செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

வியாழன், ஜனவரி 09, 2014

மாம்பழம் பழுக்க ராமதாஸ் புதுக்கணக்கு.!


மாம்பழம் சின்னத்தை தக்க வைக்கவே, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ், சமுதாய கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில், பா.ஜ.,வுடன் கட்டாயம் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற கருத்தும், அக்கட்சியில் வலுத்து வருகிறது.

தேர்தல் கமிஷனின் அங்கீகாரத்தை, அரசியல் கட்சிகள் பெற, பல நிபந்தனைகள் உள்ளன. ஒரு கட்சி மாநில கட்சிக்குரிய, அங்கீகாரத்தைப் பெற வேண்டும் எனில், லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில், 6 சதவீத ஓட்டுகளைப் பெறுவதோடு, குறிப்பிட்ட இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

சின்னம் பறிபோகும்:

தேர்தல் கமிஷனின் இந்த விதியை, 2009 லோக்சபா தேர்தலில், பூர்த்தி செய்ய, பா.ம.க., உட்பட, ஆறு மாநில கட்சிகள் தவறி விட்டன. அதற்கு காரணம், தேர்தலில், அந்தக் கட்சிகளுக்கு கிடைத்த படுதோல்வியே. அதனால், புதுச்சேரியில் பா.ம.க.,வின் அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பான அறிவிப்பை, 2010ல், தேர்தல் கமிஷன் வெளியிட்டது. மேலும், 2011 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட பா.ம.க.,வால், மூன்று தொகுதிகளில்மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இருப்பினும்,அக்கட்சி, மாநில அளவில், 5.2 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்றது.

வரும் லோக்சபா தேர்தலில், 6 சதவீதத்திற்கு அதிகமான ஓட்டுகள் அல்லது குறிப்பிட்ட இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே, பா.ம.க.,விற்கு மாம்பழம் சின்னம் சொந்தமாகும். இல்லையெனில், பா.ம.க.,வின் மாம்பழம் சின்னத்தை, தேர்தல் கமிஷன் பறிக்க வாய்ப்புள்ளது. இந்த இக்கட்டான தருணத்தில், வரும் தேர்தலில், ஏதாவது ஒரு அரசியல் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால், குறைவான தொகுதிகளில் மட்டுமே, பா.ம.க., போட்டியிட முடியும். அதனால், ஓட்டு சதவீதத்தை அதிகரித்து காட்ட முடியாது.

அதேநேரத்தில், ஜாதி அமைப்புகளை இணைத்து, தற்போது உருவாக்கியுள்ள, சமுதாயகூட்டணி சார்பில், மாநிலம் முழுவதும் உள்ள தொகுதிகளில், பா.ம.க., சார்பில், பலர் போட்டியிட்டால், தேர்தல் கமிஷன் இலக்கான, 6 சதவீதம் ஓட்டுகளை பெற முடியும் என்பதே, ராமதாசின் கணக்கு.அதாவது, பா.ம.க., தனித்துப் போட்டியிட்டால், வன்னியர்களின் ஓட்டுகளை மட்டுமே பெற முடியும்; மற்ற ஜாதியினர் ஏறிட்டுப் பார்க்க மாட்டார்கள். சமுதாய கூட்டணி எனில், மற்ற ஜாதியினரும், பா.ம.க., சார்பில், தேர்தலில் நிற்பர். ஏராளமான வேட்பாளர்கள், பா.ம.க.,வின் மாம்பழம் சின்னத்தில் நிற்கும் போது, ஓட்டு சதவீதம் அதிகரிக்கும், அதனால், சின்னத்தை தக்க வைத்துக் கொள்ளலாம் என்பதும், அவரின் மற்றொரு கணிப்பு.
தந்தைக்கு எதிராக:அதேநேரத்தில், 'வரும் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே, கட்சியினரை தக்கவைக்க முடியும்' என, பா.ம.க., இளைஞர் அணி செயலர் அன்புமணி நினைக்கிறார். பா.ம.க., சார்பில், வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளவர்களின் மனநிலையும் அதுவாகவே உள்ளது. அதனால், இந்த விஷயத்தில், தந்தை ராமதாஸ் முடிவுக்கு எதிராக, பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்கவும், விஜயகாந்தின், தே.மு.தி.க., அந்தக் கூட்டணியில் சேர்ந்தாலும், ஆதாயம் கருதி, அதை ஏற்றுக் கொள்ளவும், அன்புமணி திட்டமிட்டுள்ளதாகக் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக