செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

வியாழன், செப்டம்பர் 15, 2011

தூக்குத்தண்டனை குறித்து சட்டம் கூறுவது என்ன?


தூக்கு தண்டனை தொடர்பான வழக்குகளில் தண்டனையை குறைக்க பாதிக்கப்பட்டவர்கள் அரசியல் சட்டப்பிரிவு 161, 72ஆவது பிரிவுகளின் கீழ் முறையீடு செய்ய சட்டத்தில் இடம் உள்ளது. ஜனாதிபதியின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின்னரும் அவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப் படுகிறது. 71ஆவது பிரிவின் கீழ் மத்திய அரசிடமும், 161ஆவது பிரிவின் கீழ் மாநில அரசிடமும் முறையிடலாம். இதனை பரிசீலித்து முடிவு எடுக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

புதன், செப்டம்பர் 14, 2011

சிலந்திகள் பற்றி தெரியுமா?


அமெரிக்க நாடுகளில் வாழும் ‘பிளாக் விடோ’ எனும் ஒருவகை சிலந்தி கடித்தால் மனிதனுக்கு மரணம்தான். பொதுவாக சிலந்திக்கு தாடை பக்கவாட்டில்தான் அசையும். ஆனால், டாரன்டுலாஸ் எனும் சிலந்திகளின் தாடைகள் நம்மைப்போல மேலும் கீழும் அசையும் தன்மை உடையது. இவ்வகை சிலந்திகள் 35 வருடங்கள் வரை வாழ்கின்றனவாம். நர்சரி வெப் சிலந்திகள் தங்கள் குட்டிகளின் பாதுகாப்பிற்காக வலைகளைப் பின்னு கின்றன. இது நீரின் மேல் ஓடும் அதிசய ஆற்றல் பெற்றது.


‘ஸ்பிட்டிங்’ எனும் ஒரு வகை சிலந்தி பிசின் போன்ற திரவத்தை சிறு பூச்சிகளின் மேல் துப்பி செயலிழக்கச் செய்தபின் உட்கொள்கின்றன. ‘க்ராப்சிலந்தி’ இது நண்டைப் போல் பக்கவாட்டில் நகரக் கூடியது. இது பூக்களின் மீது அமர்ந்து கொண்டு அந்த பூவின் நிறத்திற்கு, தன் உடலின் நிறத்தை மாற்றிக் கொண்டு பூக்களை நாடிவரும் பூச்சிகளை பிடித்து சாப்பிடுகின்றன.

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

ஞாயிறு, செப்டம்பர் 11, 2011

பறவைகள் நாடு விட்டு நாடு பறந்து போவது எப்படி?



இந்த இயற்கையின் அற்புதத்திற்கு பெயர் ‘பேர்ட் மைக்ரேஷன்.’ பறவைகளில் இரண்டு வகை உண்டு. 1. பிறந்த மண்ணை விட்டுப் போகாத பாசக்காரப் பறவைகள். 2. பல்வேறு காரணங்க ளுக்காக அடிக்கடி டூர் அடிக்கும் சாகசப் பறவைகள். வானிலை மாற்றங்களைச் சமாளிக்கவும், இனப்பெருக்க மாற்றங்களைச் சமாளிக்கவும், இனப் பெருக்கம் செய்யவும், குட்டிகளைப் பெற்றுப் போடவும், உணவு, தண்ணீருக்காகவும்தான் இந்த இரண்டாவது ரகப் பறவைகள் ஊர் சுற்றுகின்றன. பொதுவாக இடம் பெயரும் பறவைகள் கூட்டமாகவும், ‘வி’ வடிவத்திலும் பறக்கும்.

அப்படிப் பறக்கும்போது அவை செலவழிக்க வேண்டிய சக்தி பலமடங்கு குறைகிறதாம். எவரெஸ்ட் சிகரத்தின் அருகில் கூட பல இடம் பெயர்ந்த பறவைகளின் எலும்புக் கூடுகள் கிடைத்திருக்கின் றன. பெங்குவின் பறவைகள் 1000 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடலில் நீந்தியே இடம் பெயர்கின்றன. காட்விட்ஸ் பறவைகள் நடுவில் ஓய்வே எடுக்காமல் 11 ஆயிரம் கிலோ மீட்டர் நான் ஸ்டாப்பாகப் பறக்கக்கூடிய அபார ஆற்றல் கொண்டவை. பறத்தலின் போது, உடலில் உள்ள கொழுப்பே எரிசக்தியாக அமைகிறதாம்.


ஆர்டிக் கண்டத்தி லிருந்து அண்டார்டிகா கண்டம் வரை பயணம் செய்யும் ஆர்டிக் டர்ன் எனப்படும் பறவைதான் இடம் பெயர்தலில் நீண்ட தூரப் பறப்பவை. 22 ஆயிரம் கிலோமீட்டர்கள் இவை பறக்கின்றன. இடம்பெறும் பறவைகளுக்கு, தான் போக வேண்டிய வழியின் தடங்கள் எப்படித் தெரிகின்றன? ‘இன்ஸ்டிங்கட்’ என்னும் உள்ளுணர்வு என்கிறார்கள் விஞ்ஞானிகள். தான் செல்ல வேண்டிய இடம், அவற்றை காந்தம் போல் இழுக்கிறதாம். இடம் பெயரும் பறவையைத் தொடர்ந்து கண்காணித்த விஞ்ஞானிகள் அவை பாலங்கள், பெரிய கட்டடங்கள் போன்றவற்றைக் கூட அடையாளங்களாக வைத்திருப்பதைக் கண்டுபிடித்திருக்கின்றனர்.

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

செவ்வாய், செப்டம்பர் 06, 2011

குற்றவாளிகளுக்கா இத்தனை ஆர்ப்பாட்டம்?

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் ராஜீவ் கொலைவழக்கில் தூக்குத்தண்டனை நாட்களை எண்ணிக்கொண்டிருந்த வேளையில், உயர் நீதிமன்றமும், தமிழக சட்டப்பேரவையும் இணைந்து மூவரையும் காப் பாற்றியுள்ளனர். இந்த நிலையில், அவர்களை காப்பாற்ற தமிழகத்தில் நடைபெற்ற போராட்டம் கொஞ்சம் நஞ்சம் அல்ல. ஏன் இவர்களை காப்பாற்ற இப்படித் துடியாய் துடித்தார்கள்? துடிக்கிறார்கள்? ராஜீவ் கொலைக்கு இவர்கள் மூவரும் காரணம் அல்ல என்று வாய் கிழிய பேசும் தமிழ் ஆர்வலர்களே, அதற்கான சரியான காரணத்தை கூறுவது யாரோ?

இருபது ஆண்டுகளாக குற்றத்தை நிரூபிக்காமல் இருப்பது ஏன்? என்ற கேள்விக்கு சப்பைக்கட்டு கட்டாமல் சரியான பதிலை யாராவது கூறுங்கள். இவர்களை தூக்கில் போடுவது சரியா? தவறா? என்பது குறித்த இந்த கட்டுரையை யாருக்கும் ஆதரவாகவே, யாருக்கும் எதிராகவோ எழுதவில்லை. அதேநேரத்தில், என் மனதில் எழுந்த, பலர் மனதில் எழுந்திருக்கும் கேள்விகளே இந்த கட்டுரை. இக்கட்டுரைக்கு உங்கள் விமர்சனங்களை கட்டாயம் தாருங்கள். முதலில் ராஜீவ் கொலை குறித்து பார்ப்போம்...!


47 வயதே ஆன முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வந்திருந்தார். அன்று இரவு 10 மணிக்கு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றார். அப்போது, ராஜீவை நோக்கி வந்த 20 வயது மர்ம பெண், அவருக்கு சந்தன மாலை அணிவித்த போது பயங்கர சத்தத்துன் குண்டு வெடித்தது. நிகழ்விடத்திலேயே ராஜீவ்காந்தி உடல் சிதறி பலியானார். அவரின் பாதுகாப்புக்கு வந்திருந்த 7 போலீஸ் அதிகாரிகளும் பலியானார்கள்.

Rajiv Gandhi Murder
(1. குப்தா, ராஜீவின் தனி பாதுகாப்பு அதிகாரி, புதுடெல்லி. 2. முகமது இக்பால், போலீஸ் சூப்பிரண்டு, செங்கல்பட்டு. 3. எட்வர்டு ஜோசப், தனிப்பிரிவு சி.ஐ.டி.இன்ஸ்பெக்டர், சென்னை. 4. ராஜகுரு, இன்ஸ்பெக்டர், பல்லாவரம். 5. எத்திராஜ், தனிப்பிரிவு சி.ஐ.டி. சப் இன்ஸ்பெக்டர், சென்னை. 6. சந்திரா, பெண் போலீஸ், சென்னை. 7. ராமு, தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை போலீஸ்காரர், சென்னை).

நாட்டை உலுக்கிய இந்த படுகொலை குறித்து தமிழகத்தை சேர்ந்த ஐ.ஜி.கார்த்திகேயன் தலைமை யிலான சி.பி.ஐ.சிறப்பு புலனாய்வு குழு துப்பு துலக்கியது. 25ந் தேதி வேதாரண்யத்தில் சங்கர் என்ற விடுதலைப்புலியை கைது செய்து விசாரித்ததில், ராஜீவை தீர்த்துக்கட்ட திட்டமிட்டு ‘தனு’ என்ற பெண் மனித வெடி குண்டை ஒற்றைக்கண் சிவராசன் அனுப்பியது தெரியவந்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் போது விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த முருகன் அவரது மனைவி நளினி, சாந்தன், பேரறிவாளன் உள்பட 26 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உள்பட 41 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அவர்களில் ஒற்றைக்கண் சிவராசன் உள்பட 12 பேர் மரணம் அடைந்து விட்டனர். பிரபாகரன், பொட்டு அம்மான், அகிலா ஆகிய 3 பேர் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். கைதானவர்களில் முருகன் யாழ்பானத்தை சேர்ந்தவர் என்றும், 14 வயதில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்தார் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல், சாந்தனும் இலங்கையை சேர்ந்தவர்தான். நளினி சென்னையை சேர்ந்தவர். பேரறிவாளன் தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம் ஜோலா¢பேட்டையை சேர்ந்தவர்.

Brabakaran
முருகன் சென்னையில் தங்கி இருந்தபோது நளினியை திருமணம் செய்து கொண்டார். ராஜீவ் கொலை தொடர்பாக முருகனும், கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக நளினியும், வெடிகுண்டு தயாரிக்க உதவியதாக சாந்தன், பேரறிவாளன் ஆகியோரும் குற்றம் சாட்டப்பட்டு இருந்தனர். மேலும், பெல்ட் பாம் தயாரிக்க பேட்டரி வாங்கியதாகவும் பேரறிவாளன் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு கூறப்பட்டது.

பூந்தமல்லி தடா கோர்ட்டு இந்த வழக்கில் விசாரணை நடத்தி, 1998ஆம் ஆண்டு ஜனவரி 28ந் தேதி, குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டதில், 1999ஆம் ஆண்டு மே 11ந் தேதி தீர்ப்பு வழங் கியது. இந்த தீர்ப்பில், முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் ஆகிய நான்கு பேருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தும், ராபர்ட், ஜெயக் குமார், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனை யாக குறைத்தும் தீர்ப்பளிக்கப்பட்டது. பாக்கியநாதன், சுபாசுந்தரம் உள்பட 19 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.


Nalini
பின்னர், சென்னை ஐகோர்ட்டில் நளினிக்கு மட்டும் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. நளினி வேலூர் பெண்கள் சிறையிலும், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரும் வேலூர் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப் பட்டபின் நளினிக்கு பெண் குழந்தை பிறந்தது. நளினியின் மகள் தற்போது இலங்கையில் உள்ள தனது பாட்டி வீட்டில் இருக்கிறார். முருகனின் மகள் அரித்ரா பிரிட்டனில் படித்து வருகிறார். 16 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்துவிட்டதால் தன்னை விடுதலை செய்யும்படி நளினி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டடது.

நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நான்கு பேரும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார்கள். இதில், நளினி மட்டும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். தூக்கு தண்டனை கைதிகள் மூன்று பேரும், 12 ஆண்டுகளுக்கு முன் ஜனாதிபதிக்கு கருணை மனுக்கள் அனுப்பியிருந்தனர்.அந்த மனுக்களை கடந்த (ஆகஸ்ட்) 11ந் தேதி ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் நிராகரித்தார். இதற்குதான் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், தீக்குளிப்பும் ஏற்பட்டன.

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

செவ்வாய், ஆகஸ்ட் 09, 2011

செக்ஸ் பற்றிய பழங்கால ஆராய்ச்சிகள்!


உண்பது, வாழ்வது, இனப்பெருக்கம் செய்வது ஆகிய மூன்றும் மனித சமூகத்தின் முக்கிய கடமைகளாக கருதப்படுகின்றன.இதில் முக்கியமானது இனப்பெருக்கம் செய்தல். இதற்கான வழிமுறைகளை பல நூற்றாண்டுக ளுக்கு முன்னர், வாத்சாயனர், கொக்கோகர், வஜீகரன், பத்மஸ்ரீ, கவிசேகரன், ஜெயதேவா, கல்யானமல்லா, யசோதரா போன்ற பல அறிஞர்கள் பாலியலை ஒரு அறிவியல் துறையாக கருதி, ஆராய்ச்சி செய்து பல உண்மைகளை தொகுத்து வழங்கியுள்ளனர்.

மனித இனம் தோன்றிய போதே... ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு, அனுபவ ரீதியாக வளர்க்கப்பட்டு, முதல் அறிவியல் துறையாக பாலியல்துறை இருந்துள்ளது. பழங்காலத்தில் நம் நாட்டில் காமத்தை ஒரு அறிவியல் ரீதீயாக கருதினர். காமம் என்பது நம்முடைய உள்ளுணர்வாக இருந்தாலும், அதை கலையாக வளர்த்தனர். அதற்கான விதிமுறைகள், நெறிமுறைகளை விளக்கி நூல்கள் எழுதப்பட்டன.

‘ரதி ரகஷ்யா’ என்ற நூலை கொக்கோகர் தொகுத்துள்ளார். இவர் கி.பி.1000- க்கும் 1200-க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர். பெண்கள் எளிதில் பாலுணர்வுத் தூண்டுதலுக்கு ஆளாகும் பகுதிகள் மற்றும் தூண்டப்படும் காலம் பற்றிய விசயங்களை மிகவும் துல்லியமாகக் குறிப்பிட்டுள்ளார். ஆண்கள், பெண்களின் 3 பிரிவுகளையும், பிறப்புறுப்பின் அளவைக் கொண்டு பாலுறவில் ஒன்பது நிலைகள் இருப்பதையும் விவரமாக குறிப்பிட்டுள்ளார்.

கவிசேகரா என்பவர் கி.பி.1300 ஆம் ஆண்டில் 'பஞ்சயாகா' என்ற பாலியல் நூலை எழுதியுள்ளார். பாலுணர்வைத் தூண்டும் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் வாசனைப் பொருட்கள் பற்றி நிறைய எழுதியுள்ளார். தளர்ந்த மார்பகத்தை உயர்த்தி நிறுத்தும் மருந்து போன்ற சில குறிப்பிட்ட மருந்துப் பொருட்களைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறார். இதில் மாதவிலக்கு, கருத்தரிப்பு மற்றும் மலட்டுத் தன்மை பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

காம சாஸ்திரத்துக்கு 'ஜெயமங்களா' என்ற உரையை எழுதியவர் யசோதரா. கி.பி.1000-க்கும் 1300-க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்தவர். ஜெயமங்களா நூல் உரையாக அல்லாமல், தனிப்பட்ட புத்தகத்தைப் போல் விளங்குகிறது. இதில் வாத்சாயனார் மற்றும் பிறரால் கையாளப்பட்ட பதங்களைப் பயன்படுத்தியுள்ளார் யசோதரா.

ஆன்மிகமும், இல்லறமும் எல்லா மனிதனுக்கும் தேவை. இந்த இரண்டையும் முழுமையாக பெறுவதன் வாழ்க்கையின் அடையாளம் என்று முன்னோர்கள் கருதினர். இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவை. தர்ம சாஸ்திரம்... நீதி, நெறி மற்றும் ஒழுக்கத்தின் அவசியத்தை கூறுகிறது. அர்த்தசாஸ்திரம்... பொருளாதா ரத்தைப் பற்றி விளக்குகிறது. காமசாஸ்திரம்... நம்முடைய உடலின் ஆசைகளை விவரிக்கிறது. ‘மோட்சம்’ என்பது இந்த மூன்றையும் அனுபவிப் பதால் அடையும் நிலை என்கிறது.

பாலுணர்வைப் பற்றிய முதல் நூல் ‘காமசூத்ரா.’ இதை எழுதியவர் வாத்சா யனார். இவர் கி.பி.300 முதல் கி.பி.400 வரையில் உள்ள இடைப்பட்ட காலத்தில், வாழ்ந்தவர். இந்த நூலில், காமம் என்பது கேட்டல், பார்த்தல், உணர்தல், நுகர்தல், முகர்தல் என்ற ஐம்புலன்கள் மட்டுமின்றி, மனமும், ஆத்மாவும் இணைந்து தோன்றுவது என்று குறிப்பிடுகிறார். இதில் பாலு ணர்வு நிலைகள், இன்பத்தை நீடிக்க வைக்கும் வழிமுறைகள் பயன் படுத்தும் பொருட்கள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.


காதல் நுணுக்கங்களைப் பற்றி விவரிக்கும் ‘ரதி மஞ்சரி’ என்ற கவிதை நூலை எழுதியவர் ஜெயதேவா. கி.பி. 1500ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இந்தப் புத்தகம் மிகச் சிறியது. அதேசமயம், சிறந்த நடையில், பாலியல் குறித்து எழுதப்பட்டுள்ளது. கி.பி. 1600 ஆம் ஆண்டில் ‘கல்யாண மல்லா’ என்பவர், தனது அரசரை மகிழ்விப்பதற்காக 'அனங்கரங்கா' என்ற நூலை எழுதி உள்ளார். இதில் தாம்பத்திய உறவை வெற்றிகரமாக நடத்துவது பற்றி விளக்கமாக கூறப்பட்டுள்ளது.

கி.பி.1000 ஆம் ஆண்டில் வாழ்ந்த பத்மஸ்ரீ என்பவர் 'நகர சர்வஸ்வம்' என்ற நூலில் சங்கத் எனப்படும் பாலுறவுக் குறிப்புச் செய்கைகளைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். இவர், ஒரு பவுத்த துறவி. நகர சர்வஸ்வம் நூலில் காதல் மட்டுமன்றி பல்வேறு விசயங்கள் குறித்தும் விரிவாகக் எழுதியுள்ளார். மேலும் காமம் மற்றும் இனப்பெருக்கம் பற்றி அழகாக இந்த புத்தகத்தில் எழுதி உள்ளார்.

பண்டைக்கால ஆயுர்வேத மருத்துவர்களுள் சிறந்த எட்டு பேர்களில் ஒருவர் ‘வஜிகரன்’. பாலுறவில் பயன் படுத்தப்படும் வாஜிகாராணா என்ற மருத்துவப் பொருளைப் பற்றி ஆழமாக விவரித்துள்ளார். இவர், குதிரையைப் போன்ற திறனும், நீண்ட நேரம் பாலுறவு கொள்ளவும் ஏதுவான மருந்துகளைக் கண்டு பிடித்தவர். இந்த நூலில் ஆகார உணவுகள், மருந்து உணவுகள், பாலுறவுக் கான சூழல்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஆழமாக விளக்கியுள்ளார்.

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.