செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

செவ்வாய், ஜூலை 31, 2012

பிரணாப்புக்கு கிடைக்கும் வசதிகள்.!



புதிய குடியரசுத்தலைவராக பதவியேற்றுள்ள பிரணாப்புக்கு மாத சம்பளமாக ஒன்றரை லட்சம் கிடைக்கும். பிரமாண்டமான ஜனாதிபதி மாளிகையில் அவர் வசிப்பார். ஜனாதிபதி மாளிகையை பராமரிக்க 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருக்கிறார்கள். சிம்லாவிலும், ஐதராபாத்திலும் குடியரசுத்தலைவருக்கு ஓய்வு இல்லங்கள் உள்ளன. அவர் பயணம் செய்ய குண்டு துளைக்காத மெர்சிடெஸ் பென்ஸ் கார் வழங்கப்பட்டுள்ளது.


குடியரசுத்தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும், மாத ஓய்வூதியமாக 75 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். குடியிருக்க அனைத்து வசதிகளுடன் கூடிய அவர் விரும்பும் நகரத்தில் ஒரு பங்களாவும் வழங்கப்படும். மேலும், ஒரு கார், 2 டெலிபோன் இணைப்புகள், ஒரு செல்போன் இணைப்பு ஆகியவையும் வழங்கப்படும். அவருக்கு உதவியாக ஒரு தனிச்செயலாளர் உள்பட ஐந்து ஊழியர்களும் நியமிக்கப்படுவார்கள். ஊழியர்கள் செலவுக்காக ஆண்டுக்கு 60 ஆயிரம் வழங்கப்படும்.விமானத்திலும்,ரெயிலிலும் மனைவியுடன் இலவசமாக பயணம் செய்யலாம்.

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

திங்கள், ஜூலை 30, 2012

குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி.!



நாட்டின் 13 ஆவது குடியரசுத்தலைவரை தேர்ந்தெடுக்க ஜூலை 19, 2012 ல் தேர்தல் நடந்தது. இதில், ஐக்கியமுற்போக்குக்கூட்டணி அரசின் வேட்பாளராக முன்னாள் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி போட்டியிட்டார். அவரை எதிர்த்து பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. உள்ளிட்டக் கட்சிகளின் வேட்பாளராக பி.ஏ.சங்மா களமிறங்கினார். தேர்தல் முடிவுகள் ஜூலை 22 ல் அறிவிக்கப்பட்டன. அதன் படி பிரணாப் 7,13,763 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிரணி வேட்பாளரான பி.ஏ.சங்மாவுக்கு 3,15,987 வாக்குகள் கிடைத்தன.


பதிவான வாக்குகள் - 4659.
செல்லத்தக்கவை - 4578
மொத்த வாக்குகளின் மதிப்பு - 10,29,750
பிரணாப் பெற்ற வாக்குகள் - 3095.
வாக்குகளின் மதிப்பு - 7,13,763


பி.ஏ.சங்மா பெற்ற வாக்குகள் - 1483
வாக்குகளின் மதிப்பு - 3,15,987
செல்லாத வாக்குகள் - 81
வாக்குகளின் மதிப்பு - 18,221


இத்தேர்தலில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் உள்ள 776 எம்.பி.க்களில் 748 பேர் வாக்களித்தனர். அதில் பிரணாப்புக்கு ஆதரவாக 527 பேரும், சங்மாவுக்கு ஆதரவாக 206 பேரும் வாக்களித்தனர். சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் உள்ளிட்ட 9 பேர் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவாக போட்ட வாக்குகளும், பி.ஏ.சங்மாவுக்கு ஆதரவாக போட்ட 6 வாக்குகளும் செல்லாதவையாகின.

கர்நாடகத்தில் ஆளும் பா.ஜ.க.வுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அந்த மாநிலத்தில் சில சட்டப்பேரவை உறுப்பினர்கள் கட்சி மாறி வாக்களித்தனர். கர்நாடகப் பேரவையில் மொத்தம் உள்ள 224 எம்.எல்.ஏக்களில் 223 பேர் வாக்களித்தனர். ஆளும் பாஜகவுக்கு 120 உறுப்பினர்கள் உள்ளனர்.


ஆனால், தேர்தல் முடிவில் பா.ஜ.க. ஆதரித்த சங்மாவுக்கு 103 வாக்குகளே கிடைத்தன. பிரணாப்புக்கு 117 வாக்குகள் கிடைத்தன. பிரணாப் முகர்ஜிக்கு 98 வாக்குகள்தான் (காங்கிரஸ் 71, மதசார்பற்ற ஜனதாதளம் 27) கிடைத்து இருக்க வேண்டும். ஆனால் அவருக்கு கூடுதலாக 19 வாக்குகள் கிடைத்து இருக்கின்றன. கர்நாடகாவில் 3 வாக்குகள் செல்லாதவையாகின.

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

பிராணாப்புக்கு ராசியான எண் ‘13’



குடியரசுத்தலைவராக பொறுப்பேற்றுள்ள பிரணாப் முகர்ஜிக்கு ராசியான எண் 13 என்று கூறப்படுகிறது. அந்த எண் ராசியற்றது எனப் பொதுவாக பலர் கருதும் நிலையில், பிரணாப்பின் வாழ்க்கையின் முக்கிய தருணங்களில் எல்லாம் இந்த எண்ணுடன் அவருக்கு தொடர்பு இருந்துள்ளது. அவர் முதன்முதலாக மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டது 2001 ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதி. (அதற்கு முன் பல ஆண்டுகளாக அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்)
அவரது திருமணம் நடைபெற்றது 1957 ஆம் ஆண்டு ஜூலை 13. அவர் குடிரயரசுத்தலைவாரக ஆவதற்கு முன் வசித்து வந்த தால்கடோரா சாலையில் உள்ள கதவு எண் 13 கொண்ட வீட்டில்தான். மக்களவைத் தலைவராக இருந்த போது, நாடாளுமன்ற வளாகத்தில் அவருக்கு ஒதுக்கப் பட்ட அலுவலக அறை எண் 13. அவர் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும், நாட்டின் 13 ஆவது குடியரசுத் தலைவராகத்தான். 

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

ஞாயிறு, ஜூலை 29, 2012

மன்மோகனிடம் சண்டைப்போட்ட பிரணாப்.!




முதன் முதலாக காங்கிரஸ் மையக்குழு கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் பிரணாப் முகர்ஜியை ‘சார்’ என்று அழைத்தார். பிரணாப்புக்கு செல்லக்கோபம் வந்துவிட்டது. இனி மையக்குழு கூட்டத்துக்கே வரமாட்டேன் என்று கூறினார். அதன் பின்னர்தான் பிரணாப்பை பிரதமர் ‘பிரணாப் ஜி’ என்றும், பிரணாப் முகர்ஜி மன்மோகன்சிங்கை ‘டாக்டர் சிங்’ என்றும் அழைப்பது என்றும் உடன்பாடு ஏற்பட்டது.

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.

துர்கா பூஜையை விடாத பிரணாப்.!



மேற்குவங்க மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது துர்கா பூஜை. இதற்காக எவ்வளவு பெரிய அப்பாயிண்ட்மென்ட் இருந்தாலும் ஒத்திவைத்து விடுவார்கள். அதில் பிரணாப் முகர்ஜியும் விதிவிலக்கல்ல.! இதை அவரது தனிப்பட்ட வாழ்வில் விடமுடியாத பழக்கம் என்று கூட சொல்லலாம். ஆண்டு தோறும் ‘துர்கா பூஜை’ விழாவினை தனது சொந்தக் கிராமமான மிரதியிலுள்ள மூதாதையர் இல்லத்தில் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.


இந்தியா - அமெரிக்கா இடையேயான சிவில் அணு ஒப்பந்தத்தில் அமெரிக்க மந்திரி காண்டலீசா ரைசுடன் கையெழுத்திடுவதையே ஒரு வாரம் ஒத்தி வைத்து, துர்கா பூஜையைக் கொண்டாடி மிரதி கிராமத்துக்கு சென்றார் என்றால் பார்த்துக்கொள்ளலாம்.

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அன்புடன் பாலமுருகன்.