆகிய நாடுகளிலும் கிளை விரித்திருக்கிறது.


1962-ல் பத்மஸ்ரீ விருது, 1962-ல் பிலிப்பைன்ஸ் நாட்டின் மிக உயர்ந்த விருதான ‘ராமோன் மக்ஸேஸே’ விருது, 1971-ல் போப் ஆண்டவரின் உலக சமாதானப் பரிசு, அமெரிக்காவின் ‘நல்ல சமாரித்தான் விருது’, 1972-ல் சர்வதேச நேரு சமாதனாப் பரிசு, 1976-ல் சாந்தி நிகேதனில் டாக்டர் பட்டம் இவை அன்னை பெற்ற விருதுகளில் குறிப்பிடத்தக்கவை.

இந்திய அரசு அவருடைய நினைவாய் தபால் தலை வெளியிட்டிருக்கிறது. 1980-ல் ‘பாரத ரத்னா’ விருது வழங்கிக் கவுரவித்தது. அன்னை தெரசாவின் பணியைப் போற்றும் உலக அமைதிக்கான நோபல் பரிசு 1979-ல் வழங்கப்பட்டது. வாட்டிகன் நகரம் ‘புனிதர்’ பட்டத்தை வழங்கியுள்ளது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். இப்படி,தமது வாழ்வின் ஒவ்வொரு நாளையும் மற்றவர்களின் நலனுக்காகவே செலவிட்ட அன்னை 1997-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் நாள் மரணமடைந்தார்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக