செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

வெள்ளி, பிப்ரவரி 04, 2011

அமெரிக்காவைத் தொடர்ந்து...!?அமெரிக்காவைச் சார்ந்து தான் உலக நாடுகளின் பொருளாதாரம் பிணைக்கப்பட்டிருக்கிறது. பரிவர்த்தனைகள் அனைத்தும் அமெரிக்க கரன்சியான, "டாலரில்' தான் நடக்கிறது. இதனால், அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உலகளவிலும் எதிரொலித்தது. கடந்த 2008ல் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், 2001 க்கு செல்ல வேண்டும். அங்கிருந்து தான் இந்த கதை தொடங்குகிறது.

"டாட் காம் பபுள்' நெருக்கடி: கடந்த 1990 களில், இணையதள நிறுவனங்கள் அதிகரிக்க தொடங்கின. இணையதளங்கள் மிக விரைவில் அமோகமாக வளர்ச்சி பெறும் என்று எண்ணிய பலர், அவற்றின் பெயரில் பங்குச் சந்தையில் முதலீ¦டு செய்தனர். இணையதளத்துக்கு கொஞ்சம் கூட தொடர்பில்லாத நிறுவனங்கள் கூட தங்கள் பெயருக்கு பின்னால், "டாட் காம்' என சேர்த்தால் அவர்களுக்கு அமோக வசூல் தான் என்ற நிலைமை. கடந்த 2000, மார்ச் மாதம் இந்த பங்குகளில் பெருத்த அடி விழுந்தது. இதன் காரணமாக, இணையதள தொழில் மாயை என்பது வெளியுலகுக்குத் தெரிய வந்தது. இது தான் பொருளாதார நெருக்கடியின் தொடக்ம்.

அமெரிக்காவில் 60ல் இருந்து 70 விழுக்காடு பேர், பங்குச் சந்தையில் முதலீ¦டு செய்திருந்தனர். அவர்கள் இந்தப் பங்குகளை வாங்கியிருந்தனர். இவை சரிய தொடங்கிய பின் பெரிய நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து, 9/11 என்று குறிப்பிடப்படும் இரட்டை கோபுர தகர்ப்பு நடந்தது. 1987ல் இருந்து 2006 வரை அமெரிக்காவின் மத்திய ரிசர்வ் வங்கியான, "பெடரல் ரிசர்வ்' வங்கியின் தலைவராக இருந்த ஆலன் கிரீன்ஸ்பான், பங்குச் சந்தை சரிவையடுத்து, பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் நடவடிக்கையாக, வங்கிகளின் வட்டி விகிதத்தை 1.25 விழுக்காடாகக் குறைத்தார். அதற்கு முன் 4 அல்லது 5 விழுக்காடாக இருந்தது.

வாரி வழங்கப்பட்ட வீட்டுக் கடன்: "டாட் காம் பபுள்' நெருக்கடி கால கட்டத்திலேயே மிகக் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் கொடுத்தனர். இப்போது மேலும் வட்டி விகிதம் குறைந்தவுடன், அமெரிக்காவில் நடுத்தர வர்க்கத்தினர் எல்லாரும் வீட்டுக் கடன் வாங்கினர். கடனை திருப்பிக் கொடுக்கும் தகுதி வாங்குபவருக்கு இருக்கிறதா என்பதை ஆராயாமல், கேட்டவர்களுக்கு எல்லாம் கடன் கொடுத்ததால், இந்தக் கடன், "சப் ப்ரைம்' கடன் என்றழைக்கப்படுகிறது. இந்தக் கடனை வாங்கி வீடு வாங்குபவர்கள், ஆறு மாதத்துக்கு வட்டி கட்டிய பின் வீட்டை விற்றனர். அதில் வரும் லாபத்தில் மீண்டும் கொஞ்சம் வட்டி கட்டினர். அதன் பின், அவர்கள் வங்கி பக்கம் எட்டிப் பார்க்க மாட்டார்கள். இப்படி கடன் வாங்கியவர்களில் பெரும் பாலானோர் வட்டி கட்டாமல் தப்பித்து வந்தனர்.

இன்னொரு திட்டமும் இதற்கு முன்வைக்கப்பட்டது. முதல் ஒரு சில ஆண்டு களுக்கு வட்டி கட்டாமல், வீடு வாங்கும் திட்டம் அது. இந்த வட்டி கட்டாத ஆண்டுகளுக்கான வட்டியை பின்பு கட்டப்படும் மாதத் தவணையில் சேர்த்து கழித்து விடுவர். இந்தக் கடனுக்கு குறைந்த அளவில் வட்டி வசூலித்தனர். கடன் தொகைக்கும், வாங்கியவர்கள் திருப்பியளிக்கும் தொகைக்கும் 1 அல்லது 1.5 சதவீதம் மட்டுமே வித்தியாசம் இருந்தது. இதன் மூலம் பொருளாதாரம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஓரளவு அதில் உண்மையும் இருந்தது. ஆனால், பெரும்பான்மையான வீட்டுக் கடன்கள் வராக் கடன்களாகிவிட்டன.

"சப் ப்ரைம்' நெருக்கடி: கடன் அளிக்கும் போதே, அவற்றை அமெரிக்க வங்கிகள் "கடன் பத்திரங்களாக' மாற்றி உலக சந்தையில் விற்று விட்டன. வங்கிகளின் தாராள போக்கினால் பொருளாதாரத்தில் ஒரு தேக்கநிலை ஏற்பட்டது. 30 கோடி மக்களில் 25 கோடி பேருக்கு வீடு, கார்கள் இருக்கின்றன. எவ்வளவு தான் வாங்குவர்? கடனுக்கான வட்டி விகிதம் ஏறத் தொடங்கியது. மாதத் தவணை கட்ட இயலவில்லை. "வீடு வேண்டாம்' என்ற மனநிலைக்கு மக்கள் திரும்பினர். அதேநேரம், வீட்டு விலையும் சரியத் துவங்கியது. அன்றைய நிலையில், தேவையை விட கூடுதலாக ஆளில்லாமல் ஒரு கோடி வீடுகள் இருந்தன என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.

ஐம்பது லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டை, இரண்டு கோடிக்கு விற்று, 50 லட்சத்தை கட்டிவிட்டு, மீதியை பங்குச் சந்தையில் முதலீ¦டு செய்து பணம் பெருக்கலாம் என்பது அவர்களின் திட்டம். அப்படியும் கொஞ்ச காலம் நடந்தது. ஆனால், வங்கிகள், பங்குச்சந்தைகளோடு பிணைக்கப்பட்டிருந்தன. பங்குச் சந்தையில் ஏற்பட்ட நெருக்கடி, வங்கிகளில் எதிரொலித்தது. வங்கியில் "கரன்சி' இல்லை; மாறாக, பத்திரம்தான் இருந்தது. கடன் கொடுக்கும் திறனை இழந்து வங்கி திவாலானது. நாட்டில் பணப்புழக்கம் குறைந்தது. இதைத் தான், "சப் ப்ரைம்' நெருக்கடி என்றனர்.

சமச்சீரற்ற நிலை: அமெரிக்காவின் "செக்யூரிட்டைசேஷன்' என்ற விதிப்படி தான் வங்கிகள் தாம் வைத்திருந்த கடன் பத்திரங்களை, "ரேட்டிங் ஏஜன்சி' மூலம் மதிப்பிட்டு அவற்றை உலகச் சந்தையில் விற்றன. இந்தக் கடன் பத்திரங்களை சீனா, ஜப்பான் போன்ற நாடுகளும் வாங்கின. அமெரிக்க வங்கிகள் தமது கடன் பத்திரங்களை கைமாற்றி விட்டன. மிச்சமிருந்த பத்திரங்களை அரசு பணம் கொடுத்து சரிக்கட்டியது. இந்தியப் பொருளாதார நிபுணரும், மத்திய ரிசர்வ் வங்கியின் அப்போதைய தலைவருமான ஒய்.வி.ரெட்டியின் ஆலோசனையின் பேரில் இந்தியா மட்டும் அந்தக் கடன் பத்திரங்களை வாங்கவில்லை. இதற்கிடையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க, அமெரிக்கா கரன்சியை அச்சடிக்க ஆரம்பித்தது. இதனால், டாலர் புழக்கம் அதிகரித்தது. அதன் விளைவாக யூரோ, யென், யுவான் போன்ற பிற நாடுகளின் கரன்சி புழக்கமும் அதிகரித்தது. இந்த அதிகரிப்பால் பணவீக்கம் ஏற்பட்டது.

பணவீக்கம் உயர்ந்ததால் விலைவாசி அதிகரித்தது. அமெரிக்கா அடிப்படை உற்பத்தியில் ஈடுபடாமல், உயர் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள், தயாரிப்புகளில் மட்டும் ஈடுபட்டது. தற்போதும் அதுதான் நிலைமை. அடிப்படை உற்பத்திப் பொருட்களை சீனா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து விடுகிறது. ஒரு பக்கம், அமெரிக்கா நுகர்கிறது. இன்னொரு பக்கம், மற்ற நாடுகள் உற்பத்தி செய்து அமெரிக்காவுக்கு அனுப்புகின்றன. இதை "உலக சமச்சீரற்ற நிலை' என்கின்றனர் நிபுணர்கள். இதில், ஒரு பக்கம் அடி விழுந்தாலும் மற்றொரு பக்கமும் அதன் தாக்கம் இருக்கும்.

அமெரிக்க நுகர்வு கலாசாரம்: இந்தப் பிரச்னைக்கெல்லாம் அடிப்படை காரணம், அமெரிக்காவின் நுகர்வுதான். ஏன் அமெரிக்கா நுகர்வுக் கலாசாரத்துக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறது? "வீட்டில் சும்மா இருக்க வேண்டாம், ஷாப்பிங் செல்லுங்கள். அதன் மூலம் உங்கள் கையில் இருக்கும் காசு சந்தைக்கு வந்து அப்படியே ஒரு சுழற்சியில் ஈடுபடும். இதுதான் பொருளாதாரத்தை வளர்க்கும்' என்பது தான் அமெரிக்கப் பொருளாதாரக் கொள்கை. இந்த கொள்கை உருப்பெறுவதற்கு எது காரணமாக இருந்தது? கலாசாரம். ஒரு நாட்டின் கலாசாரம் தான் அதன் சகல விஷயங்களுக்கும் அடிப்படை. ஆசிய நாடுகளுக்கும், மேற்கத்திய அமெரிக்க நாடுகளுக்கும் இடையில் ஒரு பெரிய வித்தியாசம் இந்தக் கலாசாரம் தான்.

அமெரிக்காவில், பெண்கள் பொருளாதார ரீதியில் சுயசார்பு பெற்ற பின், "குடும்பம்' என்ற அமைப்பு சிதைந்தது. குடும்பம் இல்லாததால் அதைக் காக்க வேண்டும் என்ற கடமையும் இல்லாமல் போனது. அதனால் ஏற்பட்ட பெரிய பாதிப்பு, தனிநபர் சேமிப்பு குறைந்ததுதான். சம்பாதிப்பது எல்லாம், செலவழிப்பதற்காகத் தான் என்ற கொள்கை உருவானது. இதை அந்நாட்டுப் பொருளாதார நிபுணர்களும் அரசும் வரவேற்றனர். பெற்றோர், குழந்தைளைக் காக்க வேண்டிய குடும்பத் தலைவனின் கடமை, அரசு தலை மேல் விழுந்தது.

சேமிப்பின் அவசியம்: தனிநபர்கள் சம்பாதித்ததை எல்லாம் ஷாப்பிங்கில் ஆரம்பித்து எல்லாவற்றிலும் செலவழிக்க தொடங்கினர். தொடக்த்தில் இது பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு வந்தது என்றாலும், அதையடுத்து ஒரு பெரிய நெருக்கடியையும் கொண்டு வந்து விட்டது. சீனா, இந்தியா, கொரியா, ஜப்பான், இந்தோனேசியா போன்ற ஆசிய நாடுகள் இதற்கு நேர்மாறானவை. குடும்பம் என்ற அமைப்பு இவற்றில் இன்றும் இருப்பதால், சேமிப்பு சரியான நிலையில் உள்ளது. அமெரிக்காவில் சேமிப்பு பூஜ்யம் என்றால், சீனாவில் சேமிப்பு 35 சதவீதமாகவும், இந்தியாவில் 25ல் இருந்து 30 சதவீதமாகவும் உள்ளது. குடும்பத்தை மையமாக வைத்துதான் பொருளாதாரம் உள்ளது. இதுதான் பொருளாதார அடிப்படை கட்டமைப்பு.

சீனா, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இதுதான் பொருளாதாரத்தின் அடிப்படை. அமெரிக்காவில் இது நேர்விரோதம். இது பற்றி, பிரான்சிஸ் புக்கியாமா என்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர், தான் எழுதிய, "ட்ரஸ்ட்' என்ற நூலில், "எல்லா நாட்டுக்கும் அமெரிக்கப் பொருளாதார மாதிரி ஒத்து வராது. அந்தந்த நாட்டுக் கலாசாரத்தின் அடிப்படையில் தான் அவற்றின் பொருளாதாரம் அமைய வேண்டும்' என்பதை வலியுறுத்தியுள்ளார். பொருளாதாரம் என்பது கலாசாரத்தை மையமாகக் கொண்டது என்பதை இப்போது இந்த நெருக்கடிக்குப் பின், பல பொருளாதார நிபுணர்களும் ஒத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்திய மனநிலை: அமெரிக்காவை ஒப்பிடும் போது இந்தியா சேமிப்பு நாடு; சீனாவோடு ஒப்பிடும் போது இந்தியா நுகர்வு நாடு. ஆண்டு முழுவதும் உள்ள நமது பண்டிகைகள், விழாக்கள் அனைத்தும் நுகர்வு கலாசாரத்தோடு தொடர்புடை யவைதான். இதன் மூலம் பணப்புழக்கம் அதிகரிக்கும்; பொருளாதாரம் செழிப்பாகும். அதேநேரம், நம்மூரில், கடன் வாங்குவது என்பது இன்றும் ஒரு அவமானமாகவே கருதப்படுகிறது. தேவைக்கு கடன் வாங்குவதை நம்மவர்கள் தவறு என்று சொல்ல வில்லை. சக்திக்கு மீறி கடன் வாங்குவதைத்தான் நமது கலாசாரம் தவறு என்கிறது. ஆனால், அமெரிக்காவில் ஒருவன் துணிந்து, "நான் திவாலாகி விட்டேன்' என்று சொல்லி விட்டு, அவனே மறுபடியும் தொழில் தொடங்க முடியும்.

இந்தியாவில் இது நடக்காது. ஒருவன் திவாலாகி விட்டான் என்றால் அவனால் மறுபடியும் தொழில் தொடங்க முடியாது. அமெரிக்காவில் அதிகளவில் பங்குச் சந்தையில் முதலீ¦டு செய்திருப்பதால் அதன் வீழ்ச்சி பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், இந்தியாவில் 3 சதவீதம் பேர் தான் பங்குச் சந்தையோடு தொடர்பில் உள்ளனர். பங்குச் சந்தை விழுந்தால் 2 சதவீதம் பேருக்கு பாதிப்பு இருக்கும். ஒரு விழுக்காடு பேருக்குத்தான் பெரியளவில் பாதிப்பு இருக்கும். மற்றபடி 97 விழுக்காடு பேருக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது. இந்தியாவின் மொத்த முதலீ¦டு 38 சதவீதம்; சேமிப்பு 37 சதவீதம். 1 சதவீதம் வெளிநாட்டு முதலீ¦டு. அந்த 1 சதவீதம் வராமல் போய்விட்டாலும் நமக்கு ஒரு பாதிப்பும் இல்லை. நமது சேமிப்பு நம்மைக் காப்பாற்றும். நம் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்கள் பெரும்பான்மையும் இங்கேயே நுகரப்படுகின்றன. அதன் மூலம் செலாவணி கிடைக்கிறது. அது சேமிப்பாகிறது. பின்பு அதுவே முதலீ¦டாகிறது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், நமது சேமிப்பு 23 சதவீதமாக இருந்தது. அப்போது சில பொருளாதார நிபுணர்கள், "இந்தியாவில் சேமிப்பு இவ்வளவு இருப்பது ஆபத்தானது; நுகர்வு அதிகரிக்க வேண்டும்; அதனால் உற்பத்தி அதிகரிக்கும்; பொருளாதாரம் செழிக்கும்' என்றனர். ஆனால், அது நடக்கவில்லை. கடந்த 2008ல் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடி இந்தியாவை பெருமளவில் பாதிக்காததற்கு இதுதான் காரணம். அதேநேரம், உலகளாவிய அளவில் இந்தியர்கள் பரவியிருப்பதால், சிறிது பாதிப்பு ஏற்படத்தான் செய்யும். இந்தப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமானால், அமெரிக்கா சேமிக்கத் துவங்க வேண்டும். சீனா நுகரத் துவங்க வேண்டும். சேமிப்பைக் குறைக்க வேண்டும். இதன் மூலம் நெருக்கடி ஓரளவுக்கு மாறத் துவங்கும்.

ஐரோப்பிய நெருக்கடி: ஐரோப்பாவில், கிரீஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் அயர்லாந்து நாடுகளில் இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல், அந்நாடுகளின் தவறான உள்நாட்டுப் பொருளாதாரக் கொள்கை களால் ஏற்பட்டுள்ளது. இதனால், ஜெர்மனி உள்ளிட்ட வளர்ந்த நாடுகளும் பாதிக்கப்படத்தான் செய்யும். ஏனெனில், ஐரோப்பிய யூனியனில் இப்போது "யூரோ' கரன்சி புழங்குவதால், கிரீஸ், அயர்லாந்து நெருக்கடியால், கரன்சி மதிப்பில் பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பு, ஜெர்மனி போன்ற நாடுகளையும் பாதிக்கும். இதன் விளைவாக, யூரோ கரன்சி கூட்டணியில் இருந்து ஜெர்மனி, பிரிட்டன் போன்றவை விலகலாம்.

ஜெர்மனி தனது பழைய கரன்சியான "மார்க்'குக்குத் திரும்பலாம். அல்லது கிரீஸ் போன்ற நாடுகள் யூரோவை விட்டு விட்டு தங்களது பழைய கரன்சிக்குத் திரும்பலாம். மொத்தத்தில் "யூரோ' கரன்சியில் பிளவு ஏற்படவே வாய்ப்புகள் அதிகம். ஒரு முன்னெச்சரிக்கையாக கடந்த 2008ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஒரு முன்னறிவிப்புதான். முழு நெருக்கடி இனிமேல் தான் ஏற்படப்போகிறது. அது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம்.

ஒரே நேரத்தில் டாலரும், யூரோவும் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக் கின்றன. ஒரு கட்டத்தில் ஏதாவது ஒன்று முழுமையாக விழும் போது, அந்த பயங்கர நெருக்கடி தோன்றும். இது பற்றி நாம் மிகச் சரியாக ஆரூடம் கூற முடியாது என்றாலும், இன்னொரு பயங்கர நெருக்கடி காத்திருக்கிறது என்று மட்டும் கூற முடியும். இந்த நெருக்கடி அமெரிக்கா, பிரிட்டனை கடுமையாகத் தாக்கும். அதில் இருந்து அந்நாடுகள் மீள்வது மிகக் கடினம். ஆனால், அதனாலும் இந்தியா பெருமளவில் பாதிக்கப்படாது.

இப்படி உலகளவில் ஏற்பட்டு வரும் பொருளாதார நெருக்கடிக்கு நிபுணர்கள் கூறும் காரணங்கள் என்ன?

உலகம் முழுவதும் கணக்கு வழக்கின்றி பெருகிக் கொண்டிருக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப, இவர்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு. அடுத்து, வளர்ந்த நாடுகள் தங்களது எரிபொருள் தேவைக்காக, உணவுப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் "உயிரி எரிபொருள்' (பயோ ப்யூவல்) உற்பத்தியில் தீவிரமாக ஈடுபடுவது. இதனால், வளர்ந்து வரும் நாடுகள், மூன்றாம் உலக நாடுகளில் உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு விலைவாசி உயர்கிறது.

முக்கியமான ஒன்றாக நிபுணர்கள் கூறுவது, கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட காலநிலை மாற்றம். வறட்சி, வெள்ளம், சூறாவளி, மாறி வரும் மழை போன்றவற்றால் எதிர்பார்த்த உற்பத்தி இல்லாதது. மேலும், உற்பத்தி நாடுகளின் ஸ்திரமற்ற அரசியல் மற்றும் பொருளாதார நிலை போன்ற காரணங்களை கூறுகின்றனர்.

நன்றி: தினமலர் சென்னை பதிப்பு- டிசம்பர் 2010.

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக