செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

புதன், செப்டம்பர் 05, 2012

ஆகாய விமானம்


நாம் இன்று காணும் பறவைகள் பல கோடி ஆண்டுகளாக வானத்தில் பறந்து வருகின்றன. இதில் முக்கியமாக பறவையினம், பூச்சியினம் மற்றும் வெளவால்கள் அடங்கும். ஆனால் மனிதனும் ஏதேனும் கருவியைக் கண்டுபிடித்து வானத்தில் பறப்பது மிகவும் சமீபத்தில் ஏற்பட்டதே. இது சில முக்கியமான விஞ்ஞான தத்துவங் களின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது.


நாம் அன்றாடம் பறக்க வைக்கும் பட்டத்தில் ஆரம்பித்து முறையாக மிதவை வானூர்தி, ஆகாய கப்பல், ஹெலிகாப்டர், வாணிபத்தில் பயன்படுத்தப்படும் விமானங்கள் மற்றும் ஒலியை விட வேகமாக பறக்கும் விமானம் என பலவிதமான கருவிகளை கண்டுபிடித்து பயன்படுத்தியும் வருகிறோம்.

ஒரு விமானம் பறக்கும் போது 4 விதமான விசைகள் அதன் மீது ஏற்படுகின்றன. இவை விமானத்தின் பளு என்ஜின்கள் ஏற்படுத்தும் உந்து விசை, இறக்கைகளின் மீது வேகமாக காற்று பாய்வதால் ஏற்படும் தூக்கு விசை மற்றும் காற்றில் ஏற்படும் உராய்வு மற்றும் சலனத்தால் ஏற்படும் தடைவிசை ஆகும். என்ஜின் ஏற்படுத்தும் உந்துவிசை விமானத்தின் பளு மற்றும் தடை விசையை எதிர்த்து முன்னேற வழி செய்கிறது.


ஒலியை விட வேகமாக பறப்பதென்றால் மணிக்கு 1235 கி.மீ. வேகத்துக்கும் அதிக மாகும். இதனை மேக் என்றும் சொல்லுவர். ரைட் சகோதரர்களான ஆர்வில் மற்றும் வில்பர் உலகத்தில் முதன் முதலாக டிசம்பர் 17, 1903 ஆம் ஆண்டு கட்டுப் பாட்டுடன் இயங்கும் விமானத்தை கண்டுபிடித்து சாதனை செய்தனர். விமானங் களின் ஒன்று, இரண்டு அல்லது நான்கு காற்றாடிகள் பயன்படுத்தப்பட்டன. இவை காற்றினுள் ஒரு திருகு போல வேலை செய்யும்.

ஆகவே காற்றழுத்தம் குறைந்தால் சிறப்பாக வேலை செய்யாது. 4000-6000 மீ. உயரத்துக்கு மேல் இவை பறக்க முடியாது. மேலும் வேகம் அதிகரிக்கும் போது இவை முந்தி செல்ல காற்றே தடையாக அமைந்தது. இந்த நிலையை சமாளிக்க ஜெட் விமானம் கண்டுபிடிக்கப் பட்டது. இவை10,000-12,000 மீ. உயரத்தில் காற்றழுத்தம் குறைவான பகுதியில் பறக்கின்றன.


இதுவரை மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டு தற்சமயம் புழக்கத்திலுள்ள விமானங் களில் மிகப்பெரியது போயிங்-747 ஆகும். இதனைவிட பெரியது ஏர்பஸ் A-380 ஆகும். போயிங்-747 ஜம்போ ஜெட் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் 600 பயணிகள் உட்கார்ந்து செல்ல முடியும். இதுவரை கிட்டத்தட்ட 2000க்கும் மேற்பட்ட 747 விமானங்கள் விற்கப்பட்டுள்ளன. இதுவரை எல்லா 747 விமானங்களும் சேர்ந்து 4200 கோடி கி.மீ. பயண தூரத்தைக் கடந்துள்ளன. 

இவற்றில் இதுவரை 350 கோடி மக்கள் பயணம் செய்துள்ளனர். இவ்விமானம் பறக்கும் போது மணிக்கு 290 கி.மீ. வேகமும் உச்சி வானத்தில் பறக்கும் போது மணிக்கு 910 கி.மீ. வேகத்துடனும் கீழே இறங்கும்போது மணிக்கு 206 கி.மீ. வேகத்தில் பறக்கக்கூடியது. இதனை 0.85 மேக் என்றும் சொல்வர். ஒரு முறை எரி பொருள் நிரப்பிய பிறகு 13,000 முதல் 18,000 கி.மீ. வரை பறக்கவல்லது. ஒரு முறை எரி பொருள் நிரப்ப 2,40,370 லிட்டர் விமான டர்பைன் ஃயூயல் (ATF) தேவை.

கடந்த 35 ஆண்டுகளாக பெரிய விமானங்களில் ஒரே பெயராக இருந்தது போயிங் தான். இதற்கு சவால் விடும்படி தயாரிக்கப்பட்ட விமானம் இப்பொழுது ஏர்பஸ்-380 ஆகும். ஒரு போயிங்-747 விமானத்தில் கிட்டத்தட்ட 60 லட்சம் பாகங்கள் உள்ளன. இதில் 50 சதவீதம் ரிவட், போல்ட் மற்றும் இணைப்புக்காக பயன்படும் புரியாணிகள் ஆகும். இதைத்தவிர 274 கி.மீ. ஒயர்களும் 8 கி.மீ. நீளத்துக்கு குழாய்களும் பயன் படுத்தப்பட்டுள்ளன. மொத்தமாக 66,150 கி.கி. மிக அழுத்தமுள்ள அலுமினியம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 

இதனுடைய இரண்டு இறகுகளும் 43,090 கிலோ எடை உள்ளவை மற்றும் இதன் பரப்பளவு 525 சதுர மீட்டர் ஆகும். விமானம் கீழே இறங்குவதற்கும் மறுபடி பறந்து செல்லவும் 16 முக்கிய லேண்டிங் கியர்களும், இரண்டு மூக்கு லேண்டிங் கியர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்விமானத்தின் உயரமான பகுதி 19.4 மீ. உள்ள இதன் வால் புறமாகும். இது ஒரு ஆறு மாடிக் கட்டடத்துக்கு சமம். முதன் முதலில் ரைட் சகோதரர்கள் பறந்த தூரத்தை இந்த விமானத்தின் சிக்கன சீட்டு இடத்தில் அடக்க முடியும்.

நன்றி: எஸ்.கணேசன், இந்திய விவசாய ஆராய்ச்சி கழகம், டெல்லி-110012.
கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் உங்கள் பாலமுருகன்.
-logon: saffroninfo.blogspot.com

செவ்வாய், செப்டம்பர் 04, 2012

செவ்வாய் கிரகத்தில் ஒலித்த குரல்.!அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ அனுப்பிய ‘கியூரியாசிட்டி’ ரோவர் விண்கலம், வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அடுத்த கட்டமாக, செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப வேண்டுமானால், அவர்களுடன் தகவல் தொடர்பு ஏற்படுத்துவது முக்கிய மாகும். நாசாவின் ‘டீப் ஸ்பேஸ் நெட்வொர்க்’ (டிஎஸ்என்), பூமியிலிருந்து மற்ற கிரகங்களுக்கு அனுப்பப்படும் விண்கலத் துடன் தொடர்பு கொள்வதற்கான அதி நவீன வசதிகளைக் கொண்டுள்ளது. 

அதற்காக, ‘நாசா’ நிறுவனத்தில் இருந்து அதன் நிர்வாகியும் விஞ்ஞானி யுமான சார்லஸ் போல்டன் தனது குரலை ஒலிப்பதவு செய்து ‘கியூரியாசிட்டி’ விண்கலத் துக்கு நவீன அறிவியல் தொழில்நுட்ப உதவியுடன் அனுப்பி வைத்தார். அவருடைய குரல் செவ்வாய் கிரகத்தில் ஒலித்ததுடன், மீண்டும் அந்த குரல் பூமிக்கும் வெற்றி கரமாக திரும்பி வந்தது குறிப்பிடத்தக்கது.


விஞ்ஞானி போல்டன் அந்த ஒலிப்பதவில், “கியூரியாசிட்டி விண்கலம் பூமிக்கு பல நன்மைகளை சேர்க்கும். செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் கால் பதிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதால், புதிய தலைமுறை விஞ்ஞானி களுக்கு இந்த விண்கலம் ஊக்கமளிப்பதாக இருக்கும்” என்று பேசி இருந்தார். பூமிக்கு திரும்பி வந்த ஒலிப்பதிவும், கியூரியாசிட்டி அனுப்பிய செவ்வாய் கிரக தரைப்பகுதியின் வண்ணப்படமும் கலிபோர்னியாவில் ஆகஸ்ட், 28, 2012 அன்று வெளியிடப்பட்டது.

நாசாவின் கியூரியாசிட்டி திட்ட அதிகாரி தவே லாவெரி கூறியது: ரோவர் விண்கலம் குரல் பதிவை அனுப்பி இருப்பது, பூமிக்கு அப்பால் மனிதன் வசிப்பதற்கான சாத்தியக் கூறை ஆராயும் முயற்சியின் அடுத்த படிக்கல்லாக அமைந்துள்ளது. இதன் மூலம், செவ்வாய் கிரகத்தில் முதன்முதலாக காலடி எடுத்து வைப்பவர், உயிருடன் இருக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது என்றார்.

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் உங்கள் பாலமுருகன்.
-logon: saffroninfo.blogspot.com