செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

செவ்வாய், செப்டம்பர் 04, 2012

செவ்வாய் கிரகத்தில் ஒலித்த குரல்.!



அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’ அனுப்பிய ‘கியூரியாசிட்டி’ ரோவர் விண்கலம், வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அடுத்த கட்டமாக, செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப வேண்டுமானால், அவர்களுடன் தகவல் தொடர்பு ஏற்படுத்துவது முக்கிய மாகும். நாசாவின் ‘டீப் ஸ்பேஸ் நெட்வொர்க்’ (டிஎஸ்என்), பூமியிலிருந்து மற்ற கிரகங்களுக்கு அனுப்பப்படும் விண்கலத் துடன் தொடர்பு கொள்வதற்கான அதி நவீன வசதிகளைக் கொண்டுள்ளது. 

அதற்காக, ‘நாசா’ நிறுவனத்தில் இருந்து அதன் நிர்வாகியும் விஞ்ஞானி யுமான சார்லஸ் போல்டன் தனது குரலை ஒலிப்பதவு செய்து ‘கியூரியாசிட்டி’ விண்கலத் துக்கு நவீன அறிவியல் தொழில்நுட்ப உதவியுடன் அனுப்பி வைத்தார். அவருடைய குரல் செவ்வாய் கிரகத்தில் ஒலித்ததுடன், மீண்டும் அந்த குரல் பூமிக்கும் வெற்றி கரமாக திரும்பி வந்தது குறிப்பிடத்தக்கது.


விஞ்ஞானி போல்டன் அந்த ஒலிப்பதவில், “கியூரியாசிட்டி விண்கலம் பூமிக்கு பல நன்மைகளை சேர்க்கும். செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் கால் பதிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதால், புதிய தலைமுறை விஞ்ஞானி களுக்கு இந்த விண்கலம் ஊக்கமளிப்பதாக இருக்கும்” என்று பேசி இருந்தார். பூமிக்கு திரும்பி வந்த ஒலிப்பதிவும், கியூரியாசிட்டி அனுப்பிய செவ்வாய் கிரக தரைப்பகுதியின் வண்ணப்படமும் கலிபோர்னியாவில் ஆகஸ்ட், 28, 2012 அன்று வெளியிடப்பட்டது.

நாசாவின் கியூரியாசிட்டி திட்ட அதிகாரி தவே லாவெரி கூறியது: ரோவர் விண்கலம் குரல் பதிவை அனுப்பி இருப்பது, பூமிக்கு அப்பால் மனிதன் வசிப்பதற்கான சாத்தியக் கூறை ஆராயும் முயற்சியின் அடுத்த படிக்கல்லாக அமைந்துள்ளது. இதன் மூலம், செவ்வாய் கிரகத்தில் முதன்முதலாக காலடி எடுத்து வைப்பவர், உயிருடன் இருக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது என்றார்.

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் உங்கள் பாலமுருகன்.
-logon: saffroninfo.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக