செய்திகள்

TODAY TOP NEWS: *ஊழல் அதிகாரிகள் மீது புகார் கொடுங்கள்- மக்களுக்கு மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அழைப்பு *காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்- கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு *வி.கே.சிங்கின் சர்ச்சைக்குரிய கருத்துக்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல் *மேலும் 15,000 டன் பதுக்கல் பருப்பு பறிமுதல் *நாய் குறித்து சர்ச்சைக் கருத்து- வி.கே.சிங் மீது காவல்துறையில் ஆம் ஆத்மி புகார் *கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வலியுறுத்தி டெல்லியில் எழுத்தாளர்கள் மவுன ஊர்வலம் *சீக்கியர்களின் புனித நூல் அவமதிப்பு சம்பவம்- பஞ்சாபில் இயல்பு நிலை திரும்புகிறது *பா.ஜ.க.வின் சகிப்புத்தன்மையற்ற வெளிப்பாடே மாட்டிறைச்சி விவகாரம்- காங்கிரஸ் சாடல் * இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாடு- இருதரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார் பிரதமர் நரேந்திர மோடி *சுனாமி எச்சரிக்கை ஒலிக் கருவி - வரும் 26ஆம் தேதி சோதனை * பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்- 4 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழப்பு *வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண 2 அவசரச் சட்டங்கள் பிரகடனம் *இந்தியாவுக்கு வரும் 26ஆம் தேதி திரும்புகிறார் இளம்பெண் கீதா- பாகிஸ்தானில் 15 ஆண்டுகளாக சிக்கித் தவித்தவர் *ஐ.நா சீர்திருத்தம்- ஆப்பிரிக்க நாடுகளுக்கு மோடி வேண்டுகோள் *இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் எங்களை வீழ்த்திவிட்டனர்- தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் டாமிங்கோ பேட்டி *பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன்- காலிறுதியில் சாய்னா நெவால் தோல்வி*

ஞாயிறு, டிசம்பர் 25, 2011

"தங்க(ம்)மான தகவல்கள்.!"கிறிஸ்து பிறப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தியர்கள் முதன் முதலில் தங்கத்தைப் பயன்படுத்த தொடங்கினர். ஆறாம் நூற்றாண்டிலேயே லிபியா நாட்டின் குரோசஸ் மன்னன் காலத்தில்தான் முதல் தங்க நாணயம் அச்சடிக்கப்பட்டது. தங்கம் உற்பத்தியில் முதல் இடத்தில் இருக்கும் நாடு அப்போதும் சரி, இப்போதும் சரி தென்னாப்பிரிக்காதான். பனி மூடிய அண்டார்டிகா கண்டம் தவிர அனைத்துக் கண்டங்களிலும் தங்கம் வெட்டி எடுக்கப்படுகிறது. உலக அளவில் தங்கம் டிராய் அவுன்ஸ் கணக்கில்தான் கணக்கிடப்படுகிறது. ஒரு டிராய் அவுன்ஸ் என்பது 28.35 கிராம்.

தங்கத்தாது கலந்துள்ள ஒருடன் மணலை அரைத்துச் சலித்தால் அதில் இருந்து 8 முதல் 10 கிராம் தங்கம் மட்டுமே கிடைக்கும். 3 டன் தங்கத் தாதில் இருந்து ஓர் அவுன்ஸ் தங்கம் கிடைக்கும். உலகின் மிகவும் ஆழமான தங்க சுரங்கம் தென் ஆப்பிரிக்காவில் உள்ள சுவுகாவில் உள்ளது. 3.7 கி.மீ. ஆழத்தில் அமைந்துள்ள இந்த சுரங்கத்தின் ஒரு டன் மணலில் 5.68 கிராம் தங்கம் உள்ளது.

தங்கம் துருப்பிடிக்காது. மனித உடலில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. எனவே உலகம் முழுவதும் தங்கப் பல் கட்டுவதற்காகவே மட்டும் மொத்த உற்பத்தியில் 2 விழுக்காடு தங்கம் பயன்படுத்தப்படுகிறது. முதன் முதலாக தங்கப்பல் கட்டியவர்கள் சீனர்கள் என்கிறது சரித்திரம். தங்கம் ஆபரணமாக மட்டுமில்லாமல் உடல் அழகுக்கும், இளமை நீடிப்பிற்கும், ஆரோக்கிய த்திற்கும் தங்க பஸ்பம் சாப்பிடுவது நல்லது என்று பழங்கால நூல்கள் கூறுகின்றன.

உடல் ஆரோக்கியத்துடன் ஆயுளும் அதிகரிக்கும் என்பது பல நாட்டு மக்களின் நம்பிக்கை. போட்டோ பிலிமில் கூட தங்கம் பயன் படுத்தப்படுகிறது. தங்கத்தின் உருகுநிலை 1064.43 டிகிரி செல்சியஸ். 24 காரட் தங்கத்தில் 100 விழுக்காடு தூய்மையும், 22-ல் 91.75 தூய்மையும், 18-ல் 75 விழுக்காடு தூய்மையும், 12 காரட்டில் 50.25 விழுக்காடு தூய்மையும், 10 காரட்டில் 42 விழுக்காடு தூய்மையும் உள்ளன.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியில்தான் உலகிலேயே அதிக தங்கம் கையிருப்பு உள்ளது. இதுவரை வெட்டி எடுக்கப்பட்ட தங்கத்தில் 3 விழுக்காட்டை அந்த வங்கி வைத்துள்ளது. பிற உலோகங்களை போல் இல்லாமல் தங்கம் அரிதான அளவில்தான் கிடைக்கிறது. அதாவது பூமியின் புறப்பரப்பில் ஒவ்வொரு 100 கோடி பாகத்தில் 3-ல் ஒரு பகுதியில்தான் தங்கம் உள்ளது. ஆனால் நாளுக்கு நாள் தேவை அதிகரித்துக் கொண்டே போகிறது. இதுதான் தங்கம் மதிப்புக்குரிய உலோகமாக இருப்பதற்கு காரணம். இன்று புழக்கத்தில் இருக்கும் தங்கத்தில் பெரும் பகுதி வரலாற்று காலத்தில் வெட்டி எடுக்கப்பட்டதுதான்.

தங்கத்தின் தரத்தை அறிய தற்போது ஹால்மார்க், பி.ஐ.எஸ். முத்திரைகள் உள்ளன. ஆனால் தொடக்க காலத்தில் தங்கத்தை பல்லால் கடித்து பார்த்து நம்பகத்தன்மையை சோதிக்கும் முறை இருந்தது. தங்கம் லேசான உலோகம் என்பதால் பல் அடையாளம் பதிந்து விடும். அந்த அடையாளத்தை வைத்து தங்கத்தை தரம் பார்த்துள்ளனர்.இந்தியா, இலங்கை, அரபுநாடுகளில் 22 காரட் அளவு தரம் பயன்படுத்தப் படுகிறது. சீனா, தைவான், ஹாங்காங்-கில் 24 காரட், ரஷ்யாவில் 14 காரட் அளவிற்கு தரம் அறிந்து பயன்படுத்தப்படுகிறது. தங்கம் உற்பத்தியில் 1991 ஆம் ஆண்டு வரை சோவியத் யூனியன்தான் முதலிடத்தில் இருந்தது. சோவியத் பலநாடுகளாக உடைந்து சிதறிய பிறகு, தென்னாப்பிரிக்கா முதலிடத்தைப் பிடித்தது. 2008-ல் சீனா முதலிடத்தை எட்டிப் பிடித்தது.

நகைக்கு முன்னதாக தங்கம் கரன்சியாக துருக்கி மன்னர் குரோசெஸ் ஆட்சிக் காலத்தில் கி.மு.560 முதல் 547 ஆம் ஆண்டு வரை பயன்படுத்தப் பட்டது. கி.மு. 2000 க்கு முன்னதாக எகிப்தியர்கள் தங்க வேட்டை நடத்தியிருக்கிறார்கள். இதுவரை வெட்டி எடுக்கப்பட்டுள்ள சுமார் 1.58 லட்சம் டன் தங்கத்தில் 65 விழுக்காடு 1950 க்கு பின் கிடைத்தவைதான்.

உலகம் முழுவதும் தங்கம் விற்பனை செய்யப்பட்டாலும் லண்டன் உலோகச் சந்தையில்தான் தங்கத்தின் விலை முடிவு செய்யப்படுகிறது. லண்டனின் கரன்சி பவுண்ட் ஆக இருந்தாலும் டாலரில்தான் விலை நிரணயம் செய்யப்படுகிறது. தங்கத்துக்கான தேவை மற்றும் இருப்பின் அடிப்படையில்தான் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு அவுன்ஸ் விலை இவ்வளவுதான் என நிர்ணயம் செய்கின்றனர். அதை பவுனுக்கும், கிராமுக்கும் மாற்றி ஒவ்வொரு நாட்டிலும் விலையை முடிவு செய்கின்றனர்.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. என்றும் உங்கள் பாலமுருகன்.

1 கருத்து:

  1. நல்ல பயனுல்ல தகவல்...நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

    என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com

    பதிலளிநீக்கு